சதுரகிரியில் மறைவாக இருப்பதாய் கருதப் படும் தைலக் கிணறு பற்றி ஏராளமான கதைகள் உண்டு. இவற்றில் பல கதைகளை புனைவின் உச்சமாகவே கருதலாம்.நானும் கூட முந்தைய பதிவொன்றில் இந்த தைலக் கிணறு குறித்த ஒரு கதையினை பகிர்ந்திருக்கிறேன். அதனை இந்த இணைப்பில் வாசிக்கலாம்.
பிலாவடி கருப்பண்ண சாமி கோவிலின் பின்னால் இருப்பதாக கூறப்படும் இந்த தைலக் கிணற்றை இதுவரை யாரும் கண்டறிந்து கூறியதாக தெரியவில்லை. இரசவாதம் செய்வதற்கு தேவையான மூலிகை குழம்பின் மிகுதி இந்த கிணற்றுக்குள் கொட்டப் பட்டு அதற்கு காவல் தெய்வங்களை சித்தர்கள் நியமித்ததாகவும், அந்த காவல் தெய்வங்கள் இந்த கிணற்றை சாமானியர்களின் பார்வையில் இருந்து மறைத்து வைத்திருப்பதாகவும் மட்டுமே சமாதானம் சொல்லப் படுகிறது. இன்றைய பதிவில் இது தொடர்பான சில சுவாரசியமான தகவல்களைப் பார்ப்போம்.
பல் வேறு சித்தர்களின் பாடல்களில் இந்த தைலக் கிணறு குறித்த தகவல்கள் காணப் பட்டாலும், போகர் அருளிய “போகர் ஜெனன சாகரம்” என்கிற நூலில் காணப்படும் தகவல் கொஞ்சம் வித்தியாசமானது. தைலக் கிணற்றின் அமைப்பு மற்றும் சூழலை விவரிக்கிறது பின்வரும் பாடல்...
"ஆமடா குகையொன்று வுள்ளேபோகு
மாயிரம்பேர் சித்தரப்பா அதிலிருப்பார்
வாமடா காலாங்கி யையர்நின்று
வல்லவொரு கற்பமெல்லா மங்கேதின்றார்
ஓமடா வெந்தனுக்குங் கற்பமீந்தார்
உயர்ந்ததொரு தயிலமெல்லா மங்கேயீந்தார்
நாமடா வதிலிருந்துச் சித்திபெற்று
சென்றுபார் காதமற் கப்பலாக
வாச்சரியம் பெரியதாகப் பாறையொன்று"
"ஆமென்ற பாறையிலே குழிதானுண்டுமதில்
நல்லதொரு தயிலமெல்லா மூடினேனே
மூனேன் கருப்பனையங் காவல்வைத்து
முதலான பொருள்வேண்டு மென்றோர்க்கெல்லாம்
தெடினே னென்றுசொல்லித் தெளிந்துவந்தால்
திறம்பார்த்து யிருக்குமிடஞ் செப்புமென்றேன்"
- போகர் -
பெரிய குகை, அதில் ஆயிரம் சித்தர்களுக்கு மேல் இருப்பார்கள். அங்கேதான் காலங்கிநாதர் தங்கி பல்வேறு கற்பங்களை சாப்பிட்டார். எனக்கும் கூட கொடுத்தார்.காலங்கிநாதர் அரிய பல தைல வகைகளை எனக்கு தந்தார். நானும் அங்கிருந்து சித்தியடைந்தேன் என்கிறார். பின்னர் கப்பல் போல இருக்கும் பெரிய பாறை இருக்கிறது. அந்த பாறையில் இருக்கும் ஒரு குழியில் இந்த அரிய தைலத்தை எல்லாம் போட்டு மூடினேன் என்கிறார்.இந்த குழிக்கு கருப்பனை காவல் வைத்திருக்கிறேன் என்கிறார். உண்மையான தேடல் உள்ளவர்கள் தெளிந்து இங்கே வந்தால் அந்த கிணற்றை காட்டச் சொல்லியே கருப்பனை காவலுக்கு வைத்தேன் என்கிறார் போகர்.
வெறுமனே கருப்பண்ண சாமி கோவிலின் பின் புறம் கிணற்றை தேடுவதை விட அந்த பகுதியில் ஆயிரம் பேர் தங்குமளவு பெரிய குகையும், அங்கேயோ அல்லது பக்கத்திலோ கப்பல் மாதிரியான பாறையும் இருக்கிறதா என தேடினால் இந்த கிணற்றை கண்டறிய வாய்ப்பு உள்ளது. இத்தனை சித்தர்கள் ஓரிடத்தில் கூடி என்ன செய்திருப்பார்கள், ஒருவேளை அந்த இடம் ஒரு ஆய்வுக் கூடமாகவோ அல்லது சித்தர்கள் தங்களின் கண்ட்றிதல்களை பரிசோதித்துப் பார்க்கும் பரிசோதனை கூடமாகவோ இருந்திருக்கலாம். போகரின் வாக்குப் படி தூய உள்ளத்துடன் கருப்பன்ண சாமியை வணங்கி இந்த தேடலை தொடர்ந்தால் தைலக் கிணற்றின் ரகசியம் தெரிய வரலாம்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



12 comments:
சித்தர்களின் பாடல்களில் உள்ள குறிப்புகளை கொண்டு நீங்கள் சொல்லிவரும் தகவல்கள் பலதும் மிகவும் சரியாக இருப்பதை தொடர்ந்து கவனித்து வருகிறேன்.நமது முன்னோர்கள் எவ்வளவு விவரங்களை நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள். நாம்தான் அவற்றை சரியாக பயன்படுத்தாமல் விட்டு விட்டோம்.
இனியாவது உங்களைப் போன்றவர்களை தமிழ் சமூகம் நல்ல முறையில் ஆதரித்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய ஆசை.
வாழ்த்துக்களுடன்
சரவணக்குமார்.
தோழி,
மிக்க நன்றி.தங்கள் மிக அறிய தகவல்களை,எந்தவிதமான ஒளிவுமறைவும் இன்றி ,வெளிபடுத்துவதற்கு ,இந்த தளத்தின் வாசகர்கள் மிகவும் கடமைபட்டிறுகிறறாக்கள்.
தனகளிடம் இத்தகைய நூல்கள் எல்லாம் தற்சமயதிலும் கிடைக்குமா ?.மேலும் எனது தாழ்வுடைய
நன்றிகள் மேலும் பல .
தங்களுக்கு எனது இதயம் கலந்த தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகுக.
--
Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com
தோழி,
"தெளிந்து இங்கு வந்தால்" - இங்கு தெளிந்து என்பதன் பொருள் ? சித்தர்களை மட்டுமே குறிக்கிறதா ?
அருமையான பதிவுகள்;இதனை நாம் விரிவாக விவாதிப்போமே.உங்கள் Facebook முகவரியோ மின்னஞ்சல் முகவரியோ அளித்தால் மகிழ்வேன். எனது FaceBook முகவரி: Krishnan Blaa: மின்னஞ்சல்: krishnanbalaa@gmail.com
நன்ரி;வாழ்த்துக்கள்!
புதிய தகவலுக்கு நன்றி. தங்களுக்குத்தான் இதுபோன்ற செய்தி எங்கிருந்து கிடைக்கிறதோ ! . தங்குளுக்கு சித்தர்களின் அருள் பரிபுரனமாக உள்ளது
அருமையான தகவல், சதுரகிரியை பார்க்க ஆவல் உள்ளது ஆனால் இன்னும் எனக்கு குருவருள் கிட்டவில்லை - யார் மூலமாவது அந்த குருவருள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
தோழி, நீங்கள் செய்வது சரியா? கெட்டவர்களுக்கும் நயவஞ்சகர்களுக்கும்
தெரியாமல் இருந்த இந்த தைல கிணற்றை நீங்கள் இப்படி வெளிச்சம் போட்டு
காட்டுகிறிர்களே இது முறைய இது குரு நிந்தனை ஆகாத?
உங்கள் மனம் புண்படும்படியாக இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்.
very good information. would like to see more detailed notes on many of these topics rather than short notes. thanks
N.R.Ranganathan
நான்சதுரகிரிசென்றுள்ளேன்தகவல்புதிதாகஉள்ளது
நான்சதுரகிரிசென்றுள்ளேன்தகவல்புதிதாகஉள்ளது
நான்சதுரகிரிசென்றுள்ளேன்தகவல்புதிதாகஉள்ளது
Nothing wrong in bringing out the secrets because it will work conditionally. How?
போகர் தன சப்தகாண்டத்தில் கீழ்வரும் பாடலை பாடியுள்ளார். ஆக, தங்க ரகசியம் நமக்கு அம்பலமானாலும், அதன் செய்முறையில் நமக்கு வெற்றி கிட்டுமா ?
பலிக்குமே இத்தங்கம் பிரவித்தங்கம்
பாரிலுள்ள சிவயோகிக்கான தங்கம்
ஒலிக்குமே ஜெகஜோதியான தங்கம்
வுத்தமனே கருமிகட்கு வாயக்காதப்பா
நலியாளர் தங்களுக்கு இந்ததங்கம்
நாதியற்ற பேர்களுக்கு நவிலவேண்டும்
பலியாது கருமிகளாய் இருப்பாரானால்
பாருலகில் கருமிகட்கு வாய்க்காதன்றே.
அண்மையில் போகர் சப்தகாண்டம் பற்றிய ஆய்வு நூலை முடித்தேன். அதில் இவற்றை தெரிந்து கொண்டேன்.
Post a Comment