சித்தரகசியம் - சிவதீட்சைகள் நிறைவுப் பகுதி

Author: தோழி / Labels:

கடந்த மூன்று தினங்களாய் அகத்தியர் அருளிய சிவதீட்சைகளைக் குறித்த தகவல்களை பார்த்தோம், அந்த வகையில் கடைசி எட்டு தீட்சைகளை பற்றி இந்த பதிவில் காண்போம்.

"கெவுனமது ஒடவென்றால் ஐயைந்து தீட்சை
கேளு நீ ஏ ஏ ஏ ஊ ஊ ஊ வென்று லட்சம்
மவனமது சித்தியப்பா இருப்பதாறில்
மாதாவின் தீட்சையது இஷாய இஷாய ஓம்என்று லட்சம்
சிவனாகும் இருபத்தேழ் தீட்சை தன்னில்
செப்புவேன் ஓம்சிவாய சிவா றீங் கென்று லட்சம்
புவனமதில் இருபத்தி யெட்டாந் தீட்சை
பூரிப்பாய் சிவஓம் சிவாயநமவெனப் புகழுண்டாமே."

- அகத்தியர் -

இருபத்தி ஐந்தாவது தீட்சையைக்கேள். கெவுனம் ஓடவென்றால் இதைக்கேள். "ஏ ஏ ஏ ஊ ஊ ஊ" என்று லட்சம் முறை செபிக்க இந்த தீட்சை சித்தியாகும் என்கிறார்.

இருபத்து ஆறாவது தீட்சையைக்கேள், இது மாதாவின் தீட்சை இது, "இஷயா இஷயா ஓம்" என்று லட்சம் முறை செபிக்க மௌனம் சித்தியாகும் என்கிறார்.

இருபத்தி ஏழாவது தீட்சையைக்கேள். இத்தீட்சையில் நீயே சிவனாவாய். அதைச் சொல்கிறேன். "ஓம் சிவாய சிவா றீங்" என்று லட்சம் முறை செபிக்க வேண்டும் என்கிறார்.

இருபத்தி எட்டாவது தீட்சையைக்கேள். "சிவ ஓம் சிவாய நம" என்று லட்சம் முறை செபிக்க உலகத்தில் பூரிப்பான புகழ் உண்டாகும் என்கிறார் அகத்தியர்.

"புகழுண்டாம் இருபத்தி ஒன்பதாந் தீட்சை
போற்றுவாய் சவ்வும் மவ்வும் என்று லட்சம்
நெகிளாது அய்யாறு தீட்சையப்பா
நிலைத்தவர்க்கு மங் சங் கங் கென்று லட்சம்
அகமகிழ உன்தேகம் ஒருநாளுங் தான்
அழியாது நரைதிரையும் இல்லையில்லை
உகம்வறைக்கும் இருத்துமடா முப்பதொன்று
ஓதுவாய் ஸ்ரீம் றீம் கென்று தானே."

- அகத்தியர் -

இருபத்தி ஒன்பதாவது தீட்சையைக்கேள். இது போற்றுதற்குரிய புகழ் கிடைக்கும். அதற்கு "சவ்வும் மவ்வும்" என்று லட்சம் முறை செபிக்க வேண்டும் என்கிறார்.

முப்பதாவது தீட்சையைக்கேள். "மங் சங் கங்" என்று லட்சம் உரு செபிக்க
உன் தேகம் ஒருநாளும் அழியாது. அகம் மகிழ நரையும் இல்லை திரையும் இல்லை. யுகம் வரைக்கும் உன் தேகத்தை நிலைநிறுத்தும், "ஸ்ரீம் றீம்" என்று ஓதுவாய் லட்சம் உரு இது முப்பத்தியொன்றாம் தீட்சை என்கிறார்.

"என்றுதான் லட்சமுரு செபித்தாற் சித்தி
இறவாமல் இருத்துமடா கோடிகாலம்
நன்றுகாண் முப்பத்தி ரெண்டாந் திட்சை
நங் கிலி சிங் கிலி என்றே லட்சம்
மன்றுள்ள காலம்வரை இரு;ததுந்தேகம்
வாழ்;த்திநீ தோத்திரங்கள் செய்துகொள்வாய்
கொன்றாலும் வாள்கொண்டு வெட்டினாலும்
குறையாமல் வாள்வெட்டுப் பொருந்துந்தானே."

- அகத்தியர் -

முப்பத்து இரண்டாந் தீட்சைகேள். "நங் கிலி சிங் கிலி" என்று லட்சம் உரு செபிக்க கோடி காலம் வரை இறவாமலிருத்தும் மற்றுமுள்ள காலமனைத்தும் வாழ்த்தி தோத்திரங்கள் செய்து கொள்வாய். கொன்றாலும் வாள் கொண்டு வெட்டிப்போட்டாலும் வெட்டுப்பட்ட இடம் சற்றும் குறையாமல் ஒட்டிக்கொள்ளும் என்கிறார். இதுவரை அருளிய தீட்சைகளை திறம்பட முடிப்பது அத்தனை இலகுவானதல்ல என்கிறார்.

இந்த தீட்சைகளில் கூறப் பட்டிருக்கும் மந்திரங்களை வெற்று ஒலிகள் என ஒதுக்கி விட இயலாது. இதன் பின்னால் மறைந்திருக்கும் சூட்சுமங்கள் புலப்படுமாயின் மகத்தான பல விஷயங்கள் புலனாகலாம்.குருவருளால் மட்டுமே இவையனைத்தும் சாத்தியமாகும். எல்லாம் வல்ல குருவருளை வேண்டி வணங்கி தீட்சைகள் பற்றிய தொடரை நிறைவு செய்கிறேன்.

தீட்சைகள் குறித்து பின்னூட்டங்கள் மற்றும் தனிமடலில் எழுப்பப் பட்ட சில கேள்விகளுக்கு நானறிந்த விளக்கங்களுடன் நாளைய பதிவில் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

16 comments:

அதிர்ஷ்டரத்தினங்கள் said...

நன்றி பதிவிற்கு...!

Guruvadi Saranam said...

தோழி,
தீக்கைகள் அனைத்தும் அருமை. அனால் எப்படி தொடங்கி எப்படி முடிப்பது தெரியவில்லை.ஏனென்றால் மந்திர ஒலிகளை சாதாரணமான ஒலியாக கருதமுடியாது. முறையான ஜபம் தெரியவேண்டும் என்பது என் கருத்து. இந்த நேரிடையான மந்திர உபதேசத்திற்கு பின் ஏதோ ஒன்று உள்ளது. இதற்கு குரு அருளை வேண்டிக்கொண்டிருக்கிறேன்.
பின்னூட்ட கேள்விகளின் பதிலில் என் சந்தேகம் விலகுமா.........?
பதிலை நோக்கி..................

நன்றி
ராஜேந்திரன்
பெங்களூர்.

tamilvirumbi said...

Thozi,
Today ,you have completed your unparalleled effort.Hats off to you.In the mean time,I received enormous mails(302 mails) to my personal mail Id in view of getting Siva dikshai.I did not get siva dikshai till now.

As per overwhelmed response from your blog readers to my mail id, I have given out some of the addresses to get Siva Dikshai in tamilnadu.

SWAMIGAL,
SRI KASI MUTT
TIRUPANANADAL
PIN:612504
THANJAVUR DIST.

But,in the address noted above,If you belong to saiva communities ,they will give you dikshai with rudraksham.Other communities are not allowed.

The same practice is followed in Dharmapuram adheenam also.It is in Mayiladudurai,Thanjavur Dist.

The manager,
Thiruvaduthurai Adheenam
Thiruvaduthurai
Thanjavur
Pin:609803.
If you need anything more,Please contact my friend,Mr:Somu ,Ph.No:04364233139.He will arrange for you everything to get Siva dikshai.He is working in thiruvaduthurai mutt. Here,irespective of castes they are giving siva dikshai.Apart from the above mentioned address,I have mentioned below for your kind information.
SRI AGATHIAR SANMARGA SANGAM
115,"ONGARA KUDIL"
THURAIYUR
TIRUCHI DISTRICT
MOB : 98947 55784.In addition to this,I am telling you one more thing is that it will be better to go to sathuragiri.In sathuragiri,
after "periya mahalingam",during full moon day or New Moon day,You can meet one sadhu.
He will help you in all aspects.Whatever you have told in Siva dikshai mantras, everything
is followed here.From Annamalai University,
one leading professor has resigned from his job and abandoned his family to pursue austerity measures in sathuragiri.If you go to sathuragiri,You can meet him.
As told to you 3days before about meaning of Dikshai mantras,I have tried with my tamil professors.They could not find answers to anyone.Anyhow,I will try to get it for you in the days to come.For 302 mails I received,I have responded individually.This contribution is for your blog readers who have not attained my replies.Apart from this, anyone wants to get anything,Please contact my mail Id.My heartfelt gratitude is always for you to bring about very good information.If anyone gets missed to get my reply,please bear with my excuses.

Unknown said...

Thozhi.... vazhikattuthalukku micca nantri.

BABYS said...

(32)NUPPATHI ERANDAVATHU DHECHAIGAL ENNUM KODUKKAVILLAI EN

BABYS said...

sry 31 muppathi ondravathu dheechaigan kadukkavillai sir then how is possible to completing dheechaigal

KARTHIK said...

Thanks for your Very Impartent details

God Bless You

S.Karthi

KARTHIK said...

Very Nice Importent Messages

Thanks

God Bless You

KARTHIK said...

Anbulla Tholi Verali chdigal Yenga Kidaikirathi Athanudaiya Thelivana Photos Yennudaiyamailukku Anuppavum

thanks

karthy Vidhyanandh said...

Dear Friend,
Pls give me, how to start

karthy Vidhyanandh said...

Dear Friend,
Pls give me details for how to start the thiyanam

karthy Vidhyanandh said...

This is very nice job, Thank you.

Karthy Vidhyanandh

karthy Vidhyanandh said...

எப்படி ஆரம்பிப்பது

karthy Vidhyanandh said...

how to start siva dikshai, pls give me the details


karthy vidhyanandh

revathi said...

how to start siva dikshai pls give me the information

revathi said...

how to start siva dikshai pls give me the information

Post a comment