காயசித்தி தரும் சதுரகிரி மலையின் மூலிகைகள் தொடர்ச்சி..!

Author: தோழி / Labels: ,

சதுரகிரி மலையின் தனித்துவமான மூலிகைகளைப் பற்றிய தகவல்கள் இன்றும் தொடர்கிறது. சதுரகிரி மலை பற்றி பகிர்வதற்கு இன்னமும் ஏராளமான தகவல்கள் பாக்கி இருந்தும், இந்த தொடரினை கடந்த வாரமே நிறைவு செய்திட விரும்பினேன்.இருப்பினும் ஏற்கனவே தட்டச்சு செய்து விட்ட மிக முக்கியமான ஒன்றிரண்டு தகவல்களை இந்த வாரத்தில் பகிர்ந்து இந்த தொடரினை நிறைவு செய்கிறேன்.சதுரகிரி மலையினை பற்றி இது வரை ஆவணப் படுத்தப் படாத சில தகவல்கள் இந்த வாரத்தின் நெடுகில் இடம்பெறும்.

வாருங்கள் காயசித்தி அளிக்கும் மூலிகைகளைப் பற்றிய பதிவினை தொடர்வோம்.

பொற்றலைக்கரிப்பான்

முந்தைய பதிவின் நிறைவில் குறிப்பிட்ட குருவரிக்கற்றாளைக்கு தென் திசையில் அம்புவிடும் தூரம் சென்றால் பொற்றலைக்கரிப்பான் என்று ஒரு மூலிகை இருக்கிறதாம். அதன் காய் மிளகு போல் இருக்குமாம். அதன் இலையைக் கையால் கசக்கினால் கைகளில் எரிவு எடுக்குமாம். அதன் சாற்றை பாடாணங்களில் (பாஷாணங்கள்) சேர்த்து அரைத்து புடமிட செந்தூரமாகுமாம். அந்த செந்தூரத்தை புசிக்க காய சித்தியுண்டாகுமாம்.

உதிரவேங்கை

கலங்கிமுனிவர் வனத்தில் இந்த உதிரவேங்கை மரங்கள் அதிகளவில் காணப்படுமாம். அது வேங்கைமரம் போல் இருப்பதுடன், அதன் தூர் கறுப்பாக இருக்குமாம், இந்த மரத்தை குத்தினால் இரத்தம் போன்ற நிறத்தில் பால்வருமாம். அந்தப் பாலைக் கொண்டுவந்து உலோகங்களுக்கு சுருக்கிட பேதிக்கும். அப்படி பேதித்த உலோகத்தை இந்த மரத்தின் பால் விட்டு உருக்க தங்கமாகும் அந்தத்தங்கத்தை புடமிட செந்தூரமாகும். அந்த செந்தூரத்தை ஒருவாரம் சாப்பிட காயசித்தி உண்டாகுமாம்.

சாயாவிருட்சம்

யூகிமுனி வனத்தின் வடக்குப் பகுதியில் ஒரு மண் மேடு இருக்கிறதாம் அதை அண்டிய பகுதிகளில் இந்த சாயா விருட்சம் வளர்ந்து இருக்கிறதாம்.
இதற்க்கு நிழற்காந்தன் என்று இன்னும் ஒரு பெயரும் வழங்கப்படுகிறது. இந்த விருட்சத்தின் நிழல் நிலத்தில் விழாதாம். அதன் நிறம் சாம்பல் நிறமாகவும் இலை புன்னை மரத்து இலை போலவும், காய் சுருண்ட வெள்ளரிக்காய் போலும் இருக்குமாம். இந்தமரத்தின் பட்டையைச் சீவினால் நீல நிறத்தில் பால்வருமாம். அந்த பாலைக் கொண்டுவந்து அதில் சுத்தி செய்த பாதரசம் விட்டு சூரியப்புடம் போட்டால் இறுகி இருக்குமாம் அதை எட்த்து செந்தூரமாக்கி நெய்யில் குழைத்து ஒருமண்டலம் உண்ண காயசித்தி உண்டாகுமாம்.

செந்தாடுபாவை

மேலே குறிப்பிட்ட சாயாவிருட்சம் இருக்கும் இடத்திற்க்கு நேர் வடக்கே செந்தாடுபாவை என்னும் ஒரு மூலிகைச் செடி இருக்கிறது. அந்தச் செடி குத்துக்காரைச் செடி போலவும், அதன் இலை சம்மட்டி இலை போலவும் இருக்குமாம். அதன் இலையைப் பிடுங்கி சாறு பிழிந்து அந்தச் சாற்றைக் கொண்டு சூதத்திற்க்குச் சுருக்கிட சூதம் கட்டும். பின் அந்த சூதத்தை எடுத்து சாயா விருட்சத்தின் பாலில் ஏழுநாள் ஊறவைத்து எடுத்துப் புடமிட்டு செந்தூரமாக்கி பசுநெய்யில் குழைத்து ஒருவாரம் சாப்பிட காயசித்தி உண்டாகுமாம்.

இத்துடன் சதுரகிரி மலையில் உள்ள அரிய மூலிகைகள் பற்றிய பதிவுகள் நிறைவடைகிறது. நாளைய பதிவில் சதுரகிரி பற்றிய சுவாரசியமான ஒரு தகவலுடன் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

8 comments:

சங்கர் குருசாமி said...

Very Informative.... I am visiting Sathuragiri for past few Years now. But not aware of any of these things. It is amazing to know about such Herbs available there....

Only Great Sidhdhars should guide us to physically reveal such great herbs to this world.

http://anubhudhi.blogspot.com/

Guruvadi Saranam said...

Thozi,

Arumai.
vazthukkal!

Nandri
S.Rajendran
Bangalore.

பாலா said...

அன்புள்ள தோழிக்கு,

உங்களுடைய பதிவுகளைப்பார்க்கும்போது எனக்கு சித்த மருத்துவத்தில் ஈடுபாடு வந்துவிடும் போல் இருக்கிறது. நீங்கள் கூறும் இந்த வகை மூலிகைகளை தெரிந்தவர்கள் இன்றும் உள்ளார்களா?

என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

அகோரி said...

அருமையான பதிவு தோழி

Elangai Tamilan said...

தோழி,
தாங்கள் முலிகை குறித்த இடுகைஎனை இத்துஉடன் நிறைவு செய்து விட்டிர்கள்.ஆனால் ,தாங்கள் கூறியதை பார்த்தால் ,எந்தொரு வழிகாட்டி இல்லாமல் இந்த முலிகைகளை கொணர இயலாது.
மேலும் ,தாங்கள் அந்த காலத்தில் உள்ள புத்தகத்தை பார்த்து பதிவு இடுகிறீர்கள்.அதில்,படங்கள்
இல்லாமல் இருந்திருக்கும்.படங்கள் இருந்தால்,ஓரளவு காண இயலும்.தங்களின் ,காட்டின் முயற்சியால் மேற்கண்ட தகவல்களை வாசகர்கள் மத்தியல் பகிர்ந்து கொண்டதற்கு மிக்க நன்றி.
Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com

Arunsiva said...

தோழி,
நீங்கள் கூறும் அதாவது சித்தர்கள் கூறிய மரம்,செடிகள்,மூலிகைகள் இப்போது உள்ளனவா?

தெரிந்தவர்கள்
பதில் இடுமாறு
அன்புடன் வேண்டும்

அருண்சிவா.

-கிமூ- said...

வணக்கம்,

சித்தர் பாடல்கள் தொகுப்பை கிழ்கண்ட முகவரியில் பெறலாம்:


links:
picture of the CD
http://qqhsr6.1fichier.com/en/
http://koc57v.1fichier.com/en/
-----------

Sree Agencies
1/1 Bandala Venugopala Street ,
Triplicane
Chennai – 600 005.

Ph No: 2844 2361Ohm Sivasakthi Nagammal Trust
6-2-37 Periyar Colony
Nillakkottai
Dindugal district
Pin code - 624 208
Ph no: 097 9078 7789
Email – sivasakthinagammal@yahoo.com.au


Kavanagar Muzhakkam,
#4, Rahath Enclave,
2/746, Kazura Garden, 2nd Street,
Nellankkari
Chennai

-கிமூ-

RAVINDRAN said...

தோழி,

அரிய தகவல்

Post a Comment