மனையடி சாத்திரமும், தோஷ நிவர்த்தியும்!

Author: தோழி / Labels:

சித்தர்களின் அவதானிப்பில் எல்லா பொருட்களும் ஏதேனும் ஒரு வகையில் குறைகளை கொண்டவை என்பதாகவே கருதியிருக்கின்றனர். அந்த குறைகளை கண்டுணர்ந்து களைவதன் மூலம் அவற்றை மேன்மையான ஒன்றாக உயர்த்திட முடியும் என தீவிரமாக நம்பினர். அதற்கான உபாயங்களை தேடித் தெளிந்து அவற்றை தங்களின் பாடல்களில் கூறியிருக்கின்றனர்.

ஒருவர் புதிதாக நிலம் வாங்கினால், அதை நன்கு உழுது தானியங்களை பயிர் செய்ய வேண்டும்.பயிர் விளைந்த நிலையில் அந்த நிலத்தில் பசுக்களை விட்டு பயிர்களை மேய விட வேண்டும். அவ்வாறு பசுக்கள் பயிர்களை மேய்வதால் அவற்றின் சிறு நீர், கழிவுகள் மற்றும் வாயில் இருந்து சிந்து நுரைகள் போன்றவை அந்த பூமியில் கலக்கும்.இதனால் அந்த நிலத்தின் சகல தோஷங்களும் நீங்கும் என்கின்றனர்.

உலக அளவில் பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பின்னர் இன்றைக்கு பிரபலமாகி வரும் இயற்கை விவசாயம் மேலே சொன்னதைத்தான் சொல்கிறது.இயற்கை உரங்களான பசுவின் எரு, சிறு நீர் போன்றவைகளை நிலத்தில் மக்க விடுவதால் நுண்ணுயிரிகள் பல்கிப் பெருகி நிலத்தினை வளப் படுத்துவதுடன் விளைச்சலையும் பெருக்குகிறது. சித்தர்கள் வலியுறுத்திய இந்த தோஷம் நீக்குதல் இத்தகைய அறிவியல் சார்ந்தது.

மயானம், பள்ளமான நிலம் அதாவது வெள்ளம் தேங்கும் இடம். யுத்தம் செய்த இடம், கோவில், புற்று இருக்கும் அல்லது இருந்த இடங்களில் வீடுகள் கட்டுவதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறுகின்றனர்.இது போலவே கோவில், கோவில் கோபுரம், அரசு, வன்னி, எருக்கு, வில்வம் போன்றவைகளின் நிழல் வீடுகளில் படக்கூடாது என்றும் சொல்கிறார்கள்.

இது போல மேலும் பல தகவல்கள் சித்தர்களின் பாடல்களில் விரவிக் கிடக்கிறது. இவைகள் முறையாக தொகுக்கப் பட்டு அதன் மீது ஆய்வுகள் மற்றும் விவாதங்கள் நடத்தப் படுமாயின் இந்த தகவல்கள் தொடர்பான பல அரிய பேருண்மைகளை வெளிக்கொணர இயலும்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

11 comments:

மகேஷ் ராஜ் said...

அறிய தகவலுக்கு நன்றி

Anonymous said...

நல்ல தகவல்

tamilvirumbi said...

Thozi,
Today your presentation is so splendiferous. I have given some facts and figures for building a house.If you get entertained with these facts,you can keep it.
Otherwise,you can delete it.It is your option.Thanks a lot.
Manaiyadishastram refers to the discipline which analyzes the impact experienced by the residents of the house for the various dimensions (length and breath) while residing in the house. Manaiyadi shastram is applicable to each and every room in the house. Therefore care should be taken while fixing the length and breadth of every single room because this might adversely affect the person who is living in that room. The good and bad effects of fixing a particular dimension for rooms in the house are given below in a table.This is a lengthy table.If you want more about,you contact my mail id. Readers are advised to go through this table and build their houses in their own interest.
FEET EFFECTS/CONSEQUENCES
6 The resident will lead a peaceful life.
7 resident will lead a peaceful life.

The resident will lose all his wealth.
8 The resident will be blessed with great wealth and will enjoy all pleasures.
9 The resident will not only lose all his wealth but will also face insurmountable difficulties.
10 The resident can be assured of at least a square meal a day.
11 The resident will enjoy overall health and wealth.
12 The resident will lose his child.
13 The resident will suffer from incurable diseases.
14 Peace of mind will be lost.
15 A death will occur in the resident's family.
16 The resident will attain great wealth.
17 The resident will defeat his enemies.
18 The house will get destroyed soon.
19 The resident will experience poverty.
20 The resident will lead a happy life.
21 The resident will live with honor and dignity.
22 The resident will defeat his enemies.
23 All evil events will occur in the house.
24 Only moderate benefits can be expected.
25 The resident will lose his wife.
26 Prosperity will rule the house .
27 The resident will become rich.
28 God will bless the resident and his family.
29 The resident will be blessed with all kinds of wealth and material possessions.
30 The resident will be blessed by Goddess Lakshmi, the God of wealth.
31 The resident will experience moderate benefits
32 Lost wealth will be regained.
33 The resident will be blessed with overall prosperity
34 The resident will be forced to vacate the house and live elsewhere.
35 The resident will make a fortune.
36 The resident will be courageous.
37 The resident will be blessed with good children and wealth.
38 The resident will be haunted by a demon at all times.

Guruvadi Saranam said...

தோழி,
அருமையான தகவல்!
வாழ்த்துக்கள் !

நன்றி
ராஜேந்திரன்
பெங்களூர்

Unknown said...

இது அந்த காலத்துக்கு சரி,
இப்பொழுது , சென்னை அல்லது வேறு எந்த நகரத்தை எடுத்துக்கொண்டாலும்... வீடு க்ட்ட நிலத்தை தோண்டினால் , முது மக்கள் தாளிகள் , மனித எலும்புகள் கிடைப்பது சாதாரணம். அப்படி பழய சமாதிகளே, சைட்டுகளகும்போது... இடத்தை தேர்வு செய்த்து தான் வீடு கட்டுவேன் என்பது இயலாது... வாஸ்து பிரபலமாக் முக்கிய காரணம், கட்டிட அமைப்பு மற்றும் பொருட்க்ளை மாற்றினால் போதும் உங்கள் வாழ்வு வளமாகும் என்பது தான்.

இப்படி சுலபமான வழிகள் எதெனும் இருந்தால் மிக பயன்படும்.

jagadeesh said...

இந்தக் காலத்தில் மரங்கள் அதிகம் வெட்டப்படுகிறது, நகரத்தின் மத்தியில் நாங்கள் இருந்தாலும், மரங்களின் அவசியத்தால், பல வருடங்களாக அதனை வெட்டாமல் பார்த்து வருகிறோம். இந்தச் சூழ்நிலையில், சில பேர், வீட்டிற்க்கு அருகில் வாகை மரம் ஆகாது, நெல்லி மரம் ஆகாது என அறிவுறுத்துகின்றனர். என்ன தான் செய்ய. வாஸ்துவில் எனக்கு பிடிக்காதே ஒரே விஷயம் மரங்களை வெட்ட சொல்வது.

Siva said...

Interesting information.Thanks for the same.

ம.தி.சுதா said...

புது விசயங்கள் சகோதரி நன்றிகள்...

அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
mathisutha.blogspot.com

அகோரி said...

மிக அருமையான தகவல்

S.Puvi said...

Thanks

Balaji Ganapathy said...

@tamilvirumbi

How to consider this dimensions?square or Rectangle? For example 8x8 ok if it's 8x9?

Post a comment