மூலிகை சாபநிவர்த்தி என்பதை மூலிகையினை நிலத்தில் இருந்து பறிக்கும் பொழுதில் செய்திட வேண்டிய முன் தயாரிப்பாக கருதலாம்.காட்டில் மூலிகைகளை தேடும் பொழுது குறிப்பிட்ட மூலிகையினை சுற்றி வளர்ந்து இருக்கும் பிற செடிகளை கவனிக்க வேண்டுமாம்.பிற் செடிகளின் தன்மை மற்றும் பண்புகளை கருத்தில் கொண்டே தேவையான மூலிகையினை பறிக்க வேண்டும் என்கின்றன்ர்.உடல் சாபநிவர்த்தி பெற்றவர்களுக்கு இத்தகைய பகுத்தறியும் திறமை வாய்க்கும் என்கிறார் அகத்தியர்.
மூலிகை பறிப்பதற்கு முதல் நாளே குறிப்பிட்ட மூலிகையினை சுற்றியுள்ள மற்ற செடிகளை நீக்கிவிட வேண்டுமாம்.பிறகு குறிப்பிட்ட நேரத்தில் அதற்கென உள்ள பூசை முறைகளோடு தனித்துவமான ம்ந்திரத்தை செபித்து விரல் நகம் படாமல் அந்த செடியினை வேரோடு பறித்திடல் வேண்டும் என்கின்றனர்.சாபநிவர்த்தியின் அடிப்படையே குறிப்பிட்ட மூலிகையின் உயிர்த் தன்மையினை தக்க வைப்பதாகும்.
சாப நிவர்த்தி மந்திரங்களுக்கு பொருள் ஏதும் இருப்பதாக தெரியவில்லை.பெரும்பாலான மந்திரங்களை லட்சம் தடவை செபித்து உருவேற்றிட வேண்டும் என குறிப்புகள் கூறுகிறது.இதன் பின்னால் இருக்கும் சூட்சுமம் இன்னமும் அறியப் படவில்லை.
நண்பரொருவர் செடிகளில் இருக்கும்,பூச்சிகள்,கிருமிகள் போன்றவற்றை அகற்றிட இம்மந்திரங்கள் உபயோகமாகலாம் என கூறியிருந்தார், இது குறித்து அறிந்தவர்கள் மேலதிக விவரம் கூறினால் அனைவருக்கும் பயனுடையதாக இருக்கும்.
இனி சில மூலிகை சாப நிவர்த்தி மந்திரங்களைப் பார்ப்போம்.
"ஆமென்ற வசியமென்று சொல்லக் கேளு
ஆஅதி முதலான கொடியறுகு வாங்க
டங் றீங் வங் யென்று லட்சம் செபித்தால்"
- அகத்தியர் -
கொடியறுகு வேரை வசிய முறைகளுக்கு பயன்படுத்தும் போது "டங் றீங் வங்" என்று லட்சம் உரு செபித்து சாப நிவர்த்தி செய்து பறிக்க வேண்டும் என்கிறார் அகத்தியர்.
"நாடவே பெருவாகை மூலிசாபம்
கெவனமுடன் ஓம் நமசிவய வென்று
தாளப்பா லட்சமுரு ஓதும் போது
மீளப்பா வசிய யோகம் தரணியில்"
- அகத்தியர் -
பெருவாகை மூலிகையை வசிய முறைகளுக்கு பயன்படுத்தும் போது "ஓம் நமசிவய" என்று லட்சம் உரு செபித்து சாப நிவர்த்தி செய்து பறிக்க வேண்டும் என்கிறார் அகத்தியர்.
இரசவாதத்தில் பயன்படுத்தப் படும் சாபநிவர்த்தி மந்திரங்கள்
"பத்தியுடன் பாசாண சுண்ண செந்தூரம்
பாங்காகப் புடமிடும்முன் சாபங்கேளே
கேளப்பா பாசாண சாபந்தீரக்
கிருபையுடன் ஓம் ஹீம் நசிமசி யென்று
வாளப்பா ஆயிரத்தெட் டுருச்செபிக்க
வலியான பாசாண சாபந்தீரும்"
- அகத்தியர் -
பாசாண சுண்ண செந்தூரங்களை புடமிடும் முன் சாபத்தை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்று சொலும் அகதியர்.. மேலும் கிருபையுடன் "ஓம் ஹீம் நசிமசி" என்று ஆயிரத்தி எட்டு உரு செபித்தால் வலிமை உள்ள பாசாணங்களின் சாபங்கள் தீரும் என்கிறார்.
"போமேதான் உபரசத்தின் சத்தைச்சேர்த்து
புகழான ரசவாதஞ் செய்யும் போது
ஆமேதான் ஓம் றீம் நசிமசி யென்று
அன்பாக ஆயிரத்தெட் டுருச்செபித்தால்
வாமேதான் உபரசத்தின் சாபம் போச்சு"
- அகத்தியர் -
உபரசத்தின் சத்துக்களைச் சேர்த்து புகழ்நிறைந்த் இரசவாதம் செய்யும் போது அன்பாக "ஓம் றீம் நசிமசி" என்று ஆயிரத்தி எட்டு உரு செபித்தால் உபரசத்தின் சாபங்கள் நீங்கும் என்கிறார் அகதியர்.
இது வரை இந்த சித்த ரகசியம் தொடரில் சொன்ன மந்திரங்கள் வரிசையாக, உடல் சாப மந்திரங்கள், உடல் கட்டு மந்திரங்கள், தீட்சை மந்திரங்கள் என்ற படிமுறையிலேயே மேற்கொள்ள வேண்டும் என்று அகத்தியர் வலியுறுத்துகிறார்.
இத்துடன் சாப நிவர்த்தி ம்ந்திரங்கள் பற்றிய அறிமுகத்தை நிறைவு செய்கிறேன்.குருவருள் சித்திக்குமாயின் அடுத்த ஆண்டில் சாபநிவர்த்தி தொடர்பாக ஆய்வு நூல் ஒன்றினை எழுதிடும் எண்ணத்தில் இருக்கிறேன்.
நாளைய பதிவில் சித்தரகசிய தொடரின் எஞ்சியிருக்கும் தலைப்பான ”அபாயகரமான யந்திரங்கள் “ பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment
7 comments:
தோழி,
இந்த பதிவில் மருத்துவ மூலிகை சாபநிவர்த்தி பொதுவானதகுள்ளது என்றும் மற்ற காரியங்கள் செய்ய தனி தனி சாபநிவர்த்தி உள்ளதாக கூறியுள்ளீர். அந்த பொது சாபநிவர்த்தி மந்திரத்தை சொன்னால் நன்றா இருக்கும். மூலிகைகளை பறிக்க சில முறைகளை சொல்கிறார்கள்.( அதில் முதலில் உடல் சாப மந்திரம், உடல் கட்டு, பிரணாப்ரதிஷ்டை, காபுகட்டுதல், துபதீபம், இது போக மூலிகை சாப நிவர்த்தி உள்ளது. இது சரியா சொல்லுங்கள்?)
தங்களிடம் எதிர்பார்ப்பது இது பற்றி ஒரு தெளிவான பதிலை.
ப்ளீஸ்...........................................!
நன்றி
ராஜேந்திரன்
பெங்களூர்.
தோழி,
தாங்கள் மந்திர விளக்கங்களை பாடல்களை முன் வைத்து சொல்லிவருவது அருமை. மேலும் பாடலின் நூல் பெயர் குறிப்பிட்டால் அந்நூலை தேட முயற்சிக்கலாம் என நினைக்கிறேன்.
உதஉங்களேன் முயற்சிக்கிறேன்.
நன்றி
ராஜேந்திரன்
பெங்களூர்.
சில சமயம் மூலிகைகளுக்கு சாபநிவர்த்தி செய்யாமலும் அது பலன் அளிக்கிறதே, அது எப்படி?
மிகவும் அருமை தோழி...........இது நல்லோருக்கு மட்டுமே கிடைக்கவேண்டும் என்பது என் கருத்து.............
ஹீம் என்று ஒரு மந்திரம் சொல்லியிருக்கிறீர்கள். அகத்தியர் பாடலில், வட எழுத்துகள் இருக்கின்றனவா? தயவு செய்து விளக்கவும்
@செயபால்
உங்கள் உசாத்துணைப் புத்தகங்களில், வட எழுத்துகள் காணப்படுகின்றனவா?
என் கேள்வியின் காரணம்: சித்தர் - அகத்தியர் காலத்தில் வட எழுத்துப் பாவனை இருந்திருக்குமா எனபது தான். முடிந்தால் பதில் தரவும்.
sir,
Enathu Thanthiku Udalil vellai vellaiaga (Venkustam pondru) kadantha 1 varudamaga ullathu. Ethaku english medicine and Ayurveda medicine undum nanragavillai, Athaku maraga atigam anathal athai niruthi vittom. Yennave Chittha rajjiyathil etharku marunthu yethenum ullatha? (NOTE:Nangal Nattu marunthu athigam payan paduthum Kudumbathai serthavargal)
Post a Comment