நிறைய நன்றிகளுடன் ஓர் புதிய முயற்சி!

Author: தோழி / Labels:

தற்போது விடுமுறையில் இருப்பதால் கிடைத்திருக்கும் கூடுதல் நேரத்தில் சித்தர்களின் பாடல்களை மின்னூலாக்கிடும் உத்தேசத்தில் பாடல்களை தட்டச்சு செய்ய துவங்கினேன். நினைத்ததைப் போல இந்த முயற்சி அத்தனை எளிதானதாக இல்லை. ஒரு கட்டத்தில் மிகவும் சோர்ந்து போய்விட்டேன் என்பதுதான் உண்மை. எனினும் துவக்கிய பணியினை முடித்திட வேண்டும் என்கிற உந்துதலில், குருவருளை வேண்டி தொடர்ந்து தட்டச்சு செய்து வருகிறேன்.

அப்படி சோர்ந்திருந்த ஒரு தருணத்தில், “மெய்ஞானமே தவம்” தளத்தினை சிறப்பாக நடத்திவரும் திரு. தேவன் அவர்கள் எனக்கு ஒரு தகவலை அளித்தார். அருளாளர் ஒருவரிடம் சித்தர் பாடல்கள் ஒலி வடிவில் இருப்பதாக கூறி, அவரிடமிருந்து பெற்ற ஒலிக் கோப்புகளை எனக்கு அனுப்பி வைத்தார். கிடைத்தற்கரிய பொக்கிஷமாகவே அது எனக்குத் தோன்றியது.சமீப நாட்களில் எனக்கு ஆச்சர்யம் கலந்த மகிழ்சியினை தந்த நிகழ்வு இது என்றால் மிகையில்லை.

மிகுந்த தரத்திலான அந்த ஒலிக்கோப்புகளை தயாரிக்க எத்தகைய உழைப்பும், மெனக்கெடலும் இருந்திருக்கும் என்பதை என்னால் உணரமுடிந்தது. இத்தனை அருமையான ஒரு முயற்சியினை பொதுவில் வைப்பதன் மூலம் தமிழ் கூறிடும் வலையுலகின் வாயிலாக பலருக்கும் கொண்டு சேர்க்க முடியுமென தோன்றியதால் "சிவசக்திநாகம்மாள் அறக்கட்டளையின்" சீரிய வெளியீடாக வெளிவந்திருக்கும் ஒலிக்கோப்புகளைப் பகிர்ந்து கொள்கிறேன்

நான் தொடர்ந்து கூறிவருவதைப் போல இதுவும் குருவருளால் சாத்தியமாயிற்று.துவக்க பாடல் ஒன்றினை இத்துடன் இனைத்திருக்கிறேன். நாளை முதல் அடுத்த நான்கு நாட்களில் நான்கு சித்தர்களின் பாடல் தொகுப்பின் மின்நூல் மற்றும் ஒலிக் கோப்புடன் சந்திக்கிறேன்."நந்தி அகத்தியர்மூலர் புண்ணாக்கீசர்
நற்றவத்துப் புலத்தியரும் பூனைக் கண்ணர்
நந்தியிடைக்காடரும் போகர் புலிக்கையீசர்
கருவூரார்கொங்கணவர் காலாங்கி
சிந்தியெழுகண்ணர் அகப்பேயர்பாம்பாட்டி
தேரையரும்குதம்பையரும் சட்டைநாதர்
செந்தமிழ்சேர் சித்தர்பதினெண்மர் பாதம்
சிந்தையுன்னி சிரத்தணியாய் சேர்த்திவாழ்வா"

"ஓம் நமசிவாயா"

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

9 comments:

Anonymous said...

நானும் திரு தேவனுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன், எனக்கும் அவர் இந்த பாடல்களை அனுப்பினார் . மேலும் தங்களின் இந்த முயற்சி பாராட்ட தக்கது . தங்களுக்க்ம் திரு தேவனுக்கும் எனது நன்றிகள் .

நிகழ்காலத்தில்... said...

சிவ வாக்கியர் பாடல்கள் சிடியாக கிடைக்கும்

MARKETED BY
sree agencies
1/1 bandala venugopala street
triplicane
chennai 600 005

phone 0424-28442361

PRODUCED BY
ohm sivasakthi nagammal trust
6-2-37 periyar colany
NILAKKOTAI
DINDUGAL DISTRICT 624208
PH.09790787789

550 பாடல்களும் இருக்கும். இதனுடன் சித்தர் பாடல்கள் சிடியும் கிடைக்கும். நீங்கள் இணைத்த பாடல் இதிலிருந்துதான் எடுத்ததாக நினைக்கிறேன்.

இதில் சித்தர்கள் வந்தனம், பத்திரியார் பாடல்,பாம்பாட்டி சிததர், அகப்பேய்ச் சித்தர், குதம்பைச் சித்தர், மதுரை வாலசாமி, கொங்கணார் அனைவரின் பாடல்களையும் கேட்கலாம்.

விலை சிடி ஒன்று 100 ரூபாய்.

இணையத்தில் பதிவேற்றம் செய்வதைவிட இதை வாங்கினால் வீட்டில் எல்லோரும் டிவிடி பிளேயரில் போட்டுக்கேட்கலாம்.
டிஸ்கி: நான் இதற்கு ஏஜண்ட் அல்ல:)))

Shiva said...

தோழி,
இதுவரை.....
எல்லோரும் பயனடைய
எழுத்தோவியம் படைத்தீர்
இப்போது.....
ஒலிப்பேழையும் இணைத்து
இனிமை சேர்த்திட்டீர் ,
இனி.....
நிழலோவியம் சேர்ப்பீர்
நினைவில் நிற்பீர்
என்றென்றும்.

Shiva said...

பொதுவில் வைக்க
பொன்னான தளம்
தோழியின் தளமேயென
தேவனே உதவிட
புலிப்பாணியடிமை
தந்திட்ட
செவியினிக்கும்
சித்தர் பாடல்கள்
அத்தனையும் அருமை
வளர்க உங்கள் தொண்டு
வாழி நீவீர் மூவரும்
பல்லாண்டு, பல்லாண்டு

149 said...

i thanks to you and god

VISWAM said...

அருமை. ரொம்பவும் நல்ல முயற்சி. தொடருங்கள், உங்கள் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

தேவன் said...

மிக்க நன்றி தோழி.

ஆனால் ரொம்ப மிகைப்படுத்தி கூறி இருக்கிறீர்கள்.

புலிப்பாணி அடிமைக்குத்தான் இந்த பாராட்டு உரியது.

யாம் பெற்ற இன்பம் பெற இவ்வையகம் திருமூலர்).


தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.

இந்தக் குறளுக்கு இன்று தான் விளக்கம் அறிந்தேன்.

நன்றி தோழி.

Anonymous said...

சிறந்த பதிவு தோழி........

vivek said...

nandri thozhi. Umathu Aanmiga sevai thodarattum. Vazhga nadu.. vazhga thamizh sithar panpadugal. Thank u very much...!

Post a comment