அகத்தியர் அன்றே சொன்னார்!,சதுரகிரியின் இன்றைய நிலையை!

Author: தோழி / Labels: ,

சித்தர்கள் வாழ்ந்த காலத்தே இருந்த சமூகத்தின் எண்ணப் போக்கில் இருந்து விலகியவர்களாகவும், தீர்க்கமான முற்போக்கு சிந்தனையாளர்களாகவும் இருந்தனர்.அவர்களின் தொலை நோக்குடன் கூடிய அவதானிப்புகளும், தெளிவுகளும் இன்றைக்கும் பொருந்துகின்றன.இதற்கு பல்வேறு ஆதார ஆவணங்களை அவர்தம் பாடல்களின் வழியே காட்டிட முடியும்.

எது எப்படியாக இருந்தாலும் சித்தர்கள் தங்களுக்கிடையே ஒரு ஆழமான பிணைப்புடன் கூடிய அமைப்பினை உருவாக்கி வைத்திருந்தனர் என்பது மட்டும் தெளிவு. ஒருவர் மற்றவரை அங்கீகரித்திருப்பதும், அவர்தம் புகழை உயர்த்திக் கூறியிருப்பதும் இதற்கு சான்றாக கொள்ளலாம்.சதுரகிரி மலையில் வாழ்ந்திருந்த சித்தர்கள் அனைவருமே மற்றவர்களைக் குறித்த உயர்வான கருத்தினையே கூறியிருப்பதன் மூலம் இதனை உணரலாம். அதே நேரத்தில் தங்களின் தேடல்களும், தெளிவுகளும் தங்களைத் தாண்டிய சமூகத்தினரின் கைகளில் சேர்வதை தவிர்த்திருப்பதையும் உணர முடிகிறது.

பேராசைக்காரர்கள், தீயவர்கள் கைகளில் இவை சேர்ந்திடக் கூடாது என பொதுவகைப் படுத்திக் கூறியிருந்தாலும் இதன் பின்னே ஆழமான வேறேதும் காரணங்கள் இருந்திருக்கக் கூடும். தங்களை அங்கீகரிக்காதவர்களிடம் தங்களின் தெளிவுகள் சேர்ந்திடக் கூடாது என்கிற தன்மையாகக் கூட இருக்கலாம். சதுரகிரி மலையில் இருக்கும் அற்புத மூலிகை வளங்களைப் பற்றி தங்கள் பாடல்களில் உரைத்திருக்கும் அதே வேளையில் எதிர் காலத்தில் இந்த மூலிகைகளைத் தேடி ஆட்கள் வருவார்கள் என்பதை உணர்ந்திருந்தார்கள். இதற்கு சான்றாய் அகத்தியரின் பாடல்கள் இரண்டினை இங்கே பகிர விரும்புகிறேன்.

அகத்தியர் அருளிய “அகத்தியர் 12000” என்கிற நூலில் தனது மாணவரான புலத்த்தியருக்கு கூறுவதாக வரும் பாடல் வருமாறு..

"சித்தான சித்துமுனி சொரூபரப்பா
யின்னமுண்டு உரைப்போம் கேளு
முத்தான புலத்தியனே முடிமன்னா
மூவுலகில் என்றுமுண்டு சித்தர்வர்க்கம்
வெத்தியுள்ள சதுரகிரி வடபாகத்தில்
என்றுமிருப்பார் ரனேகம்பேர் நாதர்தாமும்
பத்தியுடன் நாதாக்கள் தன்னைக்காண
பாருலகில் வெகுமாண்பர் போவார்பாரே"

- அகத்தியர் -

"போவாரே அம்மலையின் அதிசயங்கள்
கோடான கோடிமூலி யனேகமுண்ண்டே
யனைத்தையுமேய ழித்திடவே முனைவர்
மானமுடன் வையகத்தில் மூலிவாழ
நலமுடனே வெகுகாலம் காக்கவேண்டி
நலமுடனே வெகுகால மிருந்துகொண்டு
கோடியாம் மாண்பருக்கு கண்ணில்காணா
குணமுடனே மறைத்தார்கள் நாதாக்கள்தானே"

- அகத்தியர் -

சித்த புருஷர்கள் அழிவில்லாதவர்கள், நிலையானவர்கள் அத்தகைய பெருமக்கள் பெருமையான சதுரகிரி மலையின் வட பாகத்தில் அவர்கள் என்றும் இருப்பார்கள். இவர்களை தரிசித்து அருள் பெற மக்கள் சதுரகிரிக்கு அதிகமாய் வரத் துவங்குவார்கள். அப்படிச் வரக் கூடிய மனிதர்கள் மலையில் இருக்கும் அதிசயமான இடங்களையும், அரிய மூலிகைகளையும் அழிக்கத் தலைப்படுவர் என்று கூறுகிறார்.

மக்கள் எத்தனை பேர் வந்து அழிக்க நினைத்தாலும், சித்தர்கள் இந்த பூவுலகின் நன்மையை கருத்தில் கொண்டு அரிய மூலிகைகளை இன்றும் இவர்களின் கண்களில் படாதவாறு மறைத்து வைத்திருக்கின்றனர் என்கிறார். பாதுகாக்கும் அளவை மீறிய ஒரு சில மூலிகைகள் மட்டுமே மக்களின் பார்வையில் கிடைக்குமென்றும். மறைத்து வைக்கப் பட்டிருக்கும் மூலிகைகளை மக்கள் அணுக முடியாத இடங்களில் பத்திரமாக இருப்பதாயும் சொல்கிறார்.

இன்றைக்கு சதுரகிரியில் அகத்தியர் கூறிய நிலமைதான் நிதர்சனமாகி இருக்கிறது.பெருமளவில் மக்கள் நடமாட்டம் மிகுந்துள்ளதன் விளைவாய் காடுகள் அழிக்கப் பட்டு,அரிய பல மூலிகைச் செல்வங்களை இழந்து கொண்டிருக்கிறோம் என்பதே உண்மை.எனினும் அகத்தியர் தன் நூலில் அருளியுள்ள படி ஆய்வுகள் மேற்கொண்டால் மறைந்திருக்கும் மூலிகைகளைப் பற்றி அறிய இயலுமென்றே கருதுகிறேன்.

இவ்வாறு மறைக்கப் பட்ட மூலிகைகளை கண்டறிவது பற்றியும் தனது பாடல்களில் அகத்தியர் அருளியிருக்கிறார். பதிவின் நீளம் கருதி அவற்றை இங்கே தவிர்க்கிறேன்.



சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

14 comments:

மு.சரவணக்குமார் said...

ஆய்வுக் கட்டுரை போலான தரத்துடன் எழுதியிருக்கிறீர்கள்.இந்த பதிவுகளை தொகுத்து புத்தகமாய் வெளியிட முயற்சியுங்கள்.அனைவரும் அறிய வேண்டிய தகவல்கள் இவை.

நல்ல முயற்சி...வாழ்த்துக்கள்!

Elangai Tamilan said...

தோழி,
தங்களின் புதிய இடுகையை படிக்கும்பொழுது மிகவும் பிரமிப்பாக இருக்கிறது .சதுரகிரியெல் ,வடபக்கம் சென்றால் சித்தர்கள் தரிசனம் கிடைக்கும் என்றால்,கட்டாயம் சென்று முயற்ச்யேய் மேற்கொள்ள வேண்டியது தான்.மிக்க நன்றி,தோழி.
எங்களின் சதுரகிரி மலை பயணத்தின் போது
ஒரு இடத்தில் நின்று பாதையோரம் இருந்த ஒரு
செடியில் மிளகுபோல் கொத்து கொத்தாய்க் காய்ந்திருந்த
பழத்தினை பறித்து சாப்பிட்டோம்.
அதன் மருத்துவ குணத்தினை கூறிய போது
வியந்தோம். இரத்த நாளங்களில் ஏற்படும்
அடைப்புகளை இந்த பிச்சிபழம் நீக்கும் என்றார்.
முறிந்த எலும்பை ஒட்டவைக்கும் மூலிகை
இலைப்பற்றி கூறும்போது மூக்கில் விரலை
வைத்து வியக்கவேண்டியுள்ளது.
ஒரு பச்சிலை காட்டி, இது புண் அல்லது
காயங்களுக்கு உகந்த பச்சிலை என்றார்கள்.
உடனே ரணம் காயும் என்றார்கள் .
ஆனால், பச்சிலையை பார்த்து உபயோக்கி வேண்டும்.
பச்சிலையின் மேல்பாகத்தைக் காயத்தில், புண்ணில்,
ரணத்தில் வைத்து கட்டவேண்டும்.
தவறாக தலை கீழாக வைத்துக் கட்டினால் காயம்,
புண் மேசமாகி பெரிதாகி விடும்; ரணமாகிவிடும்.
மலைவாசி காரணமில்லாமல் எந்தச் செடிகளையும்,
பூக்களையும் பறித்து விரயம் செய்வதில்லை.
அந்தச் செடிகளை, பூக்களை அறிந்திருக்கிறான்.
அதன் மேன்மையும் மருத்துவமும் அவனுக்குப்
புரிந்திருக்கிறது. நாம் பூக்களை வெறும் வணிகமாகவும்
அழகியல் பொருளாகவும் மட்டுமே புரிந்து வைத்திருக்கிறோம்.

Elangai Tamilan said...

தோழி,
தங்களின் புதிய இடுகையை படிக்கும்பொழுது மிகவும் பிரமிப்பாக இருக்கிறது .சதுரகிரியெல் ,வடபக்கம் சென்றால் சித்தர்கள் தரிசனம் கிடைக்கும் என்றால்,கட்டாயம் சென்று முயற்ச்யேய் மேற்கொள்ள வேண்டியது தான்.மிக்க நன்றி,தோழி.
எங்களின் சதுரகிரி மலை பயணத்தின் போது
ஒரு இடத்தில் நின்று பாதையோரம் இருந்த ஒரு
செடியில் மிளகுபோல் கொத்து கொத்தாய்க் காய்ந்திருந்த
பழத்தினை பறித்து சாப்பிட்டோம்.
அதன் மருத்துவ குணத்தினை கூறிய போது
வியந்தோம். இரத்த நாளங்களில் ஏற்படும்
அடைப்புகளை இந்த பிச்சிபழம் நீக்கும் என்றார்.
முறிந்த எலும்பை ஒட்டவைக்கும் மூலிகை
இலைப்பற்றி கூறும்போது மூக்கில் விரலை
வைத்து வியக்கவேண்டியுள்ளது.
ஒரு பச்சிலை காட்டி, இது புண் அல்லது
காயங்களுக்கு உகந்த பச்சிலை என்றார்கள்.
உடனே ரணம் காயும் என்றார்கள் .
ஆனால், பச்சிலையை பார்த்து உபயோக்கி வேண்டும்.
பச்சிலையின் மேல்பாகத்தைக் காயத்தில், புண்ணில்,
ரணத்தில் வைத்து கட்டவேண்டும்.
தவறாக தலை கீழாக வைத்துக் கட்டினால் காயம்,
புண் மேசமாகி பெரிதாகி விடும்; ரணமாகிவிடும்.
மலைவாசி காரணமில்லாமல் எந்தச் செடிகளையும்,
பூக்களையும் பறித்து விரயம் செய்வதில்லை.
அந்தச் செடிகளை, பூக்களை அறிந்திருக்கிறான்.
அதன் மேன்மையும் மருத்துவமும் அவனுக்குப்
புரிந்திருக்கிறது. நாம் பூக்களை வெறும் வணிகமாகவும்
அழகியல் பொருளாகவும் மட்டுமே புரிந்து வைத்திருக்கிறோம்.

GuruMunee said...

அன்புள்ள தோழிக்கு,
அருமையான விளக்கம் , சதுரகிரியில் இன்று எராளமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.
இன்று பார்க்கும் சதுரகிரி அன்றைய சதுரகிரி போல் இல்லை என்பதே உண்மை.
இந்த வருடம் , நான் அறிந்த விபரம் மக்கள் அதிகமாக சித்தர்களை வணங்க ஆரம்பித்துவிட்டார்கள் என்றும் சுமார் 22 இலட்சம் மக்கள் இந்த வருடம் ஆடி அமாவாசைக்கு வந்திர்ந்தார்கள். வந்த மக்களிற்கு போதுமான நீர் வசதி இல்லை, தங்குவதிர்க்கு இடமும் இல்லை. அன்னதானம் பண்ணுவதெர்க்கே நீர் இல்லை என்றாலும் சித்தர்களின் அருளால் எல்லாம் நன்றாக முடிவடைந்தது.
தாணிப்பாறை வாசல் ஐந்து முறை மூடினார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
சில ஊடகங்கள் சதுரகிரியைப்பற்றி தவறாக கூறியதே இதற்க்கு காரணம்,
இன்றைய சதுரகிரியை பாதுகாப்பது சித்தர்கள் கையில் தான் உள்ளது.
என்றும்-சிவனடிமை-பாலா-சென்னை

அகோரி said...

மிக அருமையான பதிவு தோழி

praveen said...

மிக நல்ல தகவல் தோழி , மனிதன் தன் சுயநலத்திற்காக என்ன வேண்டுமாலும் செய்வான் , தான் சுகமாக வாழ வேண்டும் என்பதற்க்காக மற்றவர்களை கொலைசெய்யும் அவனுக்கு , சித்தர்கள் பற்றியும் அவர்தம் கண்டுபிடித்த மூலிகையும் கையில் கிடைத்தால் கேட்கவா வேண்டும்! இந்த உண்மையை அன்றே அறிந்த சித்தர் பெருமக்கள் அதனை சாமான்ய மனிதர்கள் கண்ணில் படாதவாறு செய்தனர். சித்தர்களின் அருள் இருப்பவர்களுக்கு மட்டுமே அது கிடைக்கும் என்பது என்னோடைய நம்பிக்கை தொடரட்டும் தங்கள் பதிவு.

Guruvadi Saranam said...

MIGA ARUMAIYANA PATHIPPU THOZI.

VAZTHUKKAL!

NANDRI
RAJENDRAN
BLR

jagadeesh said...

தற்பொழுது புழக்கத்தில் இருக்கும் மூலிகைகளே அனைத்து விதமான நோய்களுக்கும் தீர்வு அளிக்கவும், போதுமானதாகவும் உள்ளது. அதைப் பாதுகாத்தாலே போதும்.

இன்பம் துன்பம் said...

மகளே; மிகவும் நல்ல பிரம்மாதமான விளக்கம். ரெம்ப நல்லாவே இறுக்கும்மா,சதுரகிரி மலையில் இங்கிருந்து செல்லும் மனிதர்களால் அந்தகடுகளில் அழிவுகள் நடந்துகொண்டு இருந்தாலும்.சித்தர்கா வாழ்வதற்கன் அறிகுறிகளும் தென்படத்தான் செயிகின்ற்றன்.நங்கள் செல்லும் போதுகூட ஒரு அதிசயம் நடந்தது எப்டின நங்கள் திரும்பும்போது,நாங்கள் இருந்தாஇடத்திளிருந்து சற்று தொலைவில்ஒரு ஓய்வட்டம் நகர்வதை கண்டோம், அனால் உருவம் தெரியவில்லை,நடக்கும் பொது ஏற்ப்படும் சத்தம் மட்டும் கேட்டது.சிறிது நேரத்தில் மறைந்து விட்டது அந்த திக்கை நோக்கி வணகிவிட்டு, நாங்கள் கிழே
இரங்கிவிட்டோம்.அத்துடன் இன்னுமொரு அதிசயமும் உண்டு ராசிக்கட்டத்தில் உள்ளது போல் பன்னிரண்டு கற்கள் உண்டு அந்த கற்களில் மாதத்திற்கு ஓன்று மட்டும் அசையும் மற்றவை அசையாது அடுத்த மதம் வெருகல் அசையும், அசையிந்தகல் அசையாது இப்படி ஒவ்வொரு மாதமும் ஒருகல் அசையும் .இந்த அதிசியம் இப்போதும் நடக்கிறது,அங்கு இன்னமும் அதிசயங்களுக்கு குறைவில்லை,நன்றி சதரகிரி பற்றி எழுதியதற்கு.வாழ்க வளமுடன் மென் மேலும் சிறந்து வளர வாழ்த்துக்கள்

ANBE SIVAM said...

ddd

ANBE SIVAM said...

Thank you for your information

Sasikumar C said...

மிக அறிய தகவல்கள் நன்றி தோழி அவர்களே...

vaithiyanathan said...

சித்தர்கள் நல்ல வைத்தியர்கள் மூலிகையை கண்டால் தேவையான ஒன்று அல்லது இரண்டு செடியைதான் காப்பு கட்டி சாபநிவ்ருத்தி செய்து எடுப்பார்கள் .ஒரு குறிப்பிட்ட அளவு சுமார் பத்துபேர் களுக்கு தேவையானதை மட்டுமே எடுத்து வைத்தியம் செய்வார்கள் .இன்று ஒரு செடிவிடாமல் பிடுங்கி அந்த செடி இனத்தையே அழித்து விடுகிறார்கள் .அந்தபாவம் கொண்டுவந்த மூலிகைகள் உபயோகப்படாமல் அழிந்துவிடுவதும் உண்டு .

SIDDAR said...

Even we want to read this page,support from siddargal is must.Since i am reading at my age of fifty.

Post a Comment