சதுரகிரி - மலைப் பயணம்!

Author: தோழி / Labels: ,

தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வத்ராயிருப்பு என்ற சிற்றூறில் இருந்து ஆறு கிலோமீட்டர் பயணத்தில் சித்தர் பூமியாம் சதுரகிர மலையின் அடிவாரத்தினை அடைந்திட முடியும். சதுரகிரி மலையின் அமைப்பு, அதனை அணுகும் வழி, மலை ஏறும் பாதை, பாதையின் நெடுகே அமைந்துள்ள இடங்கள் அவற்றின் சிறப்புகள் குறித்த துல்லியமான பல தகவல்கள் “காளங்கி நாதர்”, “கோரக்கர்”, “அகத்தியர்”, "போகர்" போன்றோரின் நூல்களில் காணக் கிடைக்கிறது.

காளங்கிநாதர் தனது பாடல் ஒன்றில் சதுரகிரியின் அமைப்பு இன்று மட்டுமல்ல என்றென்றும் தான் குறிப்பிட்டவாறே இருக்கும் என கூறுகிறார்.அதன் பொருட்டே இந்த பதிவில் அவர்கள் உரைத்த வழியில் சதுரகிரி மலையில் பயணிக்க இருக்கிறோம்.

கிழக்கே இந்திரகிரி, மேற்கே வருணகிரி, வடக்கே குபேரகிரி, தெற்கே ஏமகிரி என்ற நான்கு மலைகளுக்கு சூழ்ந்திருக்க நடுவில் சிவகிரி, விஷ்ணுகிரி, பிரம்மகிரி, சித்தகிரி என்ற நான்கு மலைகளும் அமைந்திருப்பதால் சதுரகிரி என்கிற காரணப் பெயர் வந்ததாக சதுரகிரி தலபுராணம் கூறுகிறது.

சதுரகிரி மலையினை அடைந்திட நான்கு வழிகள் இருப்பதாகவும், அவற்றில் மூன்று வழிகள் மிகவும் சிரமமானது என்றும், தெற்குபகுதியில் நீருள்ள் ஓடை ஒன்று ஆற்றுடன் இணைகிறது. இந்த இடத்திற்கு தோணிப் பாறை என்று பெயர். அந்த இடமே சதுரகிரியை அடைய இலகுவான நுழைவாயில் என்கிறார் காளங்கி நாதர். பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் குறிப்பிடப் பட்ட தோணிப்பாறை இன்று மருவி தாணிப்பாறையாகி இருக்கிறது.

இனி மலையின் மீது பயணிப்போம், இனி வரும் தகவல்கள் அனைத்தும் கோரக்கர் அருளியவை...

தாணிப் பாறையில் இருந்து வடக்கு முகமாய் போகும் பாதையில் அம்பு விடும் தூரத்தில் கோவில் கொண்டிருக்கும் கருப்பண்ணசாமியை வணங்கி,அவர் அனுமதியோடு பயணத்தை துவங்க வேண்டுமாம். இங்கிருந்து கூப்பிடு தூரத்தில் “குதிரை குத்தி பாறை”யும், அதன் வடக்கு பக்கம் கூப்பிடு தூரத்தில் “படிவெட்டி பாறை” என்ற ஒன்று இருக்கிறதாம். இங்கிருந்து அம்பு விடும் தூரத்தில் காட்டாறு ஒன்றினை காணலாம் என்றும், அதன் வடக்குப் பக்கமாய் அரை நாளிகை நடக்க கவுண்டிண்ய ஆறு வரும் என்கிறார்.

இந்த ஆற்றின் மேற்குப் பக்கமாய் பத்தடி தூரம் நடந்தால் அத்தி ஊற்று இருக்கிறது என்றும், இந்த ஊற்றின் வடக்குப் பக்கத்தில் இருக்கும் பாறையில்தான் அத்திரி மகிரிஷி யாகம் செய்தார் எனவும், அதற்கு மேற்குப் பக்கத்தில் அவருடைய ஆசிரமம் இருந்தது என்கிறார் கோரக்கர்.

சித்தர்கள் கூறிய இந்த வழியினை ஆவணப் படுத்துவதன் மூலம் பல அரிய மூலிகைகளின் இருப்பிடத்தை கண்டறியும் வாய்ப்புகள் இருப்பதாக கருதுகிறேன்.கோரக்கர் அருளிய இந்த பாதையில் மலையேறியவர்கள் யாரேனும் இருந்தால் தயவு செய்து விவரங்களை பகிர்ந்து கொண்டால் உதவியாக இருக்கும்.

ஒரு புதிரை மெல்ல கட்டவிழ்ப்பதைப் போல எத்தனை துல்லியமான விவரனைகள், இன்றைக்கும் இந்த விவரங்களை வைத்துக் கொண்டு மலையேற முடியுமென்றே தோன்றுகிறது. அத்திரி மகிரிஷியின் ஆசிரமத்திற்கு அழைத்து வந்த கோரக்கர் அடுத்து நம்மை மச்சமுனியின் ஆசிரமத்திற்கு வழி கூறி அழைத்துச் செல்கிறார், அங்கிருந்து தனது ஆசிரமம் வந்து சேருவது பற்றிய விவரங்களை பதிவின் நீளம் கருதி நாளை தொடர்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

24 comments:

சேலம் தேவா said...

சித்தர்களே பாதை வகுத்திருப்பதை படிக்கும்போது சிலிர்ப்பாக இருக்கிறது.ஆவலைத் தூண்டுகிறது இந்த தொடர்.தோழிக்கு வாழ்த்துகள்.

GuruMunee said...

அன்புள்ள தோழிக்கு,

நான் தங்களின் பதிவுகளை தினமும் படிக்கும் பித்தன். உங்களை பார்க்கும் போது என குருநாதரின்(அகத்தியரின்) வழிகாட்டுதல் என்றே நினைக்கிறேன். நான் நினைக்கும் ஒவ்வொரு எண்ணங்களுக்கும் உங்களிடம் இருந்து விடை(பதிவுகள் மூலமாக) கிடைக்கிறது. சதுரகிரியின் மகிமையை படிப்பதோடு அங்கு சென்றுபார்த்தாள் தான் தெரியும் அதன் மகிமை. என் வாழ்க்கை(ஞானம் ) ஆரம்பித்தது அங்கு தான். நீங்கள் கூறியதுப்போல் "அம்பு விடும் தூரம்", "கூப்பிடும் தூரம்" , "அரை நாழிகை" எல்லாம் எனக்கு புதிராக இருந்தாலும் மிக தெளிவான அளவீடுகள் என்பதை நான் இப்போது நன்கு அறிகிறேன்.உங்களின் அடுத்த பதிவுகளை எதிர்நோக்கும் பித்தன் ....

இப்படிக்கு,

சிவனடிமை பாலா-சென்னை.

நிகழ்காலத்தில்... said...

தோழி, தாணிப்பாறை சென்றுவிட்டால் போதும். அதன்பின் தற்போதய நடைமுறையில் 5 அல்லது 6 அடி அகலத்தில் பாதை மேலே போய்கொண்டே இருக்கிறது. வழி மாற வாய்ப்பே இல்லை,

சதுரகிரி மலைக்கே செல்லும். இதில் செல்லும் வழியில் உள்ள சிறப்புகளை விவரித்து எழுதுங்கள்.

Anonymous said...

நல்ல தகவல் , நன்றி

Elangai Tamilan said...

தோழி,
தங்களின் இடுகைகள் அனைத்தும் மிக அற்புதமாக அமைந்துள்ளது.இங்குள்ள தமிழ் நண்பரிடம் வினவியதில் ,பதினான்கு கிலோமீட்டர் தூரத்தில் சுந்தர மகாலிங்கத்தின் சன்னதி அமைந்துள்ளது என்றும் , அதற்கு மேலும் சென்றால் பெரிய மகாலிங்கம் சன்னதி வரும் என்றும்.அங்குள்ள சாதுக்கள் சிவா தீக்ஷை அளிப்பதாகவும் கூறுகிறார் . மிக்க நன்றி

jagadeesh said...

ADVENTURE கதையாட்டம் கொண்டுப் போறீங்க. நல்லாருக்கு. தொடருங்கள்.

SRIRAM said...

Anaithum unmaithan Thodarungal Vazhthukkal Tholikku- Sriram

149 said...

பாராட்டுக்கள் நன்றி நன்றி நன்றி

தீனா

dinesh said...

ஹலோ,
அகத்தியரை நேரில் தரிசிக்கும் வழிமுறை சொல்லுங்கள்..
அகத்தியரின் தரிசனம் பெற்று, அவரை குருவாக ஏற்றுக் கொள்வதைத் தவிர எனக்கு வேற வழி இல்லை..

தயவு செய்து தெரிந்தவர்கள் கூறவும்

jagadeesh said...

@dinesh
http://siththarkal.blogspot.com/2010/08/blog-post_09.html
மேலே உள்ள பக்கத்தில், போய் பாருங்கள் தினேஷ், நீங்கள் கேட்டது கிடைக்கலாம்.

சுவாமிநாதன் said...

அருமையான பயணம் மிக சுவாரஷ்யமாக உள்ளது. மிக்க நன்றி

நாகேந்திரன் said...

ungalin intha thodar migaum sirappaga irukirathu.thodaradum ungal pani.

GuruMunee said...

ஐயா தினேஷ் அவர்களே ,

குருநாதரின் தரிசனம் பெற்று தான் அவரை குருவாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு அவரின் கமலபாதங்களை சரணடையுங்கள்.


உங்களை தேடி அவரே வருவார் . இது சத்தியம் . ஏனென்றால்

சத்தியமே அகத்தியம் . அகத்தியமே சத்தியம்.

இதனை நான் அனுபவத்தால் உணர்ந்தவன் ..

நீங்கள் கூற வேண்டிய மந்திரம்


ஒம் அகத்திஈசாய வித்மஹே
பொதிகை சஞ்சார்ய தீமஹி
தன்னோ ஞான குரு பிரசோதயாத்.

அல்லது

ஒம் அகத்திய குருநாதா போற்றி என்று 108 தடவை காலையும் ,மாலையும் சொன்னாலே போதும் . அவரை நீங்கள் சரணாகதி அடையுங்கள் . மற்றவற்றை அவரே பார்த்துக்கொள்வார் .

என்றும் சிவனடிமை, பாலா-சென்னை .

சங்கர் குருசாமி said...

அற்புதமான பதிவு... தொடருங்கள்...

சாமீ அழகப்பன் said...

அன்புள்ள தோழி அவர்களே,
நிறைய நண்பர்களின் கூட்டத்துடன் சதுரகிரிப் பாதையில் பல மூலிகைகளை கண்டறிந்ததுடன். அவற்றை உபயோகித்தும் பார்த்துள்ளேன்.ஆனால் இது ஒரு மூலிகை என்றதும்,தனக்கு தேவையோ,தெவையில்லையோ அதை படக்கென்று பறித்து இதையா நீங்கள் சொன்னீர்கள் என்று சொல்லும் நண்பர்களை பல முறை திட்டியுள்ளேன்.கருநொச்சியையும்,கருமஞ்சளையும் பல லட்சங்களுக்கு விற்கும் கும்பல்களும்,சந்தன மகாலிங்கம் கோவில் இன்று சந்தன மர வாசனையே தெரியாத லிங்கமாக மாறி இருக்கிறது. இன்றும் சதுரகிரி மலையை, மொட்டை அடிக்கும் மொட்டை அடிக்கும் கும்பல்களுக்கு இடையே சதுரகிரி மலையைப் பாதுகாக்க சித்தர்களே வர வேண்டிய நிலை இன்று.இதில் அடையாளம் கண்ட மூலிகைகளையோ,பாதையையோ சொன்னால் நானே ஒரு விடயத்தை அழிக்க காரணம் ஆகிவிடுவேன்.ஏனெனில் நிழற்சாயா விருட்சத்தைப் பற்றி நான் கூறியதன் பலன் என்ன நடந்தது என்பதை எனது வலைப் பூவில் கூறியுள்ளேன்.
http://machamuni.blogspot.com/2010/12/12_18.html
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

ஞானசூனியன் said...

சதுரகிரி தல வரலாற்று புத்தகங்களில் சத்ரகிரி என்பதற்கு மேற்படி நான்கு மலைகளால் சூழப்பட்டது என்றும், சில நூல்களில் நான்கு வேதங்களை குறிப்பிடும் வகையில் நான்கு மலைகளால் சூழப்பட்ட மலை என்றும் கூறப்பட்டுள்ளது.

இது போன்ற விளக்கங்கள் மதச் சார்புடையதாகவே எனக்குப்படுகிறது.

நம் சித்தர்கள் மதங்களுக்கு அப்பாற்பட்டவர்கள்.

இங்கு சதுரகிரியைப் பற்றி எனக்குத் தெரிந்த ஒரு செய்தியை தருகிறேன்.

சதுரர்கள் வாழும் கிரி = சதுரகிரி

சரிதானே?

அன்புடன்...

தமிழ் said...

அந்த தோணிபாறை இப்பொழுது தாணிபாறை ஆகிவிட்டது

SundarRaj said...

அம்பு விடும் தூரம் = ?

vino said...

உங்கள் பணி மிக அருமை .. தொடருட்டும் முடிந்தால் இங்கு வந்து சில மாதம் தங்கி இதனை விரிவாக எழுதலாம் .. மக்களும் இதனை புகை பட ஆதாரத்துடன் கொடுத்தால் மகிழ்ச்சியில் திளைத்து விடுவர் ..

ஆனந்த குமார் said...

Intha malaiku poittu vantha ungal valkaiyil thiruppangal nigalum. Idu thaan intha malaiyin ragasiyam

Kathiravan Kathir said...

nic temple

அர்த்த கிறுக்கன். said...

நல்ல தகவல்

அர்த்த கிறுக்கன். said...

அருமை

அர்த்த கிறுக்கன். said...

அருமை

Post a Comment