சதுரகிரி - தொடரும் மலைப் பயணம்!

Author: தோழி / Labels: ,

சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறையில் துவங்கும் மலைப் பயணம், மலையின் மேல் கோவில் கொண்டிருக்கும் சுந்தரமகாலிங்கர் சந்நிதியையும் தாண்டி மலையின் நீள அகலங்களில் பயணிக்கிறது.உடலில் வலுவும், உள்ளத்தில் உறுதியும் இருக்கும் எவரும் இன்று மலையில் எளிதாக சென்று வரலாம்.அதற்கான வசதி, வாய்ப்புகள் உருவாக்கப் பட்டிருக்கின்றன.

ஆனால் பல நூறு வருடங்களுக்கு முன்னர் மனித சஞ்சாரமே இல்லாத அடர்த்தியான காடுகளைக் கொண்ட இந்த மலையில்,பழக்கமில்லாதவர்கள் வழி தவறி தொலைந்து போய்விடும் அபாயம் இருந்திருக்கும். அதனைத் தவிர்க்கவே இம்மாதிரியான வழிக் குறிப்புகள் அருளப் பட்டிருக்க வேண்டும்.கோரக்கர் தனது சீடர்களுக்காகவும் அவர் வழி வந்தவர்களை மனதிற் கொண்டு இவற்றை அருளியிருக்கலாம் என்பது என்னுடைய அனுமானம்.

நேற்றைய பதிவில் அத்தரி மகரிஷி ஆசிரம் வந்துவிட்ட நாம் இன்றும் கோரக்கரின் வழிகாட்டுதலில் தொடர்ந்து மேலேறுவோம்.ஆசிரமத்திலிருந்து கிழக்காக இருக்கும் பாதையில் மேலேறி அரை நாளிகை நடந்தால் கோணவாசல் பாதை வரும், அதைத் தாண்டி மேடேறிப் போனால் பசுமிதிப் பாறையும், அந்தப் பாறைக்குக் கிழக்கே கணபதியின் உருவத்தை ஒத்த ஒரு பாறை இருக்குமாம்.அதை வணங்கி அதன் கிழக்குப் பக்கம் செல்லும் பாதையில் அரை நாளிகை நடந்தால் பாதையின் தெற்குப் பக்கத்தில் அம்பு விழும் தூரத்தில் அருட்சித்தர் மச்சமுனியின் ஆசிரமம் இருக்கிறது என்கிறார்.

மச்ச முனிவரின் ஆசிரமத்தின் தெற்குப் பக்கமாய் நடந்தால் கூப்பிடு தூரத்தில் வெள்ளை புனல் முருங்கை மரம் எதிர்படுமாம்,அதன் இடதுபக்கம் அம்புவிடும் தூரத்தில் சமதளமான பாறையை காணலாம்.அந்த பாறையின் தெற்குப் பக்கம் இருக்கும் ஓடையை தாண்டினால் அம்புவிடும் தூரத்தில் காவி தெரியும்,அதற்கு கீழ்பக்கம் பேய்ச்சுரை கொடி படந்திருக்கும் என்கிறார். இந்த கொடிக்கு தெற்குப் பக்கம் இருக்கும் பாதையில் நடந்தால் குருவரி கற்றாழை எதிர்படுமாம்,அதற்கு நேர் வடக்காய் சென்றால் கூப்பிடு தூரத்தில் கிழக்கே ஒரு பாதை தென்படும்,அதிலிருக்கும் மேட்டில் ஏறினால் சமதளமாக இருக்கும் என்கிறார்.அதில் அரை நாளிகை தூரம் நடந்து வநது தெற்குப் பக்கமாய் பார்த்தால் தனது ஆசிரமம் தெரியும் என்கிறார் கோரக்கர்.

கோரக்கர் தனது ஆசிரமத்தில் வசித்திருக்கவில்லை என்பது கொஞ்சம் சுவாரசியமான தகவல். ஆசிரமத்தின் நேர் வடக்கில் இருக்கும் ஆற்றில் இறங்கி தெற்குப் பக்கம் பார்த்தால் மலைச் சரிவில் தனது குகையை பார்க்கலாம் என்கிறார்.அதன் கிழக்கே ஆற்றின் நடுவில் கஞ்சா கடைந்த குண்டா இருக்கும் என்றும்,அதன் கிழக்கே வற்றாத பொய்கை ஒன்று இருக்குமாம்.எத்தனை ஆச்சர்யமான வழிகாட்டல்!!

இதுவரையிலான பயணத்தில் நமக்கு தெரிவது, அத்திரி மகரிஷி, மச்சமுனி,கோரக்கர் போன்ற பல சித்த பெருமக்கள் தங்களுக்கென தனித்தனியான அமைப்புகளை கொண்டிருந்திருக்கின்றனர்.இந்த ஆசிரமங்களில் அவர்களுடன் சீடர்கள் உடனிருந்திருக்க வேண்டும்.இவர்கள் அனைவரும் சமகாலத்தவர்களா அல்லது அவர்களின் வழி வந்தவர்கள் அந்தந்த ஆசிரமங்களை நிருவகித்து வந்தனரா என்பதெல்லாம் ஆய்வுக்குட்பட்டது.

கூப்பிடு தூரம், அம்புவிழும் தூரம், நாளிகை நடைபயணம் என்பதான தூர அளவைகள், திசைகள், ஆங்காங்கே இருக்கும் பாறைகள்,சுனைகள்,ஆறுகள்,ஓடைகள் என்பதான அடையாளங்களை வைத்துக் கொண்டு நகரும் இந்த பயணத்தில் மேலும் சில சுவாரசியங்கள் காத்திருக்கின்றது.

பதிவின் நீளம் கருதி இந்த அளவில் நிறுத்தி, நாளைய பதிவில் சுந்தரமகாலிங்கம் சந்நிதியை தேடி அடைவோம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

11 comments:

சேலம் தேவா said...

அருமை..!! தொடருங்கள் தோழி..!!

GuruMunee said...

மதிப்பிற்குரிய தோழி,

நான் சில தடவை சதுரகிரி சென்று வந்திருக்கிறேன் . ஆனால் தங்கள் கூறும் அளவுகள் அனைத்தும் துல்லியம்மாக இருக்கிறது. நினைக்கவே ஆச்சர்யமாக இருக்கிறது. தாங்கள் எழுதியது போல கோரக்கர் குகை ஒன்றும் அதன் அருகே சுனை ஒன்றும் இருக்கிறது. இன்றும் அங்கு மக்கள் சென்று வழிபடுகிறார்கள் .தற்போது அங்கு ஒரு முதிய பெண்மணி ஒருவர் கோரக்கருக்கு பூஜை செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார் . மிகவும் சக்தி வாய்ந்த இடமாக அது இருக்கும் . இன்றும் விழா காலங்களில் அங்கு யாகம் நடைபெறுவது உண்டு. சதுரகிரி செல்லும் எல்லா பக்தர்களும் கண்டிப்பாக அங்கு சென்று வழிப்பட்டு வருவார்கள் . அங்கு பிரசாதமாக தினைமாவு கிடைக்கும். நினைக்கவே பேரின்பமாக அந்த இடம் இருக்கும். ஆனால் தாங்கள் கூறிய மச்சமுனி ஆசிரம் பற்றி நான் கேள்விப்பட்டது இல்லை . நிச்சயமாக அடுத்த தடவை மச்சமுனி ஆசிரமத்தை பார்க்க முயற்ச்சிக்கிறேன் .

என்றும் சிவனடிமை, பாலா-சென்னை.

praveen said...

அருமை , மேலும் கூறுங்களேன் கேட்க ஆவலாய் உள்ளேன்

149 said...

தோழி

அற்புதமான படைப்பு

தீனா

149 said...

தோழி
கடந்த ஒரு வாரமாக உங்களீன் அனைத்து படைப்புகளை படித்து வருகிறேன்.மிகவும் அறிய தகவல்கள்.

தீனா

Elangai Tamilan said...

தோழி,
என்னுடைய பின்னூட்டத்தை ஏன் தாங்கள் அனுமதிக்கவில்லை?.நான் இங்குள்ள தமிழ் நண்பரிடம் சதுரகிரி பற்றி வினவிய போழ்து கிட்டித்த தகவல்களை பகிர்ந்துள்ளேன்.
உலக முழுதுந் தொழுதேத்தி
...உய்ய வெனவே சதுரகிரி
இலக வமர்ந்த பெருமானை
...யிலிங்க மயமா யிருப்பாவைக
கலக மயக்கங் கழன்றோடக்
...கடையே னுளத்துங் குடி கொண்ட
அலகில் சோதி மகாலிங்கர்
...ஆடிப்பு என்றன் முடிக் கணியே.

தென் தமிழகத்தின் மேற்கு மலைத் தொடர்ச்சியில்
இத்திருத்தலம் பஞ்சபூச லிங்கத்தலமாகும்.

இவற்றில் அருள்மிகு சுந்தரமூர்த்தி ஆரிடலிங்கமாகும்.
அருள்மிகு சந்தன மகாலிங்கம் தைவிக லிங்கமாகும்.
அகத்தியர் முதலான பதினெட்டுசித்தர்கள் வாழ்ந்து வழிப்பட்டதும் இத்திருத்தலம்.

இத்திருத்தலத்திற்கு ஒரு முறைவருகை தந்து
சுவாமி தரிசனம் செய்தால் பல நூறு ஆண்டுகள்
ஆரோக்கியமாக வாழலாம் என்பது சித்தர்களின் வாக்கு.
சதுரகிரி மலை அமைந்துள்ளது

Siva said...

In your writings really you are joining us to the Sathuragiri travel, When we read we got that feeling like we are climping the hills. Marvelous, Waiting for the next Day . . .

By
Arunsiva

இனியவன் said...

நானும் ஒரு தடவை சதுரகிரிக்கு சென்றுள்ளேன்.எனக்கு கொஞ்சம் கடினமான பயணமாகத்தான் இருந்தது,ஆனால் என் நண்பர்களில் மாதம் ஒரு முறை செல்பவரும் இருக்கின்றனர்.

149 said...

very nice
deena

Riyaz Ahmed said...

hiii....can u post about VELLIANGIRI HILLS also??

Riyaz Ahmed said...

hello thozhi...ur information is nice....can u post about VELLIANGIRI HILLS also??

Post a Comment