ஆச்சர்ய பூமி - ஓர் அறிமுகம்

Author: தோழி / Labels:

சித்தர்கள் தங்களின் தேடல்களின் பொருட்டு வெகுசன வாழ்விடங்களில் இருந்து விலகி காடுகள், மலைகள் என இயற்கையின் அரவணைப்பில் வாழ்ந்திருந்தனர். எவரும் எளிதில் அணுகிட இயலாத தனிமையான சூழலை விரும்பியவர்களாக இருந்தனர் என்பதற்கான பல குறிப்புகள் நமக்கு கிடைத்திருக்கின்றன. அந்த வகையில் சித்தர் பெருமக்கள் வாழ்ந்திருந்த மலைகளையும் அதன் சிறப்புகளையும் பற்றி முந்தைய பதிவுகளில் பகிர்ந்திருந்தேன். அந்த பதிவுகளை இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம்.

அந்த தொடரின் இறுதியில் சித்தர்களின் தலைமையகமெனக் கருதப்படும் ஒரு மலையினைப் பற்றி பின்னர் விரிவாக எழுதுவதாகக் கூறியிருந்தேன். அந்தவகையில் இந்த புத்தாண்டில் சித்தர்களின் அருட்பூமியாக விளங்குவதும் சிவன்மலை என்றும் சதுரகிரி என்றும் அழைக்கப்படும் ஆச்சர்ய பூமி பற்றி இனி வரும் நாட்களில் பகிர்ந்து கொள்கிறேன்.



சதுரகிரியின் அருமை பெருமைகளை விஸ்தாரமாக எழுதிக் கொண்டு போனால் மாதக் கணக்கில் நீளும். இந்த தொடரை எழுதிடும் முன்னர் எனது தனிப்பட்ட சில விமர்சனங்களை முன்வைத்திட விரும்புகிறேன். இவற்றை விமர்சனங்கள் என்பதை விட ஆதங்கம் என்று அழைத்தாலும் தகும். இந்த எண்ணங்களின் நீட்சியாகவே இந்த தொடரை எழுதிட நினைத்திருக்கிறேன்.

சதுரகிரி பற்றிப் பலரும் பல்வேறு ஊடகங்களில் தங்களின் அனுபவங்களை, பார்வைகளை ஆக்கங்களாய் பதிவு செய்திருக்கின்றனர். பெரும்பாலும் இத்தகைய ஆக்கங்கள், வர்த்தக நோக்கில் நூலின் விற்பனைத் தன்மையை மட்டும் முன்வைத்து எழுதப் பட்டவையாக இருக்கிறது. வாசிப்பாளரின் ஆர்வத்தையும், கவனிப்பினையும் ஈர்க்கும் நோக்கத்தில் சில ஆக்கங்கள் சதுரகிரி குறித்த மிகையான தோற்றத்தினை வலிந்து உருவாக்கிடுவதாக நினைக்கத் தூண்டுகிறது.

தொடர்ச்சியான இத்தகைய மிகைப் படுத்துதல் மற்றும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கட்டுக் கதைகளை முன்வைப்பதன் மூலம் சதுரகிரியை ஒரு மர்ம பூமியாகவும், அமானுஷ்ய மனிதர்களின் வசிப்பிடமாகவும் எல்லாவற்றுக்கும் மேலாக மலையில் நிறைந்திருக்கும் இயற்கையின் அற்புதங்களை அறிவார்ந்த வகையில் அணுகிட இயலாத வகையில் ஒரு மனத் தடையினை உருவாக்குவதாகக் கருதுகிறேன்.

சதுரகிரியினை ஒரு மத அடையாளமாய் நிறுவிடுவதில் காட்டிடும் வேகத்தினை அங்கே வாழ்ந்த சித்தர் பெருமக்களின் அருமை பெருமைகளை ஆய்ந்தறிந்து மனித குலத்திற்கு பயனுள்ளதாக ஆக்குவதில் செலுத்தினால் புண்ணியமாய் போகும் என்பதே என்னுடைய ஆதங்கம்.

வலையுலகில் ஏராளமான அன்பர்கள் சதுரகிரிக்கு நேரடியாக சென்று வந்த தங்களின் அனுபவத்தை விரிவாகவும், விளக்கமாயும் படங்களுடன் பகிர்ந்திருப்பதை நீங்கள் காண முடியும். இத்தகைய ஆக்கங்கள் உள்ளதை உள்ளவாறும், கண்டதை கண்டவாறும் பதிந்திருப்பதை காணமுடியும். என் சகபதிவர்களின் இந்த நேர்மையான அணுகு முறையினை நான் பலமுறை பெருமையோடு நினைத்துப் பார்த்ததுண்டு. நானும் அவர்களின் வழியில் நின்று இத்தொடரை எழுதிட தீர்மானித்திருக்கிறேன். இதுவரையில் இலங்கையினைத் தாண்டி வெளியே செல்லும் வாய்ப்பு இல்லாவிடினும், என்னுடைய பாட்டனார்ரின் சேகரிப்பில் இருக்கும் புத்தகங்களில் சதுரகிரி மலையினை பற்றி தகவல் கொண்ட புத்தகங்கள் நிறையவே இருக்கின்றன.

சதுரகிரிமலை பற்றி சித்தர் பெருமக்கள் அருளிய தகவல்களைத் தொட்ட விவரங்களை மட்டுமே இந்த தொடரில் முன்னெடுத்துச் சொல்ல தீர்மானித்திருக்கிறேன். நிச்சயமாக இதுவரை பலரும் அறிந்திடாத அல்லது பலரும் கேள்விப் படாத பல ஆச்சர்ய தகவல்களை இந்த தொடரில் நீங்கள் எதிர்பார்க்கலாம். மேலதிக விவரங்களுடன் நாளைய பதிவில் சந்திக்கிறேன்.

இதை வாசிக்கும் நீங்கள் இந்த பதிவினை உங்கள் நண்பர்களுக்கும் அறியத்தர வேண்டுகிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

21 comments:

mathy said...

Dear Sister,
I am waiting for your sathuragiiri posting.
By,
Your Sister,
T.Avudaiammal

Elangai Tamilan said...

என் அருமை தோழி,
வணக்கம்.தாங்கள் புதிய பதிவாக ,சதுரகிரி குறித்து தொடங்கியமய்க்கு வாழ்த்துக்கள்.தாங்கள் புதிய கோணகங்க்ளில்,சதுகிரி தொடரை அமைத்திட்ட ண்டுகிறேன்.ஏனென்றால்,சதுரகிரி குறித்து விகடனில் தொடர் கட்டுரை வந்துள்ளது.பின்னர்,ஸ்ரீனிவாசன் என்பவர் ,தனியாக,சதுரகிரி சென்று வந்தது குறித்து ,தனியாக ஒரு நூல் வெளி இட்டுள்ளார். தாங்களின் அணுகுமுறை ,வித்தியசபடுதினால்.நான் தனஜையனவேன். மிக்க நன்றி.

Tamil Siddhar Padalgal said...

Hi Thozhi,

Ungalin pathivu miga arumai,innum sathuragiriyai patri therinthukolla aasai.
pls seekiram post pannungal.

endrum,
sivanadimai.

நிகழ்காலத்தில்... said...

சதுரகிரியின் பல விசயங்கள் நீங்கள் குறிப்பிட்டது போல் மிகைப்ப்படுத்தப்பட்டதுதான், அல்லது ஒருவேளை அவைகள் உண்மையாக இருந்து நம்மால் உணரப்படாமலும் இருக்க வாய்ப்புகளையும் மறுப்பதற்கு இல்லை..

சமீபத்தில் சென்றுவந்த அனுபவம்தான்:))

வாழ்த்துகள் தோழி!!

149 said...

தோழி

உங்கள் முயற்சி பாராட்டதக்க ஒன்று

தீனா

Vimal Kumar said...

மற்றவர்களை விட, நீங்கள் எந்த விதத்தில் தனித்துவமாய் சொல்வீர்கள் என்று பார்க்கலாம். எப்படியோ, சித்தர் பெருமக்கள் சிறப்பை சொன்னால் சந்தோசம் தான். அதே நேரம், நீங்களும் அங்கே உள்ள ஆச்சர்யங்களை தான் மிகையாக சொல்லப் போறீங்க. பார்க்கலாம்.

BGN said...

வணக்கம் தோழி

உங்களின் இந்த தகவல் களஞ்சியமும் , அதற்காக நீங்கள் எடுத்திருக்கும் முயற்சியும் எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை,பாராட்டவும் வார்த்தைகள் இல்லை.அதிலும் நீங்கள் எடுத்துக்கொண்ட தலைப்பு மிகவும் அற்புதமானது , தெய்வீகமானது .
ஈசனின் சதுரகிரி மலை ,சித்தர்கள் வாழும் மலை பற்றி நீங்கள் தரவிருக்கும் தகவல்கள் மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.சதுரகிரி பற்றி அநேகம் பேர் கூறியிருந்தாலும் , நீங்கள் உங்களது தாத்தாவின் புதையலில் இருந்து தரப்போகும் செய்திகள் எனது ஆர்வத்தை தூண்டுகிறது .

வயதில் சிறு பெண்ணாக இருந்தாலும் , உங்களது செயலில் நீங்கள் ஒரு புதுமை போராளி மற்றும் அன்பே சிவமாக கொண்டு வாழ்பவர் எனபது திண்ணமாக தெரிகிறது .

வாழ்க வளர்க .வாழ்க தமிழ் , வளர்க தமிழ் குடி
அன்புடன்
பாலா

dinesh said...

ஹலோ தோழி,
அகத்தியரை நேரில் தரிசிக்கும் வழிமுறை சொல்லுங்கள்..
அகத்தியரின் தரிசனம் பெற்று, அவரை குருவாக ஏற்றுக் கொள்வதைத் தவிர எனக்கு வேற வழி இல்லை..

Ramesh said...

Friend
Sathragiri!!We expect excellent stuffs about sathuragiri..U r doing great job.God bless u.

praveen said...

நல்ல தொடக்கம், உங்களின் இந்த முயற்சி வெற்றி பெற நான் எல்லாம் வல்ல சுந்தரமகாலிங்க சுவாமியை வேண்டுகிறேன் , மேலும் என்னால் இயன்றவரை மற்றவர்களுக்கும் கூறுகிறேன் .


ஓம் நாம சிவாய..........

chandru2110 said...

சதுர கிரி மலைக்கு போயிட்டு வந்தவங்களுக்கே , அந்த மலையோட ரகசியங்களை புரிஞ்சுக்க முடியலை, பாட்டனாரோட பழைய புக்க வைச்சு நீங்க என்ன சொல்ல போறீங்கன்னு பாக்குறேன்.
-சந்துரு.

நீச்சல்காரன் said...

நல்ல தொடர் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

SABARI said...

manthirankalai jebikum pothu eppadi sariyaka 10008 murai jebipathu?
ennikondea jebithal palan kidaikuma?
sariyaka 10008 murai jebika veanduma?

JILLU-nu ORU YUVA said...

நமஸ்காரம் தோழி ,
முதல் முறை சென்ற போது விஷயங்கள் எதுவும் தெரியவில்லை , இரண்டாம் முறை சென்ற போது கொஞ்சம் விஷயம் தெரிந்ததால் பயணம் அருமையாக இருந்தது , இனி தோழி இன் சித்தர்கள் ராஜ்ஜியம் பகுதியில் வரும் சதிரகிரி ஆச்சர்ய பூமி - படித்த பின் மறுபடியும் போக வேண்டும் .....
தோழி இது போல் ஆன்மிக விஷயங்களை அனைவரிடமும் பகிர்ந்து பயனடைய வேண்டும் என்று விரும்புகிறேன் ,
தொடர் நல்லபடியாக வர என் வாழ்த்துக்கள்,

sakthi said...

தொடர்வாய் தோழி வாழ்த்துக்கள் :)

sundar003 said...

I need more informaton for this.

Thank you.

gopi said...

Gopi, Gudiyattam.
exelent

சி.பி.செந்தில்குமார் said...

அடேங்கப்பா.. ம் ம்

TVS said...

Though I have recently joined and happened to read your writings about Sathura Giri, please also intimate us about the Manthirams to be chanted at Sathuragiri Sundara Mahalingam Temple, Sandhana Mahalingam Temple, Sandhana Mahadevi temple, Periya Mahalingam temple etc. Also please intimate about the Mantras to be chanted in the Gorakkar cave etc.

Ranga samy said...

Migavum arumai, om namasivaya.

HHH said...

@SABARI
to count - you can use a JAPA MALA or anamika method -

Post a Comment