சதுரகிரியில் கோரக்கரை இன்றும் தரிசிக்கலாம்?

Author: தோழி / Labels: ,

சதுரகிரி மலையின் நீள,அகலத்தில் அமைந்திருக்கும் சித்தர்களின் இருப்பிடங்களையும் அவற்றிற்கு செல்லும் வழியினையும் கோரக்கரின் பாடல்களின் வழியே பார்த்தோம். இவரின் பாடல்களில் காணப்படும் சித்தர்களின் ஆச்சிரம விவரங்கள் மற்றும் விவரிப்புகளைப் பார்க்கும் போது அவை யாவும் செயல் பாட்டில் இருந்திருக்க வேண்டுமெனவே எண்ணத் தோன்றுகிறது. அப்படி இருந்திருந்தால் கோரக்கர் விவரிக்கும் சித்தர்கள் அனைவரும் சம காலத்தவர்களாக என்கிற கேள்வியும் எழும்புகிறது.இதன் சாத்திய,அசாத்தியங்கள் விவாதத்திற்கும், மேலதிக ஆய்வுகளுக்கும் உட்பட்டவை.

காலத்தால் மிகவும் முந்தியவரும், மூத்தவருமான அகத்திய மாமுனிவரின் கும்பமலை குகையினைப் பற்றியும், அவரை தரிசிப்பதைப் பற்றியும் கோரக்கர் தனது பாடலில் குறிப்பிட்டிருந்ததை பார்த்தோம். அதே வகையில் அகத்திய மாமுனிவரும் கோரக்கரை சதுரகிரி மலையில் தரிசிப்பதைப் பற்றி அருளியிருக்கிறார் என்பது ஆச்சர்யமான தகவல்தானே! அகத்தியர் மட்டுமில்லை, காளங்கிநாதர் கூட கோரக்கரை சதுரகிரியில் தரிசிக்கும் வழியை கூறியிருக்கிறார்.


முதலில் அகத்தியர் தந்து “அகத்தியர்12000” என்ற நூலில் கோரக்கரை பற்றி அருளியதை பார்ப்போம்....

"பெருமையம் சதுரகிரிக் குள்ளேயப்பா
பரிவான கோரக்கர் குகையொன்றுண்டு
பத்தியுடன் குகைதனிலே பார்க்கும்போது
யென்றுமே கருவானகோரக்கர் அங்கிருப்பார்
தெளிவான காட்சியது யார்காண்பார்
சிற்பரனே புண்ணியர்க்கு கிட்டும்தானே"

- அகத்தியர் -

பரிவான கோரக்கரின் குகை சதுரகிரியில் இருக்கிறது. என்றும் அந்தக் குகைக்குள் பார்த்தால் கோரக்கர் அங்கே இருப்பார்.தூய மனதுடன் புண்ணியர்களுக்கு அவரது தரிசனம் கிடைக்கும் என்கிறார்.

காலங்கிநாதர் தனது “காலங்கிநாதர் ஞானவித்து ரகசியம் புத்தகம்” என்ற நூலில் கோரக்கரின் இருப்பிடத்தையும்,தரிசனத்தையும் பின்வருமாறு கூறுகிறார்.

"பார்க்கவே கோரக்கர் குண்டாதோன்றும்
தேரப்பா கஞ்சவுடன் மூலி சேர்ததிற் கடைந்து
சித்தர் முனி ஒவ்வொருவருக்கும் ஈவார்
நேரப்பா அதனருகே குகைதான் உண்டு
யென்றும் நிலையாக சிவயோகம் செய்வாரங்கே
கோரப்பா கோரக்கர் தம்மைக் கண்டு
கொண்டவனே ஞானாமிர்தம் உண்டோந்தானே"

- காலங்கி நாதர் -

சதுரகிரி மலையில் கோரக்கர் கஞ்சாவுடன் மூலிகைகள் சேர்த்து அரைத்து சித்தர்களுக்கு கொடைத்த இடமான கோரக்கர் குண்டா இருக்கிறது. அதன் அருகில் அவரது குகையும் இருக்கிறது. அந்த குகையில் கோரக்கர் என்றும் சிவயோகத்தில் வீற்றிருப்பார்.அவருடைய தரிசனம் பெருபவர்கள் ஞான அமிர்தத்தை உண்டவர்கள் ஆவர் என்கிறார்.

அகத்தியரும், காலங்கி நாதரும் கோரக்கரின் தரிசனம் என்றும் கிடைக்குமென அருளியிருப்பதை அவதானியுங்கள். தூய மனதுடன் அவரை வணங்கும் அனைவருக்கும் அவரது தரிசனம் என்றும் கிடைக்குமெனவும், அப்படியான தரிசனத்தை பெற்றவர்கள் ஞான அமிர்தத்தினை உண்ட பலனை அடைவார்கள் என்பதே இந்த பாடல்கள் நமக்கு உணர்த்திடும் செய்தி!

குருவருள் துனையுடன், தூய்மையான உள்ளத்துடன் ஆர்வமும்,அக்கறையும், தேடலும் உள்ள எவரும் இன்றும் கூட அந்த பெருமகனாரை தரிசிக்க முடியுமென்றே தோன்றுகிறது.

நாளைய பதிவில் இன்றைய சதுரகிரி பற்றி அன்றே சித்தர்கள் கூறிய தகவல்களுடன் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

11 comments:

Guruvadi Saranam said...

THOZI,

ARPUTHAM! ARPUTHAM!

NANDRI
S.RAJENDRAN
BANGALORE.

GuruMunee said...

அன்புடைய தோழிக்கு,

இதுகாறும் தாங்கள் பதிவு செய்த சதுரகிரியைப்பற்றிய பயணம் மிக அற்புதமாக முடிவுற்றது குருவருளால். சித்தர்களின் ஆசிரமத்தை தேடி அலையாமல் , மகாலிங்கத்தின் மீது முழு நம்பிக்கையை வைத்து வாழ்க்கை தொடங்கினால் எல்லாம் தானே தேடிவரும் .

உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள் .

என்றும் சிவனடிமை-பாலா -சென்னை .

Elangai Tamilan said...

தோழி,

தங்களின் இன்றைய இடுகை முற்றிலும் சிறப்பாக உள்ளது.தாங்கள் வெளிபடுத்திய

நூல்களை பார்க்கும்போது ,தற்பொழுது ,இந்த நூல்கள் கிடைப்பது அரிது.மேலும் ,சதுரகிரி பற்றி நான் அறிந்த தகவல்களை தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.சுந்தர மகாலிங்கம் , மகா லிங்க மலையில் காலை பத்து மணிக்கும், மாலை நான்கு மணி, மற்றும் ஆறு மணிக்கு பூஜைகள் நடைபெறுகிறது.

மகாலிங்க மலை ஆலயத்தில் மூலஸ்தானம் சுயம்புலிங்கம்.

லிங்கம் சற்று சாய்ந்தநிலையில் இருப்பதைக் காணலாம்.இது குறித்த விபரம் கேட்டபோது, அறிந்த கதையைத்தான் சொல்லப்பட்டது.

புற்றின் மீது பசு பால் சுரந்த செய்தி.புற்றின் மீது பால் சுரந்த போது பசுவை அடித்து இழுத்த போது அதன் கால் சிவ லிங்கத்தின் பட்டு சுயம்பு லிங்கம் சற்று சரிந்ததுடன் லிங்கத்திலிருந்து இரத்தம் பீறியிட்டு வந்துள்ளது.

அபிஷேகத்தின் போது இந்த வடுவினை (பசுவின் குளம்பு) தெரிகிறது. நிறைய பலாமரங்கள், மாமரங்களை கோவிலைச் சுற்றி இருப்பதைக் காணலாம்.

பலாமரங்களில் நிறைய பலாக்கள், பழுத்த பலாப்பழங்கள் இருக்கின்றன. மரநிழலின் கீழ் அமர்ந்து அண்ணாந்து பார்த்து இரசித்த போது பாரதிதாசனின் ''கோரிக்கையற்று கிடக்குதண்ணே வேரில் பழுத்த பலா'' என்ற வரிகள்தான் நினைவுக்கு வந்தது.

149 said...

தோழி
அருமையான தகவல்கள்.

Anonymous said...

இந்த கலியுகத்தில் பிராத்தனைகள் மூலமே தெய்வத்தின் அருளை பெறமுடியும் , இதையேதான் அகத்திய பெருமானும் வலியுறுத்துகிறார் , இதில் எனது கருது என்ன என்றால் பிராத்தனையுடன் கலந்த வைராகியத்துடன் கூடிய பக்தி இருக்குமெனில் அந்த இறைவனையே நேரில் காணலாம் என்பதுதான் .

கோவிந்தராஜு.மா said...

அறிய பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி.
உள்லன்போடு வணங்கிய அனைவருக்கும்.
காட்சி அளிப்பாற்ககள்

P.Saseendharan said...

how many people know that bogar siddhar thought us healing technic.which no need of touching the body nor giving any medicine for any cronic ailment.that is only PRANIC HEALING.anybody can learn this thearaphy

shiva mani said...

super

shiva mani said...

super

shiva mani said...

Mikka nantri

RAMAKRISHNA LAKSMAN Iyer said...

Could you discuss Thirumoolars Navakkari mantra in detail and also how to prounce the a=mantra? Is there anyone selling the Navakkari Yantra , designed and wriiten as per the siddha norms

Regards
Laksman

Post a Comment