மனையடி சாத்திரம், சில உண்மைகள்!

Author: தோழி / Labels:

இன்றைய நமது சமூகத்தில் நம்பிக்கையின் பேரால் நடக்கும் வியாபாரங்களில் முதலிடம் வகிப்பது வாஸ்து சாஸ்திரம் என்றால் மிகையில்லை. ஆட்சியில் இருப்பவர்களில் இருந்து அடுத்த வீட்டில் இருப்பவர் வரை இந்த வாஸ்து சாஸ்திர நம்பிக்கை பீடித்திருக்கிறது. நமது வீட்டில் ஒருவராவது இந்த வாஸ்து சாஸ்திரத்தின் பிடியில் சிக்கி காரியமாற்றியவர்களாக இருக்கக் கூடும்.

வாஸ்து பற்றிய தகவல்கள் அதர்வண வேதத்தில் இருந்தே துவங்குகிறது. சமஸ்கிருதத்தில் பலரும் இது குறித்த நூல்களை இயற்றியுள்ளனர். பழங்காலத்தில் ஆலங்களில் துவங்கி, அரண்மனைகள் முதலாக மக்கள் குடியிருந்த வீடுகள் வரை இந்த வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப் பட்டதாக தெரிகிறது. வாஸ்து சாஸ்திரத்தின் அதிதேவதை வாஸ்து புருஷன் ஆவார்.

இவர் கட்டிடம் எழுப்பப் படும் மனையின் வடகிழக்கே தலையும், தென்மேற்கில் காலும் உள்ளவாறு குப்புற படுத்திருப்பதாக உருவகமாய் கூறப் பட்டிருக்கிறது.இப்படி படுத்திருக்கும் மனையின் பரப்பளவை வாஸ்து மண்டலம் என குறிப்பிடுகின்றனர். இந்த வாஸ்து மண்டலத்தில் அட்ட திக்கு பாலகர்கள் ஆளுக்கொரு திசையில் காவல் காப்பதாகவும், இவர்கள் தவிர இந்த வாஸ்து மண்டலத்தில் நாற்பத்தி ஐந்து தேவர்கள் வசிப்பதாகவும் விவரிக்கப் பட்டிருக்கிறது.

இந்த வாஸ்து புருஷர் வருடத்தில் நான்கு வெவ்வேறு மாதங்களில் உறங்குபவர் என்றும், மற்ற மாதங்களில் விழித்திருப்பார் எனவும் அப்படி அவர் விழித்திருக்கும் கணங்களை கணக்கிட்டு அவரின் செயலுக்கு தக்கவாறு கட்டிட வேலைகளை ஆரம்பிப்பதும், முடிப்பதும் இருக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு செயலுக்கும் என நிறையவே நிபந்தனைகளை முன்னிறுத்திக் கூறுகிறது இந்த வாஸ்து சாஸ்திரம்.

மனையடி சாத்திரம் என தலைப்பு வைத்து விட்டு வாஸ்து சாஸ்திரம் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறேனே என உங்களுக்குள் கேள்வி எழலாம்.... எழ வேண்டும் அதுதான் இந்த பதிவின் நோக்கமும் கூட.. காலம் காலமாக வாஸ்து சாஸ்திரம் என்பது மட்டுமே தமிழர்களின் கட்டிடக் கலையாகவே இனம் காட்டப் பட்டிருக்கிறது. நாமும் அதைத்தான் நம்பிக் கொண்டிருக்கிறோம்.

உண்மையில் தமிழர்கென தனித்துவமான கட்டிட மற்றும் சிற்பக் கலை நுட்பங்கள் இருந்தன. இன்றைக்கும் காலம் கடந்து நிற்கும் பல கோவில்களும், கல்லணையும் இதற்கெல்லாம் காலத்தின் சாட்சிகளாய் நம் முன்னே நிற்கின்றன. வாஸ்து சாஸ்திரம் குறித்த பல நூல்கள் சேதமில்லாமல் கிடைத்திருக்கும் பொழுது மனையடி சாத்திரம் தொடர்பான தனி நூல்கள் எதுவுமே நமக்கு கிடைக்கவில்லை. ஆனால் சித்தர்களின் பாடல்களில் மனையடி சாத்திரங்கள் பற்றிய தகவல்கள் நிறையவே விரவிக் கிடக்கிறது. அதில் எந்த தேவதையும் இல்லை, அவர் தூங்கவும் இல்லை. முழுக்க முழுக்க அறிவியல் சார்ந்த தெளிவாகவே மனையடி சாத்திரம் விளக்கப் பட்டிருக்கிறது.

இந்த தகவல்களை தொகுத்து மனையடி சாத்திரத்திற்கு உருக் கொடுக்க வேண்டியது தமிழர்களின் கடமை. இதுவரை அப்படி யாரேனும் தனி நூலாக தொகுத்திருக்கிறார்களா என தெரியவில்லை. அப்படி ஏதேனும் முயற்சிகள் இருப்பின் அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

நாளைய பதிவில் மனையடி சாத்திரம் தொடர்பான மேலதிக தகவல்களுடன் சந்திக்கிறேன்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

18 comments:

tamilvirumbi said...

Thozi,
Well.You have commenced today with a new topic under the title of "Manaiyadi Shastra".
Nowadays,it is becoming popular because of untold hardship without any reason to the mankind.I have sent two E-Books for your kind information to your mail Id regarding vasthu Shatra.One Book is pertaining to the construction Vimana In the temples.That book is not clear.Anyhow,I have sent it to you.
Next thing, I have to give one practical example.when we ride on a motorcycle, we prefer keeping heavy weight if needed to be carried in the back side tied with a carrier. If we try to keep a good heavy weight in the front on the handle bar, we still can drive the motorcycle but it will be tiresome, risky and unbalanced. Also if we keep the weight either on right or left side only our ride will become a bad experience.The weight we keep in the north-east side in our places is advised harmful as per Vasthu Shastra and keeping in the south weight side makes our life prosperous and wealthy.

அகோரி said...

nice

http://machamuni.blogspot.com/ said...

தோழி தாங்கள் குறிப்பிடுவது போல வாஸ்து புருஷர் நான்கு வெவ்வேறு மாதங்களில் உறங்குபவர்,மற்ற மாதங்களில் விழித்திருப்பார் என்று கூறுவது தவறு.அவர் வாஸ்து செய்யும் காலம் தவிர எல்லா மாதங்களிலும் தூங்கிக் கொண்டுதான் இருப்பார்.அவர் வருடத்தில் சித்திரை,வைகாசி,ஆடி,ஆவணி,ஐப்பசி, கார்த்திகை, தை,மாசி ஆகிய மாதங்களில் எழுந்து 3 3/4 நாழிகை விழித்திருந்து பின் தூங்கிவிடுவார்.விழித்திருக்கும் வேளையை ஐந்தாகப் பிரிப்பார்கள்.காலைக்கடன்கள் முதல் பாகத்திலும்,பூஜை செய்வது இரண்டாவது பாகத்திலும்,போஜனம்(உணவுண்ணல்)மூன்றாவது பாகத்திலும்,தாம்பூலம் தரித்தல் நான்காவது பாகத்திலும்,ஊர் விசாரணை ஐந்தாவது பாகத்திலும் செய்வார். இதில் வாஸ்து புருஷன் விழித்திருக்கும் காலம் என்பது 90(3 3/4 நாழிகை) நிமிடம்,ஆனால் வாஸ்து செய்ய உகந்த நேரம் தாம்பூலம் தரித்தல் ஆகிய நான்காவது பாகத்திலும்,ஊர் விசாரணையாகிய ஐந்தாவது பாகத்திலும் செய்யலாம்.அந்த நேரம் 2*18=36 நிமிஷம் ஆகும்.அதாவது வாஸ்து புருஷன் எழுந்து உறங்கும் முன் உள்ள 36 நிமிடங்களே வாஸ்து செய்ய உகந்த நாட்கள் ஆகும்.சிற்ப சாஸ்திர சிந்தாமணி என்னும் நூல் உங்களிடம் இருந்தால் பார்த்து இதை தெரிந்து தெளியலாம்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

http://machamuni.blogspot.com/ said...

தோழி மேற்கூறிய விடயம் மட்டுமல்ல வாஸ்து புருஷன் தலை வைத்து படுப்பதும்,ஒவ்வொரு முறை எழுந்து மீண்டும் படுக்கும் திசை வலஞ்சுழியாக மாறி மாறி வரும்,அதாவது கிழக்கில் தலை வைத்து தூங்கிய வாஸ்து புருஷன் மீண்டும் எழுந்து தூங்கும் போது கிழக்கில் தலை வைத்து படுக்க மாட்டார்.எந்த திசையில் தலை வைத்து படுத்திருக்கிறாரோ அந்த திசைக்கு எதிர் திசையில் அவர் பார்வை விழும்.அந்தத் திசையில்தான் தலைவாசல் வைக்க வேண்டும்.அதாவது தலைவாசல் வைக்க வேண்டிய திசையை வைத்துத்தான்,வாஸ்து நாளை நாம் தீர்மானிக்க வேண்டும்.போதும்.கருத்துரை என்ற பெயரில் கட்டுரை எழுதிக் கொண்டு இருக்கிறேன்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Ezhil said...

Well said Azhagappan !!!!!

sakthi said...

sami gi vanakam!
na sakthi paandiyan,na trichy la vasikran, Therai manal athigam irukum edathil en thagapanar vedu katinar , katiya manai aalavu(35 * 13)(l*b).... 13 manayadi thavarana enn.. en thagapanar manaiyai katum poluthu enga town la one of the VIP... in the time of death,onnum illamal iranthar... itharku karanam, thervu enna sami???

itharku karanam therai manalah? manayadi ah?
itharku solution illaya??

20 vayathil kudumba baram sumai thanga mudila?

give me solution sami???

email id-- prnsakthi88.it@gmail.com

Inquiring Mind said...

சமீப காலமாக, மொழி வெறியும், இன வெறியும் கொன்சம் அதிகமாக தங்கள் கட்டுரைகளில் தெரிகிறது.. ஆரோக்கியமானதல்ல என்பது என்னுடைய கருத்து..

வாஸ்து புருஷன் வருடத்தில் சில மாதங்களில் தூங்குவதாக சித்தரித்திருப்பது, ஒரு உவமையாக கருதாமல் நகைப்பதற்குரிய ஒன்றாய் சித்தரித்திருப்பது சரியல்ல.. ஆங்கிலத்தில் Metaphors என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.. பொதுவாக, சில பெரிய அறிவியல் விஷயங்களை சாதாரண் புராண கதைகளில் உருவகப்படுத்தி, சாதாரண மக்களுக்கு எளிதில் நியாபகம் வைத்திருக்கும்பொருட்டு ரிஷிகள் சொல்லியிருப்பார்கள்.. அந்த புராண கதைகள் காலம் காலமாக மக்களின் அன்றாட வாழ்க்கையில் பேச்சு வழக்காக தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து கொன்டு இருக்கும்..
இதை ஒரு வித Knowledge Preservation என்று சொல்வார்கள்..

ஆக தங்களின் மொழி வெறியையும் இன வெறியையும் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்..

Unknown said...

thanks for your vasthu details

Unknown said...

thnku for vasthu message

Unknown said...

Thozhi AM Having type of book that u want tel me ur mail id i'l send that book......

hari said...

Sir, Manai adi shastram measurement means inner wall room size or outer wall room size.
Regards
Hariharan.J(hariu62@gmail.com)

hari said...

Sir, Manai adi shastram measurement means inner wall room size or outer wall room size.
Regards
Hariharan.J(hariu62@gmail.com)

Unknown said...

தகவலுக்கு நன்றி தோழி

Unknown said...

ஐயா, எனது வீட்டில் நான் புதிதாக சுவாமி அறை கட்டுகிறேன் கிழக்கு மேற்கு 08அடி
வடக்கு தெற்கு 11அடி அறைக்கு கதவு வடக்கு பக்கம் உள்ளது எனது கேள்வி என்னவென்றால் சுவாமி படங்கள் எந்த திசை நோக்கி வைக்க வேண்டும் (நாங்கள் எந்த
திசை நோக்கி நின்று வணங்கவேண்டும்.விடை தயவு செய்து அனுப்புங்கள்

Unknown said...

I think whatever spoken above is bull shit, both ... And vasthu is written when believed earth is a square. And and it also has four corners.. But then later we found earth is sphere.. Please guys grow up , don't get into the web of easy money makers. I found this stupidy only in south of India . Just believe your basic science , the geography of your land, knowledge about weather, and a good vision about your future is more than enough to build a home. Please vasthu don pollute the young minds...

Unknown said...

Vasthu was derived when believed earth is flat and it has four corners... But later derived earth is sphere..please believe in science not myths. U need knowledge of climate,geography, and good vision on your home ... Everything else is made by easy money makers... Don pollute young minds..

raj said...

pls tel more information for vasthu

raj said...

நன்றி தோழி

Post a comment