நிறைந்த அன்புடன் நலமும், வளமும் பெருகிட...

Author: தோழி / Labels: ,

இருபத்தியோராம் நூற்றாண்டின் முதல் தசாப்தம் இன்றோடு நிறைவு பெறுகிறது.ஆண்டின் கடைசி பதிவு இது, வருட துவக்கத்தில் இத்தகைய ஒரு முயற்சியில் ஈடுபடுவேன் என கனவிலும் நினைத்திருக்கவில்லை. பதிவுலகம் பற்றிய அனுபவம் ஏதுமில்லாது பதிவிடத் துவங்கியவளுக்கு, குருவருளால் இன்றைக்கு அறுநூற்றி ஐம்பத்தியோரு நண்பர்கள், ஆயிரக் கணக்கில் வாசகர்கள். பிரமிப்பாயிருக்கிறது.

இந்த ஒன்பது மாத கால அனுபவத்தில் அருமையான பல நல் உள்ளங்களின் அன்பினையும், ஆதரவினையும், ஆசிகளையும் பெற்றிருக்கிறேன் என்பது பெருமிதமான உணர்வினை தருகிறது. அன்பும், அக்கறையும் இனி வரும் நாட்களிலும் தொடர்ந்திட வேண்டுகிறேன்.

நாளை இனிதே துவங்கும் புத்தாண்டு, கடந்த இரண்டாயிரத்து ஐந்தாம் ஆண்டின் நாட்காட்டியை அச்சு அசலாக ஒத்திருக்கிறது என்பது ஆச்சர்யமான ஒற்றுமை.ஆதி சித்தரான சிவனுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப் படும் சனிபிரதோஷமன்று வருடம் துவங்குவது மத நம்பிக்கையாளர்களுக்கு மகிழ்வான செய்தி. சனவரி மற்றும் மார்ச் மாதங்களில் மூன்று பிரதோஷங்கள் வருவதும் குறிப்பிடத் தக்க ஒன்று, அதேபோல வைஷ்ணவர்கள் சிறப்பாக கருதும் வைகுண்ட ஏகாதசி தினம் இந்த வருடம் கிடையாது என்பதும் அபூர்வமான ஒன்று.

இந்த புத்தாண்டு நம் அனைவருக்கும் அன்பையும், சமாதானத்தையும், ஆரோக்கியத்தையும் நல்குவதாய் அமைந்திட வேண்டுமென பிரார்த்திப்போம்.இனி வரும் நாட்களில் நீங்கள் முன்னெடுக்கும் எண்ணங்கள், முய்ற்சிகள்,செயல்கள் யாவும் வெற்றியடைய, கருவூரார் தனது மாநிரீக காவியத்தில் அருளியுள்ள அரிய மூன்று மாந்திரங்களை இன்றைக்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்த மந்திரங்களை குருவை வணங்கி, மனசுத்தியுடன் காலை,மாலை வேளைகளில் அமைதியான ஓர் இடத்தில் கிழக்கு முகமாய் அமர்ந்து வேளைக்கு நூற்றி எட்டு தடவையாக மொத்தம் 10008 தடவைகள் செபிக்க வேண்டுமென்கிறார்.நம்பிக்கையுடன் தொடர்ந்து செய்திடுங்கள், பலன் கிட்டும்.

நினைவாற்றலை அதிகரிக்கவும், மறந்து போனவைகளை நினைவுக்கு கொண்டு வர வைக்கும் மந்திரம்.அனைவரும் செய்திடக் கூடிய எளிய மந்திரம் இது...

"ஓம் றீயும் ஐயும் சவ்வும் ஸ்ரீயும் கிலியும் ஆருசணாய சுவாகா"

உடல் ஆரோக்கியம் நிலைக்கவும்,நோய்வாய் பட்டவர்களின் துயர் நீங்கவும் பின் வரும் மந்திரம் உதவும். மேலே சொன்ன முறைப் படி 10008 தட்வை செபிக்க இந்த மந்திரம் சித்தியாகுமாம்.அதன் பின்னர் நோய்வாய் பட்டால் இந்த மந்திரத்தை இருபத்தியோரு தடவை செபிக்க துயர் நீங்கும் என்கிறார் கருவூரார்.

"ஓம் சங்கு உருள நசி சக்கரம் உருள மசி சிக்கு பிணி பீடை நசி சுவாகா"

பின் வரும் மந்திரத்தை மேற் சொன்னவாறு 10008 தட்வை செபித்தால் மந்திரம் சித்தியாகுமாம்.அதன் பின்னர் தினமும் காலை எழுது காலைக்கடன் முடித்த பின்னர் இருபத்தியோரு தட்வை செபிக்க அன்றைய தினம் செல்வம் கையிலிருக்கும் என்கிறார் கருவூரார்.

"ஓம் மகா லட்சுமி ராவே மகாளி லட்சுமி ராவே தீன லட்சுமி ராவே சர்வ பூரணி க்ஞ்சாட்சரிலோக ரட்சகி சர்வ சம்பத்து ரட்சகி ஸ்ரீ பாதார விந்தமு சரணம் பஞ்சாக்கரரூபி வசியம் வசியம் சிவா ஸ்ரீயும் றீயும் வங் சுவாகா"

நாளைய புத்தாண்டு பதிவில் செல்வம் நிலைக்கவும், பெருகவும் உதவும் அரிய சக்தி வாய்ந்த யந்திரம் ஒன்றினைப் பற்றிய தகவலுடன் சந்திக்கிறேன்.இயன்ற வரையில் இந்த தகவலை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில் பகிர்ந்து கொள்ளும் மனப்பான்மையே அன்பையும், சமாதானத்தையும் தழைத்தோங்க வைத்திடும்.
Post a Comment

11 comments:

Anonymous said...

நன்றி தோழி,

உங்களின் இந்த பணி மேன்மேலும் தொடர்ந்து சிறக்க எல்லாம் வல்ல சிவபெருமானை வேண்டுகிறேன்.வாழ்க பல்லாண்டு.

நட்புடன்,

அகமுதலி.

ஆனந்தி.. said...

அன்பு தோழி....மிக மகிழ்ச்சி...புத்தாண்டு வாழ்த்துக்கள்..

Prabu said...

நன்றி

Elangai Tamilan said...

தோழி,
"என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ்செய்யு மாறே" - திருமூலர் என்று அருளிய திருமந்திரம் ,தங்கள் செய்யும் தமிழ் தொண்டுக்கு
மிக சிறந்த சான்று.தங்கள் அறிந்து தெளிந்த நூல்களை ,உலதல்லில் உள்ள ஏனைய தமிழ் மக்களும் அறிய வேண்டும் என்று தங்கள் அறிய நினைப்பது சிறந்த மாண்பு

நண்பர்கள், அன்பர்கள்அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு 2011
> வாழ்த்துக்கள்.
>
> அன்பு உலகம் முழுவதும் பரவட்டும்
> சகோதரத்துவம் வளரட்டும்.
> மக்கள் மனம் அமைதி பெரட்டும்.
> மன்னில் மனிதம் மலரட்டும்
>
> அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Guruvadi Saranam said...

தோழி,

தங்களுக்கும் மற்றும் தங்கள் வலை தளத்தில் அன்பை பகிர்ந்துகொள்ளும் அணைத்து நண்பர்களுக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! வாழ்கவளமுடன்!
தாங்கள் இன்னமும் நிறைய எழதவேண்டும் என்று கருணையே வடிவான அந்த பரம்பொருளை பிரார்த்திக்கிறேன்.

நன்றி
ராஜேந்திரன்
பெங்களூர்.

149 said...

happy new year to all
thanks

Anonymous said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தங்களின் இந்த சேவை மேலும் தொடர எனது வாழ்த்துகள்.

Rajeswari said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்

அகோரி said...

என் பிரியமான தோழிக்கு
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்


அன்புடன்
செல்வா

balaji said...

உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்
கருவுரர் தன்னை அறிதல் பற்றி மந்திரமோ அல்லது வழி முறையோ எதாவது கூறி இருந்தால்
தயவு செய்து பகிர்ந்து கொள்ளும் படி கேட்டு கொள்கிறேன்

ITpro said...

ஓரு நாளைக்கு இரண்டு தடவை வீதம் மொத்தம் 10,008 தடவைகள்.
5004 நாட்கள்.
5004/365 = 14 வருடங்கள் செபிக்க வேண்டும்.

Post a Comment