செய்த பாவங்களை செலவில்லாமல் தீர்த்திடும் வழி!

Author: தோழி / Labels: ,

சதுரகிரி மலையின் அருமை பெருமைகளை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். அத்தனை சிறப்பான காரண காரியங்கள் அந்த மலையெங்கும் நிறைந்தும் , மறைந்துமிருக்கிறது.அப்படியான ஒரு தகவலை இன்றைக்கு பகிர்ந்து கொள்கிறேன்.

வினை,எதிர்வினை என்பது பிரபஞ்சத்தின் ஆதார தத்துவம்.இதன் அடிப்படையில்தான் எல்லாமே இயங்குகிறது. மனிதனும் கூட தான் செய்யும் வினைகளுக்கான எதிர்வினையை எதிர்கொள்கிறான்.இந்த வினைப் பயனை முழுமையாய் களைந்து “பிறவாப் பேரின்பநிலை” அடைவதே உயரிய சித்த நிலை எனப் படுகிறது.இந்த உயரிய நிலையினை அடைவது எல்லோருக்கும் சாத்தியமில்லை,குருவருள் கிட்டியவர்களுக்கே சாத்தியமாகும்.

சாமான்யர்கள் இந்த வினைப் பயனை அனுபவித்தே தீர்த்திட வேண்டியிருக்கும், இருப்பினும் பரிகாரங்களின் மூலமாய் இதன் தீவிரத்தில் இருந்து காத்துக் கொள்ளவோ அல்லது குறைத்துக் கொள்ளவோ முடியும் என்கின்றனர்.அநேகமாய் எல்லா மதங்களிலும் இந்த வினைப்பயன் பற்றிய கூற்றுகளை முன்வைத்து அதை தீர்த்திடவும்,குறைத்திடவும் பல்வேறு உபாயங்களை கூறியிருக்கின்றன.இவை யாவும் செலவு பிடிப்பதும், நடை முறைக்கு சாத்தியமில்லாதவைகளாகவும் இருக்கின்றன.

கர்மவினை குறித்து சித்தர்கள் பல்வேறு விளக்கங்களையும்,உபாயங்களையும் கூறியிருந்தாலும், சதுரகிரி தகவல்களை தேடிக் கொண்டிருந்த போது கிடைத்த ஓர் தகவலை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். கர்ம வினையினை களைய காலங்கிநாதர் தனது பாடலொன்றில் பின்வருமாறு உபாயமொன்றை கூறுகிறார்.

"பெருமையாம் கோரக்கர் குண்டா ஓரம்
பிறங்கும் ஒரு தீர்த்தமதில் நீராடி செய்து
அருமையாம் குண்டாநீர் அள்ளி உண்ண
செய்த பாவவினையெல்லாம் அகன்றுபோமே
ஒருமையாம் உள்ளமதில் கோரக்கர் தம்மை
உன்னியே துதிசெய்ய நல்வாழ்வுண்டகும்"

- காலங்கி நாதர் -

மிகுந்த பெருமைகளைக் கொண்ட கோரக்கர் குண்டாவின் அருகில் ஒரு தீர்த்தம் உள்ளதாம். அந்த தீர்த்தத்தில் குளித்து பின்னர் நேராக கோரக்கர் குண்டாவில் நிறைந்திருக்கும் அருமையானை நீரை அள்ளிப் பருகினால் ஒருவன் செய்த பாவ வினைகள் எல்லம் தீர்ந்துவிடுமாம். அத்துடன் கோரக்கரை மனதில் தியானித்து வணங்கினால் நல்வாழ்வும் கிடைக்குமென்கிறார் காலங்கி நாதர்.

வாய்ப்பிருக்கிறவர்கள் முயற்சித்துப் பாருங்களேன்!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

18 comments:

jagadeesh said...

அருமை. மிக்க நன்றி தோழி. எவரேனும் மேலே கூறியுள்ள கோரக்கர் குண்டா, தீர்த்தம் ஆகியவைகளைப் பார்த்த அனுபவம் இருந்தால், பகிர்ந்து கொள்ளவும்.

praveen said...

மனிதன் தான் செய்த வினையை அனுபவித்தே தீரவேண்டும் என்பது விதி , அந்த விதியினை பிராத்தனை மூலமே வெல்ல முடியும். ஆகவே இந்த கலியுகத்தில் தெய்வ பக்தியும் , பிராத்தனையும் ஒருவரை காப்பாற்றும்.

Elangai Tamilan said...

தோழி,

இன்றைய பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது.தாங்கள் கர்ம வினை கழைவதற்கு கூறிய எளிய வழிமுறை.யாவரும் பின்தொடரலாம்.மிக்க நன்றி.



"...புல்வரம்பாய பல்துறை பிழைத்தும்
தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி
முனிவு இலாததோர் பொருளது கருதலும்
ஆறுகோடி மாயா சக்திகள்
வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின..."
....போற்றித் திருவகவல்: திருவாசகம்


"தெய்வத்ததேடி அடைவதே' என்ற எண்ணம் வந்து, பரம்பொருளைத் தேடும்போது, ஆறுகோடி மாயாசக்தி எனக்கெதிராக படை திரட்டு கின்றனவே எனக்கெதிராக படைதிரட்டுகின்றனவே என்கிறார் மாணிக்கவாசகர்.அந்த நிலைதான் எனது நிலை.

அருணையடி said...

சதுரகிரிக்குச் செல்ல வேண்டும் என்ற அவளைத் தொடர்ந்து அதிகரிக்கிறீர்கள்!
கண்டிப்பா எப்படியாவது ஒரு ட்ரிப் அடிச்சிடனும்!

GuruMunee said...

அருமையான பதிவு தோழி,

பாவங்களை சுலபமான வழியில் தீர்த்துவிடலாம் என்பது எல்லாராலும் எற்றுகொள்ளமுடியது. குருவருளினால் தான் இது சாத்தியமாக முடியும் என்பது என்கருத்து. ஆனால் விதியால் மதியை வெல்லலாம் என்பது பெரியோர் வாக்கு. ஆனால் ஞானி ஒருவனால் தான் தனது விதியை வெல்லமுடியுமே தவிர எல்லாராலும் வெல்ல முடியாது.

திலோத்தமை ஞானச் சுருக்குகத்திலிருந்து ......

பறக்குமே பாதகங்கள் பாழ்வினைகள் மந்திரங்கள்
திறக்குமே நின் சமுகம் கண்டால் -திறப்படுத்தி
தன்னுக்குள் தானே தலைவன் தனையறிந்தால்
என்றைக்குமே சித்தாம் இயல்.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர் ..திருக்குறள்

என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை.

JILLU-nu ORU YUVA said...

கோரக்கர் குண்டாவில் இருக்கும் நீர் மனிதர்களால் சற்று மாசு பட்டு இருக்கும் ,

அருகில் ஒரு தீர்த்தம் இருக்கும் அங்கு இறங்கி குளிப்பது மிகவும் கடினம் ,

காரணம் இருபது அல்லது முப்பது அடி ஆழம் இருக்கும் என்று சொல்லி இருகாங்க ,

ஆபத்து கொஞ்சம் அதிகமாவே இருக்கும் ,

நாகேந்திரன் said...

இந்த தொடரை படித்ததில் இருந்து சதுரகிரிக்கு
போகும் ஆவல் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது .
மிக்க அருமை.நான் உங்களின் தொடரை விடாமல்
படிதுக்கொண்டிருகிறேன் .நன்றி .

abiash said...

அன்புத் தோழி
எல்லோராலும் நாடு விட்டு நாடு சென்று இவ்விடங்களை தரிசிக்க முடியாது.முப்பாவங்களையும் கழிக்க ஏதேனும் எளிமையான வழி உண்டா? நன்றி

அகோரி said...

தகவலுக்கு நன்றி தோழி

muruga said...

thanks for the info. I would like to go to sadhuragiri and sure i will see Korakar Mahan and other siddha's too if i have god muruga's and the siddha's blessing. This article is very nice and giving very valuable information.Friend Thank you so much.

muruga said...

thanks for the info. I would like to go to sadhuragiri and sure i will see Korakar Mahan and other siddha's too if i have god muruga's and the siddha's blessing. This article is very nice and giving very valuable information.Friend Thank you so much.

muruga said...

@GuruMunee

If you have your god's grace sure you can win the fate. no one is greater than god. He will take care of all our problem's and even solve it.

Unknown said...

hi going to saturagiri is my dream.I hope one day i ill make it.with god's blessing. thanks for your valuable info.

arun said...

sathuragiri oru arphutha poomi

Kavi Sarathi said...

en vaznalil eppadiym oru murai saduragri sellA VENDUM ENA guruvarulai vendugiren

Kavi Sarathi said...

en vaznalil eppadiym oru murai saduragri sellA VENDUM ENA guruvarulai vendugiren

S.Chandrasekar said...

உண்மையை சொல்லப்போனால் சதுரகிரிக்கு மனிதர்கள் யாரும் செல்ல கூடாது. அது முழுக்க ஒரு சித்தர் பூமி. அவர்கள் வழிபடும் கோயில்தான் சுந்தரமஹலிங்கம். நாம் அங்கு போவதே தவறு, அதற்குப்பின் அங்கு வனத்தில் புகுந்து, சுனைகளை மாசுபடுத்தி நம்மாலான எல்லா pollution செய்து விட்டு வந்துவிட வேண்டும்... பலே பலே!.

நாம் வருவதை அவர்கள் விரும்புவதில்லை. நமக்கு இருக்கும் பாபங்கள் போதாதென்று அங்கு போய் தொந்தரவு செய்து அவர்கள் சாபத்தை பெற வேண்டுமா ..? சித்தர்கள் விருப்பம் இருந்தால், நம் வீட்டிலிருந்தே நம்மை அவர்கள் இடம் மாற்றி கூட்டிக்கொண்டுபோய் தரிசனம் கொடுத்துவிட்டு மீண்டும் இங்கே விட்டு விடுவார்கள். அந்த physical transfer நமக்கு தெரியாத மாதிரியே இருக்கும். இதை என் அனுபவத்தில் சொல்கிறேன். அங்கு போனது தெரியும் but ஏன் போனோம் எதற்கு போனோம் அங்கு என்ன வேலை இருந்தது.... என்று எதுவும் மூளைக்கு விளங்காமலே இருக்கும்.

ஒருமுறை இணையத்தில் ஒரு விஷயத்தை வாசித்தேன். ஒரு வயதான முதியவர் அங்கே தவத்தில் இருந்தார். சதுரகிரி trip அடிக்க போனவர்கள் அசதியில் ஒரு இடத்தில் ஒய்வு எடுத்தனர். அங்கு அதில் ஒருவனை இந்த சாமியார் பார்த்துவிட்டு, தம்பி இங்கே எதுக்கு வந்தீங்க என்று கேட்டதற்கு, சாமி கும்பிட வந்தோம் என்றாராம். சாமியார் உடனே, 'இது சித்தர் பூமி, இங்கு உங்களுக்கு என்ன வேலை, யார் வரச்சொன்னது?' என்று கேடுவிட்டாராம்.

murali dhanasekar said...

Hi Kavi

Definately you must have to go...trip mathri plan panadhinga,unmailaye poganumnu manasula ninacha nichayama athuku thanave vali kidaikum....kudiya sikiram nichayama neenga povinga...

Post a Comment