சித்தரகசியம் - தீட்சைகள் ஓர் அறிமுகம்

Author: தோழி / Labels:

தீட்சை,தீக்கை என்கிற வார்த்தைகள் குரு சிஷ்ய பாரம்பர்யத்தில் மிக முக்கியமான ஒன்றாக கருதப் படுகிறது. தீட்சை என்பதற்கு சுத்திகரித்தல், புனிதப் படுத்துதல், தரம் உயர்த்துதல் என்கிற மாதிரி பொருள் கொள்ளலாம்.ஆறு வயதைக் கடந்த எவரும் தீட்சை பெற் தகுதியானவர்கள்.வேதங்களிளும் இந்த தீட்சைகள் பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கின்றன.இந்த பதிவுகளில் சித்த மரபியலில் வழ்க்கில் இருந்த தீட்சைகளைப் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் உடலைப் பேணி பாதுகாப்பதன் மூலமாய் நீண்டகாலம் வாழ்ந்து சிறப்பான பல செயல்களை செய்திட முடியும் என கருதினர். தேடல்களும் தெளிதல்களுமான வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்தினை கடந்திட குருவின் வழிகாட்டுதல் தேவைப் படுகிறது. குருவின் வழிகாட்டுதல் அல்லது உபதேசமே தீட்சைகளாய் குறிப்பிடப் படுகிறாது.

அகத்தியர் தனது அகத்தியர் பன்னிரு காண்டம் மற்றும் அகத்தியர் மாந்திரீக காவியம் ஆகிய நூல்களில் தீட்சைகளைப் பற்றி விரிவாக கூறியிருக்கிறார்.இந்த தீட்சைகளை பின்வருமாறு அறிமுகம் செய்கிறார்.

"தயவான தீட்சைவிதிக் காதிகாப்பு
தான்பாட வாராய்ந்து தெளிந்துபார்த்து
செயலான முப்பதி ரெண்டுதீட்சை
சித்தி செய்த பேர்க்கெல்லாம் ஞானம்சித்தி
சுகமான பாவவினை அற்றுப்போகும்
சோதிசிவ பாதமதைக் காணலாகும்
நயமாக எந்தனுக்கு உபதேசித்த
நற்குமரன் திருவருளே தீட்ட்சைக்காப்பு"

- அகத்தியர் -

தான் நன்கு அறிந்து, ஆய்ந்து, தெளிந்த முப்பத்தி இரண்டு தீட்சைகளைப் பற்றி சொல்லப் போவதாகவும்.இவற்றை உணர்ந்து சித்தியடைந்தவர்களுக்கு ஞானம் பெருகும், பாவம் விலகும் என்கிறார்.மேலும் ஆதி சித்தனான சிவனின் பாத தரிசனம் கிடைக்குமாம்.இந்த தீட்சைகளை நற்குமரனான முருக பெருமான் தனக்கு அருளியதாகவும் கூறுகிறார்.

இவ்வாறு அகத்தியர் அருளிய அரிய தீட்சை முறைகளின் வகைகள், தன்மைகளை நாளைய பதிவில் பார்ப்போம்.சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

9 comments:

tamilvirumbi said...

Thozi,
This topic will capture everyone. It will guide us to lead a perfect life.If we practise austerity measures after siva dikshai,what is going to happen in future,it will give a clear picture in our mind.Really,I am an unfortunate person to get siva dikshai.I will explain it to you later on.please keep up

Guruvadi Saranam said...

தோழி,
ஆவலாக உள்ளேன்.

நன்றி
ராஜேந்திரன்
பெங்களூர்.

சுவாமிநாதன் said...

அருமையான பதிவு, கடிகாரத்தின் முட்களை சுற்றிக் கொண்டு இருக்கிறேன்..............

சுந்தரா said...

நல்ல பகிர்வு தோழி...இன்னும் அறிந்துகொள்ள ஆவலாய்...

SABARI said...

@tamilvirumbi
sir enakum sollunka.....plz
1sabarivasan@gmail.com

SABARI said...

eppati manthiram sithiyanathai therinthukolvathu?
plz , sollunka thizhi.........

RAVINDRAN said...

தோழியே,


நன்றி

karuppu said...

குருவருள் குருவருள் என்று அடிக்கடி சொல்கிரிர்களே, உங்கள் குரு யார்? உண்மையான போலி அல்லாத ஒரு குருவை எப்படி கண்டு பிடிப்பது?

meignani said...

meignanam than namaku guru athaithan kandukolla venum

Post a comment