சித்த ரகசியம் - உடல்கட்டு மந்திரங்கள் தொடர்ச்சி..

Author: தோழி / Labels:

சுக்கிரனுக்கான உடல் கட்டு மந்திரம்..

"இன்றுநீ சுக்கிரன்தன் கட்டுக் கேளு
இறீம் றீம் நசி மசி யென்று போடே"

- அகத்தியர் -

சுக்கிர பகவானின் உடல் கட்டு மந்திரத்தை கேளு "இறீம் றீம் நசி மசி" என்று லட்சம் உரு செபித்தால் சுக்கிர பகவானின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.


சனிக்கான உடல் கட்டு மந்திரம்..

"போடுவாய் சனிபகவான் கட்டுக்கேளு
புகழான ஸ்ரீம் றூம் றூம் என்று சொல்லி
தேடுவாய் லட்சமுருப் போடு போடே"

- அகத்தியர் -

சனி பகவானின் உடல் கட்டு மந்திரத்தை கேளு "ஸ்ரீம் றூம் றூம்" என்று லட்சம் உரு செபித்தால் சனி பகவானின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.

ராகுவுக்கான உடல் கட்டு மந்திரம்..

"திறமான இராகுவுட கட்டுதீர
நாடுவாய் அரீம் ஸ்ரீம் நசி மசி என்றுலட்சம்
நலமாகச் செபித்துவரக் கட்டுத் தீரும்"

- அகத்தியர் -

திறமான இராகு பகவானின் உடல் கட்டு மந்திரத்தை கேளு "அரீம் ஸ்ரீம் நசி மசி" என்று லட்சம் உரு நலமாகச் செபித்தால் இராகு பகவானின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.

கேதுவுக்கான உடல் கட்டு மந்திரம்..

"சாடுவாய் கேதுவுட கட்டு தீர
சரியாக அங் சிங் நசிமசி யென்றுலட்சம் போடே"

- அகத்தியர் -

கேது பகவானின் உடல் கட்டு மந்திரத்தை கேளு "அங் சிங் நசி மசி" என்று லட்சம் உரு செபித்தால் கேது பகவானின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகதியர்.

நவ கோள்களின் மந்திரங்களுடன், சனியின் மகன் என கருதப் படும் குளிகனுக்கும் உடல் கட்டு மந்திரங்களை அகத்தியர் அருளியிருக்கிறார்.

குளிகன் உடல் கட்டு மந்திரம்..

"நீடுவாய் குளிகனுட கட்டுத்தீர்க்க
நிட்சமாய் ஓம் ஐயும் ஐயுமென லட்சம்
தீர்ந்துவிடும் நவக்கிரக உடல்கட்டப்பா"

- அகத்தியர் -

குளிகனின் உடல் கட்டு மந்திரத்தை கேளு "ஓம் ஐயும் ஐயும்" என்று லட்சம் உரு செபித்தால் குளிகனின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.

அட்ட திக்கு பாலகர்களுக்கான மந்திரம்.

"பாரப்பா அட்டதிக்குப் பாலகர்க்குப்
பரிவான கட்டுப் பீஜத்தைக் கேளு
சீரப்பா வீட்சணிவா வா வீரா பார் பார் என்றும்
சிறப்பாகப் புறோம் புறோம் றீங் கங் சிங் சிங் என்றும்
கூறப்பா மங் டங் றீங் வங் வங் பங் என்றும்
குணமுடனே றீ றீ றீ றீ கிறாங் என்றும்
காரப்பா மங் ராங் ராங் வறீம் பம் வம் என்றும்
கணக்குலட்ச முருச் செபித்துப் போடே"

- அகத்தியர் -

"வீட்சணிவா வா வீரா பார் பார் புறோம் புறோம் றீங் கங் சிங் சிங் மங் டங் றீங் வங் வங் பங் றீ றீ றீ றீ கிறாங் மங் ராங் ராங் வறீம் பம் வம்" என்று எண்ணிக்கை குறையாது லட்சம் உரு செபித்தால் சித்தியாகும். இதுவே அட்டதிக்கு பாலகர் கட்டு மந்திரமாகும் என்கிறார்.

இந்த உடல் கட்டு மந்திரங்கள் சித்தியானால் உனது உடலை கிரகசாரங்களோ, அட்டதிக்குப் பாலகர்களோ, பஞ்ச பூதங்களோ கட்டுப்படுத்த இயலாது என்று சொல்லும் அகத்தியர், மந்திரம் சித்தியான பின்னர் உனது உடல் முழுமையாக உனது கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்கிறார்.

இந்த மந்திரங்களை செபிக்கும் முறைகளைப் பற்றி நாளைய பதிவில் பார்ப்போம்.Post a Comment

6 comments:

Guruvadi Saranam said...

தோழி அற்புதம்!

தொடரட்டும் உங்கள் சேவை.
வாழ்த்துக்கள்!

நீங்கள் முன்பு சொன்னது போல் அனைத்தும் குருமுகமாய் கற்க ஆவல். நான் என் குருவை அருவநிலைஇல் தேடிகொண்டிருகிறேன்.

நன்றி
ராஜேந்திரன்
பெங்களூர்.

மகேஷ் ராஜ் said...

இதை எந்த நேரத்தில் சொல்ல வேண்டும்
என கூறுக

tamilvirumbi said...

Thozi,
I came to know your topic belatedly.As I have engrossed in my official work,I can not run through your blog as usual.I have made a link for your blog in my blog.Thanks a lot.

சுந்தரா said...

நல்ல பகிர்வு தோழி!

Guruvadi Saranam said...

நண்பர் மகேஷ் அவர்களே,
பொதுவாக எல்லா மந்திரங்களையும் அந்தி, சாந்தி வேளைகளில் தான் ஜபம் செய்ய வேண்டும்.

நன்றி
ராஜேந்திரன்
பெங்களூர்.

GANESHKUMAR .PV said...

i have more pimples and more dot marks so pls say what should i do?
how to solve this problem

Post a comment