திருமந்திர ரகசியம் - பஞ்சாக்கர எழுத்துக்கள் தொடர்ச்சி...

Author: தோழி / Labels: ,

பஞ்சாக்கர எழுத்துக்களைப் பற்றிய அறிமுகத்தினையும், ஐம்பத்தியோரு எழுத்துக்களைப் பற்றியும், மகிமை வாய்ந்த இந்த எழுத்துக்கள் மனித உடலின் பாகங்களை ஆட்சி செய்வதாக திருமூலர் கூறியிருப்பதை நேற்றைய பதிவில் பார்த்தோம். இன்று இந்த எழுத்துக்கள் ஆட்சி செய்திடும் அவயங்கள் பற்றியும் அவற்றின் தத்துவார்த்த குறியீடுகளை குறித்து நான் அறிந்தவகையில் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

பஞ்சாக்கர எழுத்துக்கள் ஆட்சி செய்யும் அவயங்கள் என திருமூலர் கூறிடும் பட்டியலை கான்போம்.

திருமுடி, நெற்றி, வலக்கண், இடக்கண், வலது செவி, இடது செவி, வலது மூக்கு, இடதுமூக்கு, வலதுகன்னம், இடதுகன்னம், மேலுதடு, கீழுதடு, மேல்வாய்ப்பல், கீழ்வாய்ப்பல், தாடை, உச்சந்தலை, வலக்கை, இடக்கை, வலது திருவடி, இடது திருவடி, வலது விலா, இடது விலா, குலை( மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் உள்ள உறுப்பு), கீழ்வயிறு, வயிறு, குறி, வித்து, மூலாதாரம், குதம், தொண்டைக் குழி, இடது மார்பு, வலதுமார்பு, உச்சி, ஆக்கினை, விசுத்தி, அனாகதம், மணிபூரகம், சுவதிஷ்டானம், தொடை, முழந்தாள், கணுக்கால், இதயம், நாக்கு, முள்ளந்தண்டு, மூளை, சிறுநீர்ப்பை, இடுப்புக்கூடு, சிறுநீரகம், ஈரல், மண்டையோடு, புருவமத்தி என ஐம்பத்தியொரு அவயங்களை குறிப்பிடுகிறார்.

இந்த அவயங்களுக்கு உரிய எழுத்துக்களை குருமுகமாய் அறிந்து அதற்கான யோகம் செய்ய்வதே சிறப்பு என்பதால் அந்த தகவலை மட்டும் இங்கே தவிர்க்கிறேன். முறையான பயிற்சியும், பக்குவ நிலையினை அடைந்தவரே இந்த சூட்சுமத்தினை மற்றவருக்கு அருள வேண்டுமென விதியிருப்பதால் முழுமையாக கூறிட இயலவில்லை. எதிர்காலத்தில் அனுமதி கிடைக்கும் பட்சத்தில் அவசியம் பகிர்ந்து கொள்கிறேன்.

இனி இந்த பஞ்சாக்கர எழுத்துக்களின் பின்னாலிருக்கும் தத்துவ விளக்கத்தினை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

"மண்டலம் ஐந்து வரைகளுள் ஈர் ஆறு
கொண்டிட நிற்க்கும் குடிகளும் ஆறு எண்மர்
கண்டிட நிற்கும் கருத்து நடுவாக
உண்டு நிலாவிடும் ஓடும் பதத்தையே"

- திருமந்திரம் -

நமது ஆத்மாவை ஐந்து வகையான மண்டலங்களும், பன்னிரெண்டு காவல்களும் நிறைத்திருப்பதாகவும். நமக்குள் ஆறுவகையான குடிகள் இருப்பதாகவும், இந்த உடலை எட்டு கண்ணியர் கண்காணிப்பதாகவும் கூறுகிறார்.

இதில் ஐந்து மண்டலங்கள் என்பது பூமி மண்டலம், நீர் மண்டலம், வாயு மண்டலம், தீ மண்டலம், ஆகாய மண்டலம் என பஞ்சபூத கூறுகளை உணர்த்துகிறது.

பன்னிரெண்டு காவல் என்பது இந்திரன், அங்கி, வருணன் , வாயு, குபேரன், ஆதித்தன், சந்திரன், யமன் ஆகியோர் எட்டு திசைக்கும் காவலாக இருப்பதாகவும், இவர்களைத் தாண்டி கணபதி, குமரன், வயிரவன், துர்க்கை என்கிற நால்வரோடு சேர்த்து மொத்தம் பன்னிரெண்டு காவல்கள் இருக்கின்றது என்கிறார்

நமக்குள் இருக்கும் ஆறு குடிகள் எனப்படுவது மெய், வாய், கண் ,மூக்கு ,செவி, மனம் என்பவற்றை குறிக்கிறது.

உடலைக் கண்கானிக்கும் எட்டு கன்னியர்களாக அனங்க குசுமை, அங்க மேகலை, அனங்க மதனை, அங்க மதனா, அனங்க ரேகை, அங்க வேகினி, அனங்க குசை, அங்க மாலினி என்பாரை குறிப்பிடுகிறார்.

இந்த உண்மைகளை அறிந்து இந்த் பஞ்சாக்கர எழுத்துக்களின் யோகத்தை முறையே பயன் படுத்துவோனுக்கு அழிவில்லை என்கிறார். இதன் படி நின்று ஒழுகினால் இறையருள் சித்திக்குமாம்.

நாளை இந்த வருடத்தின் கடைசி தினமாகையால், புதிய ஆண்டினை நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் எதிர்கொள்ளும் வகையில் சித்தர்கள் அருளியதும், அனைவருக்கும் நன்மை பயக்க கூடியதுமான ஒரு தகவலுடன் சந்திக்கிறேன்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

12 comments:

Guruvadi Saranam said...

THOZI,

NICE

NANDRI
S.RAJENDRAN

Elangai Tamilan said...

தோழி,
தங்களின் பதிவுக்குரிய விளக்கங்கள் அனைத்தும் மிக நேர்த்தியாக இருந்தது.தங்கள் தமிழராய் இருந்தும் ஆங்கில புத்தாண்டை சிறப்பாக கொண்டடுவிர்களா ?.தங்களின் இன்றைய பதிவிற்கு மிக்க நன்றி

Arunsiva said...

Thozi,

Thirumanthiram melum thodara vendum.

Its a request.

149 said...

thanks

Saravanan.V said...

நீங்கள் உங்களுடைய ஆன்மிக குருவை பின்பற்றுவதை யாராலும் தடுக்க முடியாது. எனக்கு பொறாமையாக இருக்கிறது. தூய்மை நிறைந்த உங்கள் சேவைக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

saravanan.V
coimbatore.

thalavaisamy - tuticorin said...

வாழ்கவையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வளமுடன் தோழி !!

சிவ ராத்திரி மட்டும் பிரதோஷம் பற்றி விளக்கம் கிடைக்குமா ?

thalavai samy
samytut.blogspot.com

senthil said...

you are not ordinary girl you are

really blessed by our sitharkal.ungal paniyal
our RACE WILL AGAIN GET its glory.

i am in my meditation i got Thiru Nanthi thevar
as guru.

gopisanj blog said...

Thozhi, can I know who is your guru. My


guru is yogi Ramaiah of Agathiar tradition. Gopi sanjeevi

gopisanj blog said...

Thozhi, can I know who is your guru. My


guru is yogi Ramaiah of Agathiar tradition. Gopi sanjeevi

naveenkumar said...

Hi thozhi,

http://www.tamilvu.org/slet/l41A0/l4130son.jsp?subid=2562

http://www.tamilvu.org/slet/lA100/lA100pd3.jsp?bookid=190&pno=79

sivaaya nama or sivaya nama

ithai patri vilakavum

anbudan

naveen

Unknown said...

thank you THOZHI

Unknown said...

நன்றி

Post a comment