சதுரகிரி மலையில் மறைந்திருக்கும் புதையல்!

Author: தோழி / Labels: ,

சதுரகிரி மலையில் சாமானியர்களின் பார்வையில் படாமல், மறைந்தோ அல்லது மறைக்கப் பட்டிருப்பதாக கூறப் படுகிறவைகளைப் பற்றி அகத்தியர் வாயிலாக இன்றும் பார்ப்போம். இதுகாறும் இந்த தொடரில் பகிரப் பட்ட தகவல்கள் அனைத்துமே சித்தர்களின் பாடல்களில் இருந்து பெறப்பட்டவைகளே; அந்த வரிசையில் இன்று அகத்தியர் அருளிய “அகத்தியர் 12000” என்ற நூலில் இருந்து எடுக்கப் பட்ட ஒரு பாடலையும் அதன் விளக்கத்தினையும் இன்று பார்ப்போம்.

"பெருமையாம் சதுரகிரி மேற்கேயப்பா
பேரான குகையொன்று குளமுமுண்டு
அருமையாம் உதகமென்ற சுனையுமுண்டு
அப்பனே பாதாளக் கிணறுமுண்டு
ஒருமையாம் கிணற்றருகில் கிடாரமுண்டு
ஓகோகோ நாதாக்கள் வத்தவைப்பு
வறுமையது வாராது கண்டபேர்க்கு
வளம்பெரிய லட்சுமியும் வாசமுண்டே"

- அகத்தியர் -

பெருமை மிகுந்த சதுரகிரியின் மேற்குப் பகுதியில் குகையொன்றும், குளமும், அதன் அருகில் உதக சுனையும், பாதாளக் கிணறும் இருக்கிறது. இந்தப் பாதாளக் கிணற்றருகில் கிடாரம் இருக்கிறது. இது சித்தர்களின் வைப்புக் கிடாரமாகும். இங்கு சென்று இவற்றைக் காண்பவர்களின் வாழ்நாளுக்கு வறுமையே வராது. அத்துடன் வளங்கள் பெருகும் லட்சுமி அவர்களுடன் வாசம் செய்வாள் என்கிறார் அகத்தியர்.

இது தொடர்பாய் மேலும் சில பாடல்கள் இருக்கின்றன. அதனை பகிர்வது வாசிப்போருக்கு தேவையற்ற எண்ணங்களை தோற்றுவிக்குமென்பதால், இந்த அளவில் ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே கூறி நிறைவு செய்கிறேன். நாளைய பதிவில் அகத்தியர் அருளிய மோட்சம் பெறும் வழியொன்றினை பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

9 comments:

sathy said...

dharshi, neengal idhu varai muzhumaiyaaga vivarittha orey oru nool agathiar arulia 64 sithukkal thaan. thayavu seidhu oru noolinai mattum muzhuvadhumaaga vivarikkavum. engallukkum oru muzhu puridhalai adhu vundaakkum.

வடுவூர் குமார் said...

வேண்டாத ஆதாவது செல்வம் வேண்டாதவர் எழுதிவைத்துவிட்டு போயிருக்கிறார்.அகத்தியர் பாடல்களை படிகிற அளவுக்கு வந்த பிறகுமா செல்வம் தேடி அலைவார்?

Elangai Tamilan said...

தோழி,
இன்றைய இடுகை மிகவும் பிரமாதம்.எப்படியும் ,சதுரகிரி .செல்வதற்காக ,தமிழகம் செல்ல வேண்டும்.தங்களின் பதிவுகள் எல்லாம் படித்தபிறகு ,சதுரகிரி செல்லவேண்டும் என்ற அவா வந்துள்ளது.மிக்க நன்றி.

Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com

Rajeswari said...

சிறப்பான பகிர்வு-நன்றி.

JILLU-nu ORU YUVA said...

மிக்க நன்றி மனித மனம் ஒரு குரங்கு போல் இருக்கும் , அதனால் நீங்கள் சில விஷயங்களை மறைப்பது மிகச் சரி :)

Anonymous said...

நல்ல தவழ தோழி , நன்றி . மோட்சம் பெறும் பதிவினை சற்று நீளமாக எழுதுமாறு கேட்டுகொள்கிறேன் . மீண்டும் நன்றி

பாலா said...

அன்புள்ள தோழிக்கு ,

சித்தர்களுக்கு தாங்கள் செய்யும் சேவை மிகப்பெரியது . என் நண்பன் மதுரை ஜெயகுமார் எனக்கு சொன்ன ஒரு இணையத்தளம் , இது ஒரு அரசாங்க இணையத்தளம் என நினைக்கிறேன் . சித்தர் பாடல்களை படிக்க விரும்பும் அனைவரும் இங்கு சென்று படிக்கலாம்.

சித்தர்களின் பாடல்களை கீழ்காணும் இணையத்தளத்தில் காணலாம். http://www.tamilvu.org/library/l7100/html/l7100ind.htm

என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

Saint Vallalar said...

This is Mohan Suresh
http://knowingyourself1.blogspot.com
I have removed your usefull divine words.like
தன்னையறிதல் @ மௌனம்
தன்னையறிதல் @ புலனடக்கம்.
தன்னையறிதல் என்பது...
sorry to say,iam a little one,just iam trying to say truth,like you,but i don't know how to say,so i have taken nice divine words from your usefull blogspot.iam really sorry. just iam started little blog,don't mistake me my sister.எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

sureshkumar.v said...

ple send any person to chathuragiri malai detiels

Post a Comment