தன்னையறிதல் @ புலனடக்கம்

Author: தோழி / Labels:

“நிலையில்லா மனிதனுக்கு நிலையற்ற பொருட்களின் மேல் நிலையாய் ஆசை”

இந்த ஒரு வரி தன்னையறிதலின் படிநிலைகளில் மிகவும் முக்கியமான ஒன்றான புலனடக்கத்தினை வலியுறுத்துகிறது.

ஐம்புலன்கள் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் பொதுவானவை. ஐம்புலன்களினால் உணர்ந்தவற்றை, அகத்தில் பதிந்து அவற்றை பகுத்தறிந்து செயல் படுவதால்தான் மனித இனம் உயர்வானதாக இருக்கிறது.ஆனால் இந்த ஐம்புலன்களின் செயல்கள் நிபந்தனைகளுக்கு உட்பட்டவை.உதாரணத்திற்கு, கண்களால் பார்க்க இயலும், ஆனால் இருளில் பார்க்க வெளிச்சம் அவசியம். இதுவே நிபந்தனை....

நிபந்தனைகள் தேவைகளை உருவாக்கும். தேவைகள் ஆசையை உருவாக்கும்... ஆசைகளே மனிதனின் அத்தனை துயருக்கும் ஆரம்பமும், முடிவுமாகிறது.இதை உணர்வதும், ஆசைகளை துறப்பதும் நம்முடைய முயற்சியிலும், பயிற்சியிலுமே இருக்கிறது. முயற்சி நம்முடையதாக இருந்தாலும், பயிற்சி?

எவ்வாறு தேர்ந்த சிற்பி ஒருவன் பாறையில் இருக்கும் தேவையற்ற பகுதிகளை செதுக்குவதன் மூலம் அழகிய சிலையொன்றினை உருவாக்கிறானோ, அதைப் போலவே மெய்யான குருவானவர் நம்மில் இருக்கும் குறைகளை உணர்த்தி தன்னையறிந்த பேரானந்த நிலையினை அடைய உதவுவார்.

இந்த உண்மைகளை உணர்த்தும் இடைக்காடர் பாடல்...

பொன்னிச்சை கொண்டு பூமிமுற்றும் திரிந்தால்
மன்னிச்சை நோக்கம் வாய்க்குமோ கல்மனமே
பொய்யான கல்விகற்றுப் பொருள்மயக்கம் கொள்ளாமல்
மெய்யான ஞானக்கல்வியினை விரும்புவாய் கல்மனமே

பேய்க்குரங்கு போலப் பேருலகில் இச்சைவைத்து
நாய்நரிகள் போலலைந்தால் நன்மையுண்டோ கல்மனமே
இரும்பைஇழுக் குங்காந்தத்து இயற்கைபோல் பல்பொருளை
விரும்பினதால் அவைநிலையோ? விளம்புவாய் கல்மனமேசித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

15 comments:

Anonymous said...

ஆஹா ! மிகவும் அருமை . இதுபோல் வரும் காலங்களில் நிறைய பதிவை தருமாறு கேட்டுகொள்கிறேன் . நன்றி

Guruvadi Saranam said...

தோழி,
தாங்களின் தன்னையறிதல் பாடதொடக்கம் மிகும் அருமை. தாங்கள் கூறிய நிபந்தனை உதாரணம் சூப்பர் இதுவரை படிக்காதது.

வாழ்த்துக்கள் !

நன்றி
ராஜேந்திரன்
பெங்களூர்

anbe kadavul said...

மிகவும் அருமை தோழி மிக்க நன்றி............

திவாண்ணா said...

இங்கே நான் படிக்க நிறைய இருக்கிறது. இது வரை இட்ட பதிவுகளை மின்னூலாக்கி வைத்து இருக்கிறீர்களா? எம் பதிவும் தங்களுக்கு பிடித்து இருக்கலாம். ஒரு முறை வந்து பாருங்கள்.

sakthi said...

அருமையானதொரு பகிர்வு தோழி நன்றி

nandhalala said...

அருமையான விளக்கம் தோழி !வாழ்த்துக்கள்

tamilvirumbi said...

thozi,

Self-intuition (Good-way) is explained in a simple and concise.Please keep up.
mgramalingam

வல்லிசிம்ஹன் said...

தன்னைத் தான் அறிந்துவிட்டால் போட்டியேது.ஞானத்தங்கமே என்று பாடத் தோன்றுகிறது. அருமை. தோழி. நன்றி.

அகோரி said...

அருமை

Praveenkumar said...

தோழி..! இடைக்காடர் பாடல் எளிமையாக புரியும் வகையில் உள்ளது.

Nanthakumar said...

Good job
thank you so much

Nanthakumar said...

very very good
thank you so much

Unknown said...

Romba nalla irukku

Unknown said...

super

Anonymous said...

தன்னை அறிந்தவன் தன் தலைவனை அறிவான்.

வாழ்த்துக்கள்

நன்றி

Post a comment