திருமந்திர ரகசியம் - ஓர் அறிமுகம்

Author: தோழி / Labels: ,

"மூலன் உரைசெய்த மூவாயிரம் தமிழ்
ஞாலம் அறியவே நந்தி அருளது!
காலை எழுந்து கருத்துஅறிந்து ஓதிடின்
ஞாலத் தலைபவனை நண்ணுவர் அன்றே!"

-திருமூலர்

சைவ சமய திருமுறைகளில் பத்தாவது திருமுறையாக போற்றப் படுவது திருமூலர் அருளிய திருமந்திரம். பன்னிரு திருமுறைகளில் முதல் ஒன்பது திருமுறைகள் தோத்திர வகையாகவும், பத்தாவது திருமுறையான திருமந்திரம் சாத்திர வகையாகவும், பதினோராவது திருமுறை பிரபந்த வகையாகவும், பன்னிரெண்டாவது திருமுறை புராணவகையாகவும் குறிக்கப் பட்டிருக்கிறது. சாத்திரவகையான திருமந்திரம்தான் மெய்யான இறையின் தத்துவத்தையும், அதன் மேலான மாண்பினையும் தமிழுக்கு உரைத்த ஆதிநூல் என்றால் மிகையில்லை.

என்னுடைய தனிப்பட்ட அவதானத்தில், அழியும் தன்மையுடைய நமது உடலை யோகத்தின் மூலம் பக்குவமாக்கி, சிற்றின்பங்களின் பிடியில் இருந்து விலகி, எல்லா உயிர்களிடத்தும் கபடமில்லாத அன்பு செலுத்துவதன் மூலம் நம் சீவனை சிவனாக்கி மரணமில்லா பெருவாழ்வு வாழ்வதன் நுட்பநிலைகளை விவரிக்கும் நூலாகவே திருமந்திரத்தை பார்க்கிறேன்.

இந்த நூலில் பொதிந்திருக்கும் பல அரிய தகவல்கள் இன்னமும் முழுமையாக கட்டவிழ்க்கப் படவில்லை. எளிய சொல்லாடல்களால் அமையப் பெற்ற இந்த பாடல்களின் பின்னே இருக்கும் சூட்சுமங்கள் சிலதை நானறிந்த வகையில் இந்த வாரத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். திருமூலரின் வாக்கின் படி மூவாயிரம் பாடல்களால் ஆன இந்த நூல் நமக்கு முழுமையாக கிடைத்திருக்கிறது

முதலில் இந்த நூலின் அமைப்பு எத்தகையது என்பதை பார்ப்போம்.மொத்தமாக பத்து பிரிவுகளாய் பிரிக்கப் பட்டுள்ள இந்த நூலின் முதல் பகுதியை “பாயிரம்” என்கின்றனர். மற்ற ஒன்பது பிரிவுகளும் “தந்திரங்கள்” என்று அழைக்கப் படுகின்றன.

பாயிரம்

இதில் மொத்தம் நூற்றி ஐம்பத்தியாறு பாடல்கள் உள்ளது. இந்த பாடல்கள் பதின்மூன்று தலைப்புகளில் பிரிக்கப் பட்டிருக்கிறது. அவை முறையே,.. கடவுள் வாழ்த்து, அந்தணர் ஒழுக்கம், அரசாட்சி முறை, அவையடக்கம், அறஞ்செய்யான் திறம், அறஞ்செய்வான் திறம், ஆகமச் சிறப்பு, ஆகுதி வேட்டல், மும்மூர்த்திகளின் முறைமை, வானச் சிறப்பு, வேதச்சிறப்பு, குருபரம்பரை, திருமூலர் தன் வரலாறு கூறுதல் என பிரிக்கப் பட்டிருக்கிறது.

பதிவின் நீளம் கருதி திருமந்திர ரகசியத்தை நாளைய பதிவில் தொடர்கிறேன்..

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

11 comments:

Guruvadi Saranam said...

தோழி,

இப்பொழுது தொடங்கி இருக்கும் முயற்சி மிகவும் வரவேற்க்கதக்கது.
தொடருங்கள் உங்கள் பணியை...................
நாங்கள் உங்களை பின்தொடர்கிறோம்.

வாழ்த்துக்கள்!

நன்றி
ராஜேந்திரன்
பெங்களூர்.

Prabu said...

அருமை, தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள்.

santhanam said...

இந்த சிறுவயதில் எடுத்திருக்கும் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

Balaji K Murthy said...

nice work!!!!

one touch said...

irai thoziye anbu vanakkam

thangalin sevai mika siranthathu thangalin sevaikku ennudaya siram thazantha vanakkankal ennudaya thodarbukku
paramasivam027@gmail.com
nandri

அகோரி said...

நல்ல பதிவு தோழி

Anu said...

பேண் என்றால் பேணும் உருவாகும் ஆனால் அதுவும் அல்ல

What is this?

Unknown said...

I Find you change topics daily. Pl take one' complete it and proceed. Humble request.

Unknown said...

@Anu
பேண் என்றால் காப்பாற்று என்று அர்த்தம். பேணும் உருவாகும்.என்றால் எந்த உருவத்தில் வேண்டுகிறிர்களோ அந்த உருவம் வந்து வழி நடத்தும், ஆனால் உண்மை அது அல்ல. இதுவே அதன் அர்த்தம். தோழியின் சார்பாக.

Unknown said...

அணு உங்கள் கேள்விக்கு விளக்கம்.
நாம் எந்த வடிவத்தில் நம்மை காப்பாற்ற வேண்டுகிரோமோ அந்த வடிவத்தில் நம்மை காப்பாற்றும். அனால் அது (உண்மை) அந்த வடிவம் அல்ல.

Unknown said...

@Anu
நாம் காப்பாற்ற வேண்டுகின்ற உருவத்தில் வந்து காப்பட்ட்ரும். அனால் உண்மை அது அல்ல. இதுவே அதன் பொருள்.

Post a comment