சித்த ரகசியம் - “உடல் கட்டு மந்திரங்கள்”

Author: தோழி / Labels:

நமது உடலானது பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் ஆனது. பஞ்சபூதங்கள் பிரபஞ்ச சக்திகளான கோள்கள், அட்டதிக்கு பாலகர்களுக்கு கட்டுப்பட்டது.பஞ்சபூதங்களின் கலவையான மனித உடல் வாழ்நாள் முழுவதும் இவற்றின் ஆதிக்கத்தில்தான் இருந்தாக வேண்டும். இந்த கட்டுப் பாடுகளை உடைத்தால் மட்டுமே எந்தவொரு மனிதரும் சிறப்பாகவும், சுயமாகவும் செயல்பட முடியும் என சித்தர்கள் நம்பினர்.இதற்கான தேடல்களும் தெளிவுகளுமே இந்த பதிவு...

பிரபஞ்ச சக்திகளின் ஆதிக்கத்தில் இருந்து உடலை வெளியேற்றுவது, வெளியேறிய பின்னர் அந்த உடலை காப்பது என இரண்டு அம்சங்களை உள்ளடக்கியதாக “உடல் கட்டு மந்திரங்கள்” கருதப் படுகிறது.இந்த உடல் கட்டு மந்திரங்கள் பற்றி அகத்தியர் தனது அகதியர் பன்னிரு காண்டம் மற்றும் அகதியர் மாந்திரீக காவியம் என்கிற நூலில் விரிவாக குறிப்பிட்டிருக்கிறார். ஒன்பது கோள்களுக்கும் என தனித் தனியே ஒன்பது மந்திரங்களும், அட்ட திக்கு பாலகர்களுக்கென மந்திரமும் கூறப் பட்டிருக்கிறது.

இனி நவ கோள்களின் உடல் கட்டு மந்திரங்களைப் பற்றி பார்ப்போம்.ஒவ்வொரு மந்திரமாக செபித்து அதில் சித்தியடைந்த பின்னரே அடுத்த மந்திரத்தை முயற்சிக்க வேண்டும் என அகத்தியர் கூறுகிறார். அதாவது...

"பக்குவமாய் உடற்கட்டு நிவர்த்தி செய்ய
மாந்திரீக பீஜத்தை இதிலே சொன்னேன்
வகையோடே மந்திரத்தை தான் மைந்தா
தனி தனியாய் உருத்தான் போடு போடே"

- அகத்தியர் -


சூரியனுக்கான உடல் கட்டு மந்திரம்..

"உருவாக சித்தி செய்வாய் அருக்கன்கட்டு
உத்தமனே அம் ஹீம் என்று லட்சம்
திருவாக செபித்துவர கட்டுத்தீரும்"

- அகத்தியர் -

முதலில் சூரியன் உடல் கட்டு தீர "அம் ஹீம்" என்று லட்சம் உரு செபித்தால் சூரியன் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.

சந்திரனுக்கான உடல் கட்டு மந்திரம்..

"ஜெயம் பெற்ர சந்திரனார் கட்டுத் தீர
அருவாக ஹீம் உறீம் என்று லட்சம்
அன்பாக செபித்துவர கட்டுத்தீரும்"

- அகத்தியர் -

ஜெயம் பெற்ற சந்திரன் கட்டு தீர "ஹீம் உறீம்" என்று லட்சம் உரு செபித்தால் சந்திரன் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.

செவ்வாய்க்கான உடல் கட்டு மந்திரம்..

"நிருவாகமான செவ்வாய் கட்டுத் தீர
ஸ்ரீம் றீங் நசி மசி யென்று லட்சம் போடே"

- அகத்தியர் -

நிருவாகமான செவ்வாயின் கட்டு தீர "ஸ்ரீம் றீங் நசி மசி" என்று லட்சம் உரு செபித்தால் செவ்வாயின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.

புதனுக்கான உடல் கட்டு மந்திரம்..

"என்றுநீ புதன்கட்டுத் தீரக்கேளு
இன்பமுடன் வங் யங் நசிமசி யென்று லட்சம்
நன்றுஉருச் செபித்திடவே கட்டுத் தீரும்"

- அகத்தியர் -

புதன் கட்டுத் தீரும் மந்திரத்தை கேளு சந்தோசமாக "வங் யங் நசி மசி" ன்று லட்சம் உரு செபித்தால் புதனின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.

குருவுக்கான உடல் கட்டு மந்திரம்..

"நாட்டமுள்ள குருகட்டு தீரக் கேளு
அன்றுநீ ஸ்ரீம் றீம் நசிமசி யென்றுலட்சம்
அன்பாக செபித்தாக்கால் கட்டுத்தீரும்"

- அகத்தியர் -

நாட்டமுள்ள குருபகவான் கட்டுத் தீரும் மந்திரத்தை கேளு "ஸ்ரீம் றீம் நசி மசி" என்று அன்பாக லட்சம் உரு செபித்தால் குருபகவானின் உடல் கட்டு தீரும் என்கிறார் அகத்தியர்.

அடுத்த நான்கு கோள்களின் உடல் கட்டு மந்திரம் , சனி பகவானின் மகன் என கருதப் படும் குளிகனுக்கான உடல் கட்டு மந்திரம் மற்றும் அட்ட திக்கு பாலகர்களுக்கான மந்திரத்துடன் நாளைய பதிவில் சந்திக்கிறேன்.

பின் குறிப்பு :
இந்த பதிவுகளில் உள்ள விவரங்கள் அனைத்தும் ஒரு தகவல் பகிர்வே, மூட நம்பிக்கைகளை பரப்புவதோ அல்லது மத நம்பிக்கைகளை விதைப்பதோ எனது நோக்கமில்லை.இவற்றை மூடநம்பிக்கை, பழங்கதை என புறந்தள்ளாது ஆராயவும், விவாதிக்கவும் முற்பட்டால் ஏதேனும் தெளிவுகள் கிடைக்கலாம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

19 comments:

Unknown said...

ok

அகோரி said...

அருமை தோழி

jagadeesh said...

மூடர்களின் கண்ணிற்கு இது வெறும் மூட நம்பிக்கையாக தான் தெரியும்.உடற்கட்டு மந்திரம் எளிமையாக உள்ளது. அருமை. பஞ்ச பூதங்களின் கட்டுப்பாட்டில் இருந்து, வெளியேறிவிட்டால், கோள்களால் நம்மை ஆள முடியாதல்லவா?

பாவா ஷரீப் said...

கோள்களின் ஆதிக்கத்தில் நன்மை தீமை இரண்டும் உண்டு என்றால்
இந்த மந்திரங்களின் உதவியால் கோள்களின் ஆதிக்கத்திலிருந்து தப்பிவிட்டால்

தீமை நடக்காது
நன்மைகள் எப்பிடி நடக்கும் தெளிவாக விளக்கம் தாருங்கள் தோழி

நன்றி
ஷரீப்

Guruvadi Saranam said...

அருமை தோழி!
வேறென்ன சொல்ல?

நன்றி
ராஜேந்திரன்
பெங்களூர்.

tamilvirumbi said...

Thozi,
To utter the mantras for nine planets,we have to follow any order.Please explain it.
According to our horoscope,can we recite particular mantra for malefic or benefic planets at first?

santhanam said...

@கரு பஞ்ச பூதங்களிலிருந்து தப்பிப்பது எப்படி ? விளக்கம் தரவும் . வாச்சி

Ramarajan said...

உங்களுக்கு என்ன நன்மை நடக்கனும்னு நினைக்கிறீங்க. பணம் கிடைக்குமானா.?
உயிரானது இந்த பெளதிக உடலை விட்டு பிரிஞ்சாதான்,அதாவது யோகத்தின் மூலமாக, பிரயாணம் செய்வது. அப்போ இந்த உடல் எவ்வித பாதிப்பும் ஆகாமல் இருக்கவே இந்த உடல்கட்டு.
பின்னர் பிரயாணம் முடித்து பெளதிக உடலை
அடைய வேண்டும் அல்லவா.
அதுக்கு முன்னாடி எப்படி நம்ம ஆன்மா வேர இடத்துக்கு பிராயாணம் செய்வதை தெரிந்து கொள்ள வேண்டும்.
அதுக்கு முறையான் குண்டலினியில் தேர்ச்சி பெற்றால் முடியும்.

kandhan said...

ஒரு மந்திரத்தை உச்சரிக்குமுன் அது நமக்கு பொறுந்துமா என்பதை கணிப்பதற்கு மந்திர சாஸ்திரத்தில் விதிமுறைகள் குறிப்பிடப்பட்டு இருக்குகிற‌து. அது போல் சித்தர் படைப்புகளில் குறிப்பிடப்பட்டு உள்ளதா?

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Balajii said...

இந்த மந்திரங்களின் உதவியால் கோள்களின் ஆதிக்கத்திலிருந்து தப்பிவிட்டால்
தீமை நடக்காது.சரி
நன்மைகள் எப்பிடி நடக்கும் தெளிவாக விளக்கம் தாருங்கள்
தோழி....

நன்றி

Arun said...

udal kattu manthirathai thoderthu oru ilacham thadavai
sollamuma allathu oru nalaikku 1000 murai sollalama

sitthargal said...

Vanakkam Thozhi,

Thangalin Thagavalukku Mikka nandri. Intha udarkatu manthirangalai jabikkum vazhi murai erunthal pagirnthu kollavum. Intha manthirangalai parayanam seivatharkku vayathu varambu undaa???

m1u0ru0gan8 said...

Vary Good Mantra

Murugan

m1u0ru0gan8 said...

Vary Good Mantra

Murugan

Unknown said...

Vanakkam Thozli

ungaludaiya enayathalam migavum arputham natraga ulathu men melum valar en vathuzhukal. natri

Unknown said...

Anyone who knows details about Sage Vyasa's Digbandanam manthiram.If yes please can you share them.Thank You.

Unknown said...

Hi,

Appreciating your fantastic research in Ancient Tamil epics. But, in my view, all the chithars were no buddy but non-human superior intelligent beings originated from some other planet else where in the cosmos. It's 100% truth that our genes, body, etc. are terrestrially influenced by invisible source of radiations originated from planets, stars, etc. To learn how protect our self from the evil powers by using in-explainable occult powers by pronouncing the slogans, understanding the vital form of our body and the energy of each part of our body is amazing science.
I personally believe still in Kollimalai, Velliangir malai, Javvadhu malai, etc. Chithars are alive in invisible form.
Love goodness, be helpful, etc. could destroy all our evilness and purify us.

Thanks.

Unknown said...

Fine

Post a comment