நண்பர்களே!
சித்தரியலில் ஆர்வமுடைய நண்பர் ஒருவரின் மூலமாக கிடைத்த சித்தர் பாடல்களின் ஒலித் தொகுப்பினை கடந்த மாதம் இங்கே பகிர்ந்து கொண்டமை உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த பதிவுகளில் ஒலித் தொகுப்பினை உருவாக்கியவர் மற்றும் அதன் உரிமையாளரைப் பற்றி கூறியிருந்த தகவல்கள் தவறானவை. திரு.ஆர்.கண்ணன் என்ற பெருந்தகையாளரின் மின்னஞ்சல் கிடைக்கப் பெறும் வரையில் இதனை நான் அறிந்திருக்கவில்லை. அவரின் அறக் கட்டளைக்குச் சொந்தமான இந்த ஒலித் தொகுப்பினை அவரது அனுமதியில்லாது, இன்னொருவரின் பெயரில் பதிவிட்டது என்னுடைய மிகப் பெரிய தவறு.
இது தொடர்பாக எனது நிலையினை விளக்கி,அந்த பதிவுகளை உடனடியாக நீக்கிவிடுவதாக கூறி, நடந்து விட்ட தவறுக்காக எனது வருத்தங்களையும் தெரிவித்து,எனது பிழையை பொருத்தருளுமாறு வேண்டி ஒரு மின்னஞ்சலை அவருக்கு அனுப்பியிருந்தேன்.அதற்கு அவர் தன் இளைய சகோதரியாய் கருதி என் தவறினை பொறுப்பதாய் பதிலளித்திருந்தார்.மேலும் விரைவில் திருமந்திரத்தினை ஒலித் தொகுப்பாய் கொண்டுவர இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.மேலும் இந்த ஒலித் தொகுப்பு வேண்டுவோர் அவரைத் தொடர்பு கொண்டால் அவற்றை பகிர்ந்து கொள்ள விரும்புவதாகவும் கூறியிருந்தார்.
தன்னுடைய முயற்சியினை தனது அனுமதியில்லாது எடுத்தாண்டதோடு மட்டுமல்லாது, வேறொருவருக்கு அதன் புகழை நான் கொடுத்திருந்ததை அறிந்து ஆத்திரம் கொள்ளாது,மென்மையான தன்மையோடு எனது பிழையை உணர்த்திய பாங்கிலும்,எனது விளக்கத்தினை ஏற்று என் சிறு பிள்ளைத் தனத்தை பொருத்தருளிய பெருந்தன்மையில் அவர் மிக உயர்ந்தவரானார்.இதன் பின்னர் நான் உடனடியாக அந்த பதிவுகளில் இருந்த தகவல் பிழையினை சரி செய்திருக்க வேண்டும்.ஆனால், வழக்கம் போல எனது கவனமின்மையினால் அதனை செய்ய தவறிவிட்டேன்.
நேற்று, மீண்டும் அந்த பெருந்தகையாளரிடம் இருந்து வந்த இந்த பின்னூட்டமே, அவசரமாய் இந்த பதிவினை எழுதிட தூண்டியது.அவரின் வரிகளை இங்கே பொதுவில் அனைவரின் பார்வைக்கும் வைக்க விரும்புகிறேன்.
“திரு தேவன் அவர்களிடமிருந்து புலிப்பாணி அடிமையின் அனுமதி” என்ற அந்த வாக்கியங்களை இந்த blogல் இருந்து நீக்காமல் இருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது தவறு என தெரிந்த பின் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதனை வள்ளுவப் பெருந்தகை எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று என சொன்னதை நினைவுபடுத்துகிறோம்நல்ல செய்திகள் மக்களை அடையவேண்டும் என்பதில் இரண்டாம் சிந்தனைக்கு எள்ளவும் இடம் இல்லை, என்றாலும் அதற்கான முறை வழிகள் என சில உள்ளன அதனை பின்பற்றுவது தான் ஒழுக்கமுடையவர்களுக்கு உயர்ந்தது என நாங்கள் சொல்லாமலே நீங்கள் அறிவீர்கள் .நீங்கள் விரும்பினால் இது தொடர்பாக உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் உங்களை நேரில் சந்திக்கவும் தயாராக இருக்கிறோம் .இந்தியாவில் எங்களை சந்திக்க விரும்பினால் தேதி குறித்து சொன்னால் சந்திக்க தயாராக இருக்கிறோம் .எங்களது வெளியீடுகள்வெளியீடு 1சிவவாக்கியர் பாடல்கள் (550 பாடல்களும் முழுமையாக இசை வடிவில்)வெளியீடு 2சித்தர் பாடல்கள் வரிசையில்1)சித்தர்கள் வந்தனம்2)பத்திரகிரியார் பாடல்கள்3)பாம்பாட்டி சித்தர் பாடல்கள்4)குதம்பை சித்தர் பாடல்கள்5)அகப்பேய் சித்தர் பாடல்கள்6)மதுரை வாலைசாமி சித்தர் பாடல்கள்7)கொங்கன நாயனார் சித்தர் பாடல்கள்8)வேண்டுதல்வெளியீடு 3சித்தர்கள் ஞான பாடல்கள் வரிசையில்1) சித்தர்கள் வந்தனம்2) அகத்தியர் ஞானம்3) சட்டைமுனி முன் ஞானம் மற்றும் பின் ஞானம்4) காகபுஜன்டர் ஞானம்5) ரோமரிஷி ஞானம்6) சுப்பிரமணியர் ஞானம்7) திருமூலர் ஞானம்8) திருவள்ளுவர் ஞானம்9) வால்மீகர் சூத்திர ஞானம்10) வேண்டுதல் . .இந்த வெளியீடுகளை தெரிவிப்பதன் மூலம் இது வேறு யாரிடமிருந்தும் பதிப்புரிமை பெறக்கூடாது என்பதை தெரிவிப்பதுடன்.இது போன்ற வெளியீடுகளை பதிப்பு செய்ய முறையான எழுத்து முறை அனுமதி பெற வேண்டும் என வேண்டிக் கொள்கிறோம் .இறைவன் பணியில் . .தொடர்பு கொள்ள . .SIVASAKTHI NAGAMMAL TRUST (REGD)sivasakthinagammal@yahoo.comsivasakthinagammal@gmail.com
பதிவுகளில் உடனடியாக தகவலை திருத்தாமல் விட்டது என்னுடைய கவனக் குறைவினால் நேர்ந்ததே தவிர வேறெந்த உள்நோக்கமும் இல்லை.இது மன்னிக்க இயலாத தவறு.எனது செயலுக்காக பொதுவில் எனது வருத்தங்களை திரு.ஆர்.கண்ணன் அவர்களுக்கு தெரிவித்துக் கொள்வதுடன்,அந்த ஒலிப் பதிவுகளை நிரந்தரமாக என் பதிவுகளில் இருந்து நீக்கி விட்டேன் என்பதையும் அறியத் தருகிறேன். இந்த ஒலித் தொகுப்பினை வேண்டுவோர் “சிவசக்தி நாகம்மை அறக்கட்டளை”யின் மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றிடலாம்.அன்னாரின் தொலைபேசி எண் என்னிடம் இருக்கிறது.அவரின் அனுமதியில்லாது அதனை பொதுவில் வெளியிடக் கூடாது என்பதற்காகவே இங்கே பகிரவில்லை. அவரின் அனுமதி பெற்று அறியத்தருகிறேன்.
இன்று பதிப்பிப்பதாக இருந்த சதுரகிரி மலை பற்றிய பதிவு நாளை வெளியாகும்.
Post a Comment



16 comments:
அன்புடைய தோழியே,
தாங்களின் இந்த பணியை பார்க்கும் எவரும் உங்களை குறை கூற மாட்டார்கள். ஏனெனில் இது சித்தர்களின் பணி , இருப்பினும் தாங்கள் வெளிபடுத்திய ஆதங்கத்தை பார்க்கும் போது ,உங்களின் மீது அளவு கடந்த மதிப்பும்,மரியாதையும் தான் எங்களுக்கு தோன்றுகிறது.
உங்கள் சார்பாக நாங்களும் அவரிடம் தவறுக்காக மன்னிக்க வேண்டுகிறோம்.
தங்களுடைய இந்த பதிவின் மூலம் சித்தர்களின் பாடல்களை தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு அருமையான தொடர்பு கிடைத்துள்ளது.
மிக்க மகிழ்ச்சி , சித்தர் பணி தொடரட்டும் .
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை .
தோழி,
தாங்களின் இன்றைய பதிவுகள் யாரும் பொறுத்துக்கொள்ள தக்கது.தாங்கள் இதற்காக மன்னிப்பு கோரிவிட்டிர்கள்.மேலும்,தாங்கள் அன்றைய தினம் வெளிட்ட பின்னோடங்களில் சித்தர்பாடல்கள்
குறித்து ,குறுந்தகடு வேண்டுவோர் இந்த முகவரியே ,அணுகலாம் என்று தெரிவித்திருந்தீர்கள்.
மேலும்,தாங்கள் அவரது தொலைபேசி எண்ணை பெற்று தருமாறு, அன்புடன் கேட்டு கொள்கிறேன்.
மேலும்,நான் அவர்களுடன் தொலைபேசி உரையாட விரும்புகிறேன் .தாங்கள் எனது மினன்ஜலுக்கு
அனுப்ப வேண்டுகிறேன். தாங்கள் ,நேர்மையானவர் என்று நிருபித்து விட்டது ,இந்த இலங்கை தமிழனுக்கு பெருமையாக உள்ளது.
Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com
உங்கள் சார்பாக நாங்களும் அவரிடம் தவறுக்காக மன்னிக்க வேண்டுகிறோம்.
இதுபோன்ற தவறுகள் நேர்வது சகஜம் தான். இது இறைவன் நமக்கு கற்றுகொடுக்கும் பாடம்.
இது குறித்து சிவசக்தி டிரஸ்ட் சம்பந்தமான முழுமுகவரி, விலை எல்லாமே விவரமாக அதே பதிவில் பின்னூட்டமாகப்போட்டிருந்தேனே....
சரி பாருங்கள் எத்தரப்புக்கும் வருத்தம் வராது..
நட்பின் தோழி,
அவரிடம் நேரடியாக மன்னிப்பும் கேட்டுக்கொண்டேன் மற்றும் அவரிடம் தொலைபேசியில் உரையாற்றியதின் மூலம் அவரின் அறக்கட்டளை பற்றிய தகவல் மற்றும் சித்தர் பாடல்கள் ஒலி வடிவம் பற்றிய விவரம் கிடைத்தது. அவருக்கு கோடான கோடி நன்றிகள்.
மேலும் என்பக்கம் இருக்கும் தவற்றிற்கு மன்னிப்பு கோரிக்கொள்கிறேன்.
இது அறியாமையால் நடந்தயேயன்றி எந்த உள்நோக்கும் இல்லை.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் என்னை மன்னித்தருளுமாறு வேண்டிக்கொள்கிறேன்.
இதற்காகத் தானே ஆசைப்பட்டாய் கோவிந்தா, நடத்து நடத்து.
உங்கள் இருவரின் பெருந்தன்மை பாரட்டபட வேண்டியவை........
தீனா
உங்களைப் பற்றி அனைவருக்கும் தெரியும் தோழி, சித்தர்களின் மேல் உள்ள பக்தியினால் நடந்தது இது. எனினும் இந்த தளம் வாயிலாகத் தான் சித்தர்கள் பாடல்கள் ஒலிவடிவில் இருப்பதே தெரிந்தது. இதை,தவறு என எடுத்துக் கொள்ளத் தேவை இல்லை. இதன் வாயிலாக இந்தத் தகவல் அனைவருக்கும் சென்றடைந்துவிடும் என்றே நினைக்கிறன். திரு. கண்ணன் அவர்களின் முயற்சியை நாங்கள் வரவேற்கிறோம்.
@Ramesh
எதற்காக ஆசைப்பட்டீர்கள், கோவிந்தா?
நண்பர் கண்ணன் அவர்களுக்கு ,
சில சமயங்களில் இது போல் தவறு நடந்துவிடுவது எதிர்பாராமல் நடக்கும் ஒன்று தான்.நம்பிக்கை ஒன்று தான் நாம் மனிதர்கள் மேல் வைப்பது சில நேரங்களில் அது தவறிவிடுவதும் உண்டு அப்படித்தான் இந்தப்பிரச்சினை. குற்றம் எங்கள் மேலும் உண்டு, ஒரு முறை நாங்களும் சோதித்திருக்க வேண்டும் அதை செய்ய நாங்கள் தவறிவிட்டோம். அதற்காக உங்களிடம் மனதார மன்னிப்பு கேட்கிறோம். ஆனால் இனி இது போல் நடக்காது பார்த்துக்கொள்கிறோம். என்றும் உங்களின் அன்பும் ஆதரவும் நம் சித்தர் பிளாக்கு-க்கு தேவை.
- நன்றி
வின்மணி
அறியா தவறுக்கு மன்னிப்பு கோரிய தோழி பதிவருக்கும் பெருந்தன்மையாய் பொறுத்தருளிய அரக்கட்டளையினருக்கும் நன்றியுடன் பாராட்டுக்கள். தங்கள் அறக்கட்டளையின் சேவையை இதன் மூலம் அறிகிறேன். மிகவும் பார்ராட்டத்தக்க விஷயம். இன்னும் பல பாடல்கள் உங்கள் மூலமாக உலகறியட்டும்.
தோழி , அறியாமல் செய்த பிழையை திரு . கண்ணன் அவர்கள் மன்னிப்பார் என்று நம்புகிறோம். சித்தர்கள் ராஜ்ஜியம் வாசகர்கள் அனைவரும் அவரிடம் தவறுக்கு வருத்தம் தெரிவிகின்றோம் . மேலும் இது போன்ற தவறுகள் , வருங்காலத்தில் நடைபெறாமல் கவனமாக இருப்போம்
please carry on
please carry on
தவறை ஒப்பு கொள்வதே மிக பெரிய தன்மைதான்!!! தவறை ஒப்புக்கொள்ளும் மனம் படைத்த உங்களை திரு கண்ணன் போன்ற அன்மீகவதிகள் நிச்சயம் மன்னிப்பார்கள்...
Post a Comment