தன்னையறிதல் @ மனம்

Author: தோழி / Labels:

காற்றை விட வேகமானது, கடலை விட ஆழமானது,அத்தனை உணர்ச்சிகளின் ஊற்றுக் கண்,ஆக்கம், அழிவு என்பவற்றை தீர்மானிப்பது என ஏகப்பட்ட பெருமைகளை தன்னகத்தே கொண்டது மனித மனம்.“மனம் இருந்தால் மார்க்கம் உண்டு” என்கிற பொது மொழியும், “மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா” எனகிற சித்தர் மொழியும் மனத்தின் மான்பினை விளக்கும்.

நவீன அறிவியலின் படி மனமானது ”உணர்வு சார் நிலை”,”அறிவுசார் நிலை” என இரண்டு முகங்களை கொண்டது. சித்தர்களைப் பொறுத்தவரையில் இதனை மூன்று நிலைகளாய் கூறியிருக்கின்றனர். நான் அவற்றை “புத்தி நிலை”,”சித்தி நிலை”,”முக்தி நிலை” என்பதாக புரிந்து கொண்டிருக்கிறேன்.

தன்னைத் தவிர, சுற்றியுள்ள அனைத்திலும் தன்னை இருத்தி அதுதான் தான் என நிலைக்கும் மனநிலைதான் புத்தி நிலை.தனக்கென வாழ்வதாக நினைத்துக் கொண்டு புற கூறுகளில் மட்டுமே வாழும் ஒரு நிலை இது. இந்த மன நிலையில் அகங்காரம்(Eg0) மட்டுமே செழித்தோங்கி இருக்கும். நாம் பெரும்பாலும் இத்தகைய மன நிலையிதான் வாழ்கிறோம்.

தான் யாரெனெ வெளியில் தேடாமல், தனக்குள்ளே தேடிடும் மன நிலைதான் சித்தி நிலை. இந்த நிலையில் அகங்காரம் அழிந்திருக்கும்.விருப்பு, வெறுப்புகளை நீக்கி எதிலும் விலகியிருந்து பார்க்கும் பக்குவமான ஒரு மன நிலை இது.

முந்தைய இரு நிலைகளின் முதிர்ந்த மூன்றாவது நிலை இது. தன்னை தான் உணர்ந்த பேரானந்தமான மன நிலையை முக்தி நிலை எனலாம். அன்பும், கருணையும் மட்டுமே ஊற்றெடுத்திடும் உயரிய நிலை இது.இதுவே தன்னையறிந்த நிலை.

உடலின் ஆரோக்கியம் மனதில்தான் இருக்கிறது. மனம் ஒழுங்கில் வந்தால் உடல் உறுதியாகும் அதனால் உயிர் நிலைக்கும். இதை உணர்ந்தால் மனதின் மகத்துவம் புரியும்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

11 comments:

nandhalala said...

மனம் - மாய குரங்கு. அதன் நிலைகளை மிக தெளிவாக சொல்லபட்டுள்ளது.

Guruvadi Saranam said...

அன்பு தோழி,
தாங்களின் மனம் பற்றிய தகவல் எளிமையாகுள்ளது.
மேலும் தொடருங்கள் !

என்றும் நட்புடன்
ராஜேந்திரன்
பெங்களூர்

Anonymous said...

நல்ல தகவல் தோழி , மகாபாரத்தில் பீஷ்மர் மனதை பற்றி கூறுகையில் " ஒரே நேரத்தில் இந்த மனதானது நம்மை பால்ய பருவத்திற்கும் பிறகு தாயின் மரணத்திற்கும் கொண்டு செல்லும் ஆற்றல கொண்டது " என கூறுவார் . ஆனால் தாங்கள் இதை எப்படி அடக்க வேண்டும் என்று கூறவில்லையே?

Anonymous said...

சித்தர்களின் மனம் பற்றிய இந்த விளக்கம் மிக உண்மையானது.

நல்ல மனம் நல்வாழ்வு தரும்.

அகமுதலி.

அகோரி said...

நல்ல தகவல் தோழி
நன்றி

http://machamuni.blogspot.com/ said...

அன்புள்ள தோழி அவர்களே!
நீங்கள் எழுதிய மனம் பற்றிய கருத்துக்கான விளக்கம்,கீழ்க்கண்ட இணைப்பின் வழியாக என் வலைப்பூவிற்கு வந்தால் காணலாமல். அந்த இணைப்பு
http://machamuni.blogspot.com/2010/11/3_10.html
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

Shiva said...

தன்னை அறிதல் பற்றி படித்த பாடல் ஒன்று........

பொன்வள்ளி செய்கின்றவன் பெரியோன் அல்ல ,
புகழான அட்ட சித்தி பெரியோன் அல்ல
முன்னின்ற வைத்தியனும் பெரியோன் அல்ல
மூச்சடக்கிஎழும்பினவன் பெரியோன் அல்ல
சின்னமுள்ள குழிஇருப்பான் பெரியோன் அல்ல
திறமுடனேகேவனமிட்டோன் பெரியோன் அல்ல
தன்நிலையை அறிந்தவனே பெரியோனாவான்
தனையறியான் வகைகெட்ட சண்டி மாடே....

Praveenkumar said...

படிப்படியாக கூறும் விதம். அருமை..!

RAVINDRAN said...

மேலும்,மேலும் தகவல்களை எதிர்பார்கிறேன்.

மோஹன் said...

ம்னதை ஏன் எப்படி த்வேஷத்துடன் பார்ப்பதை விட்டு விட்டு....அதற்க்கு நண்பனாக இருக்க பழகுவோம்...

Bhoothalingam said...

mind is the product of one's fate and the environment he lives.fate and environment decide his likes and dislikes.that is mind.mind is full of likes and dislikes.

Post a comment