தன்னையறிதல் @ கவனித்தல்

Author: தோழி / Labels:

தன்னையறிதலின் படிநிலைகளில் முக்கியமானது இந்த கவனித்தல்.

கவனித்தல் என்கிற ஒன்று இல்லாமல் எந்த மனிதனும் இருக்க முடியாது.ஆனால் எதை கவனிக்கிறோம் என்பதில்தான் இருக்கிறது, வித்தியாசம்.இன்றைய பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் நம்மை சுற்றியுள்ள எல்லாவற்றையும் கவனிக்கிறோம்.அடிப்படையில் கவனித்தல் என்பது புறத்தில் ஐம்புலன்கள் மூலமே சாத்தியமாகிறது.

நம்முடைய கவனத்தில் கடந்து போகும் ஒவ்வொரு நிகழ்வும் மனதில் பதிந்து உணர்வுகளை தூண்டுகிறது. இந்த உணர்வுகளின் கொந்தளிப்பில்தால் நாம் செயலாற்றுகிறோம்.ஒரு கட்டத்தில் இந்த உணர்வுகளுக்கு அடிமையாகி அதன் ஏவலில் அடிமைகளாய் செயல்படுகிறோம் என்பதுதான் உண்மை.

இந்த உணர்வுகள் எதுவும் நமக்குள் உருவாவதில்லை.அது கோபமாய் இருக்கட்டும், மகிழ்ச்சியாய் இருக்கட்டும் அவை புறத்தே இருந்து நமக்குள்ளே வந்து தங்கி நம்மை ஆட்டுவிக்கிறது. கொஞ்சம் கவனித்துப் பாருங்கள், இந்த உணர்வுகள் எதுவும் நிரந்தரமானவை அல்ல, துக்கமோ,மகிழ்ச்சியோ எல்லா நேரமும் நம்மில் இருப்பதில்லை....நம்முடையதைப் போல நமக்குள் நுழையும் இந்த உணர்வுகள், பெரும்பாலும் வருத்தங்களையும், துக்கங்களையும், அழுத்தங்களையும், கவலைகளையுமே கொண்டு தருகிறது.

ஒரு கணம் இந்த உணர்வுகள் என்னுடையதில்லை, எனக்கானதும் இல்லை என தீர்மானித்து அவற்றை உங்களுக்குள் நுழைய விடக்க்கூடாது என தீவிரமாய் கவனிக்க ஆரம்பியுங்கள்...அற்புதங்கள் அங்கேதான் ஆரம்பமாகும்.சித்தர்களும் இதைத்தான் முன்வைக்கிறார்கள்.புறத்தை கவனிப்பதை விட்டு அகத்தை கவனிக்கச் சொல்கிறார்கள்.

தன்னை அறிந்திட தன்னை, தனக்குள் கவனித்தல் அவசியமாகிறது.கவனிக்க ஆரம்பியுங்கள்...கவனம் குவிய குவிய நமக்குள் அலைகிற எல்லாம் கட்டுக்குள் வரும்.அற்புதங்கள் ஆரம்பமாகும்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

12 comments:

tamilvirumbi said...

Thozi,
Generally,the presentation of your topic
under the caption of "Listening" is good.In 21st century,one ordinary man is susceptible to
so many diversions and also worries.But, we can try our level best.If we try the way you told,surely we can become siththar.There is no
doubt at all.

Vaani said...

very useful

அகோரி said...

மிகவும் அருமையாக உள்ளது தோழி
உபயோகமாக படைப்பு

பிரவின்குமார் said...

பதிவுகள் சிந்திக்க வைக்கிறது. தொடரட்டும் தங்கள் சேவை..!

SIVANARUL said...

உள் கட உள் கட என்று திரும்ப திரும்ப சொன்னால் அது கடவுள் என்று முடிவிற்கு வரும். இது பட்டினத்தாரின் பொன்மொழி.

அதுபோல தன்னையறிதலும் ஒரு வேதாந்த சித்தமே.
ஆனால் தன்னை அறிவது என்பது அவ்வளவு எளிதான விசயம் அல்லவே. என் செய்ய பராபரமே.

எனக்கு அந்த சித்தம் வாய்க்குமோ வாய்க்காதோ அந்த சிவமே அருள்வான் தவமே.

என்றும் அன்புடன்
சிவனருள்

Anonymous said...

நல்ல தகவல் தோழி , இதை தான் புரட்சி தலைவர் எம் ஜி ஆர் ஒரு பாடலில் " உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் , உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்கமால் நீ வாழலாம் " என்றார்

Prakash said...

It's nice

Guruvadi Saranam said...

தோழி,
தங்கள் தன்னையறிதல் பதிப்பு அருமை. ஆன்மிக தேடலில் உள்ளவர்களுக்கு உபயோகமான பதிப்பு.
தொடருங்கள் உங்கள் சேவையை !
தோழி தங்கள் வலை பூவை என்னுடைய வலைக்கு இனைக்கமுடியுமா ?
http://www.thirusittrambalam.blogspot.com/

தங்கள் ஞானம் தொடர வாழ்த்துக்கள்!

நன்றி
ராஜேந்திரன்
பெங்களூர்.

balaji said...

இதை தான் சுவாமி விவேகனந்தர் மனதை வேறு ஒரு ஆளாக பார்க்க சொல்கிறார் நாம் எனும் ஆன்மாவை மனதில் இருந்து பிரிக்கவே இதை செய்ய சொல்கிறார். " அமைதியாக பத்மாசனத்தில் உட்கார்ந்த பின்பு மனதை கவனிக்க வேண்டும் அப்படி கவனிக்கும் பொழுது "நான் மனம் அல்ல நான் மனம் என்ன செய்கிறது என்று பார்த்து கொண்டு இருக்கிறேன் " என்று நாம் திரும்ப திரும்ப கூறிக்கொண்டு கண்களை மூட வேண்டும் . உடனே நம்மால் மனதை பிரிக்க இயலாது பல நாட்கள் பல வருடங்கள் பயிற்சி பின்பு( அவரவர் முயற்சியை பொருத்து) ஒரு நாள் மனம் பிரிந்து நிற்கும் அப்பொழுது மனமே நாம் யார் என்று கண்ணாடி போல காண்பிக்கும் " என்று சுவாமி விவேகனந்தர் கூறுகிறார். மேலும் இந்த நிலையை அடைய விவேகாநந்தரின் ராஜயோகத்தில் கூறிஉள்ளபடி யமம்,நியமம்,ஆசனம்,பிரணாயமம்,பிரத்யாகரம், தாரணை, சமாதி போன்ற நிலைகளை கடந்து நாம் வர வேண்டும்.
நல்ல பதிவு

rajkumar said...

naan thediya silavatril onru....thozhi neengal yazhuthiyathu mikka makizhchi....by raj

rajkumar said...

@SIVANARUL Nambikkai kadaul vazhi,,,by raj

kannan velsamy said...

தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்களால் வழங்கப்பட்ட சித்தர்களின் எளியமுறை குண்டலினிபயிற்சியின் மூலம் தன்னையறிய முடியும்

Post a Comment