தமிழர் திரு நாளாம் தைத் திங்கள் முதல் நாளில், நண்பர்கள் அனைவரின் வாழ்வில் நலமும்,வளமும் விழைய எல்லாம் வல்ல குருவருளை வேண்டி வணங்குகிறேன்.இந்த நாளில் நம்மில் அன்பையும், சமாதானத்தையும், சகோதரத்துவத்தையும், சகிப்புத் தன்மையையும் வளர்த்தெடுக்க உறுதி கொள்வோம்.
இன்று வழக்கமான சித்தர் பெருமக்களின் பாடல்களைத் தவிர்த்து மாறுதலாய், ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழக் கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்து தெளிந்த ஓர் அனுபவ சித்தரின் பாடலை பகிர்ந்து கொள்கிறேன்.பாடலில் பொதிந்திருக்கும் அர்த்தம் நம் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கட்டும்.
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
‘அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்’ எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
‘அனுபவம் என்பதே நான்தான்’ என்றான்!
- கவிஞர் கண்ணதாசன்
அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
இன்று வழக்கமான சித்தர் பெருமக்களின் பாடல்களைத் தவிர்த்து மாறுதலாய், ஒரு மனிதன் எப்படியெல்லாம் வாழக் கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்து தெளிந்த ஓர் அனுபவ சித்தரின் பாடலை பகிர்ந்து கொள்கிறேன்.பாடலில் பொதிந்திருக்கும் அர்த்தம் நம் வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கட்டும்.
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
‘அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்’ எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
‘அனுபவம் என்பதே நான்தான்’ என்றான்!
- கவிஞர் கண்ணதாசன்
அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



15 comments:
இனிய தைத்திருநாளில்,
விடியல் தோன்றிடும்!
விளக்கினை ஒத்து!
படியளந்திடுவாள்!
பகவதி லட்சுமி!
மடிநிறை யவுமே!
மங்கலம் தருவாள்!
வாழ்த்துகிறேன் வாழியவே!
தோழியுடன் நட்புடன்,
சந்துரு.
அருமையானகவிதை வரிகள் இன்றைய விடியலில் படிக்கும் பொழுது அருமையாக இருந்தது - வாழ்த்துக்கள் - தங்களுக்கும் என்னுடைய இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.
இனிய தைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.
அற்புதம்...
தமிழ்மொழி தயக்கமின்றி …
அயல் மொழி மயக்கமின்றி…
வாழ்ந்து வரும்
தோழமை உள்ளங்களில்…
எந்நாளும் மகிழ்ச்சி பொங்கட்டும்
இன்றைய வாழ்க்கையெனும்
புதுப் பானையில்...
புதிய எண்ணங்கள்…
புதிய முயற்சிகள்…
புதிய நண்பர்கள் …
புதிய நம்பிக்கைகள் …
புதிய திட்டங்களைச் சேர்த்திடுவோம்.
சோர்வேயில்லா செயல்கள் என்னும்
தீயை மூட்டி...
உண்மை நண்பர்களின் ஆதரவோடு..
உலவைச்சத்தத்தில் …
பொங்கட்டும் புது வாழ்வு.
1. கல்வி
2. அறிவு
3.ஆயுள்
4.ஆற்றல்
5.இளமை
6.துணிவு
7.பெருமை
8.பொன்
9.பொருள்
10.புகழ்
11.நிலம்
12.நன்மக்கள்
13.நல்ல ஒழுக்கம்
14.நோயின்மை
15.முயற்சி
16.வெற்றி
ஆகிய 16 செல்வங்களும்
பெற்று அனைவரும்
பெருவாழ்வு வாழ…
நெஞ்சார்ந்த…
இனிய தமிழ் புத்தாண்டு
மற்றும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
தீனா
நல்ல பதிவு .
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
என் அருமை சகோதரிக்கு,
தங்களின் அனுபவ சித்தரின் வரிகள் கண்களில் கண்ணீர் வரவழைகிறது.என்ன ஆழாமான வரிகள் ,அவ்வளவு எளிமையாக உள்ளது.
விடியல் விழிக்கையில் கண்விழித்து
சாணம்மெழுகி அரிசிமாக்கோலமிட்டு
செங்கரும்பு கட்டோடு
இஞ்சியும் மஞ்சளும் மணம்சேர்க்க
மண்மணம் மாறாப் புதுப்பானையில்
புத்தரிசி புதுவெல்லம் , நெய்மணக்கப் பொங்கல் ..!
உறவுகள் கூடிக்குலவையிட்டு கூவிய பொங்கலோ பொங்கல் !!
நினைக்கையில் கண்கசிந்து நெஞ்சுநனைக்கும்.
திரைகடல் தாண்டி திரவியம் தேடவந்தோம் ...
மின்சார அடுப்பில் மின்னலாய்ப் பொங்கல் !
உலகத்தொலைக்காட்சி உள்ளூர்த்தொலைகாட்சி ,
அனைத்திலும் முதன்முறையாக மகா ...மகா படங்கள் !
காந்திஜெயந்தி சிறப்புத் திரைப்படம் போலவே வன்முறைபொங்க..
தமிழை விழுங்கவந்த திமிங்கலமாம் தமிங்கிலத்தில் ,
WISH YOU HAPPY பொங்கல் ...கைப்பேசியில்
மாற்றங்கள் இயல்புதான் ,
இதையேனும் மாற்றி இனிமையாய்ச் சொல்லுவோம் !
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!!!!
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்
அன்புத் தோழி அவர்களுக்கு சாமீ அழகப்பனின் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
PONGAL VAAZTHUGAL AND ADVANCE TAMIL NEW YEAR VAAZTHUGAL BEFORE 3 MONTHS.
VAAZTHA VAYATHILLAI VANANGUGEREAN .
இந்த நன்னாளில் அன்பினையும், நட்பினையும், வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி!
"அனுபவம் என்பதே இறைவன் தான் " என்று அர்த்தமும் ஆழமும் நிறைந்த வரிகளுடன் தை திங்களில் தொடரும் சித்தர்கள் வலைபூ, சித்தர்கள் பற்றிய அரிய களஞ்சியமாக உருபெற்றுள்ளது. மென்மேலும் வளர குருவையும் இறைவனையும் பிரார்த்திக்கிறேன்
Post a Comment