ஞான மார்க்கத்தின் உயரிய நிலை முக்தியடைதல் அல்லது வீடு பேறடைதல். இத்தகைய நிலையினை அடையும் பாதையானது அத்தனை எளிதானதில்லை. குருவருள் துனை நிற்க கவனக் குவிப்புடன் கூடிய தொடர் பயிற்சி மற்றும் விடா முயற்சியினால் மட்டுமே இது சாத்தியமாகும். ஆகக் கடினமானதும், மிக உயரியதுமான இந்த முக்தி நிலையினை சதுரகிரி மலையில் அடையும் வழியொன்றினை அகத்தியர் தனது மாணவரான புலத்தியருக்கு அருளியிருக்கிறார்.
"கேளடா சதுரகிரியின் வளமைதன்னை
காண்பவர்க்கு கெதிமோட்சங் கிட்டுங்கிட்டுங்
ஆளடா சதுரகிரி என்கோணமாகும்
அருளான கோணமெல்லாம் குகைதானுண்டு
சூளடா கிரிமுடியில் குகைதானுண்டு
சொன்ன குகை ஒன்பதிலும் நவசித்தர்
தளடா சிறப்புடனே தவசுபண்ணி
தன்னருளால் பிர்மமய மானார்பாரே"
- அகத்தியர் -
சதுரகிரி மலையானது எண்கோண வடிவில் அமைந்திருப்பதாகவும், இந்த எட்டு மூலைகள் மற்றும் நடுவிலிருக்கும் சதுரகிரி உச்சி என ஒன்பது இடங்களில் குகைகள் இருப்பதாக கூறுகிறார். இந்த குகைகளில் நவ சித்தர்கள் சிறப்பாக தவம் செய்து அருள் பெற்று பிரம்ம மயமானார்களாம். இந்த ஒன்பது குகைகளையும் தரிசிப்பவர்களுக்கு மோட்சம் கிடைக்குமென அகத்தியர் தனது மாணவரான புலத்தியருக்கு கூறியிருக்கிறார்.
த்ற்போது சதுரகிரி மலையானது சுமார் ஐநூறு சதுரகிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. அக்காலத்தில் இந்த மலையின் பரப்பளவு இன்னமும் கூட அதிகமாய் இருந்திருக்கலாம்.அடர்ந்த வனமான இந்த மலையில் கால்நடையாகவே எட்டு மூலைகளுக்கும் பயணித்து மொத்தமுள்ள ஒன்பது குகைகளையும் தரிசிப்பதில் உள்ள மேலான சிரமங்கள் ஒருவரை பக்குவமானவராய் ஆக்கி விடக்கூடும்.இத்தகைய பக்குவமானது ஒருவரை மேலான முக்தி நிலைக்கு உயர்த்தி விடலாமென கருதுகிறேன்.மேலும் இந்த பாடல்வழியே சதுரகிரி மலையானது எண்கோண வடிவில் அமைந்திருப்பதும் புலனாகிறது.
சதுரகிரி மலையில் இப்படி எத்தனையோ ஆச்சர்யங்கள் மறைந்தும் , நிறைந்துமிருக்கின்றன. நாளைய பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment

11 comments:
அருமை! இதைத்தான் தேடிகிட்டிருக்கேன்!
Thanks:)
நல்ல தகவல் தோழி
Very Informative. Thanks for sharing...
http://anubhudhi.blogspot.com/
நல்ல தகவல் மேலும் அறிய ஆவல்
ஆச்சர்யமூட்டும் தகவல்கள் -பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள் பல.
தோழி,
என்ன அரிய தகவல்களை பகிர்ந்துள்ளேர்கள்.மிக மிக நன்றி.மேலும்,சதுரகிரி செல்வதற்கு ஒரு கொடுப்பினை வேண்டும்.எல்லாம் அவன் செயல்.தாங்கள் வாயிலாக சதுரகிரி பற்றி அறிந்தது மிக
புண்யமாக கருதுகிறேன்.
Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com
நல்ல தகவல், ஒரு நல்ல குருவுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன் என்று என் பயணம் தொடங்கும் என்று தெரியவில்லை. படிக்க படிக்க ஆவலைத் தூண்டுகிறது உங்களுடைய எழுத்துக்கள்.
Nandri
அருமையான பதிவு. வாழ்த்துக்கள். எல்லா நலன்களும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துக்கள்.
அன்பு தோழி அவர்களுக்கு,வணக்கம்.எனது நண்பர் ஒருவர் சரவாங்கி வியாதியால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கிறார்.வயது;30 ஆங்கில & நாட்டு மருந்துகள் உட்கொண்டும் சரியாகவில்லை! தயவு செய்து நல்ல மருந்து சொல்லுங்கள்.ஆவலுடன் எதிர்பார்க்கும் சமூக சேவகன்/paramesdriver.blogspot.com // tntransport.blogspot.com // konguthendral.blogspot.com // நன்றி!!!
Post a Comment