சதுரகிரியின் அற்புத மூலிகைகள் தொடர்ச்சி..

Author: தோழி / Labels: ,

சதுரகிரி மலையில் உள்ள தனித்துவமான மூலிகைகளின் மகத்துவங்கள் பற்றிய தகவல்கள் இன்றும் தொடர்கிறது.

வெண்ணாவல்

சதுரகிரியின் மேற்குப் பகுதிகளில் அதிகளவில் காணப்படும் விருட்சங்களில் முக்கியமானது இந்த வெண்ணாவல் விருட்சம். இதன் பூ, காய், கனி எல்லாம் வெண்மையாக இருக்குமாம். இந்த விருட்சத்தின் மேற் பட்டையை போக்கி அடிப் பட்டையை வெட்டிக் கொண்டுவந்து குழித்தைலம் இறக்கி, அந்த தைலத்தை லேசாக சூடாக்கிய தாமிர தகட்டில் நாற்பது தடவைகள் தேய்க்க அது வெள்ளியாகுமாம். அந்த வெள்ளியைச் செந்தூரமாக்கி இதே வெண்ணாவல் மரப்பட்டையைத் தூளாக்கி அத்துடன் கலந்து மூன்று நாட்கள், ஆறு பொழுது பண எடை அளவு புசிக்க காயசித்தி உண்டாகுமாம்.

கணைஎருமை விருட்சம்

சதுரகிரியில் நந்தீஸ்வரர் ஆச்சிரமத்துக்கு மேற்கு திசையில் ஒரு நாளிகை தூரம் நடந்தால் கணைஎருமை விருட்ச மரங்கள் இருக்குமாம். தோற்றத்தில் அது இலுப்பை மரம் போல் இருக்குமாம், அதன் காய் உருண்டையாக இருப்பதுடன், அந்த மரத்தினடியில் ஆட்கள் போய் நின்றால் அம்மரம் எருமையைப் போல் கனைக்குமாம், அந்த மரத்தைக் குத்தினால் பால்வரும், அந்தப் பாலைக் கொண்டு வந்து தினமும் பண எடை அளவு, நாலு நாள் சாப்பிட மூர்ச்சை ஆகுமாம். அப்போது ஒருவர் அருகில் இருந்து நாளிகைக்கு ஒரு கரண்டி வீதம் பசும்பால் கொடுக்க மூர்ச்சை தெளியும். அப்படி மூர்ச்சை தெளிந்தவுடன் காயசித்தி உண்டாகுமாம்.

பவளத்துத்தி

மேலே சொன்ன கருனை விருட்ச மரங்களுக்கு வடக்குப் பக்கமாக அம்பு விடும் தூரத்தில் பவளத்துத்தி என்னும் ஒரு செடி உண்டு, அது துத்திச் செடி போலவும் அதன் இலை நுனியில் சுற்றிலும் சிவப்பு நிறம் படர்ந்தும், இலைக்காம்பு, தண்டு சிவப்பாகவும் இருக்கும். இதன் பூ பவள நிறத்தில் இருக்குமாம். இந்த செடியின் இலையை சூரணித்து ஆவின் நெய்யுடன் கலந்து வெருகடிப் பிரமாணம் அளவு எடுத்து ஒருவாரம் சாப்பிடக் காயசித்தி உண்டாகுமாம்.

உரோமவிருட்சம்

இராமதேவர் ஆச்சிரமத்திற்க்கு கீழ்திசையில் இரண்டு நாளிகை தூரம் நடந்தால் அங்கே உரோமவிருட்சம் என்று அழைக்கப்படும் மரங்கள் நிறைந்து காணப்படுமாம். அம்மரம் சாம்பல் நிறமாக இருக்குமாம், அதன் கிளைகள் உரோமத்தைப் போலவும், தொட்டால் பஞ்சுபோல மிருதுவாகவும் இருக்குமாம். அதன் பட்டையை இரும்பு படாமல் தட்டி எடுத்து சூரணித்து, அந்த சூரணத்தில் திருகடிப் பிரமாணம் எடுத்து தேனில் கலந்து ஒரு மண்டலம் உண்ண காயசித்தி உண்டாகுமாம். அப்படி உண்டு காயசித்தி பெற்றவர்களுடைய சிறுநீரானது பஞ்சலோகாத்தையும் பேதிக்கச் செய்யும் தன்மையுள்ளதாகிவிடுமாம்.

(சிவவாக்கியாரின் சிறுநீர் பட்டு இரும்பு பேதித்து தங்கமாக மாறியதாக ஒரு செவிவழிக் கதை உண்டு.ஒரு வேளை அவர் இது போன்ற காயகற்பம் உட்கொண்டதனால் கூட இருக்கலாம்)

இந்த உரோமவிருட்சத்தில் துளை போட்டு சுத்தி செய்யப்பட்ட பாதரசத்தை அந்த துளையில் ஊற்றி, அந்த விருட்சத்தின் பட்டையால் மூடி நாற்பத்தைந்து நாள் கழித்து பார்த்தால் அந்த பாதரசம் கட்டியிருக்குமாம். அதை எடுத்து இந்த மரத்தின் பட்டையை அரைத்து கவசம் செய்து முழப் புடமிட உருகி மணியாகுமாம், அந்த மணியை வாயில் போட்டுக் கொண்டவர்களின் உடலுக்கு , கத்தி வெட்டு, அம்பு போன்றவையால் எந்த பாதிப்பும் ஏற்படாதாம், அத்துடன் நரை, திரை, மூப்பு, பிணி மாறி காயசித்தியும் உண்டாகுமாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

8 comments:

நாகேந்திரன் said...

அன்புள்ள தோழி ,இன்றைய பதிவு சிறப்பாக இருந்தது நீங்கள் தரும் விளக்கமும் சிறப்பாக இருந்தது,
நன்கு புரியு வகையில் எழுதுகிறிர்கள் இன்னும் பல அறிய தகவல்களை எதிர்ப்பகிறோம் நன்றி.

balaji said...

அருமையான தகவல்கள் இத் தொடரின் அடுத்த பதிவை ஆவலோடு எதிர்நோக்கிறேன்

GuruMunee said...

அன்புள்ள தோழி ,
தாங்கள் போகர்,கோரக்கர் சித்தரைப்போல் எல்லாவற்றையும் தெளிவாக பதிவு செய்கிறீர்கள்.அவர்களின் ஆசி உங்களுக்கு நிறைய கிடைக்க பிரார்த்திக்கிறேன்.

மூலிகை ஆய்வு தொடரட்டும்.
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

சங்கர் குருசாமி said...

Very Interesting to know about such Herbs.

Thanks for sharing such info.

Pls visit to my Blog :

http://anubhudhi.blogspot.com/

Elangai Tamilan said...

தோழி,
இன்று தங்களின் பதிவுகள் மிகவும் மகத்தானது.ஆனால் ,தாங்கள் குறிப்பிட்ட மூலிகைகள் பற்றி ஒரு ஆய்வு செய்வதற்குள் ,நமது ஆயுள் முடிந்துவிடும் என்று எண்ணுகிறேன்.இதற்க்கு எல்லாம் புண்யம் செய்திருக்க வேண்டும்.அப்பொழுதுதான் ,காலத்தில் கைகூடும்.தாங்கள் இன்றைய குறிப்புகள் அனைத்தும் ,சேகரிப்பதற்கு பகிரத பிரயத்தனம் செய்திருக்கவேண்டும்.ஆனால் தங்களை போல் ஒரு வழிகாட்டி அமைந்தால் எளிதில் அடையாளம்.மிக மிக நன்றி .

Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com

OHM SIVASAKTHINAGAMMAL said...

ஒலி வடிவ சித்தர் பாடல்கள் குறித்து . .

அன்பு தோழியே . .
உமது சேவை பாராட்டுக்குரியது . .

உங்களிடம் தனி மின்னஞ்சலில் தெரிவித்தபடி இந்த சித்தர் பாடல்கள் தொகுப்பினை எமது சிவசக்திநாகம்மாள் அறக்கட்டளையின் சீரிய வெளியீடு என்பதனை உறுதியிட்டு சொல்ல விரும்புகிறோம்.

இதற்கான மின் தட்டு(CD) தேவைப்படுபவர்கள் தொடர்பு கொண்டால் இலவசமாகவே அனுப்பிவைக்கின்றோம்..

அன்பு தோழி தனிமின்னஞ்லில் மன்னிப்பு கோரியது பாராட்டுக்குரியது . ஆனால் தவறு என உணர்ந்த அந்த வார்தைகளை
“திரு தேவன் அவர்களிடமிருந்து புலிப்பாணி அடிமையின் அனுமதி” என்ற அந்த வாக்கியங்களை இந்த blogல் இருந்து நீக்காமல் இருப்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது . .

தவறு என தெரிந்த பின் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதனை வள்ளுவப் பெருந்தகை

எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல் மற்றன்ன செய்யாமை நன்று என சொன்னதை நினைவுபடுத்துகிறோம்

நல்ல செய்திகள் மக்களை அடையவேண்டும் என்பதில் இரண்டாம் சிந்தனைக்கு எள்ளவும் இடம் இல்லை, என்றாலும் அதற்கான முறை வழிகள் என சில உள்ளன அதனை பின்பற்றுவது தான் ஒழுக்கமுடையவர்களுக்கு உயர்ந்தது என நாங்கள் சொல்லாமலே நீங்கள் அறிவீர்கள் . .

நீங்கள் விரும்பினால் இது தொடர்பாக உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் உங்களை நேரில் சந்திக்கவும் தயாராக இருக்கிறோம் . .

இந்தியாவில் எங்களை சந்திக்க விரும்பினால் தேதி குறித்து சொன்னால் சந்திக்க தயாராக இருக்கிறோம் . .

எங்களது வெளியீடுகள்
வெளியீடு 1

சிவவாக்கியர் பாடல்கள் (550 பாடல்களும் முழுமையாக இசை வடிவில்)

வெளியீடு 2
சித்தர் பாடல்கள் வரிசையில்
1)சித்தர்கள் வந்தனம்
2)பத்திரகிரியார் பாடல்கள்
3)பாம்பாட்டி சித்தர் பாடல்கள்
4)குதம்பை சித்தர் பாடல்கள்
5)அகப்பேய் சித்தர் பாடல்கள்
6)மதுரை வாலைசாமி சித்தர் பாடல்கள்
7)கொங்கன நாயனார் சித்தர் பாடல்கள்
8)வேண்டுதல்

வெளியீடு 3
சித்தர்கள் ஞான பாடல்கள் வரிசையில்
1) சித்தர்கள் வந்தனம்
2) அகத்தியர் ஞானம்
3) சட்டைமுனி முன் ஞானம் மற்றும் பின் ஞானம்
4) காகபுஜன்டர் ஞானம்
5) ரோமரிஷி ஞானம்
6) சுப்பிரமணியர் ஞானம்
7) திருமூலர் ஞானம்
8) திருவள்ளுவர் ஞானம்
9) வால்மீகர் சூத்திர ஞானம்
10) வேண்டுதல் . .

இந்த வெளியீடுகளை தெரிவிப்பதன் மூலம் இது வேறு யாரிடமிருந்தும் பதிப்புரிமை பெறக்கூடாது என்பதை தெரிவிப்பதுடன் . .

இது போன்ற வெளியீடுகளை பதிப்பு செய்ய முறையான எழுத்து முறை அனுமதி பெற வேண்டும் என வேண்டிக் கொள்கிறோம் . .

மற்ற வலைப்பூ நண்பர்களும் இதனை ஆமோதிப்பார்கள் என உறுதியாக நம்புகிறோம்

இறைவன் பணியில் . .
தொடர்பு கொள்ள . .
SIVASAKTHI NAGAMMAL TRUST (REGD)
sivasakthinagammal@yahoo.com
sivasakthinagammal@gmail.com

Prabu said...

23ம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கும் நாழ்.

தயவு செய்து இதை ப்ளாகுங்கள்!

Post a Comment