சதுரகிரியில் இருக்கிறது பாஷாணக் காடு!

Author: தோழி / Labels: ,

சித்தர் பெருமக்களின் அக மற்றும் புறத் தேடலுக்கான அனைத்து அம்சங்களையும் இயற்கை அன்னை வாரி வழங்கிதனால்தான் சதுரகிரி மலையானது சித்தர்களின் தலைமயகம் என பெயர் பெற்றது. நாம் இதுகாரும் சதுரகிரி மலையில் வாழ்ந்திருந்த சித்தர் பெருமக்கள், அவர்களின் ஆச்சிரமங்கள், குகைகள், அதனை சென்றடையும் வழிகள், வழியில் இருக்கும் ஓடைகள், ஆறுகள்,வனங்கள் அவற்றில் இருக்கும் அரிய மூலிகைகள்,உதகநீர் சுனைகள்,கோவில்கள் என எல்லாவற்றையும் கடந்த இருபத்தி மூன்று பதிவுகளில் பார்த்தோம்.

இந்த வகையில் விடுபட்டுப் போன ஒன்றினைப் பற்றியே இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். சித்த மருத்துவம் மற்றும் இரசவாதத்தில் பயன்படுத்தப் படும் முக்கியமான மூலகம் பாஷாணம் எனப் படும் பாடாணம். இவை உலோகத்தினை போன்ற கடினமான தன்மையையும், கொடிய விஷத்தின் தீவிரத்தையும் கொண்டிருக்கும் தின்மப் பொருள்.இது தொடர்பான் மேலதிக விவரம் வேண்டுவோர் எனது முந்தைய பதிவுகளில் வாசித்தறியலாம்.

இந்த பாஷாணம் இரண்டு பெரும் பிரிவுகளாக கூறப்பட்டிருக்கிறது.அவை பிறவிப் பாஷாணம், வைப்புப் பாஷாணம். இதில் பிறவிப் பாஷாணம் என்பது இயற்கையில் கிடைக்கும் மூலகம். பழநியில் குடி கொண்டிருக்கும் நவபாஷான மூலவரின் சிலையானது சதுரகிரி மலையில் செய்யப் பட்டு பழனிக்கு கொண்டு சென்றதாக ஒரு செவிவழிக் கதை உள்ளது. ஆனால் இதை நிறுவும் வகையில் தகவல்கள் ஏதும் சித்தர்களின் பாடல்களில் இல்லை.

ஒரு வேளை சதுரகிரியில் இந்த சிலை செய்யப் பட்டிருந்தால் நிச்சயமாக இங்கு பாஷாணங்கள் கிடைத்திருக்க வேண்டுமல்லவா!. இந்த தகவலை உறுதி செய்திட தகவல்கள் ஏதும் கிடைக்கிறதா என போகர் மற்றும் அகத்தியரின் பாடல்களை தேடிக் கொண்டிருந்த போது கிடைத்த அரிய தகவலை இன்று பகிர்ந்து கொள்கிறேன். ஆம், சதுரகிரி மலையில் பாஷாணம் இருக்கிறது, அதுவும் எங்கே இருக்கிறது என்பதை அகத்தியர் மொழியிலேயே பார்ப்போம்.


"பெருமையாம் சதுரகிரி வளப்பஞ்சொல்வேன்
நுட்பமுடன் புலஸ்தியனே புனிதவானே
பாலான தேசமெல்லாம் திரிந்துவந்தேன்
பாலகனே சதுரகிரி வளப்பமெத்த
லேசான காட்டகத்தே திரிந்துகண்ட்டேன்
சங்கமுடன் சதுரகிரி கிழக்கேயப்பா
சட்டமுடன் பாடாணக் காடுகண்டேன்
நலம்பெரிய பூமியெல்லாம் சுண்ணக்காடு
பட்டயம்போல் சுனையுண்டு தோப்புமுண்டு
பாலகனே கண்டேன் யாவுங்கண்டேனே"

- அகத்தியர் -

இந்த தேசமெல்லாம் சுற்றிவந்த நான், வளங்கள் நிறைந்த சதுரகிரியிலும் சுற்றினேன். சதுரகிரி மலையில் கிழக்குப் பகுதியில் எளிதில் நுழையக் கூடிய பகுதியில் பாஷாணக் காடு கண்டேன் என்கிறார்.இந்த காட்டின் நிலப் பகுதியானது சுண்ணம் அதிகமாக காணப்படும் என்கிறார். மேலும் அந்தக் காட்டின் மத்தியில் சுனையும் தோப்பும் இருப்பதாக கூறுகிறார். இதையடுத்து வரும் பாடல்களில் பாஷாணங்களின் வகைகளையும் அவற்றின் பயன் பாடுகளையும் விவரித்துச் செல்கிறார்.

ஆச்சர்யமான தகவல்தானே!, சதுரகிரி மலையின் கிழக்கே உள்ள காட்டில் சுண்ணம் நிறைந்த நிலப் பகுதியில் பாஷாணங்கள் நிறைந்திருக்கின்றனவாம்.ஆர்வமுள்ளோரும், ஆய்வாளர்களும் இந்த தகவலைக் கொண்டு மேலதிக ஆய்வுகளை செய்திடலாம்.

நாளையுடன் இந்த சதுரகிரிமலை தொடரை நிறைவு செய்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

11 comments:

பாலா said...

அன்புள்ள தோழியே ,

அருமையான பதிவு, போகர் மூன்று நவபாஷண சிலைகள் செய்யப்பட்டதாக செவிவழி செய்திகள் எமக்கும் கிடைத்திருக்கிறது. அதில் ஒன்று பழனியிலும் மற்றொன்று சதுரகிரியிலும் இன்னொன்று யாரோ ஒரு வம்சத்தினர் வீட்டில் வைத்து பூசை செய்வதாகவும் கேள்விப்பட்டேன்.

சிலை செய்த இடம் கோரக்கர் குகைக்கு அருகில் இன்றும் காணலாம். அவர்கள் உபயோகித்த பாஷாணம் கலக்கும் இடம் இங்கு தான் உள்ளது. ஆனால் இதனை உறுதி செய்யும் வகையில் எந்தவொரு பாடலும் எமக்கும் கிடைக்கவில்லை. சதுரகிரி செல்லும்போது வழியில் எமக்கு கிடைத்த தகவல் இது தான். இன்றும் சதுரகிரியில் எங்கோ ஒரு மூலையில் பழனி ஆண்டவர் சிலை இருக்கிறது. அமைப்பு இருப்பின் கூடிய விரைவில் நமக்கு கிடைக்கும்.

என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

jagadeesh said...

தோழி அவர்களை இந்தியாவுக்கு வரவேற்கிறோம். இது போன்ற அதிசியக்கத் தக்க விசயங்களை நேரில் வந்து தரிசித்து செல்லுமாறும், ஆராய்ந்து பார்க்கவும் வேண்டுகிறோம். இத்தகைய விசயங்களுக்கு தாங்கள் தான் சரியானவர் என நினைக்கிறேன். இந்தியா வாருங்கள்.

சங்கர் குருசாமி said...

VEry Interesting to know about it....

http://anubhudhi.blogspot.com/

Anonymous said...

நல்ல தகவல் தோழி . நன்றி

sathy said...

http://knowingyourself1.blogspot.com/2011/01/blog-post_1835.html For your notice, digital infringement.

Lingeswaran said...

சளைக்காமல் எழுதுகிறீர்கள்....! தொடருங்கள்...வாழ்த்துக்கள்.

சுவாமிநாதன் said...

மிக அருமையான மற்றும் முக்கியமான தகவல் நன்றி.

நான் அறிந்த தகவல் இது உண்மையா பொய்யா என்று எனக்கு தெரியாது.

கொடைக்கானல் மலைக்கு மேல் பூம்பாரை என்று ஒரு கிராமம் உள்ளது இது கொடைக்கானலில் இருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது இங்கு ஒரு முருகன் ஆலயம் உள்ளது இதுவும் போகரால் செய்யப்பட்டது என்று கூருகிறார்கள். இந்த கோயில் பழனி கோயிலின் கீழ் உள்ளது என்றும் கூறினார்கள். அந்த ஊருக்கு செல்லும் வழியில் ஒரு தொலைநோக்கு கருவி மூலம் ஒரு இடம் கண்பித்தர்கள் அங்கு ஆதிவாசிகள் வாழும் இடம் போல நிறைய குடிசைகள் இருந்தது அதன் அருகில் ஒரு மலையை கண்பித்து அங்குதான் போகர் முருகன் சிலை செய்ததர் என்றும் அவருடைய குகை அங்குள்ளதாகவும் கூறினார்கள்.

இந்த முருகன் மலைக் கோயிலில் மட்டும் தான் தேர் உள்ளது. இதற்க்கு இரண்டு வடங்கள் உள்ளன தை பூசம் திருவிழா 10 நாள் நடக்குமாம் அப்பொழுதுதான் தேர் இழுப்பார்கள் என்று சொன்னார்கள். அதேபோல் இங்கு சித்திரை பின் 7 மற்றும் வைகாசி முன் 7 நாட்களும் திருவிழா நடத்தப் படும் என்று சொன்னார்கள்.

நான் கேள்விப்பட்டது உண்மையா பொய்யா என்று தெரியாது.

தங்கள் உதவியால் நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் மிக்க மகிழ்ச்சி.

Elangai Tamilan said...

தோழி,
தங்களின் இன்றைய பதிவுகள் மிக நன்றாக இருந்தது.மேலும்,நவபாஷன சிலை ,சதுரகிரஈல் இருப்பதும் ,அதனை இரண்டு ராஜ நாகங்கள் பாதுகாப்பதும் உண்மை.அது,வேண்டிய நேரத்தில் ,வேண்டியவருக்கு ,வேண்டியாபொழுதில் கிடைக்கும் என்பது சித்தர்களின் வாக்கு.
அதுவரை ,அனைவரும் பொறுத்திருப்போம்.மிக்க நன்றி .
--

Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com

ANTONY BALAN said...

தோழி,

வெள்ளிங்கிரி மலை பற்றிய ஏதும் தகவல்கள் சித்தர் பாடல்களில் இருக்கின்றதா ? தங்களுக்கு அந்த மலை பற்றி தெரியுமா ?

Saravanan said...

@பாலா
மூன்றவது சிலை கொடைக்காணல் அருகில் இருப்பதாக கேள்வி பட்டுள்ளேன் .......

பொன் தங்க சரவணன்,ஈரோடு

Balamurugan Sethuram said...

I have a doubt, will this 'sathuragiri' was taken by Hanuman from Himalaya at the time of Ramayan, which was called 'siranjeevi'

Post a Comment