சித்தரகசியம் - சிவதீட்சைகள் தொடர்ச்சி..

Author: தோழி / Labels:

அகத்தியர் அருளிய சிவதீட்சைகளில் முதல் எட்டு தீட்சைகளை நேற்றைய பதிவில் பார்த்தோம்.அடுத்த எட்டு தீட்சைகளைப் பற்றி இன்றைய பதிவில் காண்போம்.

"உனைச் சேர்வார் சித்தர்களுஞ் சிவனார் தீட்சை
உன்பதுதான் வங் கிலியும் சிங் அம் ஐம் என்றுலட்சம்
வினையொழிந்து என்தேகம் கல்போலாகும்
மெய்யான சட்டையொன்று தள்ளிப்போடும்
தினந்துதிக்கும் சிவதீட்சை பத்தைத்தானுஞ்
செப்பார்கள் செப்புகிறென் வம் வும் அம் இம் என்று
எனைப்போலே சொல்வார்கள் தேகம் பொன்னாம்
இனிதான சிவதீட்சை ஓதினேனே."

- அகத்தியர் -

"வங் கிலியும் சிங் அம் ஐம்" என்று லட்சம் முறை செபிக்க உன் வினைகள் எல்லாம் தீர்ந்து உடல் கல்லைப் போல் உறுதிபெறும்.இவ்வாறு ஒன்பதாவது தீட்சை சித்தியாகும் என்கிறார்.

"வம் வும் அம் இம்" என்று லட்சம் முறை செபித்தால் தேகம் பொன் போல ஆகும். இவை இனிதான பத்தாவது சிவதீட்சை ஆகும் என்கிறார் அகத்தியர்.


"ஓதியதோர் சிவதீட்சை பதினொன்றுந்தான்
உரைக்கின்றேன் மங் றீங் றீங் கென்று லட்சம்
பாதிமதி சடைக்கணிந்த சிவனார்பாதம்
பணிந்து தொண்ட னாய் இருப்பாய் செய்துபாரு
நீதிபெறும் பன்னிரெண்டாஞ சத்திதீட்சை
நிலைத்தவர்க்குத் தற்புருசம் வம் ஆம் நம் என் றுலட்சம்
சந்தித்துச் செபித்திடவே சித்தியாகும்
சட்டையொன்று தள்ளுமடா கெவுனமாமே."

- அகத்தியர் -

"மங் றீங் றீங்" என்று லட்சம் முறை செபிக்க பதினோராவது தீட்சை சித்திக்கும்.இது வரை ஓதிய பத்து தீட்சையினையும் மொத்தமாக உரைத்ததைப் போன்றது இந்தத் தீட்சையாகும் என்கிறார். பாதி மதியை சடையில் அணிந்த சிவபெருமானின் திருவடியைப் பணிந்து என்றென்றும் தொண்டனாய் இருப்பாய் செய்துபார் என்கிறார் அகத்தியர்.

இனி, பன்னிரெண்டாவது சக்தி தீட்சையை நீதி பெறக்கேள். கற்பம் உண்டு நிலைத்தவர்க்கு சிவபெருமானின் ஒருமுகமான தற்புருசமே இது. "வம் ஆம் நம்" என்று லட்சம் உரு செபிக்க சித்தியாகும். கெவுன மார்க்கம் செலல ஏதுவாக சட்டை ஒன்றும் கிடைக்கும் அதை அணிந்தால் கெவுன சித்தி கிடைக்கும் என்கிறார் அகத்தியர்.


"ஆமப்பா சத்திபதி மூன்றாந் தீட்சை
அறிவுடனே ஊம் ஆம் என்றே லட்சம்
நாமப்பா செபித்திடவே வச்சிரதேகம்
நமனும்இவன் கிட்டவந்து அணுகான் பாரு
ஊமப்பா பதினாலாஞ் சத்தி தீட்சை
உண்மையாம் றம் றூம் ஸ்ரீம் அவ்வு மென்று
தாமப்பா லட்சமுரு செபித்தாற்சித்தி
சாயுட்சய பதம்பெறுவார் சார்ந்துகேளே!"

- அகத்தியர் -

அறிவுத் தெளிவுடன் "ஊம் ஆம்" என்று லட்சம் முறை செபிக்க தேகம் வச்சிர தேகமாகும். எமன் கூட அருகில் வர மாட்டான்.இவ்வாறு பதின்மூன்றாவது தீட்சை சித்திக்கும் என்கிறார்.

"றம் றூம் ஸ்ரீம் அவ்வு" என்று லட்சம் முறை செபிக்க பதின்நான்காவது தீட்சை சித்தியாகும். சாயுட்சய பதம் பெறுவார். இதை சார்ந்து கேள் என்கிறார் அகத்தியர்.


"சார்ந்துகேள் பதினைந்தாஞ் சத்திதீட்சை
தயவாக ஸ்ரீம் றீம் றீம் ஓம் என்று லட்சம்
தேர்நது பார் தேகமுந்தான் கல்போலாகும்
சிவசிவா நாதவிந்து கட்டிப்போகும்
ஆய்ந்தவர்க்குப் பதினாறாந் தீட்சை கேளு
அப்பனே சங் இங் றங் கென்றே லட்சம்
மாந்தளிர்போல் தேகமுள்ள மனோன்மணியாள்
வருவாளே மகனென்று பணிந்து கொள்ளே."

- அகத்தியர் -

"ஸ்ரீம் றீம் றீம் ஓம்" என்று லட்சம் முறை செபிக்க தேகம் கல்போலாகும். தேர்ந்துபார். என்ன அற்புதம் சிவ சிவா நாதவிந்து கட்டிப்போகும்.இதுவே பதினைந்தாவது தீட்சை ஆகும். இவைகளை ஆய்ந்தறிந்தவர்களுக்குப் பதினாறாம் தீட்சையைச் சொல்கிறேன் கேள் என்று தொடர்கிறார்.

"சங் இங் றங்" என்று லட்சம் முறை செபிக்க மாந்தளிர் போல் தேகமுள்ள மனோன்மணித் தாய் தன் இருகரம் நீட்டியபடியே மகனே என வருவாள். அவள் வரும் போதே அவளைப் பணிந்துகொள் என்கிறார் அகத்தியர்.இதுவே பதினாறாவது தீட்சையாகும்.

நாளைய பதிவில் அடுத்த எட்டு சிவதீட்சை முறைகளைப் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

12 comments:

Praveenkumar said...

விரிவான தகவல்கள்..!! தோழி..!
தொடரட்டும் தங்கள் சேவை.

Guruvadi Saranam said...

THOZI,

ARUMAI.

MELUM NAAN KETTATHU "OM" MUN VAITTHU JABIKKA VENDUMA SOLLUNGAL PLEASE.

THANKS
RAJENDRAN
BANGALORE.

தோழி said...

@Guruvadi Saranam

அகத்தியர் கூறியுள்ளதன் படி அவர் அருளிய மந்திரங்கள் அனைத்துக்கு முன்னரும் “ஓம்” அவசியம் சேர்த்தே செபித்திட வேண்டும்.

Guruvadi Saranam said...

தோழி,
சித்தர்களை நேரில் தரிசிக்கும் மந்திரத்தில் "சிவாய நம ஓம் க்லீம்" என்பதை "ஓம் கிலீம் சிவாய நம" என்று மாற்றி உள்ளீர்கள்.
தீட்சை மந்திரத்தில் " ஸ்ரீம் றீம் றீம் ஓம்" உள்ளது இதில் "ஓம்" அட்சரம் எப்படி சேர்ப்பது.
கொஞ்சம் சொல்லுங்கள் ப்ளீஸ்.

நன்றி
ராஜேந்திரன்
பெங்களூர்.

Unknown said...

thank you for the good information i told uum aam one lakh time

jagadeesh said...

@murugesan
Really..how long time it took?

jagadeesh said...

மிக அருமை. தீட்சைகளில் இவ்வளவு விஷயங்கள்,மகத்துவங்கள் உண்டு என எதிர்பார்க்கவில்லை. இதில் காயகற்பமும் சேர்ந்து வந்துள்ளது. எல்லாமே அரிய தகவல்கள். மிக்க நன்றி.

SABARI said...

இறைவனை தேடும் பயணத்தில் உங்கள் பதிவுகள் எனக்கு கலங்கரைவிளக்கம்.
கேள்வி1-
உடற்கட்டு மந்திரங்கள், சிவதீட்சை எது முதன்மையானது?
எதை முதலில் முயல வேண்டும்?
கே 2-
பலன்களுக்கு ஏற்றாற்போல் தேர்ந்தெடுக்கலாமா?
அல்லது வரிசைப்படி தொடர வேண்டுமா?
கே 3-
நானாக சுயமுனைப்புடன் முயலலாமா, முயன்றால் தவறா?
குரு அறிவுரையின் நோக்கம் என்ன?
கே 4-
மந்திரங்களை தொடர்ந்து ஜெபிக்க வேண்டுமா அல்லது பகுதிகளாக பிரித்து சில நாட்களில் முடிக்கலாமா?
கே 5-
அடுத்த மந்திர ஜெபத்தினை தொடங்க முந்தைய மந்திரத்தின் விளைவுகளை உணர்ந்திருக்க வேண்டுமா?
கே 6-சரியாக இலட்சம் முறை ஜெபிக்கவேண்டுமா?

இந்த கேள்விகளுக்கான பதில்களை தனி பதிவில் விளக்கினால் மட்டுமே உங்கள் பதிவுகள் உயிரோட்டம் பெரும்.
தயவு செய்யுங்கள், உயிர்கொடுங்கள்.

Anonymous said...

@murugesan

தேகம் வஜ்ஜிரம் ஆகி விட்டதா ?

Guruvadi Saranam said...

நன்றி நண்பர் சபரி அவர்களே !
நான் கேட்க நினைத்தவைகளை தாங்கள் கேட்டுள்ளீர்.

நன்றி
ராஜேந்திரன்

pavai siva said...

Dear sister ,very good pathivu.I think You are my manaseega guru.because every word in this pathivu is very interesting as well as siddar spirit is always there.ordinary people does not write this matter.Only supreme power do this.Keep it up.Mahan agatheesar always with you and ur writings.guruvey saranam.

Unknown said...

நமஸ்காரம்
மந்திரம் மனதுகுல் சொல்ல வேண்டுமா அல்லது சத்தமாக சொல்ல வேண்டுமா

Post a comment