திருமந்திர ரகசியம்...தொடர்ச்சி!

Author: தோழி / Labels:

திருமூலர் அருளிய திருமந்திரம் பத்து பிரிவுகளில் மூவாயிரம் பாடல்களைக் கொண்டது என்பதை நேற்றைய பதிவில் பார்த்தோம். பாயிரம் என்ற முதல் பிரிவில் பதின்மூன்று தலைப்புகளின் கீழ் நூற்றி ஐம்பத்தியாறு பாடல்கள் இருப்பதையும் பார்த்தோம். இன்று தந்திரங்களின் கட்டமைப்பினை பற்றி பார்ப்போம்.

முதலாம் தந்திரம்

பதினேழு தலைப்புகளின் கீழ் நூற்றி அறுபத்தியாறு பாடல்களைக் கொண்டது முதலாம் தந்திரம். இது பொதுவில் ஒழுக்க நெறிகளைப் பற்றி கூறுகிறது.

இரெண்டாம் தந்திரம்

இருபத்தி ஐந்து தலைப்புகளின் கீழ் இருநூற்றி எட்டு பாடல்கலைக் கொண்டது இரெண்டாம் தந்திரம். இவை சிவனையும், சீவனையும் விளக்குகின்றன.

மூன்றாம் தந்திரம்

இருபத்தியொரு தலைப்புகளின் கீழ் முன்னூற்று முப்பத்துமூன்று பாடல்களைக் கொண்டது மூன்றாம் தந்திரம். இவற்றில் பெரும்பாலும் யோகம் பற்றிய விளக்கங்கள் காணக் கிடைக்கிறது.

நான்காம் தந்திரம்

பதின்மூன்று தலைப்புகளின் கீழ் ஐநூற்று முப்பது பாடல்களைக் கொண்டது நான்காம் தந்திரம். இவற்றில் உபாசனை வழிமுறைகள் கூறப் பட்டிருக்கிறது.

ஐந்தாம் தந்திரம்

இருபது தலைப்புகளின் கீழ் நூற்றி ஐம்பத்திநான்கு பாடல்களைக் கொண்டது ஐந்தாம் தந்திரம். சைவ சமயத்தின் வகைகள் மற்றும் சரியை, கிரியை, யோகம், ஞானம் போன்றவைகளை இந்த பகுதி விளக்குகிறது.

ஆறாம் தந்திரம்

பதின்நான்கு தலைப்புகளின் கீழ் நூற்றி இருபத்தியெட்டு பாடல்களைக் கொண்டது ஆறாம் தந்திரம். குருதரிசனம், ஞானநிலை, துறவு, தவம் மற்றும் திருநீற்றின் பெருமைகள் இந்த பிரிவில் காணலாம்.

ஏழாம் தந்திரம்

முப்பது தலைப்புகளில் நானூற்றிஏழு பாடல்களைக் கொண்டது ஏழாம் தந்திரம். இவை ஆறு ஆதாரங்கள், ஆறு லிங்கங்கள், புலனடக்கம், தகாத ஒழுக்கம் பற்றி விளக்குகின்றது.

எட்டாம் தந்திரம்

முப்பத்தி மூன்று தலைப்புகளில் ஐநூற்றி பதினெட்டு பாடல்களைக் கொண்டது எட்டாம் தந்திரம். இவை சித்தாந்த விளக்கம், ஞானிகள் செயல் மற்றும் முக்குணங்கள் பற்றி விளக்குகின்றது.

ஒன்பதாம் தந்திரம்

இருபத்தி இரண்டு தலைப்புகளில் நாநூறு பாடல்களைக் கொண்டது ஒன்பதாம் தந்திரம். இவை குரு தரிசனம், மூவகை பஞ்சாட்சரங்கள், ஞான உதயம், வாழ்த்து என்பது பற்றி விளக்குவதோடு திருமந்திரம் நிறைவடைகின்றது.

ஆக மொத்தமாய் பாயிரம் சேர்த்து ஒன்பது தந்திரங்கள் நூற்று தொன்னூற்றி ஐந்து தலைப்புகளுடன், மூவாயிரத்தி எண்பத்தியோரு பாடல்களைக் கொண்ட பொக்கிஷம்தான் திருமந்திரம்.

குருவருளைப் பெற ஓர் எளிய வழி தினமும் காலையில் எழுந்து திருமந்திரத்தை உணர்ந்து படித்து வந்தாலே சித்திக்கும். இப்படி சிறப்புகள் பலவற்றை தன்னகத்தே கொண்ட திருமந்திரத்தில் மறைபொருளாய் உணர்த்தப்பட்டு இன்று வரை ரகசியமென கருதப் படும் ஒன்றினைப் ப்ற்றி நாளைய பதிவில் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

7 comments:

149 said...

thozi,
very interesting and amaze on this.........

Elangai Tamilan said...

தோழி ,
தங்கள் விளக்கம் திருமந்திரம் குறித்து மிக நன்றக உள்ளது.தங்களது விளக்கம் புதுமையாக இருக்கவேண்டும் என்று எண்ணுகிறேன்.அதாவது,எளிமையாகவும் படித்தவுடன் மனதில் பதியும்படி இருக்கவேண்டுகிறேன்

அகோரி said...

நல்ல பதிவு தோழி

Anonymous said...

நிறுவனருக்கு,

அய்யா, எனக்கு சித்தர்களின் வாழ்க்கை வரலாறு தகவல்கள் வேண்டும்.

மகேஸ்வர சீதாபதி.
+91 7639460914

kulasekaralwar said...

It really boom for us
I really touch your feet and wish

Inquiring Mind said...

குருவருளை பெற?? இங்கே குரு என்பவர் திருமூலரை குறிக்கின்றதா, இல்லை எந்த குருவை வேண்டுமானாலும் குறிக்கின்றதா என்பதை தெளிவுபடுத்தவேண்டுகிரேன் .?

munees waran said...

Ellam miga arumaiyaha irukirathu

Post a comment