திருமந்திர ரகசியம் - பஞ்சாக்கர எழுத்துக்கள்

Author: தோழி / Labels: ,

தினமும் காலையில் திருமந்திரத்தை பொருளுணர்ந்து வாசித்து வந்தால் குருவருள் சித்திக்குமென நேற்றைய பதிவில் குறிப்பிட்டிருந்தேன். பாடல்களின் பொருளறிவது தொடர்பாக நண்பர்கள் சிலர் மின்னஞ்சல் மூலம் கேட்டிருந்தனர். கீழே இருக்கும் இணைப்பில் திருமந்திர பாடல்களும், அவற்றின் பொருளும் எளிய தமிழிலும், ஆங்கிலத்திலும் விவரிக்கப் பட்டிருக்கிறது. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

திருமந்திரம்

இந்த பதிவில் திருமந்திரத்தில் மறைபொருளாய் கூறப்பட்டுள்ள பஞ்சாக்கர எழுத்துக்களை பற்றி பார்ப்போம். பஞ்சாக்கர எழுத்துக்கள் என்பது ஐம்பத்தியோரு தமிழ் எழுத்துக்களையே குறிக்கிறது. ”சிதம்பர சக்கரம்” எனப்படும் திருவம்பலச் சக்கரத்தின் உயிர்நாடியாகவும் இந்த எழுத்துக்களே விளங்குகிறது.இந்த சூட்சும தகவல்கள் அனைத்துமே திருமூலரால் மறைபொருளாகவே கூறப்பட்டிருக்கின்றன.

திருவம்பல சக்கரம் குறித்து முன்னரே ஒரு பதிவில் விவரமும், அதன் படத்தினையும் பகிர்ந்திருக்கிறேன். இந்த இணைப்பில் சென்று அந்த பதிவினை வாசிக்கலாம்.இத்தகைய பெருமையுடைய பஞ்சாக்கர எழுத்துக்கள் ம்னித உடலை ஆட்கொண்டிருப்பதாகவும், இதனை உணர்ந்து தெளிந்து திருவம்பலசக்கரத்தினை பூசிப்பவர்களுக்கு அழியாத உடல் கிடைக்குமென்கிறார் திருமூலர்.

"ஆகின்ற சக்கரத்து உள்ளே எழுத்து ஐந்து ஐந்தும்
பாகு ஒன்றி நின்ற பதங்களில் வர்த்திருக்கும்
ஆகின்ற ஐம்பத்தி ஓரெழுத்து உள்நிற்கப்
பாகு ஒன்றி நிற்கும் பராபரன் தானே"

- திருமந்திரம் -

திருவம்பல்ச் சக்கரத்தின் மையத்தில் உள்ள இருபத்தியைந்து அறைகளினுள் இந்த ஐம்பத்தியோரு பஞ்சாக்கர எழுத்துக்கள் எழுத்தப்படல் வேண்டும் என்று குறிப்பிடுகிறார். இந்த எழுத்துக்களில் இறைவனும் நெறிமுறையாக அமர்ந்திருப்பார் என்கிறார். இந்த எழுத்துக்களின் பெருமையை பார்ப்பதற்கு முன்னர் இந்த எழுத்துக்கள் எவையென தெரிந்து கொள்வோம்.


பன்னிரெண்டு உயிர் எழுத்துக்களான....

அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ,ஒள

ஆய்த எழுத்து கூடிய நிலையில் உயிர் எழுத்துக்கள் பன்னிரெண்டு...

ஃஅ,அஃ,ஃஇ,இஃ,ஃஉ,உஃ,ஃஎ,எஃ,ஃஐ,ஐஃ,ஃஒ,ஒஃ

மெய்யெழுத்து பதினெட்டு..

க,ங,ச,ஞ,ட,ண,த,ந,ப,ம,ய,ர,ல,வ,ழ,ள,ற,ன

ஆய்த எழுத்து கூடிய நிலையில் மெய்யெழுத்து எட்டு..

ஃக,கஃ,ஃச,சஃ,ஃப,பஃ,ஃய,யஃ

ஆயுத எழுத்து ஒன்று

ஆக மொத்தம் ஐம்பத்திய்யோரு எழுத்துக்கள். இந்த எழுத்துக்கள் ஒவ்வொன்றும் மனிதனின் உடல் அவயங்களை ஆட்சி செய்வதாக திருமூலர் கூறுகிறார்.அந்த விவரங்களை நாளைய பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த வலைப் பதிவில் முன்னூற்றி ஐம்பதாவது பதிவு இது.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

19 comments:

SIVAYOGI said...

Please,first experience yourself..

Guruvadi Saranam said...

தோழி
தங்கள் தொகுப்பு மிக அருமை. மேலும் திருமந்திரம் எளிமையாக புரிந்துகொள்ள நீங்கள் கொடுத்த வலை மிகமிக அருமை. எப்படி இதெல்லாம் உங்களுக்கு மட்டும் கிடைகிறது தோழி..............?

புரிந்தது. குரு அருள்!

வாழ்த்துக்கள் !

நன்றி
ராஜேந்திரன்
பெங்களூர்.

149 said...

thanks

Elangai Tamilan said...

தோழி,
தங்கள் குறுகிய காலத்தில் முன்னுற்றுய்ம்பது பதிவுகள் இட்டமைக்கு வாழ்த்துகள்.தங்கள் திருமந்திரம்
முழுமையும் எந்தவித தடையுமின்றி பதிவுகள் இட வேண்டுகிறேன் . தங்கள் சித்தர்படல்களை
இங்கொன்றும் அங்கொன்றுமாய் இட்டதுபோன்று இந்த முயற்சிஏய் விட்டு விடாதிர்கள்.ஏனென்றால்
சைவர்கள்ளுகு திருமந்திரத்தை விட வேறு முக்கியமானது வேறு ஒன்றும் இல்லை .மேலும் ,திருமந்திரம் ,சைவ சித்தாந்தத்தில் பெரும்பங்கு வகிக்றது .

THIRUMOOLAR YOGA ASHRAM, URUMPIRAI,SRILANKA said...

அருமையான தகவல். Thanks

THIRUMOOLAR YOGA ASHRAM, URUMPIRAI,SRILANKA said...

அருமையான தகவல்.

Thanks.

sriranjani

சுவாமிநாதன் said...

தங்கள் ஆன்மீகப் பயணம் மென்மேலும் வெற்றி அடைய என்டுடைய கனிவான வாழ்த்துக்கள். பயணம் தொடரட்டும் பயனாளிகள் பயன் பெறட்டும்---------------

Arunsiva said...

Best Wishes for the 350 edition, I am admire by your writings.
What a Tamil!
Continue your journey

By,
Arunsiva

Balaji Palamadai said...

சிலர் ஓம் நம சிவாய என்றும் சிலர் சிவாய நம என்றும் கூறுகின்றனர்
எது உண்மையில் பஞ்சாச்சரம் தெளிவு செய்திட வேண்டுகிறேன்

kevin sabari said...

amazing. thank you very much ....
all the best...

Sivananthan said...

அன்பு தோழி,
மனம் நெகிழ்ந்து, நெஞ்சார வாழ்த்துகிறேன். தங்கள் ஆன்மீக மற்றும் சமுதாய முன்னேற்ற பணி சிறக்க ஆண்டவனை வேண்டுகிறேன்.
சிவானந்தன்,நெல்லை,இந்தியா.

senthil said...

Really i thank full to you.
long live dear sister.
i want to be a sithar i want in this birth to attain Gods place.
i already in this way

Inquiring Mind said...

ஆனால், அயுத எழுத்துடன் சேர்த்து எப்படி உச்சரிப்பது?

Unknown said...

Valga Tamil

Unknown said...

Valga Tamil

Unknown said...

வணக்கம். .. என் பெயர் DKM. தயானந்த்.. எனக்கு சந்தேகம். ஆயுத எழுத்து கூடிய உயிர் எழுத்து , ஆயுத எழுத்து கூடிய மெய் எழுத்து , இதனை எவ்விதம் உச்சரிப்பது என்று எனக்கு தெரியவில்லை.


Unknown said...


மறைந்திருக்கும் நமது பொகிஷங்கள்

Unknown said...

மறைந்திருக்கும் நமது பொக்கிஷங்கள்

Unknown said...

பொக்கிஷங்கள்

Post a comment