சதுரகிரியின் அற்புத மூலிகைகள் தொடர்ச்சி...

Author: தோழி / Labels: ,

சதுரகிரி மலையில் இருக்கும் அரிய சில மூலிகைகளின் இருப்பிடம் மற்றும் அவற்றின் மகத்துவம் குறித்த தகவல்கள் இன்றும் தொடர்கின்றது. இன்று புராண இதிகாசங்களில் மிகையாகவும்,மிகச் சிறப்பானதாகவும் வர்ணிக்கப் பட்டிருக்கும் சில மூலிகைகளைப் பற்றி பார்ப்போம்.

கற்பகதரு

கற்பக விருட்சம், பஞ்சு தரு என்கிற பெயர்களால் அறியப் படும் இந்த மரமானது மகாலிங்கர் சந்நிதிக்குப் பின்னால் இருக்கிறதாம்.இந்த மரத்தில் ஐந்து கிளைகள் இருக்குமென்றும் அவை ஒவ்வொன்றிலும் தனித்துவமான வெவ்வேறு வடிவத்திலான இலைகள் இருக்குமென்றும் கூறப் பட்டிருக்கிறது.இதனை வைத்தே இந்த மரத்தினை அடையாளம் காணலாம். இந்த மரத்தின் பட்டையை ஒரு பண எடையளவு ஒருவாரம் உட்கொள்ள அனைத்து நோய்களும் அகலுமாம்.மேலும் இந்த மரத்தை தட்டினால் பால் வருமெனவும்,அதனை ஒரு பண எடையளவு ஒரு மண்டலம் உட்கொள்ள காயசித்தியாகும் என குறிப்புகள் காணக் கிடைக்கிறது.

சஞ்சீவி மூலிகை

இராமாயணத்தில் இந்த மூலிகைக்காக ஒரு மலையையே பெயர்த்தெடுத்த கதையினை அறிவீர்கள். அத்தனை மகத்துவம் வாய்ந்த இந்த மூலிகையை சஞ்சீவினி மூலிகை, எமனை வென்றான் மூலிகை, தசையொட்டி மூலிகை என்று வெவ்வேறு பெயர்களினால் குறிப்பிட்டிருக்கின்றனர்.இதன் இலையானது சிறுவேப்பிலை போல இருக்குமாம். இது குத்து செடியாகும். இந்த செடியின் இலையின் சாறினை அகால மரணமடைந்தவரின் நாசியில் ஒரு சிட்டிகை விட்டு ஊத உயிர் பெற்று எழுந்து விடுவார்களாம். இது தவிர இந்த மூலிகையின் சாறினை வெட்டுப் பட்ட இடத்தில் தடவ அவை ஒன்றோடொன்று ஒட்டிக் கொள்வதுடன் அவர் உறங்கி எழுந்தவர் போல புத்துணர்ச்சியுடன் எழுவார் என கூறப் பட்டிருக்கிறது. மூர்ச்சை அடைந்தவர்களுக்கு இந்த மூலிகையினால் விசிற மூர்ச்சை தெளிந்து எழுந்து விடுவார்களாம். இந்த மூலிகையில் பட்டு வரும் காற்றினை சுவாசித்தாலே ஆயுள் விருத்தியும், காயசித்தியும் கிடைக்குமாம். ஆச்சர்யம்தானே!

உரோமவேங்கை

சதுரகிரி மலையில் சங்கிலிப் பாறை இருக்கிறதாம்.அதற்க்கு தென் கிழக்கில் உரோமவேங்கை என்னும் விருட்சம் இருக்கிறது.இது வேங்கை மரம் போல் மிருதுவாகவும், அடித்தூர் சாம்பல் நிறத்திலும் இருக்குமாம்.அதன் விழுதானது கவரிமான் உரோமம் போல ஒருசாண் அல்லது அரைச்சாண் நீளத்தில் தொங்கிக் கொண்டிருக்குமாம். இதன் பட்டையைச் சிறிது பெயர்த்தால் இரத்தம் போல் பால் வடியுமாம். அந்தப் பாலைக் கொண்டுவந்து சொர்ணத்திற்க்குச் சுருக்கிட பற்பமாகுமாம், அதை சாப்பிட காயத்தி கிடைக்குமாம்.

கற்றாமரை

சதுரகிரி மலையில் காலங்கி வனம் இருக்கிறது.அதன் வடக்குப் பக்கத்தில் தண்ணீர்கசிவுத் தரை இருக்கிறது. அந்தத் தரையில் கற்றாமரை என்றொரு மூலிகை இருக்கிறதாம். அந்த மூலிகையின் ஒரு இலையை கையால் தீண்டினால், அந்த இலை நான்கு இலையாக விரியுமாம். அந்த மூலிகையின் வேர் சடை போல் இருக்குமாம். இந்த வேரில் இரும்பு ஊசியைச் செருகி எடுத்தால் அது தாமிர ஊசியாக மாறி இருக்குமாம். பின்னர் அந்த தாமிர ஊசியை வேரின் வேறொரு இடத்தில் செருகி எடுக்க வெள்ளி ஊசியாக மாறி இருக்குமாம். மீண்டும் அந்த வெள்ளி ஊசியை வேரின் வேறொரு இடத்தில் செருகி எடுக்க அந்த ஊசியானது தங்க ஊசியாக மாறிவிடுமாம். மேலும் அந்த மூலிகையை கால்களில் மிதித்துக் கொண்டு பகலில் ஆகாயத்தைப் பார்த்தால் நட்சத்திரங்கள் தெரியுமாம். இந்தக் குறிப்புகளைக் கொண்டு இந்த மூலிகையை அடையாளம் கண்டு சாப நிவர்த்தி செய்து பறித்து அதன் வேரை நிழலில் உலர்த்தி சூரணம் செய்து ஒரு மண்டலத்திற்க்கு வெருகடிப் பிரமாணம் உட்கொண்டு வந்தால் காயசித்தி உண்டாகுமாம்.

நாளை சதுரகிரி மலையில் இருக்கும் மேலும் சில ஆச்சர்யமான மூலிகைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

9 comments:

RAVINDRAN said...

தோழி

அருமையான தகவல்கள்

RAVINDRAN said...

தோழி,
அற்புதம், பிரமிப்பு,ஆனந்தம்

Elangai Tamilan said...

தோழி,
இன்றைய பதிவில் தாங்கள் பகிர்ந்த அனைத்து செய்திகளும் மிகவும் அரிதானவை.
தங்களின் கடின முயற்சிக்கு மிக்க நன்றி.



Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com

raju g iyer said...

raju
mooligayai patrina vivarangalai padikum bodu bramipputogindrana. mikka nandri.

praveen said...

நல்ல தகவல் . நன்றி

madava_sada_sivam said...

http://www.youtube.com/user/madavasadasivam?feature=mhum

i request admin to check tat youtube channel

நாகேந்திரன் said...

என் அன்புள்ள தோழி வணக்கம்,இன்றைய உங்களின் பதிவு அருமை எங்களுக்கு மூலிகையின் பெயர் ஓரளவுக்கு தெரிந்தாலும்
அதன் பயன் என்னவென்று தெரியாது உங்களின் பதிவில் மூலம் தெரிந்து கொண்டேன் நன்றி..

குரு.தவசுதநாதர் said...

நல்ல சிவ பணியை தொடர்ச்சியாக செய்து வருகிறீர்கள்.. குரு அருள் கிடைக்கட்டும்..

இந்த வலைப் பூவிற்கு அவசியம் வருகை தரவும்..

http://thavasudhanathar.blogspot.com/

KABI the STAR said...

தோழி ,தயவு செய்து தாங்கள் எனக்கு சஞ்சீவி முலிகை பற்றய தங்களின் தெளிவை எனக்கு தெரிவிக்க வேண்டுகிறேன் .....

Post a Comment