கோரக்கர் அருளிய 'கோரக்கர் பிரம்மஞான தரிசனம்', மற்றும் 'கோரக்கர் மலை வாகடம்' என்கிற நூல்களில் இருந்து திரட்டப்பட்ட சதுரகிரி மலைப் பயண வழிக் குறிப்புகள் இன்றும் தொடர்கிறது. சற்றேறக் குறைய ஆயிரம் பாடல்களின் ஊடாக பொதிந்திருக்கும் தகவல்களை தனியே பிரித்தெடுத்து உரைநடையாக பதிந்து வருகிறேன். எனவே பாடல்களுடன் தகவல்களை பகிர்வதில் உள்ள சிரமத்தினை(தட்டச்சு செய்வது) புரிந்து கொள்ள வேண்டுகிறேன். எதிர்காலத்தில் சதுரகிரி பற்றிய ஆய்வு நூலொன்று எழுதிடும் திட்டமிருக்கிறது, அப்போது விரிவாக பாடல்களுடன் எழுதிட முயற்சிக்கிறேன்.
வாருங்கள், கோரக்கரின் வழிகாட்டுதலுடன் அகத்தியரின் கும்ப மலை குகையில் இருந்து பயணத்தை தொட்ர்வோம்...
குகையை கடந்து மேற்கே போனால் முனீசுவரன் எல்லை வந்துவிடும், இங்கிருந்து படிவெட்டி பாறை வழியே இரண்டு நாளிகை நடக்க “காற்றாடி மேடை”வருமாம். இதனைத் தாண்டி கூப்பிடு தூரத்தில் கொடைக் காரன் கல்லும், முடங்கி வழியும், கங்கண ஆறும் இருக்கிறது. ஆற்றில் இருந்து அம்பு விடும் தூரத்தில் குளிராட்டி பொய்கை இருக்கிறது. இதன் தென்மேற்கு மூலையில் போகரின் ஆச்சிரமம் இருக்கிறது. அங்கிருந்து தெற்கு பகுதியில் செல்லும் பாதையில் அழகிய பூஞ்சோலை தென்படும், அதன் மத்தியில் புசுண்டரின் ஆச்சிரமம் இருக்கிறது என்கிறார்.
ஆச்சிரமத்தை கடந்து மேற்கே அரை நாளிகை நடக்க எல்லைக் குட்டமும், மண்மலை காடும் இருக்கிறது. அதன் வழியே சென்றால் உரோமரிஷி வனமும் அதற்குள் உரோமரிஷியின் ஆச்சிரமும் இருக்கிறது என்கிறார். ஆசிரமத்தில் தெற்கே கூப்பிடு தூரத்தில் அடந்த யூகிமுனி வனமும் அதனுள் யூகிமுனிவரின் ஆச்சிரமும் இருக்கிறது. இந்த ஆசிரமத்தில் வடக்கே அரிய வகையான சாயா விருட்சம் இருக்கிறது என்கிறார். சாயா விருட்சத்தின் நிழல் பூமியில் விழாதாம். யூகி முனிவர் ஆச்சிரமத்திலிருந்து நேர் மேற்காக சென்றால் தெற்கே போகும் பாதையொன்று வரும், அதில் அரை நாளிகை நடக்க ஆறு ஒன்று வருமாம்.
அந்த ஆற்றில் இறங்கி மேடேறினால் பளிஞர் குடில்களும், அதன் அருகில் சுந்தர லிங்கர் குடிசையும், அருகில் சுந்தரலிங்கர் சந்நிதியும் இருக்கிறது. இதன் தெற்காய் வரும் ஆற்றுக்கு மேல் சுந்தரானந்தரின் குகை இருக்கிறதாம். இந்த மேட்டில் இருந்து தெற்கே செல்லும் பாதையில் கூப்பிடு தூரம் நடக்க மகாலிங்கர் சந்நிதி இருக்கிறது என்கிறார். இந்த சந்நிதியின் பின்னால்தான் அற்புதமென சொல்லப் படும் 'கற்பக தரு' இருக்கிறது.இதனை மறைபொருளாய் 'பஞ்சு தரு' என்று குறிப்பிடுவர்.
இந்த மரத்தில் மேல் பக்கம் கூப்பிடு தூரத்தில் வட்டச் சுனை இருக்கிறது. அந்தச் சுனைக்கு மேல்ப் பக்கம் போகும் பாதையில் அரை நாளிகை தூரம் நடக்க ஒரு ஓடை வருகிறது அந்த ஓடைக்கு மேல் பக்கம் கானல் இருக்கிறது அந்த கானலின் கீழ்ப்பாகத்தில் கரும் பாறை இருக்கிறதாம் அந்தக் கரும் பறையின் வடக்கே கூப்பிடு தூரத்தில் செம்மண் தரை இருக்கிறதாம். அந்த மண்தரையில் சஞ்சீவி மூலிகை இருக்கிறதாம் இந்த மூலிகைக்கு எமனை வென்றான் என்ற மற்றொரு பெயரும் உண்டென்கிறார். கற்பகதரு, சஞ்சீவி மூலிகை என எத்தனை ஆச்சர்யமான குறிப்புகள்!. குருவருள் இருந்தால் இன்றைக்கும் கூட இவற்றை தேடிக் கண்டு பிடிக்க முடியுமென்றே தோன்றுகிறது.
சஞ்சீவி மூலிகையின் மேற்காக மஞ்சளூற்று இருக்கிறது. அந்த ஊற்றுக்கு வடபக்கம் அம்பு விடும் தூரத்தில் சதம்புத்தரை இருக்கிறதாம், அதன் கீழ்ப்புறம் கசிவுத்தரையில் அழகானந்தர் ஆச்சிரமம் இருக்கிறதாம். அங்கிருந்து நேர் கிழக்காய் வந்தால் மீண்டும் மகாலிங்கர் சந்நிதியில் வந்து சேரும் என்கிறார் கோரக்கர். இங்கிருந்து தெற்கே சென்றால் சன்னாசிவனம் வரும், அதன் தெற்கே போகும் பாதையில் ஒரு நாளிகை நடக்க ஒரு ஓடையும், சங்கிலிப் பாறையும் வருமாம்.
அதனை கடந்து கூப்பிடு தூரம் போனால் அநேக மரங்கள் சூழ பிரம்ம முனியின் ஆச்சிரமம் அமைந்திருக்கும் என்கிறார். ஆச்சிரமத்தின் தெற்குபக்கம் போகிற பாதையில் ஒரு நாளிகை மலை ஏற அதன் சரிவில் காளங்கிநாதரின் குகை எதிர்படும் என்கிறார். அந்த குகையின் சரிவில் அம்புவிடும் தூரத்தில் என்றும் வற்றாத தசவேதி உதகசுனை இருக்கிறதாம். தசவேதி உதகநீர் பற்றிய எனது முந்தைய பதிவினை இந்த இணைப்பில் வாசிக்கலாம்.
காளங்கி நாதர் குகையிலிருந்து தெற்க்கு பக்கமாய் கூப்பிடு தூரத்தில் தபசு குகை வரும். அந்த குகையிலிருந்து வடக்குப் பக்கம் போகும் பாதையில் சென்றால் மீண்டும் மகாலிங்கர் சன்னிதிக்கே வரும், அதனால் அதை விடுத்து கிழக்குப் பக்கம் சென்றால் அரை நாளிகை தூரம் நடந்தால் கன்னிமார் கோவிலும், பளிங்கர் குடிசையும் வருமாம். அங்கிருந்து தெற்கே அரை நாளிகை தூரம் வந்தால் நந்தீசர் வனமும், அதனுள் அவர் ஆச்சிரமமும் இருக்கிறது என்கிறார்.
ஆசிரமத்தின் வடக்கு பக்கமாய் போகும் பாதையில் செல்ல கிழக்கே இருந்து ஒரு பாதை வந்து சேருமாம், அந்த பாதை வழியே அரை நாளிகை நடக்க பளிங்கர் பாறையும் அதன் தெற்கே செல்ல அநேக மரம் செடிகொடிகள் சூழ தன்வந்திரியின் ஆச்சிரமம் இருக்கிறதென்கிறார்.
புசுண்டர்,உரோமரிஷி, யூகிமுனிவர், சுந்தரானந்தர், அழகானந்தர், காளங்கிநாதர், நந்தீசர், தன்வந்திரி ஆகியோரின் ஆச்சிரமங்களுக்கு செல்லும் வழியினை இன்று கோரக்கர் வாயிலாக தெரிந்து கொண்டோம். இந்த குறிப்புகளை வைத்துக் கொண்டு இன்றைக்கு கூட இந்த இடங்களை தேடிட முடியுமென கருதுகிறேன்.
ஆச்சர்யங்கள் நாளையும் தொடர்கிறது...!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment

13 comments:
குளிராட்டி பொய்கையில் நான் குளித்திருக்கிறேன்,அவ்ளோவ் ஜில்லுன்னு இருக்கும் தண்ணீர், குளிர் ஆட்டிவிடும் என்பதுதான் குளிராட்டி ஆனதாக சொல்வார்கள்.அங்கேதான் போகர் ஆசிரமம் இருந்தது என்பது புது நியூஸ்....என்ன இருந்தாலும் குருநாதர் ஆசிரம் இருந்த பகுதிக்கு போயிருக்கிறேன் என்பதே நிறைவாக இருக்கிறாது.
ஆச்சர்யங்களை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்..!தோழிக்கு நன்றி..!!
@மு.சரவணக்குமார்
குளிறாட்டி பொய்கைக்கு எப்படி போகணும்னு சொன்னால் நல்ல இருக்கும்
அன்புள்ள தோழிக்கு, அன்பன் அன்புவின் வணக்கங்கள், நான் உங்களுடைய பழைய பதிவுகலில் சிலவற்றை படித்தேன் மிக்க அருமை. உங்களுடைய பதிவுகலை படிக்கும் போது நம்முடைய சித்தர்கள் எப்படி எல்லாம் வாழ்திறுகிறார்கள் என்பதை பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது, உங்களுடைய படைப்புகளுக்கு நன்றி.
அன்புள்ள தோழிக்கு,
தங்களின் பதிவுகளை பார்க்கும் போது , சதுரகிரியின் முழுஅளவிலான வரைப்படம் கிடைத்தாற்போல இருக்கிறது. சதுரகிரியைப்பற்றி ஒரு ஆய்வு செய்வது சாதாரண விஷயம் அல்ல ஆயினும் குருவின் அருளால் முடியும் என நம்புவோம்.
இந்த பதிவின் மூலம் சித்தர்கள் சதுரகிரியை சுற்றி உள்ளார்கள் என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது.
தங்கள் கூறிய கும்பகிரி பாதை மிகவும் கடினமானது ஆனால் ஒவ்வொரு ஆண்டும் சாதுக்கள் இந்த வழியாக தான் தங்களுடைய யாத்திரையை முடிக்கிறார்கள்.
என்றும் சிவனடிமை-பாலா-சென்னை.
படிக்க படிக்க ஆர்வம் அதிகரிக்கிறது. எங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி... :) நன்றி தோழி...
தோழி,
தங்களின் இன்றைய பதிவு மிகவும் நேர்த்தியாக இருந்தது.தங்களுக்கு குருவருளும் திருவருளும்
கைகுடி இருப்பதால் எல்லாம் இயல்பாக நிகழ்கிறது.அதில் எள்ளலுவும் சந்தேகம் இல்லை .
சதுரகிரியல்,நான் கேட்ட சில இடங்களை இங்கு பகிர்ந்துகொள்கிறேன் .
சதுரகிரி மலையில் அமைந்துள்ள ஆலயங்கள்.
கருப்பணசுவாமி கோயில், ஸ்ரீ ராஜயோக தங்கக்
காளியம்மன் ஆலயம், கணபதி சாயை,
இரட்டைலிங்கம் ஆலயம், ஓப்பிலாசாயை, பலாவடி கருப்பசாமி,
சுந்தரர் கோயில், சந்தன மகாலிங்கம் கோயில்
சந்தன மகாலிங்கம், சுந்தரலிங்கர் சன்னதி,
ஆனந்தவல்லியம்மை கோயில், பைரவ மூர்த்தி, காளியம்மை,
பேச்சியமை, கன்னிமார் கோயில், வெள்ளைப் பிள்ளையார் கோயில்.
படிக்க,படிக்க நேரில் சென்றது போல் ஓர் உணர்வு...
, நன்றி தோழி இப்படி ஒரு படைப்பு எங்களுக்கு தந்ததுக்கு,
நீங்களும் சதுரகிரி சென்று ஷிவா-இன் அருள் பெற வேண்டும் என்று விரும்புகிறேன் ....
அம்பு விடும் துரம் என்றால் எவ்ளோ தூரம்??
ஏனென்றால் நீங்கள் சொல்லும் இடம் எல்லாம் இடைவெளி மிகவும் அதிகம் அது தான் கேட்டேன்
அற்புதம்
தீனா
i want sanjivi muligai
OM NAMASEVAYA
thanks
by
bala tirupur
Post a Comment