சித்த ரகசியம் - உடல்கட்டு மந்திரங்கள் செபிக்கும் முறை

Author: தோழி / Labels:

சித்தர்களின் மந்திரங்கள் மிகவும் நுட்பமானவை. அவர்தம் பாடல்களில் மந்திரங்கள் மட்டுமே கூறப் பட்டிருக்கின்றன.இந்த மந்திரங்களை செபிப்பது மற்றும் செயலாக்கத்திற்கு கொண்டு வருவது போன்றவைகள் குருவினால் மட்டுமே கூறிட இயலும். தகுதியான குருவின் நெறிப் படுத்துதலை வலியுறுத்துவதன் பின்னனி இதுதான்.

இந்த உடல்கட்டு மந்திரங்களை செபிக்கும் முறைகளைப் பற்றி அகத்தியர் கூறியுள்ளதை இன்று பார்ப்போம்.மந்திரத்தை எவ்வாறு பெறுவது,அதன் மறைந்திருக்கும் சூட்சுமம் மற்றும் மந்திரத்தை செபிப்பது பற்றி பார்ப்போம்.

"தருவார்கள் ஓமென்ற அட்சரத்துள்
சகலஜீவ தயாபரனும் இதற்குள்ளாச்சு
வருவில்லா சிவயனார் மந்திரந்தானும்
வடிவான அட்சரத்துள் இருப்பதாச்சு
குருபரனான் வினாயகன்றன் சுழிதானப்பா
குவலயங் களுக்குமுன்னே பிறதமூலம்
திருவான வினாயகரின் சுழியை முந்திச்
செபிப்பாய்நீ யென்மந்திர ங்கள்முற்றே"

- அகத்தியர் -

குருபரனாம் வினாயகரின் சுழியான "ஓம்" என்ற அட்சரமே இந்த உலகங்களுக்கு எல்லாம் முன்னே தோன்றிய மூலமாகும். இந்த ஓம் என்ற அட்சரத்துக்குள் சகல ஜீவ தயாபரனும், சிவனின் மந்திரம் முதற்கொண்டு எல்லாமே அட்ங்கும் என்று சொல்லும் அகத்தியர், மேலும் திருவான வினாயகரின் சுழியை முதலில் செபித்தே தனது மந்திரங்கள் அனைத்தையும் செபிக்க வேண்டும் என்று சொல்கிறார்.

"அடக்குவாய் மந்திரத்தைக் காதில்கேளு
அன்புடனே ஓம் என்ற எழுத்தைச் சேரு
வடக்குமுகம் இருந்துலட்சம் உருத்தான்போடு"

- அகத்தியர் -

மனதை அடக்கி அன்புடனே மந்திரத்தை குரு உபதேசமாக காதில் கேட்டு மனனஞ் செய்து ஓம் என்ற எழுத்தைச் முன் சேர்த்து வடக்கு நோக்கி இருந்து லட்சம் உரு செபிக்க வேண்டும் என்கிறார்.

இத்துடன் உடல்கட்டு மந்திரங்கள் பற்றிய தகவல் பதிவு நிறைவடைந்தது.ஆர்வமும், முயற்சியும் உள்ள எவரும் குருவருளை வேண்டி வணங்கி இம் மந்திரங்களை பயன் படுத்திடலாம். இது தொடர்பாக விவரமறிந்தவர்கள் பின்னூட்டத்தில் தாமறிந்த தகவல்களை பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன்.Post a Comment

12 comments:

Guruvadi Saranam said...

தோழி,
அப்படியானால் தாங்கள் கூறுவது உடற்கட்டு மந்திரங்கள் அனைத்திற்கும் முன்னே " ஓம்" என்ற அட்சரத்தை சேர்த்துதான் ஜ்பிகவேண்டுமோ ?
விளக்கினால் நன்றாக இருக்கும்.

நன்றி
ராஜேந்திரன்
பெங்களூர்.

Guruvadi Saranam said...

தோழி,
உடற்கட்டு மந்திரங்களை ஒன்று ஒன்றாக ஜெபித்து அதில் சித்தி பெற்ற பின்பு அடுத்த மந்திரத்தை ஜெபிக்க வேண்டும் என்று உள்ளது.
மந்திரம் சித்தியானத்தை எப்படி தெரிந்துகொள்வது ?
இதற்க்கு சட்று உதவினால் நன்றா இருக்கும்.

நன்றி
ராஜேந்திரன்
பெங்களூர்

அருட்சிவஞான சித்தர் said...

அருட்தோழி! வணக்கம்,
உடற்கட்டு மந்திரங்கள் பற்றிய எனது சிறிய கருத்துரை:
மந்திர அப்பியாசம் செய்கின்றவர்கள் தங்களுடைய உயிருக்கும் உடலுக்கும் பின்னம் ஏற்படாமல் இருக்க வேண்டி உடற்கட்டு மந்திரங்கள் ஜெபிக்க வேண்டியது அவசியம்.
தங்கள் பதிவில் கூறியது போக பல மந்திரங்கள் உள்ளது.
விநாயகர் உடற்கட்டு மந்திரம், சுப்பிரமணியர் உடற்கட்டு மந்திரம், அஷ்டதிக்கு கட்டு மந்திரம் இவை ஆகும். இம்மந்திரங்களை ஓதிய அனுபவம் உண்டு.
குருவடி சரணம் ஐயா கூறியதிற்கு, சித்தி பெற்றதற்கான நிலையை அருளால்தான் உணர்ந்து கொள்ளமுடியும். (உதாரணம்: எடுத்த காரியம் விக்கினமின்றி நடைபெறும். சொன்ன சொல் பலிக்கும்.இன்னும் பல உள. )
ஓம் என்ற பிரணவம் அனைத்திற்கும் ஆதாரம். ஆக இந்த ஓம் என்ற பிரணவத்தை சேர்ப்பது அவசியம்.

சைவ சமயத்தில் உள்ளவர்களில் சிலர் தினசரி பூசையை துவங்கும் முன்னரும் உடற்கட்டு மந்திரம் சொல்வார்கள். இத‍னை ஒரு சாரர் அங்க நியாசம், கரநியாசம் என்றும் சொல்வார்கள்.
மந்திரங்கள் பற்றி இன்னும் நிறைய கூறிக்கொண்டே போகலாம்.
தற்போது விரிவாக விளக்க நேரம் இல்லை. பிற்பாடு இறைவன் அருளால் இதுபற்றி விவாதிப்போம்.
தங்களது பதிவில் இம்மந்திரங்களை தகவலின் பொருட்டு கூறியுள்ளது நல்லதே. ஆனால் நவகிரகங்களுக்கும் சேர்த்து ஒன்பது லட்சம் உரு கொடுப்பது நீண்ட நேரம் ஆகும்.
இதை தவிர்த்து தக்க ஒரு சற்குருவினை அணுகி,
இறைவனின் அருளால் உடலை பாதுகாத்து கொள்வது எப்படி?,
நவக்கிரகங்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபடுவது எப்படி?, என்பதை கேட்டறிந்து அதன்படி நடப்பதே சாலச்சிறந்தது.

நிற்க,
http://siththarkal.blogspot.com/2010/12/blog-post_02.html இந்த பதிவில் பின்வருமாறு கூறியுள்ளீர்கள்.
//...நமது உடலானது பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் ஆனது. பஞ்சபூதங்கள் பிரபஞ்ச சக்திகளான கோள்கள், அட்டதிக்கு பாலகர்களுக்கு கட்டுப்பட்டது....//

இதில் எனது மாற்று கருத்து இது.
நமது உடலானது பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் ஆனது என்பது உண்மைதான்.

அட்டதிக்கு பாலகர்கள் பூமிக்கு மட்டும். இவர்கள் பூமியின் கணக்கீடுப்படி எட்டுதிசைக்கு அதிபதிகள். (இதிலும் பதினாறு கோணம் என்றொரு கணக்கு உண்டு)
பிரபஞ்ச சக்திகளான கோள்கள் பஞ்சபூதக் கலவையால் ஆனது ஆகும்.
அதிலும் பஞ்ச பூதங்களில் ஒன்றான ஆகாயத்தில்தான் கோள்களும் நிலை நிற்கின்றன. வலம் வருகின்றன.
இந்த பஞ்சபூதங்கள் கோள்களுக்கோ, அட்ட திக்கு பாலகர்களுக்கோ கட்டுபட்டதில்லை.
பஞ்சபூதங்களை அடக்கும் உபாயம் அறிந்தாலே போதும் மற்றவை அடங்கிவிடும்.

//...பஞ்சபூதங்களின் கலவையான மனித உடல் வாழ்நாள் முழுவதும் இவற்றின் ஆதிக்கத்தில்தான் இருந்தாக வேண்டும்.....//
சரியாகச் சொல்லியுள்ளீர்கள். இந்த ஆதிக்கத்தை அகற்றத்தான் சித்தர்கள் நமக்கு பல்வேறு வழிமுறைகளை சொல்லியுள்ளார்கள். அவர்களின் ஆசி நமக்கு கிடைக்கட்டும். அவர்கள் பெற்ற அருளின்பம் நாமும் பெறுவோம்.

தொடருங்கள் தங்கள் அருட்பணியை.....

tamilvirumbi said...

Thozi,
Thanks a lot for your hard earned effort.I am having one doubt upon reciting the above said mantras.Mantras told by siththars to be recited based upon malefic or benefic planets located in one's horoscope,is it true or not?.For instance,while wearing stones in our fingers,if any planet got attained neecha in horoscope, to nullify bad effects,we will wear stones studded rings.As per the greatest astrologer B.V.Raman,if anyone utters mantras or rings to control planets' actions and reactions,it will mitigate the sufferings from a great debacle to a petty one for only malefic planets.If anyone is having any experience upon it, please share your views in this blog.Had any reference book to go through,it should not be forgotten to mention.

Yogesh said...

No words to praise you, all the "Topics" in this site are really excellent and its helping for all, your like an Torch Light for us, the each and every word came from my whole Heart, Thank You so much...

Yogesh

satheesh.vmkumar said...

nice

Unknown said...

UDAL KATTU MANTHIRANGALAI THODARNTHU JABIKKA VENDUMAAA? ALLATHU ORU SILA NERANGALIL MATTUM JABIKKA VENDUMAAA?????

VILAKINAAL NANRAAGA IRUKKUM

Anonymous said...

நாம் நம்பலை அரிந்தாள் எள்ளாம் தெரியும்

Unknown said...

தோழி,
108 முறை செபிக்க வேண்டும் என்றால் ஒரு மாலையை வைத்து கணக்கு வைத்து கொள்ளலாம். ஒரு லட்சம் முறை செபிக்கும் பொழுது எப்படி கணக்கு வைப்பது. ஏதேனும் எளிய வழி இருந்தால் கூறுங்களேன் .

raja said...

ennoda per Y.S.RAJA yanaku sivam enral romba pidikkum anal var mandthirangal eppadi solla vandum enru soninganna nalla irukkum

Nagaraj.S said...

idhula eduhu udarkattu mandhiram..

Nagaraj.S said...

Dear sir,
Idhula Edhu udalkattu mandhiram...

Post a comment