சதுரகிரியில் மறைந்திருக்கும் சித்தர் சமாதிகள்!

Author: தோழி / Labels: ,

சதுரகிரியில் பொதிந்திருக்கும் தகவல்கள் இன்றும் தொடர்கிறது.....

கோரக்கர் பாடல்களைக் கொண்டு அங்கே வசித்த சித்தர்கள் பற்றியும்,அவர்தம் ஆச்சிரமங்கள்,குகைகள் பற்றிய விவரங்களைப் பார்த்தோம்.இவை தவிர மலையில் இருக்கும் கோவில்கள், அவற்றில் குடிகொண்டிருக்கும் தெய்வங்கள், அரிய மூலிகைகள்,சுனைகள்,தைலக் கிணறு போன்ற விவரங்களையும் பார்த்தோம்.

இத்தனை சிறப்பான சித்தர்கள் இங்கே வாழ்ந்திருந்தாலும் அவர்களின் ஜீவசமாதிகள் தமிழகமெங்கும் இருப்பது குறித்து நண்பர் ஒருவர் கடந்த வாரத்தில் தனது சந்தேகத்தினை எழுப்பியிருந்தார்.நியாயமான இந்த கேள்விக்கான விடைகளைத் தேடி புத்தகங்களைப் புரட்டிக் கொண்டிருந்த போது கிடைத்த ஆச்சர்யமான தகவல்களை இன்று பகிர்ந்து கொள்கிறேன்.

அகத்தியர் தனது “அகத்தியர் 12000” என்ற நூலில் கூறியுள்ள விவரங்கள் பின் வருமாறு...

"ஈயவே யின்னமொரு மார்க்கங்கூர்வேன்
யெழிலான சதுரகிரி மேற்கேயப்பா
சித்தான பெரியோர்தான் தெவரிடியப்பா
சிறப்பான சித்தர்பிரம முனிதானங்கே
விருப்பமுடன் சமாதிமுகம் கொண்டார்பாரே"

- அகத்தியர் -

அகதியர் தனது மாணவரான புலத்தியருக்கு கூறுவதாக இந்த பாடல் அமைகிறது. சித்தர்களும், ஞானிகளும், முனிவர்களும் அழகு மிகுந்த சதுரகிரியின் மேற்கு பக்கத்தை விரும்பி தேர்ந்தெடுத்து சமாதியடைந்தனர் என்கிறார்.மேலும் யாரெல்லாம் இங்கே சமாதிய அடைந்திருக்கின்றனர் என்பதையும், அந்த சமாதிகளை எவ்வாறு தரிசிப்பது என்றும் இந்த நூலில் கூறியிருக்கிறார்.

மிக நிச்சயமாக எனக்கு இது புதிய தகவல்தான், சித்தர்கள் தொடர்பாய் நான் இது வரை வாசித்த எந்த ஒரு தனி நூலிலும் இத்தகைய செய்தியினை படிக்கவில்லை. இத்தனை முக்கியமான ஒரு தகவல் ஏன் ஆவணப் படுத்தப் படாமல் போயிற்று என்பதும் புரியவில்லை.

வாருங்கள் யாரெல்லாம் சதுரகிரியில் சமாதியடைந்திருக்கின்றனர் என்பதை பார்ப்போம்.

"இருந்துமே பாம்பாட்டி சித்தர்தாமும்
எழிலுடனே வனேகநூல் செய்துகொண்டு
பொருந்தவே மரப்பொந்தில் சமாதியாகி"

- அகத்தியர் -

பமபாட்டிச்சித்தர் அநேக நூல்களைப் பாடிவிட்டு சதுரகிரியில் மேற்க்குப் பக்கம் இருக்கும் மரப் பொந்தொன்றில் சமாதியடைந்தார் என்று குறிப்பிடுகிறார் அகத்தியர்.

"சித்தான சித்துமுனி விடைக்காடார்
பத்தியுடன் பதங்கண்டு நேமம்பூண்டு
முத்தியுடன் சமாதிக்கு யேகவென்று
மூர்க்கமுடன் மலையோறி மைந்தா
வெல்லவே குத்துக்கல் அருகிலப்பா
இருக்கமது சமாதிமுகங் கொண்டாரே"

- அகத்தியர் -

இடைக்காட்டுச்சித்தர் சமாதியடைய வேண்டும் என்று சதுரகிரி மலை ஏறி குத்துக்கல் அருகில் சமாதியடந்தார் என்கிறார் அகதியர்.

"பாரப்பா திருமூல நாயன்றானும்
பார்க்கவே வயக்கால் மண்டபந்தான்
பாங்குடனே அதனருகில் பார்தாயானால்
பூர்க்கவே பிரணவத்தைக் கையிலேந்தி
புகழுடனே சமாதியேகி இருப்பாரங்கே"

- அகத்தியர் -

வாய்க்கால் மண்டபத்திற்க்கு அருகில் திருமூலரும் சமாதியடைந்ததாக அகத்தியர் குறிப்பிடுகிறார்.

ஆச்சர்யமான தகவல்கள்தானே!, இந்த நூலில் நான் பார்த்த வரையில் பதினோரு சித்தர்கள் சதுரகிரியில் சமாதியடைந்திருப்பதாக அகத்தியர் கூறியிருக்கிறார். பதிவின் நீளம் கருதி மூவரைப் பற்றிய தகவல்களோடு இன்று நிறைவு செய்கிறேன். மேலதிக தகவல்கள் சேகரித்துப் பின்னர் தொடராக எழுதினால் கூடுதல் விவரங்களை பகிர முடியும் என கருதுகிறேன்.

இந்த சமாதிகளை எப்படி கண்டறிந்து தரிசிப்பது என்பதையும் கூட அகத்தியர் தனது நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

"யுத்தமனே சமாதிகாண மார்க்கஞ்சொல்வேன்
செயலான வகஸ்தியனார் சீடனென்றும்
ஒப்பமுடன் சமாதிமுகம் காணவென்றும்
மெப்புடனே கைதொழுது வேண்டுவாயே
வேண்டியே நிற்கையிலே உன்தமக்கு
பொங்கமுடன் சமாதியது தோற்றங்காணும்"

- அகத்தியர் -

தனது பாடல்களில் குறிப்பிட்டுள்ள இடங்களுக்குச் சென்று,அகத்தியரின் சீடனான நான் சமாதிகளை தரிசிக்க வந்துள்ளேன் என்று கரம் கூப்பி வேண்டிக்கொள்ள சமாதி இருக்கும் இடம் தெரியவரும் என்கிறார் அகத்தியர்.

குருவருள் வாய்த்தவர்கள் முயன்றால் இந்த சமாதிகளை தரிசிக்கலாம்.சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

16 comments:

சங்கர் குருசாமி said...

Very Nice information. Thanks for sharing.

JILLU-nu ORU YUVA said...

இரண்டு முறை சதுரகிரி சென்று இருக்கிறேன்,

ஆனால் மறுபடியும் சென்றால் இரண்டு நாட்கள் பத்தாது

குறைந்தது இரண்டு வாரம் இருந்து தோழி சொன்ன இடங்கள் எல்லாம் சென்று பார்க்க வேண்டும்

ஷிவாவின் அருளோடு ....

Kumar P said...

தோழி,

இவ்வாறு மேற்குறிய சித்தர்கள் சதுரகிரியில் சமாதி அடைந்தார்கள் என்றால், பல்வேறு தளங்களில் ஜீவசமாதி அடைந்ததாக பலபேர் கூரக்காரணம் என்ன ?

எ.கா பாம்பாட்டி சித்தர் - மருதமலை,

வலை பகுதியில் , ஒரு ப்ளாகில் ஒரே சித்தர் பல்வேறு இடங்களில் சமாதி அடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது...

♠புதுவை சிவா♠ said...

சதுரகிரி பயணத்தின் போது சில சித்தர்கள் சமாதிகளை வேடவர்கள் துணையுடன்
தரிசனம் செய்தது உண்டு.


நன்றி தோழி...

அகோரி said...

புதிய தகவல் தோழி
நன்றி

GuruMunee said...

அன்புள்ள தோழி,

தினம்தினம் புதுமையான தகவல் ,மிரள செய்கிறது உங்கள் பதிவு (சித்தர்களைப்பற்றி).

பாலா-சென்னை

Elangai Tamilan said...

தோழி,
தங்களின் பதிவின் படி நீங்கள் ,கூறியது முற்றிலும் உண்மை.ஆனால்,தமிழகத்தில்,சில இடங்களில் சித்தர்கள் சமாதி உள்ளதாக கூறுகிறார்களே ?
தாங்கள் பதிவிற்கு மிக்க நன்றி.
சதுரகிரியில் தீர்த்தங்கள்

சந்திர தீர்த்தம்

சதுரகிரியில் சுந்தர மகாலிங்க மலையில்
'சந்திர தீர்த்தம்' இருக்கிறது.இந்த சந்திர
தீர்த்தத்தில் இறைவனை வேண்டி வணங்கி
ஒரு முறை நீராடினால் கொலை,
காமம், குருத்துரோகம் போன்ற
பஞ்சமா பாதங்களிலிருந்து நீங்கி
புண்ணியம் பெறலாம்.

கெளண்டின்னிய தீர்த்தம்.

சந்திர தீர்த்தத்திற்கு வடபுறத்தில் உள்ளது
இந்தத் தீர்த்தம். இது தெய்வீகத் தன்மை வாய்ந்த
நதியாகும். வறட்சியுற்ற காலத்தில் தேவர்களும்,
ரிஷிகளும் சிவபெருமான் வேண்ட,
ஈசன் தமது சடை முடியில் உள்ள கங்கைலிருந்து
ஒரு துளி எடுத்து நான்கு கிரிகளுக்கும் மத்தியில்
விட்டு, லிங்கத்தில் மறைந்தார் என்பது ஐதீகம்.

கங்கை, கோதாரி, கோமதி, சிந்து, தாமிரவருணி, துங்கபத்திரை
முதலிய புண்ணிய நதிகளுக்கு நீராடிய பயனுண்டு.
இந்த நதியில் நீராடுவதால் சகல பாவங்களும்
தீர்வதால் இதற்கு ''பாவகரி நதி'' என்னும் பெயரும்
உண்டு.

சந்தன மகாலிங்கம் தீர்த்தம்.

இச்சதுரகிரியின் மேல் 'காளிவனம்' என்கிற
இருண்டவனம் ஒன்றுள்ளது. அவ்வனத்திலிருந்து
வருகிற தீர்த்தம் சந்தனமகாலிங்கம தீர்த்தம்
என்று அழைக்கப்படுகிறது. உமையாள்
பிருங்க முனிவர் தம்மை வணங்காமல்
ஈசனை வணங்கியமையால் ஏற்பட்ட கோபத்தின்
காரணமாகச் சிவபெருமானை விட்டுப் பிரிந்து,
அர்த்த நாரீஸ்வரர் என்கிற சிவசக்தி
கோலத்தில் இருக்க வேண்டி சதுரகிரிக்கு
வந்து லிங்கப் பிரதிஷ்டை செய்து அபிஷேகத்திற்கு
வரவழைத்த ஆகாய கங்கையாகும்.

இப்புண்ணிய தீர்த்ததில் நீராடினால்,
எந்தப் பாவமும் நீங்கி முக்தி கிடைக்கும்.

இது தவிர, சதுரகிரியில் பார்வதி தேவியின்
பணிப்பெண்களான சப்த கன்னியர்கள்
தாங்கள் நீராடுவதற்கு உண்டாக்கிய
'திருமஞ்சனப் பொய்கை' உண்டு.

காலாங்கிநாதரால் உண்டாக்கப்பட்ட
'பிரம்மதீர்த்தம்' ஒன்று சதுரகிரி மலைக்
காவலராகிய கருப்பணசுவாமி சன்னதி
முன்பாக இருக்கிறது. இது தவிர கோரக்கர், இராமதேவர்,
போகர் முதலிய மகரிஷிகளால் உண்டாக்கப்பட்ட
'பொய்கைத் தீர்த்தம்'', ''பசுக்கிடைத் தீர்த்தம்'', 'குளிராட்டித் தீர்த்தம்'
போன்ற அனேக தீர்த்தங்கள் சதுரகிரி மலையில் உள்ளன.

Murugappan kugan
http://kathirkamamblogspotcom.blogspot.com

Anonymous said...

அற்புதம் மிக அற்புதம் !

சுவாமிநாதன் said...

அருமையாக இருந்தது. அதிக விஷயங்களை தெரிந்து கொள்ளவைத்தமைக்கு மிக்க நன்றி வளர்க உமது ஆன்மீகப் பணி

நாகேந்திரன் said...

அன்புள்ள தோழி,சித்தர்களை தரிசிப்பதோ பெரிய பாக்கியம் சித்தர்களின் ஜீவ சமாதியை தரிசிப்பது மிகப்ப பெரிய
பாக்கியமாக கருதுகிறேன் அதற்கான வழிகளை நீங்கள் காட்டுகிறீர்கள் மிக்க நன்றி .

Kumar P said...

@இலங்கை தமிழன், சிறந்த தகவல்கள் ! நன்றி தோழா !!!

-கிமூ- said...

VANAKKAM
THOZI,

MUNTHAIYA PATHIVIL - VAALAI PEN - SIRUMIYAKA KATHCHI THARUM THEIVATAI SIDDHARKAL VANAKINARAL ENDRM PADITHEN.

NEMILI SRI BALA - KUZANDHAI THEIVAM - PATRI INAIYATHIL THEYDUM POTHU INTHA THAKAVAL KIDAITHAU.

KARUVURAR POOJA VITHI - 30 PADALKAL. ATHIL MUTHAL PADAL ONDRIL

Aadhiyandam Vaalai avaL irunda VeedE
Aacharyam metha metha adhudhaan Paaru
SOdiyanda Nadu Veedu Peeda Maagi
Sogusu pera veeRirundaaL thurai peN AathaaL

MATRUM 25-THAM PADALIL

Sookshmam IvaL Vaasamadhu Nilaitha Veedu
SolluthaRkE Engumaai niRaindha Veedu
DEsamadhil pOi viLangum Indha Veedu
Siddhaanda Sidhar avar ThEdum Veedu
Osai MaNi Pooramathil Uthikkum Veedu
OhO HO AdhisayangaL uLLA Veedu
Aasu Kavi Madhuramadhu pozhiyum Veedu
Avan aRuLum koodi viLaiyaadum veedE!

PUJOOA VITHI 30 PADAL VAITHU POORULAI VILAKA VENDUM ENDRU KETUKOLKIREN.

NANDRI

KIMU

suresh said...

தங்கள் தகவல்கள் மிகவும் சிறப்பாக உள்ளது.

நன்றி

சுரேசு

KV.SURYA said...

ANPULLA THOLLIKKU VANAKKAM,
IP-PAKUTIKU NAN PUTHIAVAN.
KARUPPU KUNDRI MANIYIN PADAM KIDAIKUMA!
MATRAVARKALUKUM PAYANULATA IRUKM.

laxman said...

நாம் காணமுடியுமா ?

Siddharth vi said...

kandippaga

Post a Comment