சித்தரகசியம் - நிறைவுப் பகுதி!

Author: தோழி / Labels:

கடந்த பதினைந்து பதிவுகளாய் தொடர்ந்த சித்தரகசியம் தொடரின் நிறைவுப் பதிவுவாக இதை வைக்கிறேன். காலத்தே பொதுவில் பகிராமல் மறைக்கப் பட்ட அனைத்துமே ரகசியம்தான். அந்த வகையில் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் வரையில் ஒரு சிறிய வட்டத்தில் மட்டுமே அறியப் பட்டிருந்த இந்த தகவல்களின் அடிப்படைகளை பொதுவில் பகிர்ந்து கொள்வதே எனது நோக்கம்.

இயன்ற வரையில் எனது பதிவுகளை வியப்பு சார்ந்த ஒன்றாய் அமைத்திடாது, அறிதலும் அதனை புரிதலும் பின் தெளிதலுமான ஒரு எழுத்தோட்டத்தில் அமைத்திடவே முயன்று வருகிறேன். இனி சித்தரகசியம் பதிவுகள் தொடர்பாய் சில விளக்கங்களை மட்டும் வைத்து இந்த தொடரை நிறைவு செய்கிறேன்.

இந்த தொடரில் தரப் பட்டிருக்கும் தகவல்கள் அனைத்தும் பின்வரும் நூல்களில் இருந்தே திரட்டப் பட்டவை..

அகத்தியர் அருளிய..

அகத்தியர் மாந்திரீக காவியம், அகத்தியர் பன்னிரு காண்டம்

புலிப்பாணி சித்தர் அருளிய..

புலிப்பாணி சக்கர விஞ்ஞை

உடல் சாப நிவர்த்தி மந்திரத்தைப் பதிவிடுமாறு பலரும் கேட்டிருந்தனர்.

உடல்சாப மந்திரத்தை பொறுத்தவரையில் தகுதியான குரு ஒருவர், தனது தகுதியான சீடனுக்கு அருள வேண்டியது. என் வரையில் நான் இன்னமும் இந்த தேடலின் ஆரம்பநிலையில் உள்ளவள். இந்த நிலையில் என்னால் மற்றவர்களுக்கு இதை அருளும் தகுதியோ, பக்குவமோ இல்லை என்பதாலும், மந்திரத்தின் புனிதத் தன்மையை கருத்தில் கொண்டுமே பொதுவில் வைத்திட வில்லை. ஆர்வமுள்ளோர் மேலே சொன்ன நூல்களில் தேடிடலாம்.

தீட்சை மந்திரங்களைப் பொறுத்தவரையில் முறையான உடல் மற்றும் மன பக்குவம் இருந்தால் மட்டுமே முயற்சிக்க வேண்டும் என சித்தர் பெருமக்கள் கூறியிருக்கின்றனர். சிவதீட்சை என்பது ஒவ்வொரு படிநிலையாக கடக்க வேண்டியது. முயற்சியும், பயிற்சியும் உள்ளவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம். இதனையே நம் முன்னோர்கள் “மந்திரம் கால், மதி முக்கால்” என்ற பழம் வாக்கின் மூலம் உணர்த்தியிருக்கின்ற்னர் என கருதுகிறேன்.

மூலிகை சாபநிவர்த்தியின் பின்னால் இருக்கும் சூட்சுமத்தினை பரந்த பட்ட கருத்தியலாக கொள்ளலாம். இது பற்றி தனியே விரிவாக பிரிதொரு சாந்தர்ப்பத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.

இத்துடன் சித்தரகசியம் தொடர் முற்றிற்று. அடுத்த பதிவில் புதிய முயற்சி ஒன்றினைப் பகிர்ந்து கொள்கிறேன்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

5 comments:

Unknown said...

இவ்வளவு கடினமான ஒரு விஷயத்தை எப்படி இவ்வளவு எளிதாக கையாளுகிறீர்கள் என்பதே எனக்கு ஆச்சர்யமான விஷயம்.வாழத்துக்கள்.

Vaitheki said...

மிக அருமையாகவும் சுவாரசியமாகவும் இருந்தது வாழ்த்துக்கள். உங்கள் புதிய முயற்சிக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.

Prabu said...

கெட்ட பழக்கங்களில் இருந்து விடுபட எதாவது மந்திரம் இருக்கிறதா தோழி?

Balu said...

மூலிகை சாபநிவர்த்தி - மூலிகை மர்மம் என்ற புத்தகத்தில் உள்ளது தகுதியுள்ளோர் பயன்படுத்தலாம்

vengatg said...

Thozhi, pls read this.
http://siddhadreams.blogspot.com/search/label/Ebooks%20Download/

Post a comment