சித்தரகசியம் - விபரீத யந்திரங்கள் தொடர்ச்சி..

Author: தோழி / Labels:

இன்றைய பதிவில் விபரீதங்களை விளைவிக்கும் சில சக்கரங்களைப் பற்றி பார்ப்போம்.முதலில் அகத்தியர் அருளிய விருட்ச மாரண சக்கரம்.இது எத்தகைய மரத்தையும் மாரணம் செய்விக்குமாம்.இதனை அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்.

"பாரேதான் புலத்தியனே பண்புளானே
பாலகனே ஓரறிவுக் குற்றசாதி
நேரேதான் விருட்சங்க ளெதுவானாலும்
நேர்மையுடன் மார்க்கத்தை விளம்பக்கேண்மா"

- அகத்தியர் -

"விதியான விருட்சமாரண சக்கரந்தான்
பதியான வைந்துவரை குறுக்கே கீறி
பாவலனே யைந்துவரை நெடுக்கேகீறி
மதியோடு மாளியது பதினாறாச்சு
மானிலத்தில் நாதாக்கள் மறைத்தசேதி"

- அகத்தியர் -

விருட்சங்களுக்கு விதியாய் அமையும் இந்த விருட்சமாரணச் சக்கரத்தை பூமியில் சித்தர்கள் மறைத்தார்கள். நான் உனக்கு சொல்கிறேன் கேள் என துவங்குகிறார்.... குறுக்காக ஐந்து கோடும் நெடுக்காக ஐந்து கோடும் கீற பதினாறு அறைகள் உருவாகும். அந்தக் கோடுகளின் நுனியில் சூலம் கீறி அந்த அறைகளுக்குள் இடவேண்டிய எழுத்துக்களையும் தனது பாடலில் குறிப்பிடுகிறார். இவ்வாறு தயாரித்த சக்கரத்தினை...

"தீர்க்கமுடன் விருட்சத்தின் அடிப்பாகத்தில்
அப்பனே சாண்நிகளஞ் சதுரந்தோண்டி
கேளப்பா சக்கரத்தை அதன் கீழ்ப்போட்டு
மணலாலே மூடே மூன்றேநா ள்தனிலே
நலமான விருட்சமது பட்டுப்போகும்
நாசமாம் விருட்சமது நாசமாகும்
நாயகனே பச்சைமரம் பட்டுப் போகும்
வீணருக்கு உரைத்திடாதே கேடுவிழையும்"

- அகத்தியர் -

குறிப்பிட்ட விருட்சத்தின் அடிப் பக்கத்துக்கு அண்மையில் ஒரு குறிப்பிட்ட அளவு ஆழத்துக்கு சதுரமாக ஒரு குழி தோண்டி அதில் இந்தச் சக்கரத்தைப் போட்டு மண்ணால் மூடிவிட்டால் மூன்று நாளில் அந்த பச்சை மரம் பட்டுப்போய் நாசமாகிவிடுமாம். வீணருக்கு இதை உரைத்தால் கேடு விளையும் என்கிறார். அதுவும் உண்மை தானே?

சத்துரு மாரணச் சக்கரம்

குறுக்காக ஆறு கோடும் நெடுக்காக ஆறு கோடும் வரைந்தால் இருபத்தியைந்து அறைகள் உருவாகும். ஒவ்வொரு அறையின் பக்கவாட்டுப்பகுதி முனைகளிலும் சூலம் கீறிய பின்னர், குறிப்பட்ட சில எழுத்துக்களை அந்த அறைகளுக்குள் எழுதிட வேண்டுமாம், இந்த சக்கரத்தை ஒரு ஆலமரத்தின் கிழக்குப் பக்கமாகச் செல்லும் கிளையில் முக்கிய சத்துரு பெயரைச் சொல்லி கட்டிவிட்டு மூன்றுநாட்கள் சென்று அதை கழட்டினால் அந்த சத்துரு இறந்து விடுவான் என்கிறார். ஏன் இந்த சக்கரஙக்ளை அகத்தியர் மறைத்து அருளினார் என்பதன் சூட்சுமம் இப்போது புரிகிறதா?

விலங்கு மாரணச் சக்கரம்

அத்திமரத்து பலகை எடுத்து அதில் குறுக்காக ஐந்து கோடும் நெடுக்காக ஐந்து கோடும் கீறினால் பதினாறு அறைகள் உருவாகும்.அந்தக் கோடுகளின் நுனியில் சூலம் கீறிய பின்னர், அந்த அறைகளுக்குள் குறிப்பட்ட சில எழுத்துக்களை எழுதிட வேண்டும்.அந்தப் பலகையை எருக்கம் விறகிட்டு எரித்து அந்த சாம்பலை ஆற்று நீரில் கரைக்க வேண்டும், அப்படி ஆற்று நீரில் கரைக்கும் போது மனதில் நினைக்கும் காட்டு விலங்கானது அந்த நொடியே மாண்டுவிடும் என்கிறார். நகருக்குள் பிரவேசித்து மக்களைத் துன்புறுத்தும் விலங்குகளை இந்த சக்கரம் அழிக்க உனக்கு உதவும் என்றும் கூறுகிறார்.

காட்டேரிச் சக்கரம்

குறுக்காக ஆறு கோடும் நெடுக்காக ஆறு கோடும் வரைந்தால் இருபத்தியைந்து அறைகள் உருவாகும்.ஒவ்வொரு அறையின் பக்கவாட்டுப்பகுதி முனைகளிலும் சூலம் கீறிய பின்னர், குறிப்பட்ட சில எழுத்துக்களை அந்த அறைகளுக்குள் எழுதி பின் அந்த சக்கரத்தை குறிப்பிட்ட பீஜ மந்திரத்தால் ஆயிரத்தி எட்டு தடவைகள் செபித்து அந்த யந்திரத்தை தாயத்தில் போட்டு ஒரு குறிப்பிட்ட நாளில் அணிந்து கொண்டால் காட்டேரி அடிமையாகி ஏவல் புரியும் என்கிறார் அகத்தியர்.

இவ்வாறு விபரீத யந்திரங்களின் பட்டியல் நீள்கிறது. பதிவின் நீளம் கருதி இத்துடன் இந்த தொடரை நிறைவு செய்கிறேன். நாளைய பதிவில் சித்த ரகசியம் தொடர் குறித்து தொடர்ந்து வரும் வேண்டுகோள்களுக்கான விளக்கங்களை பகிர்ந்து கொள்கிறேன்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

9 comments:

பாவா ஷரீப் said...

படித்து பிரமித்தேன் தோழி
சக்கரங்களுக்கு இவ்வளவு சக்தியா ?

Unknown said...

nice

Anonymous said...

தானென்ற ஞானிக்கு குளிகைஒன்று
சாற்றுகிறேன் புலத்தியனே சார்ந்துகேளு
தேனன்ற விந்துவல்லோ ரசமாகும்
திரண்டு மணியாவத்ற்கு வகையைக்கேளு
மானென்ற அக்கினியே புடமுமாகும்
ஊநென்ற சடத்திலே மனிபோல்செய்து
உத்தமனே கெவுனத்தில் ஓடலாமே

ஓடலாம் பராபரத்தினடியிற்குள்ளே
ஓகோகோ சொக்குவிக்கும் மணியின் மார்க்கம்
""காடெல்லாந்திரிந்தலைந்து ரசத்தைவாங்கி
கட்டி யொரு மணியாகச் செய்வேனென்று
நாடெல்லாமலை வார்கள் உலுத்தமான்பர்"" ( :))
நாடென்ற வனிடத்தில் நரகமெய்தும்
பாடெல்லாம் பட்டல்லோ விந்தைக்கட்ட
பரப்பிரம மணியாகும் பாருபாரு.

chandru2110 said...

நட்புடன் , சந்துரு.

Guruvadi Saranam said...

தோழி,
சக்கரங்கள் பற்றிய பாடம் அருமை. ஆனால் விபரீத சக்கரங்களை பற்றி சொன்ன நீங்கள் நன்மை செய்யும் சக்கரத்தை பற்றி சொல்லிருந்தால் நன்றா இருந்திருக்கும். அதாவது ஒரு குறிப்பிட்ட தேவதையை சக்கரம் மூலம் வசியம் செய்து மக்கள் குறை போக்கவும், நமக்கு நடக்க போகும் நல்லது, கெட்டது பற்றி தெரிந்து கொள்வதற்கும் முடியும். அப்படி ஒன்று இருந்தால் ஒரு சக்கரம் மட்டும் படத்துடன் கொடுத்தால் நன்றா இருக்கும்.முடிந்தால் கொடுங்கள்.

நன்றி
ராஜேந்திரன்
பெங்களூர்.

raj said...

raju,
inda bayngaramana chakrangal thevaidana..
nallvelai idu maraikkapattu vittadu.

senthil said...

i know this manthirams and yanthirams
but i dont know the meanings.
i have a lot of books which was given by my uncle
he tolled me karumurai manthiram and urumurai manthiram .

i am not liking karumurai but i like urumurai
and yen thiram

i want to know meanings.

for example ram - means fire

can you please give me the meanings

Anonymous said...

hi....

senthil which are the books are all you having....

i know one guruji.....he will guide you....

if you are having rare books tell me..

Unknown said...

இரகசியங்கள் பல

Post a comment