பிறவாமை!

Author: தோழி / Labels: ,

மனிதர்கள் பொருளாதார அடிமைகளாய் மாறிவிட்ட இன்றைய சூழலில் அகவாழ்வின் மகத்துவத்தினை யாரும் உணர்வதே இல்லை. உடலின் தேவைகளை முன்னிறுத்தி உள்ளத்தின் தேவைகள் புறத்தின் நிர்பந்தங்களினால் சமாதானம் செய்து கொள்ளப் படுகிறது.காலம் கடந்த பின்னர் இதை நினைத்து வருந்தி பயனில்லை.

பணத்தால் எதையும் விலைக்கு வாங்கிட முடியும் என்கிற மனப்போக்கு நம்மிடம் தலை தூக்கிவிட்டதால்தான் பொதுவாழ்வில் தூய்மையற்ற தன்மையும், செய்து விட்ட பாவங்களுக்கு பரிகாரமாய் புண்ணியங்களை வேண்டி கோவில்களில் உண்டியலும் நிரம்புகிறது.

சித்தரியலில் " மெய்யுணர்வு " அல்லது " மெய்யறிவு " என்பதன் ஆதியும் அந்தமுமான குறிக்கோள் மீண்டும் பிறவாமையே என்பதாக கருதப் படுகிறது.மனிதன் தன் அகத்தை மறந்து புறவாழ்வில் காட்டிடும் நாட்டமே இந்த கர்ம வினைகளுக்கு காரணம். நமது எண்ணம், செயல்,சிந்தனைகளின் விளைவாகவே கர்ம வினைகள் உருவாகிறது. இத்தகைய கர்ம வினைகளின் பலன்களின் காரணமாகவே இந்த பிறப்பு நேர்ந்திருக்கிறது என்று சித்தர்கள் நம்பினர்.

இந்த பிறவியில் நாம் அனுபவிக்கும் இன்ப துன்பங்களுக்கும் இந்த கர்ம வினைகளே காரணம் எனவும் கருதினர்.இதனை பிள்ளையை பெறுவது பெற்றோர் வினை என்றால் அவர்களுக்கு பிள்ளையாய் பிறப்பது பிள்ளையின் வினை என்றனர்.

பட்டினத்து பிள்ளையார் என அறியப்பட்ட பட்டினத்தார் இந்த பிற்வாமையை வலியுறுத்தி அநேக பாடல்களை அருளியிருக்கிறார்.பட்டினத்தார் பாடல்கள் பெரும்பாலும் மன தத்துவத்தை அடிப்படையாக கொண்டவையே. புறவாழ்வை வெறுத்து அகவாழ்வில் எல்லாம் வல்ல பரம்பொருளை மனதில் இருத்தி பேரின்ப பெருவாழ்வு வாழ்தல் பற்றியதாகவே அவரது பாடல்கள் இருக்கின்ற்து.

"ஊட்டுவிப்பானும் உறங்குவிப்பானும் இங்கு ஒன்றோடொன்றை
மூட்டுவிப் பானும் முயங்குவிப் பானும் முயன்றவினை
காட்டுவிப் பானும் இருவினைப் பாசக் கயிற்றின் வழி
ஆட்டுவிப்பானும் ஒருவன் உண்டேதில்லை அம்பலத்தே!"

- பட்டினத்தார் -

நம்முடைய முன்வினைகள் அதாவது கரும வினைகளின் பலனை அனுபவித்திடவே நாம் மீண்டும் மீண்டும் பிறக்கின்றோம். இந்த கரும வினைகள்தான் நாம் பிறக்கும் ஒவ்வொரு பிறவியிலும் அனுபவிக்கும் துன்பத்திற்கும், இன்பத்திற்கும் காரணமாக அமைகின்றது. "அரிது அரிது மானிடராதல் அரிது" என்ற முது மொழிக்கு ஏற்ப கிடைத்தற்கரிய மானிடப் பிறப்பைப் பெற்ற நாம் இந்தப் பிறவியை சரியான முறையில் பயன்படுத்தி நற்சிந்தனைகளை பெருக்கி நல்ல செயல்களைப் புரிந்து, முன்வினைகளான கர்மவினைகளை நீக்கிக் கொள்ள வேண்டும் என்கிறார்.

திருவள்ளுவர் கூட பிறவாமையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் குறள் ஒன்றினை அருளியிருக்கிறார்.

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்.

-திருவள்ளுவர்-

பிறவாமையை எப்போது விரும்புகிறோமோ அப்போது அந்த நிலை நமக்கு வர வேண்டும். ஆசையற்று இருப்பதை விரும்பும்போதுதான் அந்த நிலை நமக்கு உண்டாகும்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

12 comments:

அருட்சிவஞான சித்தர் said...

அருட்தோழி,
நல்ல பதிவு இது.
இதைப் போன்ற ஞானநாட்டத்தை தூண்டும் பதிவுகளை வெளியிடுங்கள். வாழ்த்துக்கள்.

Guruvadi Saranam said...

தோழி,
பிறவாமை பற்றிய பதிப்பு அருமை.

நன்றி
ராஜேந்திரன்
பெங்களூர்

அகோரி said...

மிக அருமை தோழி

Anonymous said...

நல்ல தகவல் .

tamilvirumbi said...

Thozi,
The topic Eternal Bliss will pave the way for every individual to attain it.It dispels the individuals' misconceptions about karma.
It helps everyone to refine our actions and reactions.Thanksfor your goodwill.

மங்கை said...

"இப்பிறவி தப்பினால் எப்பிறவி வாய்க்குமோ..
எது வருமோ அறிகிலேன்"

என்றார் தாய்மானவர்.. அரிதாய் கிடைத்ததை சரியாய் பயன்படுத்துவோம்..

நன்றி

கவிநயா said...

நல்ல பதிவிற்கு நன்றி தோழி.

jagadeesh said...

மிக அருமையான பதிவு. மிக்க நன்றி.

Mugilan said...

நல்ல பதிவு தோழி! வாழ்க வளமுடன்!

மீ.ராமச்சந்திரன் said...

பிறவாமை என்பது இருக்கிறது, விரும்யகூடியது,அடையவல்லது எனறாலும் உறுதி கிடையாது.
அவசியம் ஏற்பட்டால் ஞானியாக இருந்தாலும் பிறந்தாக வேண்டும்


ஆதிசங்கரர்-ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்ரத்தில்
இவ்வாறுசொல்லியிருக்கிறார்

பீஜஸ்யாந்தரிவாங்குரோ ஜகதிதம்ப்ராங்நிர்விகல்பம்புன்: மாயாகல்பிததேசகாலகலனாவைசித்ர்யசித்ரீ க்ருதம்
இதன் மூலம் சொல்லவருவது
அனைத்து தோன்றலுக்குமுன் எல்லாம் விதை வடிவில் எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கிறது.இடம் ,காலத்தின் கட்டாயத்தினாலும் ம்ற்றும் மாயையின் கலப்பில் பல வகை தோற்றங்கள் காணப்ப்டுகிறது
முக்தன் ஞானத்துடன் பிற்க்கிறான்
மற்றவைகள்அஞ்ஞானத்துடன் பிற்க்கிறாகள்
இது என்னுடைய் கருத்து

Unknown said...

migavum payanulla pathippu. ungal pani thodarattum.

Soundarraju said...

Nalla Pathivu ,

Post a comment