காயசித்தி தரும் சதுரகிரி மலையின் மூலிகைகள்

Author: தோழி / Labels: ,

சதுரகிரி மலையில் நிறைந்திருக்கும் மூலிகைகளின் அருமை பெருமைகள் சித்தர்களின் பாடல்களில் விரிவாக கொட்டிக் கிடக்கின்றன.அவற்றை தனியே தொகுத்து ஆய்வுகள் மேற் கொண்டிருந்தால் சித்த மருத்துவம் இன்னேரத்துக்கு உலகின் முதன்மையான மருத்துவ முறைகளில் ஒன்றாக திகழ்ந்திருக்கும். அத்தகைய பொன்னான வாய்ப்பினை நாம் தவற விட்டுவிட்டோமோ என்கிற ஆதங்கம் எனக்கு நிறையவே உண்டு. இப்போது கூட காலம் தாழ்ந்து விடவில்லை. தமிழக அரசும்,இந்த துறையில் ஆர்வமுள்ளோரும் கை கோர்த்தால், நமது சித்தர்களின் அரிய தெளிவுகளை மனிதகுலத்தை உய்விக்க பயன்படுத்திட முடியும்.

கடந்த மூன்று நாட்களாக பகிர்ந்து கொள்ளும் மூலிகைகள் பெரும்பாலும் சதுரகிரி மலைக்கே உரித்தானவை,அந்த வரிசையில் இன்று காயசித்தி அளிக்கும் மூன்று மூலிகைகளைப் பற்றி பார்ப்போம்.

வனபிரம்மி

முந்தைய பதிவில் குறிப்பிட்ட வெண்ணாவல் மரங்கள் இருக்கும் இடத்திலிருந்து வலது பக்கத்தில் வனபிரம்மி என்னும் மூலிகை இருக்கிறது. இது கொடியாகப் படர்ந்து இருக்கும். இதன் இலை நெல்லியிலை போல தடிப்பாக இருக்குமாம். இந்த மூலிகையை ஞாயிற்றுக் கிழமையன்று சாப நிவர்த்தி செய்து பறித்து அதன் வேரைக் கொண்டு வந்து சூரணித்து முப்பது நாட்கள் புளித்த காடியில் கலக்கி உட்கொள்ள காயசித்தியாகுமாம்.

முப்பிரண்டை

மேலே சொன்ன வனபிரம்மி கொடி யிருக்கும் இடத்திற்க்கு பக்கத்தில் முப்பிரண்டை இருக்கிறதாம்.இது சாதாரன பிரண்டை போல முப்பட்டையாக இருக்குமாம்.இதைக் கொண்டுவந்து சாறு எடுத்து சூதத்திற்க்குச் சுருக்கிட சூதம் கட்டுமாம்.உடனே அதையெடுத்து நாகத்துடன் இணைக்க நாகம் கட்டும். நாகம் சூதம் இந்த இரெண்டும் சேர்ந்த கலவையின் எடைக்கு சம எடை கெந்தி சேர்த்து இதே முலிகையின் சாறுவிட்டு அரைத்து புடமிட செந்தூரமாகும். அந்த செந்தூரத்தை சாப்பிட்டுவர காயசித்தி கிடைக்குமாம்.

குருவரிக்கற்றாளை

சதுரகிரியின் வடபாகத்தில் குறுவரிக் கற்றாளை என்று ஒரு மூலிகை இருக்குறதாம். அது பெருவிரல் பருமன் இருக்குமாம். ஒன்றரைச் சாண் உயரம் மட்டுமே வளருமாம். குறுக்கே வரிவரியாக வரிகள் காணப்படுமாம். இதற்க்குச் சாப நிவர்த்தி செய்து வேரை எடுத்துவந்து இடித்துச் சாறேடுத்து இரும்பை மெல்லிய தகடாகத் தட்டி இந்த சாற்றில் ஊறவைத்து எடுக்க அது தாமிரமாக மாறி இருக்குமாம். அதை செந்தூரம் செய்து உண்ண காய சித்தி உண்டாகுமாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

6 comments:

jagadeesh said...

இம் மூலிகைகளின், படங்கள் கிடைத்தால், தகவல் பரிமாற்றத்தையும் தாண்டி ஒரு பூரணத்துவம் கிடைக்கும்.

Elangai Tamilan said...

தோழி,
இன்றைய பதிவுகள்ளில் நிறைய அரிதான விஷயங்கள் குறித்து பகிர்ந்துகொண்டது குறித்து மிக்க நன்றி.சித்த மருத்துவம் முன்னேராதற்கு காரணம் ,அரைகுறை வைத்தியர்கள் தான்.அவர்களால் தமிழ் மக்கள் பாதிக்கபடதால் ,சரிவர பரவ முடியவில்லை.ஆனால் ,தமிழகத்தில்,சில இடங்களில் ,சித்த மருத்துவமனைகள் இருக்கின்றன.மக்களிடம் உள்ள பயமே ,ஆங்கில மருத்துவம்
முன்னேற காரணம்.மற்றும் ,தமிழகத்தில்,சித்த மருத்துவ படிப்பு பரவலாக காணப்படுகிறது.சமீபத்தில் ,இருதய அடைப்பு குறித்து எளிதாக குணபடுத்தும் வகையில் ,மருந்துவ்கள் உள்ளதாக செய்திகள் படித்துள்ளேன்.ஆனால், வசதி குறைவான மக்கள் ,சித்த மருத்துவத்தையே நாடி செல்கின்றனர் ,தமிழகத்தில்.
Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com

சுவாமிநாதன் said...

இன்றைய சூழலில் அதிகமாக சக்கரை வியாதி, முழங்கால் வலி, உடல் எடையை குறைக்க, High BP, Low BP நோய்களுக்கு போன்ற மிக அவசியமான மூலிகைகள் பற்றி தெரியப் படுத்தினால் இன்னும் உதவியாக இருக்கும் (சுயநலத்திலும் ஒரு பொதுநலம்).

மன்னிக்கவும் என்மனைவியின் எடையை குறைக்க எனக்கு உதவவும்.
நானும் சித்த மருந்த்க்கலையே மட்டுமே நம்பக்கூடியவன் என்னுடைய மருத்துவர் பெயர்
Dr. K.B. Jothi kumar, B.S.M.S., M.D.,
Tamil Annai Siddha Maruthuvamanai,
D1/2, K.K. nagar, Madurai – 625 000
Ph: 0452 – 2539969
Email: tamilannaijothi@yahoo.com, tamilannaijothi@gmail.com

Elangai Tamilan said...

தோழி,
தங்களின் பதிவுகள் ,நேற்றைய தினம் பகிர்ந்துகொண்டது மிகவும் அருமை.ஆனால்,இன்று சித்த மருத்துவம் பிரபலம் இல்லாமல் இருப்பதற்கு காரணம் ,அரைகுறை அறிவுள்ள சித்த வைத்தியர்கள் தான்.ஆனால் ,தமிழகத்தில்,மருத்துவ படிப்பில் ,சித்த மருத்துவம் பெரும் பங்கு வகிக்கிறது.
சித்த மருத்துவ கல்லூரிகள் அதிகம் திறந்திருக்கின்றனர்.மேலும்,அரசினர் மருத்துவ மனயேல்,
சித்த என்றொரு பிரிவும் உள்ளது.ஆனால்,இலங்கையேல்???.

அகோரி said...

அருமை

Guruvadi Saranam said...

Thozi

Arumaiyana Pathippu.
Thangal siththar pani thodara vazthukkal.

TKS
S.Rajendran
Bangalore.

Post a Comment