ஓர் வேண்டுகோள்!

Author: தோழி /

ஏதோ ஒரு வேகத்தில் இலக்கில்லாமல் துவங்கிய இந்த வலைமனையின் வளர்ச்சி நான் கொஞ்சமும் எதிர்பாராதது.மிக நிச்சயமாக இதெல்லாம் குருவருளினால் மட்டுமே சாத்தியமாயிற்று.சித்தர்களைப் பற்றி பெரியவர்கள் பலர் இங்கே விரிவாகவும், தெளிவாகவும் எழுதிக் கொண்டிருக்கிற வேளையில் ,வயதில் மிக இளையவளான எனது பதிவுகள் கவனிக்கப் படுமா என்கிற கவலைகள் நிச்சயமாக இருந்தது. திட்டமில்லாமல் எழுதிக் கொண்டிருந்த என்னை நெறிப்படுத்திய பெருமை இந்த பதிவுகளை தொடர்ந்து வாசித்து வரும் நண்பர்களையே சேரும்.

தினமும் ஒரு பதிவு எழுதுவதன் சாத்தியம் குறித்து பல நண்பர்கள் ஆச்சர்யம் தெரிவித்திருந்தனர்.எனது படிப்பின் ஊடே தினசரி பதிவுகள் எழுதுவது சாத்தியமில்லாத ஒன்று.சனிக் கிழமைகளில் அடுத்த வாரத்திற்கு என்ன எழுதுவது என தீர்மானித்து, புத்தகங்களை தேடி குறிப்பெடுத்து, ஞாயிற்று கிழமைகளில் ஒரே மூச்சில் எழுதி அதை ஆறு பதிவுகளாய் பிரித்து நாளும் நேரமும் குறிப்பிட்டு வலையேற்றுவதுடன் என் வேலை முடிந்து விடுகிறது.ப்ளாக்கர் அவற்றை தினம்தோறும் குறிப்பிட்ட நேரத்தில் பதிப்பித்து விடுவதால் வாரம் ஆறு பதிவுகள் சாத்தியமாகிறது.

அழிந்து கொண்டிருக்கும் தகவல்களை அனைவருக்கும் பொதுவாய் பகிர்வதன் பலனாய்,நாடு கடந்து கிடைத்த பல நல்ல நட்புகளும்,பெரியவர்களின் மனமார்ந்த ஆசிகளும்,தமிழகத்து பத்திரிக்கை ஒன்றில் எனது கட்டுரைகள் இடம் பிடித்ததும், பதிப்பகம் ஒன்றில் இருந்து வந்திருக்கும் விசாரணை என இந்த வலை மனையின் மூலம் எனக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரமானது, பெரிதான வெளியுலக தொடர்பில்லாத சாமான்ய தமிழ் பெண்ணுக்கு மிகப் பெரிய வெகுமானம்.

கடந்த ஒன்பது மாதங்களில் இந்த வலைமனையின் வளர்ச்சியினை கீழே உள்ள படம் விளக்கிடும். தற்போது இந்த வலை மனையினை தினசரி அறுநூறு பேர் வரையில் பார்வையிடுகின்றனர்.


இந்த தகவல் பகிர்வை இன்னமும் முனைப்பாக தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு கொண்டு சேர்ப்பதன் மூலம் நமது முன்னோர்களின் அருமையினை அனைவரும் உணரச் செய்திட இயலும். சித்தர்கள் அருளிய தகவல்களின் மீது மேலதிக ஆய்வுகள், விவாதங்கள் நடத்துவதன் மூலம் பல அரிய பேருண்மைகளை நாம் வாழும் சமூகத்திற்கு தந்திட இயலும்.

சுயநலமில்லாத பொது நலமே ஒரு சமூகத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். என்னுடைய சிறுமுயற்சினால் சித்தர் பெருமக்களின் தெளிவுகளை தினசரி அறுநூறு பேருக்கு கொண்டு சேர்க்க முடிகிறதென்றால், நீங்கள் ஒவ்வொருவரும் மனது வைத்தால் இந்த தகவல்களை இன்னும் பல ஆயிரம் தமிழர்களுக்கு கொண்டு சேர்த்திட இயலும்.

இதனை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களிடம் என்னுடைய பணிவான வேண்டுகோள் இதுவே...இந்த வலைமனையின் விவரங்களை இயன்றவரையில் அறிந்தவர்கள், தெரிந்தவர்களுக்கு அறிமுகம் செய்திடுங்கள்.நாம் பெற்ற இன்பம் அனைவரும் பெற்றிட எல்லாம் வல்ல குருவருள் துனை நிற்கும்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

26 comments:

தமிழ் அமுதன் said...

கடின உழைப்பும்,முயற்சியும் இருக்கும் இடத்தில்
வெற்றி தவிர்க்க முடியாதது என்பதற்கு இந்த தளம் ஒரு மிக சிறந்த உதாரணம்...!

இன்னும் பல உயரங்களை அடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்...!

மங்கை said...

வாழ்த்துக்கள்....தொடருங்கள்

ஆனந்தி.. said...

Sure Thozhi!! sabaash!! Keep it Up!!

yogananda said...

சித்தர்கள் பற்றி சில வலைப்பதிவுகள் உள்ளன.
ஆயினும் முழுமையாகவும் தெளிவாகவும் விளங்கும் அளவு உள்ளது இது என்று நினைக்கிறேன். மிகவும் கடினமான ஒரு subject இது. பன்மடங்கு அர்த்தம் புரியாத மொழி இது. மிகவும் நன்றி. மின்னூல்கள் பாராட்டு. சித்தர்கள் ஆசி, இறை அருள் உள்ளவர்களுக்கே
இது சாத்தியம் என நினைக்கிறேன்.

Shiva said...

அவசியம் செய்கிறோம். தங்கள் வலைத்தளம் ஓங்கி உயர, தங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

Unknown said...

sure

Anonymous said...

very very useful website thankyou

tamilvirumbi said...

Thozi,
Apropos of your appeal,there will be no need to hesitate for anything.I have given your blogs url to my friends.I have already sent 3 mails to you regarding admiration of your work.Please don't under estimate yourself as you are in younger age.What matured marvellous thoughts you have!.Please bring to this tamil world more information about siththars.By the by,I am requesting you to make your publications in this blog into PDF file at the end of everymonth.This will be helpful for future generation.Is your blog information possible to translate into English?.I am asking your permission for this precious work.Please ponder over it and send a mail to me.I planned to take this sort of information to westerners' view.Presently,I am hectic in my official activities.Regarding this,I will meet you in person if time permits.

VISWAM said...

mighavum oru arumaiyaana thontu seikireerghal. vaazththukkal.

நீச்சல்காரன் said...

விரைவில் நல்ல சித்தர் நூல்கள் வெளியிட மனமார்ந்த வாழ்த்துக்கள்.

jagadeesh said...

எனக்கு தமிழில் மிகப் பிடித்த தளமே இது தான். இந்த சேவை உங்களை இன்னும் உயரத்தில் கொண்டு செல்லும். இந்த சிறியவனின் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.

டுபாக்கூர் பதிவர் said...

தொடர்ச்சியாக உங்கள் பதிவுகளை வாசிக்கிறேன்.இத்தனை பெரிய விஷயங்களை எளிமையாக எல்லோருக்கும் புரியும்வகையில் சொல்லும் நீங்கள் எல்லா இடத்திலும் உங்கள் குருநாதரையே முன்னிலை படுத்துகிறீர்கள்.இதற்காகவே குருவின் மகத்தான அருள் உங்களுக்கு என்றும் நிலைக்கும்.

தன்னையே சித்தர் என்று சொல்லிக் கொண்டு பதிவெழுதும் ஆசாமிகள் மத்தியில் நீங்கள் வித்தியாசமானவர்தான்.

சிறக்கட்டும் உங்கள் பயணம்.வாழ்த்துக்கள்.

Anonymous said...

நிச்சயம் செய்கிறேன் , தங்கள் பணி மேலும் சிறப்பாய் தொடர எனது வாழ்த்துக்கள் .

yeshraja said...

Iniya thozhiye ,

vettrikku vazhthukkal...thodarattum thangal pani:)

தமிழ் said...

kandippaga solvom... vaazhtukkal

Anonymous said...

awesome... all the best.. keep doing the good work..

Guruvadi Saranam said...

தோழி,
நிச்சயம் செய்கிறோம். தங்கள் வலைத்தளம் மென்மேலும் ஓங்கி உயர வாழ்த்துக்கள்.
தங்கள் சித்தர் சேவை தொடர வாழ்த்துக்கள்!

நன்றி
ராஜேந்திரன்
பெங்களூர்

சுந்தரா said...

உங்கள் வலைமனை இன்னும் சிறக்க வாழ்த்துக்கள் தோழி!

கவிநயா said...

உங்கள் சேவைக்கு இதய பூர்வமான நன்றிகள். மென்மேலும் வளர வாழ்த்துகள்.

tamilvirumbi said...

Thozi,
Long ago, you have asked our readers about
"penn siththars".I told it to my friends.They have sent a mail about it.I have furnished below for your kind information.It is your option to publish it or not.Still, I will bring more for you.
இந்த சிந்துஜா என்னும் பெண் வந்து, நான் முன்பின் அறியாத ஸ்ரீசக்கரம்மா
என்னும் சித்தரைப் பற்றி அறிந்து கொள்ள உதவியதை, இன்று ஸ்ரீசக்கரம்மா என்னும்
பெண் சித்தர் என்மேல் அருள் கொண்டு தானே வந்து தன்னைப் பற்றிக் கூறியதைப் போல் உணர்ந்தேன், திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ சக்கரம்மா கோயிலைப் பற்றி கேள்விப்பட்டேன் அவர் ஒரு பெண் சித்தர்,இந்த சித்தரின் காலம் 1854, வடாற்காடு அருகில் உள்ள தேவிகா
புரத்தில் ஒரு சிவாச்சாரியார் பரம்பரையில் வந்த சேஷகுருக்கள் தம்பதியருக்கு மகளாக வந்துதித்தவர், ஒன்பதே வயதில் திரு சாம்பசிவ சிவாச்சாரியாருக்கு மணமுடித்து வைத்தனர், கோமளீஸ்வரன் பேட்டைக்கு குடி வந்தார்,அந்தக் கோமளீஸ்வரர் கோயிலில் இறைப் பணி மேற்கொண்டார், தன்னுடைய 20 ஆவது வயதில் கணவனை இழந்தார்,அந்த இருவது வயதிலேயே திருமுடி மழித்து,வெண்ணிற ஆடை அணிந்து யார் சொல்லியும் கேளாமல் துறவறம் பூண்டார், அப்போதிலிருந்து குளிக்கவில்லை,நீரும்
குடிக்கவில்லை, உணவும் உண்ணவில்லை மோனத்தவத்தில் பத்தாண்டுகள் இருந்தார்,
தன்னுடைய முப்பதாவது வயதில் ஒரு நாள் உடல் சிலிர்த்து கோடி சூர்யப் ப்ரகாசமாய்
முகம் மலர, சந்திர சூரியருக்கும் அப்பாற்பட்டஒரு பேரொளி கிடைக்கப் பெற்றார்,துக்கத்தையும், இன்பத்தையும் சமமாக பாவிக்கும் ஸ்திதப்ரக்ஞன் ஆனார், ஆஹா பரவொளியைக் கண்டேன் என்று திருவாய் மலர்ந்தருளினார், அதன் பிறகு மக்களுக்கு தரிசனம் அளிக்க ஆரம்பித்தார், புன்னகையோடு காட்சிதரும் அவரின் பரித்த ஓசையுடனானன அந்த சிரிப்பே அருளாக வழங்கப்பட்டது இவரை அடையாளம் கண்டவர் மைலாப்பூரைச் சேர்ந்த மருத்துவர், மனித நேயர், மருத்துவக் குலச் செம்மல் நஞ்சுண்ட ராவ், அவர்களின் நாட்குறிப்பை வைத்துதான் இந்த ஸ்ரீசக்கர சித்தரின் பல விவரங்களை சேகரித்திருக்கின்றனர்
இல்லையெனில் இவரைப் பற்றிய விவரங்கள் எப்போது வெளிவந்திருக்கும் என்றே தெரியாது
இந்த ஸ்ரீசக்கரம்மா அவர்கள் சிவ ஜையும் ,ஸ்ரீசக்கர பூஜையும் செய்வார்கள்,
மஹா பெரியவா ஸ்ரீமத் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இந்தக் கோயிலுக்கு
விஜயம் செய்திருக்கிறார், தியானம் செய்திருக்கிறார் என்பது விசேஷச் செய்தி,
காயத்ரீ மந்திரம் போல் ஸ்ரீசக்ரம்மாவைப் பற்றி மந்திரம் ஒன்று உள்ளது
”ஓம் குரு தேவ்யை ச: வித்மஹே பரப்ரும்மைச; தீமஹி
தன்னோ அனந்தம்பா ப்ரசோதயாத்:”
திருவான்மியூரில் கலாக்‌ஷேத்திரா அவன்யூவில் உள்ள பாம்பன் ஸ்வாமிகள் கோயில்
பக்கத்தில் சக்கரை அம்மா கோயில் இருக்கிறது,அந்தக் கோயிலில் ஸ்ரீசக்கரை அம்மா
என்கிற இந்த சித்தரின் தியான மண்டபமும் அவருடைய அதிஷ்டானமும் உள்ளது இந்த பெண் சித்தரின் பூர்வாஸ்ரமப் பெயர் அனந்தம்பாள் சித்தரான பிறகு அவர்கள் ஸ்ரீ சக்ரம்மா என்று அழைக்கப் பட்டார், முதலில்
ஸ்ரீசக்கர என்று அழைக்கப்பட்டு பின்னர் ஸ்ரீசக்கரையாக மறுவி ,அதன் பின்னர்
ஸ்ரீ சக்கரம்மா நிலைத்தது, சிறுவயதில், உடைந்த சிவலிங்கத்தை தன் கால் எலும்பை
உடைத்து சரிசெய்ய முயற்சித்திருக்கிறார், அவர்கள் பத்தாண்டுகள் உணவு அருந்தவில்லை, நீரும் அருந்தவில்லை வானில் பறக்கும் சித்தி பெற்றவர் என்று
சொல்கிறார்கள் பௌர்ணமி நாட்களிலும் திருவாதிரை நாட்களிலும் பக்தர்கள் அதிக அளவில் கூடும் கோயில் இது,
திரு வி கல்யாணசுந்தரம் அவர்கள் ”உள்ளொளி” என்னும் நூலில் இந்த சித்தரைப்பற்றி
குறிப்பிட்டுள்ளார்.திரு வீ க அவர்கள் கல்லூரியின் மாடியில் உலாவிக்கொண்டிருக்கும் போது சித்தர்
ஸ்ரீசக்கரம்மா வானத்திலிருந்து பறந்துவந்து நின்றார் என்று குறிப்பிட்டிருக்கிறார்
அவரைப் பற்றிய ஒரு பாடல்

”திருவான்மியூர் செய்த தவம் என்ன தாயே
குருவாய் அருள் காட்ட குடி கொண்டாய் நீயே”

பக்தி வந்தி சேருமிடம் பக்தர் மனம் சொக்குமிடம்
அக்கம்பக்கம் மட்டுமின்றி அகிலம் வந்து நிற்குமிடம் புண்ணியத்தின் மொத்த வரி புரிந்தவர்க்கு சொர்க்க புரி சன்னிதிக்கு வந்துவிட்டால் சகலருக்கும் சொர்க புரி
அனந்தம் என்றால் கணக்கில்லை அருளுக்கும் கணக்கில்லை மனதாறப் பேசுகின்ற மகிமைக்கும் கணக்கில்லை எண்ணிக்கையில் அடங்காத எத்தனை -பேர் நன்மைபெற்றார்
பன்னிரண்டு சுற்று வந்து பல குறையும் தீரக்கண்டார் இளமையான வயதினிலே என்ன இது துறவறமா வெயில் மழையும் பார்க்காமல் வெட்ட வெளி அனுபவமா பத்தாண்டும் உணவில்லை பக்கம் யாரும் செல்லவில்லை
என்ன இது என்ன என்றே ஏங்காத மனிதரில்லை
மானுடம் பறந்து வந்து மாடியிலெ நிற்குமா
மற்றவர்க்கு சொன்னாலும் மனித மனம் நம்புமா
வானில் பறக்கின்ற சித்தி பெற்ற தேவீ நீ
வாழ்க்கையில் பறப்போர்க்கு வழிகாட்ட தேவை நீ

sundar003 said...

All are very nice............

ram said...

அனைவருக்கும் வணக்கம் சித்தர்களின் வரலாறு அவர்களின் எழுதிய நூல்களை பிழையின்றி பதிவிடுவதற்கு நன்றி மேலும் தங்களின் சேவை தொடரட்டும் ...நண்பர்களிடம் பழைய சுவடிகள்,புத்தகங்கள் இருப்பின்

Unknown said...

Dear friend,

"Whenever I have needed a philosophical guidance for my life while I chose to read your writings on Siddharkal from this blog"

Why not publish your real photo on in
this blog?

I have strong belief that like me many of your readers like to, sorry, long to see your face...

with regards,

J. Shunmugaraja, Ph.D

Unknown said...

u are doing a great job.....thanks

Unknown said...

நன்றி

Jayan said...

வாழ்க உங்கள் சேவை

Post a comment