சித்தரகசியம் - சிவதீட்சைகள் தொடர்ச்சி..

Author: தோழி / Labels:

கடந்த இரு தினங்களாய் அகத்தியர் அருளிய சிவதீட்சைகளில் முதல் பதினாறு தீட்சைகளைப் பற்றி பார்த்தோம். இன்றைய பதிவில் அடுத்த எட்டு சிவதீட்சைகளைப் பற்றி பார்ப்போம்.

"வாய்ப்பான பதினேழாஞ் சிவதீட்சை
வழுத்துவேன் றீங் றீங் ஸ்ரீம் ஸ்ரீம் என்றே லட்சம்
காய்ப்பான நரைதிரையும் இல்லையில்லை
கற்பமதை உண்டிடவே சுருக்குமெத்த
ஏய்ப்பார்கள் ஏய்ப்புக்குள் அகப்படாதே
ஈஸ்வரியாள் தீட்ரைச பதினெட்டுங்கேளு
தீய்ப்பான சங் சிங் ரா ரா வென்று
செபித்திடுநீ லட்சமுரு சட்டைபோமே."

- அகத்தியர் -

"றீங் றீங் ஸ்ரீம் ஸ்ரீம்" என்று லட்சம் முறை செபிக்க காய்ப்பான நரையும் இல்லை. திரையும் இல்லை. கற்பத்தை உண்ண சுருக்கான வழி. வழியறியாதவர்கள் உன்னை ஏய்த்து விடுவார்கள். அவர்களின் ஏய்ப்புக்கு நீ ஆளாகிவிடாதே என்கிறார்.மேலும் இது ஒரு நல்வாய்ப்பு என்கிறார் அகத்தியர். இதுவே பதினேழாம் சிவதீட்சையாகும்.

"சங் சிங் ரா ரா" என்று லட்சம் முறை செபிக்க சட்டை போகும். இது ஈஸ்வரியாளின் தீட்சை என்கிறார். இது பதினெட்டாவது தீட்சையாகும்.

"சட்டைதள்ளும் பத்தொன்பதாந் தீட்சை தன்னை
தான்கேளு திரிநேத்திராயா வா வா வென்று
இட்டமுடன் லட்சமுரு செபித்தாற்சித்தி
இருபதாஞ் தீட்சையது ஸ்ரீங்கார தேவாயநமா வென்று
தொட்டதுவே லட்சத்திற்கு சித்தியாகும்
சொல்லுவேன் மூவேழு தீட்சை கேளு
அட்டதிசை வெல்லுமடா இங் அங் றங் கென்றுந்தான்
ஐநான்கு தீட்சைரெண்டும் அறையக் கேளே."

- அகத்தியர் -

"திரிநேத்திராயா வா வா" என்று விருப்பமுடன் லட்சம் முறை செபிக்க பத்தொன்பதாவது தீட்சை சித்தியாகும்.இந்த தீட்சை சட்டையை தள்ளும் என்கிறார்.

"ஸ்ரீங்காரதேவாய நமா" என்று லட்சம் முறை செபிக்க தொட்டதெல்லாம் சித்தியாகும்.இது இருபதாவது சிவதீட்சையாகும்.

"இங் அங் றங்" என்று லட்சம் முறை செபிக்க எட்டுத் திசையையும் வெல்லலாம்.இதுவே இருபத்தியொன்றாவது சிவதீட்சையாகும்.


"அரையக்கேள் அரிஅரி ஓம் என்றுவோத
அப்பனே லட்சத்திற் சித்தியாகும்
முறையாக இருபத்து மூன்றாந் தீட்ரைச
மொழிந்திடுவாய் ரா ரா றீம் றீம் என்று
குறையாமற் செய்துவிடு சித்தியாகும்
குணமாக மூவெட்டுத் தீட்சை கேளு
மறைவாக லீ லீ லீ அரஹர றீ றி என்று
வாழ்த்துவாய் லட்சமுரு கெவுனிப்பாயே."

- அகத்தியர் -

"அரி அரி ஓம்" என்று என்று லட்சம் முறை செபிக்க இருபத்தி இரண்டாவது சிவதீட்சை சித்தியாகும்.

"ரா ரா ரா றீம் றீம்" என்று லட்சம் முறை செபிக்க இருபத்தி மூன்றாவது சிவதீட்சை சித்தியாகும்.

குணமாகவும் மறைவாகவும் "லீ லீ லீ அரஹர றீ றீ றி" என்று லட்சம் முறை செபித்து வாழ்த்துவாய் என்கிறார் அகத்தியர்.

நாளைய பதிவில் கடைசி எட்டு சிவதீட்சைகள் குறித்து பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

6 comments:

அதிர்ஷ்டரத்தினங்கள் said...

நன்றி..!

Guruvadi Saranam said...

Thozi,

Arumai...!

Shiva said...

தோழி, நீங்கள் மிக பெரிய சேவை செய்கிறீர்கள். வாழ்த்துக்கள்

nkt said...

thoziku nandri

om siva siva om said...

please 24th siva thetchi diffirent betwen song and manthira pls tell which is correct.
thanks and regards a.p.raaja from chennai

vivekanand said...

please enaku tirumanthiram padalgalai anupa vendum endru kettu kolgiren thozi.nan intha website a 2nd dayil irundu padithu kondirukiren.nandri thozi.

Post a comment