சித்தரகசியம் - தீட்சைகள், சில விளக்கங்கள்

Author: தோழி / Labels:

சித்தரியலில், சித்தரகசியம் என்பது தனிப் பெரும் பிரிவு. இதனை நான் உணர்ந்திட்ட வகையில் எளிமையாய் தனித் தனியே தலைப்புகள் பிரித்து எழுதிக் கொண்டிருக்கிறேன்.அந்த வகையில் தீட்சைகள் தொடர்பான பதிவுகளின் பின்னூட்டங்களிலும், மின்னஞ்சலிலும் பலர் தங்களின் ஐயங்களை எழுப்பியிருந்தனர். அவை தொடர்பாக தனித்தனியே பதில் சொல்வதைக் காட்டிலும் ஒரு தனி பதிவாக தொகுத்திடலாம் என இந்த பதிவினை எழுதுகிறேன்.

தீட்சைகள் என்பது குருவானவர் தனது சீடர்களுக்கு மெய்ஞானம் மற்றும் விஞ்ஞானத்தின் ஒவ்வொரு கட்டங்களை உணர்த்திடும் ஒரு தொடர் நிகழ்வாகவே கருதப் படுகிறது.இந்த படிநிலைகளை அடையும் தகுதிகள் கடுமையான பயிற்சி மற்றும் அர்ப்பணிப்புடன் கூடிய முயற்சியினால் மட்டுமே சாத்தியமாகும். இந்த பயிற்சி நிலைகளை சீடனின் பக்குவத்திற்கேற்ப குருவானவர் அருளிச் சொல்வார்.இதனையே குருவழிகாட்டல் அல்லது குருவருள் என்ற பொது வார்த்தையினால் குறிப்பிடுகிறோம்.

சிவதீட்சையில் முப்பத்தி இரண்டு மந்திரங்கள் இருப்பதை பார்த்தோம். இவை ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான பலன்கள் இருப்பதையும் பார்த்தோம். பலர் நமக்கு தேவையான மந்திரத்தை மட்டும் சொல்லி பலனடைய வாய்ப்பு உண்டா என வினவியிருந்தனர். நானறிந்த வகையில் அதற்கான சாத்தியங்கள் இல்லை என்றே நினைக்கிறேன். இந்த முப்பத்தி இரண்டு மந்திரங்களும் ஒவ்வொரு படிநிலையாக கருதப் படுகிறது.ஒவ்வொரு நிலையாக பூரணத்துவம் பெற்று மந்திரம் சித்தியடைந்த பலனை உணர்ந்த பின்னரே அடுத்த நிலைக்கு முன்னேறிச் செல்லுதல் வேண்டும்.

ஒரு லட்சம் மந்திரங்களையும் ஒரே அமர்வில் செபிக்க வேண்டுமா அல்லது பிரித்து நம் வசதிக்கேற்ப செபிக்கலாமா என்கிற கேள்விக்கு என்னிடம் இருக்கும் ஒரே பதில் இதனை தீர்மானிக்க வேண்டிவர் குருநாதரே ஆவார். சீடனின் உடல் மற்றும் மனப் பக்குவத்தினை பொறுத்து குருவானவர் செபிக்கும் முறையினை தீர்மானிப்பார்.குருவுக்கு மேல் எதுவும் இல்லையென்பதே சித்தரியலின் அடிப்படை கோட்பாடு.குருவே ஆதியும் அந்தமுமானவர்.

அகத்தியர் அருளிய மந்திரங்களை செபிக்கும் போது குறிப்பிட்ட மந்திரங்களுக்கு முன்னர் “ஓம்” என்கிற பிரணவத்தினையும் சேர்த்தே செபிக்க வேண்டுமென தெளிவாக கூறியிருக்கிறார். இது தொடர்பான பாடல் மற்றும் விளக்கங்களை முந்தைய பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன்.சில மந்திரங்கள் ஓம் என்று துவங்கினால் கூட அதற்கு முன்னர் இன்னொரு ஓம் சேர்த்து இரு முறை ஓமென செபித்தே மந்திரம் சொல்ல வேண்டும்.எனவே மந்திரம் எப்படி இருந்தாலும் துவக்கத்தில் பிரணவமந்திரத்துடனே அகத்தியர் அருளிய அனைத்து மந்திரங்களையும் செபிக்க வேண்டும்.

சிவதீட்சை மந்திரங்கள் ஒவ்வொன்றையும் ஒரு லட்சம் தடவை செபிக்க வேண்டுமென அகத்தியர் தனது பாடலில் குறிப்பிட்டிருப்பதால், மிகச் சரியாக ஒரு லட்சம் தடவை செபிக்க வேண்டியது அவசியமாகிறது.இந்த மந்திரங்களை செயல்படுத்தும் படிநிலைகளைப் பற்றி எதிர்வரும் பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறேன்.

உடற்கட்டு மந்திரங்கள், சிவதீட்சை மந்திரங்கள் இவற்றில் எதனை முதலில் பயில வேண்டுமென்கிற கேள்விக்கு அடுத்ததாக எழுதவிருக்கும் பதிவுகளில் விடையிருக்கிறது. தொடர்ந்து வாசித்து வாருங்கள்.

அடுத்த பதிவில் சாபநிவர்த்தி பற்றிய தகவல்களுடன் சந்திக்கிறேன்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

10 comments:

SABARI said...

பதிலுக்கு நன்றி.
அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்.

Shiva said...

வாசகர்கள் ஐயங்களை தீர்க்கும் முகமாக ஒரு தனிப் பதிவே வெளியிட்டிருக்கும் உங்கள் கடமை உணர்வை பாராட்டாமல் இருக்க இயலாது. வாழ்த்துக்கள் தோழி.
கோடானு கோடி மக்கள் உள்ள இவ்வுலகில், தங்கள் பதிவுக்கு வருகிற அத்தனை பேர்களும் உண்மையிலே புண்ணியம் செய்தவர்களாகத்தான் இருக்கவேண்டும். சித்தர் இரகசியத்தினை எங்களுக்கு அறிவித்து விட்டீர்கள் . ஆனால் அனைத்தும் குரு முகமாகவே எனில் இனி குருவை தேடவேண்டும் . குருவானவர் நம்மை தேடிவருவாரா , அல்லது நாம் தான் குருவை தேடிப் போகவேண்டுமா. இதற்க்கு வழிமுறை, மந்திரங்கள் உள்ளனவா. "குருவைக் காணல்" பற்றி ஒரு தனி பதிவே எழுதினால் நலம்..
தகப்பனுக்கே சாமியாக இருந்து உபதேசம் செய்து முருக கடவுள்.- உபதேசம் செய்ய குருவுக்கு வயது முக்கியம் இல்லை - என்று ஏற்கனவே உணர்த்தி உள்ளார், ஆகவே இத்தனை சித்தர் ரகசியங்கள் தன்னகத்தே வைத்துள்ள தாங்களே ஏன் குருவாக இருந்து இந்த தீட்சைகள் சித்திக்க அருளக் கூடாது?.உங்களை தேடி எல்லோரும் வரலாமா..
சக வாசகர்கள் என்னுடைய இந்த கருத்துக்கு இந்த பதிவிலேயே தங்கள் கருத்துக்களையும் தெரிவிக்க வேண்டுகிறேன்.

அகோரி said...

nice

Saravanan.V said...

Amazing for your NonStop work. i understood your hard work. and

We are expecting more from thamilar jothidam website. (also put a small link on this web site top header for thamilar joshtdam.)

And i am keep writing your everyday text in my NoteBook for my future generation. every word is important. i never miss this.

Thanks.

சுவாமிநாதன் said...

அருமையான பதிவு மிக்க நன்றி.
தங்களிடம் ஒரு கேள்வி திருவண்ணாமலை கிரிவலப் பாதை எத்தனை உள்ளது அதுபற்றி விளக்க முடிமா.

tamilvirumbi said...

Thozi,
Everywhere,you have projected guru to guide
everyone.Finding a guru to go into spiritual path is based on one's destiny.Our efforts to get succeded are not in our hands.Nowadays,I am following saranagathi principle.In India,finding
a guru is a million dollar question.Please keep up publishing more about siddha activities.

Guruvadi Saranam said...

தோழி,
தாங்கள் யோக அனுபவத்தில் சொல்கிறீர்கள ? இல்லை இது தாங்கள் புரிதலா ?
ஆனால் சில உண்மையான விஷயம் உங்கள் பதிலில் உள்ளதை என்னால் உணரமுடிகிறது.
சில விஷயங்களை என் குருநாதர் சொல்லியுள்ளார். தங்கள் பதிலும் அதற்க்கு ஒத்து போகிறது.
நன்றி தங்கள் சிரமத்திருக்கும், அன்பான பதிலுக்கும்.

சேவை தொடர வாழ்த்துக்கள்,
ராஜேந்திரன்
பெங்களூர்.

Brahmasri E.Sankar said...

excellent work.

My wish is this instead of being lecturer of siddha concept, you should digest all your published matters in this site and become a siddhar yourself.
many people taught and never follow what ever they said.

unless otherwise you digest siddha concept you can not become the one like them.

my wishes to you.

Unknown said...

meegavum nandraga ullathu thooshi

Unknown said...

Ur work is more and more appreciable...
keep on doing this work..

i have one question can u please tell me the அந்தி - சந்தி வேளை ... so i am unable to ques which time is correct time...

and i have one more doubt...
u r continuously telling need குருவருள் for all the manthiram.. and etc..,

so tell me who is guru for us...

please clarify above mentioned doubts....

Post a comment