என்னதான் இருக்கிறது சதுரகிரியில்....!

Author: தோழி / Labels:

மூன்றாவது வாரமாய் சதுரகிரி மலையின் தகவல்கள் தொடர்கிறது. உள்ளதை உள்ளவாறு பகிர்ந்து கொள்வது சுலபமாயிருக்கிறது. இந்த தொடரின் ஆரம்பத்தில் கூறியவாறு மிகையான கட்டுக் கதைகள் எதுவும் நான் பார்த்த வரையில் சித்தர்களின் பாடல்களில் இல்லை. நறுக்குத் தெறித்தாற் போல் எளிய தமிழில் ஆனால் ஆழமான அர்த்தங்களுடனான பாடல்கள்.

தற்காலத்தில் சித்தர்களைக் குறித்தான ஆக்கங்கள் அனைத்துமே ஏதோ ஒரு வகையில் மிகையாக புராணக் கதைகளுடன் பின்னப்பட்டே வெளியிடப் படுகிறது. இப்படியான ஆதாரஙகள் ஏதும் என்னிடத்தில் இருக்கும் புத்தகங்களில் இல்லை என்பது ஆச்சர்யமான ஒன்று. இதன் மூலம் எவரையும் குறை சொல்வது என் நோக்கமில்லை.

இன்றைய பதிவில் சதுரகிரி மலையில் என்னவெல்லாம் இருக்கிறது என்பதை தனித்தனியே பார்ப்போம்.

கோவில்கள்

சதுரகிரியில் கருப்பண்ணசமி, இரட்டைலிங்கம், கருப்பன் கோவில், சந்தனமகாலிங்க சுவாமி கோவில், சுந்தரர் கோவில், மகாலிங்கர் கோவில், சுந்தரலிங்கர் கோவில், வெள்ளைப் பிள்ளையார் கோவில், கன்னிமார் கோவில் ஆகியவை முக்கியமான கோவில்களாக சித்தர்களின் பாடல்களில் குறிக்கப் பட்டிருக்கிறது.

சித்தர்கள்

இங்கே வாழ்ந்திருந்த சித்தர் பெருமக்களை பற்றி கணக்கிட்டால் அநேகமாய் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் இந்த மலையோடு தொடர்புடையவர்களாகவே இருந்திருக்கின்றன. பலர் இங்கே சமாதியடைந்திருக்கின்றனர்.இன்றும் பல சித்தர் பெருமக்கள் இங்கே வாழ்வதாகவும் நம்பப் படுகிறது.

தீர்த்தம்/ஆறுகள்

சந்திரதீர்த்தம், கவுண்டுண்யஆறு, சந்தனமாகாலிங்க தீர்த்தம், திருமஞ்சனப் பொய்கை, பொய்கை தீர்த்தம், பசுக்கிடைத்தீர்த்தம், குளிராட்டி பொய்கை, வற்றாப்பொய்கை, பாம்புக் கேணி, உதக சுனைகள் போன்றவை ஒன்றுக்கும் மேற்பட்ட சித்தர்களின் பாடல்களில் குறிப்பிடப் பட்டிருக்கிறது. இவை தவிர வேறு பல தீர்த்தங்களைப் பற்றி குறிப்புகள் ஆங்காங்கே காணக் கிடைக்கின்றன.

மரங்கள்/மூலிகைகள்

சதுரகிரி மலையில் மூங்கில், நாங்கில், கோங்கை, கொங்கு, சந்தனம், அகில், அசோக்கு, தேக்கு, வேங்கை, சுரபுன்னை போன்ற அனேக மரங்களும்,வேறெங்கும் இலகுவில் கிடைக்காத அழுகண்ணி, இருப்பவல் செடி, உதிரவேங்கை, உரோமவேங்கை, உரோமவிருட்சம், ஏறழிஞ்சி, கற்றாமரை, கணைஎருமைவிருட்சம், கருநொச்சி, கருநெல்லி, கருங்கொடிவேலி, செந்தாடுபாவை, கையாந்தகரை, கானற்பலா, சாயாவிருட்சம், செங்கொடி வேலி, செங்கடுக்காய், செந்நாயுருவி, செங்கற்றாளை, தில்லைவிருட்சம், சஞ்சீவிமூலிகை, சிவந்தஇலைக்கள்ளி, சுணங்கிவிருட்சம், சோதிவிருட்சம், முண்டகவிருட்சம், பஞ்சதரு, வெண்ணாவல், மஞ்சப்பூத்தவேளை, வெள்ளைப்புனல்முருங்கை, சோதிப்புல்லு, பவளத்துத்தி, பொற்றலைக்கரிப்பான், கருநாரத்தை, நாகதாளி, வனபிரம்மி, பேய்சுரை, தொழுகண்ணி, முப்பிரண்டை, நாகபடக்கற்றாளை, குருவரிக்கற்றாளை போன்ற பல காயகற்ப மூலிகைகளும், இவை தவிர விஷப் பூலாமரம், முகம் வீங்கிமரம், எரிமுகிமரம், விஷதேற்ராமரம், தும்புகச்செடி பேன்ற பல விஷ செடிகளும் இருக்கின்றனவாம். இவை மனிதர் உடலில் பட்டாலே உயிராபத்து விளைவிக்குமாம்.

பறவைகள்/விலங்குகள்

பறவைக் கீரி, பறவைப்பாம்பு, பறவைப்பூனை, பறவை ஓந்தி என்னும் விசித்திர வகை விலங்குகளும், அகண்ட பேரண்டமாகிய இருதலைப்பட்சிகளும், தீவிழுங்கும் பட்சியும், மதிபமிழ்தத்தையுண்ணும் சகோரப் பட்சியாகிய செம்போத்தும், இன்னும் பல பறவைகளும், கும்புகும்பாய் சஞ்சரிக்கும் அன்றியும், சிங்கம்,யாளி, புலி, கரடி கடுவாய் போன்ற மானிடர்க்கு துன்பம் விளைவிக்கும் மிருகங்களும், மான், மரை, மலைப்பசு, வரையாடு, காட்டெருமை போன்றசாந்த மிருகங்களும் மானிடர் கண்களுக்கு புலப்படாது மறைந்து ஒற்றுமையாய் வாழுமாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

16 comments:

Elangai Tamilan said...

தோழி,
தாங்கள் ,நான் சென்ற பின்னோடங்களில் தங்களுடன் பகிர்ந்த ,செய்திகளை தாங்கள் சித்தர்களின் பாடல்கள் மூலமாக உறுதிசெய்யபட்டுளது.மிக்க நன்றி.நான், தங்களிடம் பகிர்ந்து கொண்டது அனைத்தும்,இங்குள்ள தமிழ் நண்பர் ,கொடுத்த புத்தகத்தில் உள்ளது.இந்த புத்தகம் விகடன் பிரசுரம் அல்ல.ஆனால்,தாங்கள் குறிபிட்டுள்ள மிருகங்களும் .பறவைகளும் மனிதர்களை ஒன்றும் செய்து என்று கூறுவதை கேள்விபட்டுள்ளேன்."எல்லாம் அவன் செயல்"என்ற எண்ணத்துடன் நாம் செயல்பட்டால் ,அந்த மகாலிங்கமே
நம்மை கரை சேர்த்து விடுவான் .அதில் எள்ளளவும் ,சந்தேகம் இல்லை.
Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com

149 said...

ஆச்சிரியமான தகவல்கள்
தீனா

JILLU-nu ORU YUVA said...

தொடரை மிகவும் அருமையாக எழுதி இருக்கீங்க தோழி...

தொரட்டும் உங்க ஆன்மிக சேவை ,

RAVINDRAN said...

தோழி


அகத்தியர்மலை பற்றி தகவல் அறிய மினஅஞ்சல்

செய்திருந்தேன்.நாளை செல்கிறேன்.தகவலுக்கு

காத்திருக்கிறேன்.

நண்றி
வணக்கம்

நாகேந்திரன் said...

அன்புள்ள தோழி,பல அறிய மூலிகைகளின் பெயர்களை அறிந்து கொண்டேன்
இன்னும் பல அறிய தகவல்களை தெரிந்து கொள்ள ஆவல்.

leekakrishnan said...

unmaithan.saduragiriel naan paravaikeeri yai parthu irrukiren.

sivabalan said...

இத்தகைய மூலிகைகள் தற்போது யாரிடமாவது உள்ளதா?

சிவஹரிஹரன் said...

மிக நல்ல விஷயங்களை அளித்தமைக்கு மிக்க நன்றி. இதை படிக்கும் எவரேனும், சதுரகிரி காண ஆசைபட்டால் - 09/03/2012 முத்துநகர் எக்ஸ்பிரஸ்ஸில் சென்னை எக்மோர் - விருதுநகர் ரிசர்வ் செய்து கொள்ளவும். மற்றபடி விருதுநகரிலிருந்து சதுரகிரி அழைத்து செல்லவேண்டிய எல்லா ஏற்பாடிகளையும் சதுரகிரி சிவசங்கு அன்னதான அறக்கட்டளை இலவசமாக செய்கிறது. (சாப்பாடு உள்பட) 10/03/2012 சனி காலையில் மலை ஏற ஆரம்பித்தால் - இரவு மலையில் தங்கிவிட்டு - மறுநாள் 11/03/2012 ஞாயிறு காலையில் இறங்கிவிடலாம். திரும்பி வருவது அவரவர் வசதிக்கேற்றார்போல் செய்து கொள்ளலாம். குழந்தையிலிருந்து முதியவர் வரை யாரும் தைரியமாக சென்று வரலாம். மேலும் விவரம் தேவைப்படுவோர் +91-9444492998 என்ற எண்ணிலோ அல்லது sivahariharan2007@yahoo.com என்ற மெயிலிலோ தொடர்பு கொள்ளலாம்.

gurumoorthi said...

if anybody is interested to vist Sadhuragiri Sri Sundhara Mahalinga swami temple by walking thru 9 km in the hill thru dense forest,can devote two days , plz contact me. the expense will be abt Rs.200/= to go and come from madurai.food is free at the hill three times a day and over night stay in the temple shed.this hill is with full of herbs and staying in this hill from 3 am to 6 am( in the brahmma muhurththam,) one can inhale pure ozone, with herbal effect, and that purifies ur body and soul. those with heart related problems, plz excuse.my mobile is 9362628676. the trip could be organised on the day of ammavaasai or pournami. ammavaasai is most preferable in this hill shrine.In this hill, 18 sidhdhars r still living from time immmorial.

சிவஹரிஹரன் said...

சதுரகிரி மகாலிங்கத்தை தரிசிக்கவரும் பக்தர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் - தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து சுமார் 2கிமீ தொலைவில் (வத்திராயிருப்பு - தாணிப்பாறை மெயின் ரோட்டில், மகாராஜபுரம் ரோட்டிற்கு எதிரில்) திரு.சிவசங்கு ஐயா அவர்களின் முதியோர் காப்பகத்தில், வெளியூரிலிருந்து வரும் அன்பகர்களுக்காக குளியல் வசதி செய்து தரப்பட்டுள்ளது. வியாபார நோக்கமில்லாமல் முற்றிலும் இலவச சேவையானதால், தேவைப்படுவோர் 9443324583/9444492998 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Sankar Narayanan said...

great information

sunseeni said...

any person r going to sadhurgiri this month from chennai pls add me iam kumar from chennai kumarseeni25@gmail.com

sunseeni said...

Any chennai member who r visiting sadhurgiri pls guide me kumarseeni25@gmail.com for this month

P.Raveendran said...

Sathura giri . Manithan than valnalil oru muraiyavathu parka vendia idam.

Soundara Pandian said...

சதுரகிரி சாதாரணக் கிரி அல்ல!பல வரலாறுகளை உள்ளடக்கியது ! நாம் சரிவர அறியாதது ! தொட்டுக்காட்டியதற்கு நன்றி -
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்.,டிப். (வடமொழி),பி.எச்டி.,
சென்னை-33
ssoundarapandian.blogspot.in

Soundara Pandian said...

சதுரகிரி சாதாரணக் கிரி அல்ல! பல வரலாற்களை உள்ளடக்கியது ! தொட்டுக்காட்டியதற்கு நன்றி-
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்.,டிப். (வடமொழி),பி.எச்டி.,
சென்னை-33
ssoundarapandian.blogspot.in

Post a Comment