சித்த ரகசியம்..ஓர் அறிமுகம்

Author: தோழி / Labels: ,

சித்தர்கள் பெரும்பாலும் வெகுசன வாழ்விடங்களில் இருந்து விலகி காடுகளிலும், மலைகளிலும் வாழ்ந்திருந்தனர்.அவர்களின் வாழ்நாள் தேடல் விஞ்ஞானம் மற்றும் மெய்ஞானம் சார்ந்ததாகவே இருந்தது. இத்தகைய தேடலில் அவர்கள் அடைந்த தெளிவும், முதிர்வும் அசாதாரணமானவை.

தாங்கள் உணர்ந்த அரிய தகவல்கள் சுயநலவாதிகளிடமோ அல்லது பேராசைக்காரர்களிடமோ சென்று சேர்ந்து விடக் கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்தனர்.அதன் பொருட்டே தங்களின் பாடல்களை மறைபொருளாய் எழுதி வைத்தனர்.

சித்தரியலில் குருவே எல்லாவற்றுக்கும் ஆதாரமானவர் என தீர்க்கமாய் நம்பினர்.குருவானவர் தனத் தெளிவுகளை சீடர்களுக்கே அளித்தார்.மறைபொருளை கட்டவிழ்க்கும் வகையினையும் குருவிடமிருந்தே சீடர்கள் பெற்றனர்.இதனையே நாம் குருவருள் என்கிறோம்.

சதாரண மனிதர்களினால் செயல் படுத்தமுடியாத நுட்பங்கள், வழிமுறைகள் அவற்றின் அசாத்திய விளைவுகளை பற்றிய தகவல்களே இப்படி பாதுகாக்கப் பட்டது.இவற்றையே பொது மக்கள் சித்த ரகசியம் என்று அழைத்தனர்.

என்னுடைய புரிதலின்படி இந்த சித்த ரகசியங்களை ஆறு வகைகளாய் தொகுக்க நினைக்கிறேன்.அவையாவன...

உடல் கட்டு மந்திரங்கள்

அபாயகரமான யந்திரங்கள்

சாபநிவர்த்தி மந்திரங்கள்

காயகற்ப வகைகள்

இரசவாதம்

தீட்சைகள்
இரசவாதம் பற்றி முன்பே பல பதிவுகளில் பார்த்து விட்டபடியால் மற்ற வகைகளைப் பற்றிய எனது புரிதல்கள் மற்றும் தகவல்களை வரும் நாட்களில் பகிர்ந்து கொள்கிறேன்.

இனி பகிர இருக்கும் பல தகவல்கள் நம்ப இயலாத வகையிலும், பகுத்தறிவுக்கு ஒவ்வாதனவாகவும் இருக்கலாம்.இவற்றின் சாத்திய,அசாத்தியங்கள் ஆய்வுக்கும், விவாதத்திற்கும் உட்பட்டவை. இந்த முறைகளை செயல்படுத்தி பலன் காண்பதில நிறையவே நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன.முறையான குருவின் அருளாசி மற்றும் வழி நடத்துதல் இருந்தால் மட்டுமே இவை சாத்தியமாகும்.எனவே இவற்றை ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே கருதிட வேண்டுகிறேன்.

நாளைய பதிவில் உடல்கட்டு மந்திரங்கள் பற்றிய தகவலுடன் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

11 comments:

Guruvadi Saranam said...

தோழி,
தாங்கள் இப்போது கொடுக்கபோகும் தகவல் சற்று ஆழாமாக இருந்தாள் முயல்வதற்கும், ஆராய்ச்சிக்கும் உட்படுத்த ஏதுவாக இருக்கும்.

உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள் !

நன்றி
ராஜேந்திரன்
பெங்களூர்.

பாவா ஷரீப் said...

தோழி மிக அருமை
தொடர்ந்து எழுத இறைவனை வேண்டுகிறேன்

உங்கள் அன்பன் ஷரீப்

yeshraja said...

manidha sakthikku apparpatta sakthi...kadavul

enre nan ninakinren...

யோகம் said...

சிவபோக சாரம் உரை நடை இருந்தால் தெரியப்படுத்தவும்

ATOMYOGI said...

*இவற்றின் சாத்திய அசாத்தியங்கள் ஆய்வுக்கும் விவாதத்திற்கும் உட்பட்டவை*

ஆய்வோம்! விவாதிப்போம்!

அகோரி said...

nice

ARANTHANGI ABDULLAH said...

thankalin ovovru thagavalgalium seyal padutthi parkka virumbukeren thangalaiee guruvaga ninanitthu seythal vertty kidaikkuma?

tamilvirumbi said...

Thozi,
This topic is a superb one.Please keep up.

THIRUMAL said...

uyara maha valara ethum marunthu erunthal sollungal

THIRUMAL said...

uyara maha valara ethum marunthu erunthal sollungal

THIRUMAL said...

uyaramaha valara ethum marunthu erunthal sollungal

Post a comment