மெய்ஞானம் @ தன்னையறிதல்!

Author: தோழி / Labels:

சித்தர்களின் விஞ்ஞானம் பற்றி நிறையவே கதைத்தாயிற்று. இனிவரும் சில பதிவுகளில் அவர்தம் மெய்ஞானம் குறித்த எனது புரிதல்களை பகிர விரும்புகிறேன்.

குத்து விளக்கின் சுடர் சலனமில்லாத அமைதியுடன், தான் இருக்கும் சூழல் பற்றிய கவலையின்றி ஒளிர்வது அழகியல் சார்ந்த பரவச அனுபவம்.இந்த சுடர் தனக்கென எதையும் சேமித்துக் கொள்வதில்லை. சுடரின் தன்மையானது இருக்கிற வரையில் ஒளி மிகுந்ததாகவே இருக்கிறது. அடுத்த முறை கவனித்துப் பாருங்கள், புதிய அனுபவமாய் இருக்கும்.

சித்தர்களும் இத்தகைய ஒளிச்சுடரை போன்றவர்களே!.வற்றாத அன்பும், கருணையும் கொண்டவர்கள். நாடி வருவோருக்கு பேதமின்றி ஒளிதரும் சுடரைப் போல குருவடி பணிவோரை அவர்தம் அருளும், ஆசியும் நின்று வழி நடத்தும்.

இத்தகைய உயரிய சித்தநிலையின் ஆதாரம்தான் இன்றைய பதிவின் தலைப்பான ”தன்னையறிதல்”.

தன்னையறிதல் என்பதை நுட்பமானதாகவும்,சிக்கலான ஒன்றாகவும், குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே சாத்தியமாகக் கூடியதாகவும் நமது சமய மையங்கள் படிமப் படுத்தி இருக்கின்றன. என்னுடைய அனுபவத்தில் தன்னையறிதல் என்பது, ஆர்வமும், பணிவும் உள்ள எவரும் கைகொள்ளக் கூடிய ஒன்றுதான்.

இந்த தன்னையறிதலின் படி நிலைகளை சித்தர்கள் தங்கள் பாடல்களில் எளிதாய் உணரும் வண்ணம் விளக்கியிருக்கின்றனர். இனி வரும் பதிவுகளில் அவற்றை பகிர்ந்து கொள்கிறேன்.

காத்திருங்கள்...


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

9 comments:

அருட்சிவஞான சித்தர் said...

//...தன்னையறிதல் என்பதை நுட்பமானதாகவும்,சிக்கலான ஒன்றாகவும், குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே சாத்தியமாகக் கூடியதாகவும் நமது சமய மையங்கள் படிமப் படுத்தி இருக்கின்றன. என்னுடைய அனுபவத்தில் தன்னையறிதல் என்பது, ஆர்வமும், பணிவும் உள்ள எவரும் கைகொள்ளக் கூடிய ஒன்றுதான்....//
ஆமோதிக்கின்றேன்.

தன்னையறியும் ஆர்வம் எவருக்கு தோன்றுகின்றதோ அவருக்கு சித்தர்களின் ஆசி உண்டு. சித்தர்களை பணிந்து அவர்கள் கூறும் வழிமுறைகளைப் பின்பற்றி தன்னையறிய முடியும். இது மெய்ஞானக் கலை. அருட்சிவம் வலைப்பதிவில் "நான் யார் ?" எனும் தொடர்பதிவு இப்பொருளுடையதே.

தொடருங்கள்... தங்கள் பணி சிறக்கட்டும்.

Prakash said...

தன்னை அறிந்தால் எல்லாம் அறியலாம்.
பணி மென்மேலும் தொடர இந்த சின்ன நண்பனின் வாழ்த்துக்கள்
by
பிரகாஷ்

Ramesh said...

கதைத்தது போதும். இனி தான் மக்களுக்கு தேவையானதை சொல்ல ஆரம்பிசிருகீங்க. வாழ்த்துக்கள்.

jagadeesh said...

அறிவு- உண்மை. மெய்ப்பொருள் நிலை.

Anonymous said...

நல்ல தகவல் தோழி , இதுபோன்ற பதிவுகள் என்னை போல இருக்கும் ஒவோருக்கும் ஒரு வரம் . இந்த நேரத்தில் நான் இனொன்றும் சொல்ல வேண்டும் , இதுபோன்ற வலைத்தளங்கள் இன்றைக்கு நிறைய வந்துவிட்டன ,ஆனால் இந்த தளத்திற்கு எதுவும் இணையாகாது. தங்கள் பணி மேலும் அனைவருக்கும் சென்று அடைய , சித்தர்களை வேண்டுகிறேன் .

Guruvadi Saranam said...

தோழி,
தாங்களின் தன்னையறிதல் பாடம் தாங்கள் எழுதிய அணைத்து பாடங்களிலும் முக்கியமானது.
ஆவலுடன் எதிர்நோக்குகிறேன் !
சிறப்பாக எழுத வாழ்த்துக்கள் !

நன்றி
ராஜேந்திரன்
பெங்களூர்

Praveenkumar said...

தன்னையறியும் நிலையை அருமையாக விளக்கியிருக்கீங்க.. பகிர்வுக்கு நன்றி..!

SUNDARAN said...

அனைவருக்கும் வணக்கம். தன்னையறிதல் என்பது - தன்னை- இது என்ன? இது எப்படி செயல்படுகிறது? இந்த 'நான்' என்பது யார்? என்னை 'நான்' என்று எவ்விதம் அறிந்திருக்கிறேன்? இதன் வாழ்வுக்கு என்ன அர்த்தம்? இந்த 'நான்' எப்போது துவங்கியது? இது மாதிரி இன்னபிற கேள்விகளும் உங்களுக்கு உதித்தால்! - இந்த தன்னையறிதலைப்பற்றி கொஞ்சம் கவனிக்கலாம். நமது வாழ்வு அகப்பரிமாணம், புறப்பரிமாணம் என நமது கவனக்குறைவால் இருவித பரிணாமமுடையதாக பிரிந்து கிடக்கிறது. வாழ்வும் இப்போது அக வாழ்வு, புறவாழ்வு என இரண்டாக பிரிந்து கிடக்கிறது. நமது புற வாழ்வை நமது அறிவு ( மனம் ) பராமரித்து வருகிறது. நமது அக வாழ்வை நமது உணர்வு பராமரித்து வருகிறது. புறவாழ்வை மனம் பராமரித்து வந்தாலும், அதன் சாராம்சத்தை நமது உணர்வே எடுத்துக்கொண்டு வாழ்கிறது. ஆக! புறவாழ்வின் பயனும் நமது அகவாழ்விலேயே உணரப்பட்டு, வாழ்வின் மகத்துவமே அகவாழ்விலேதான் அடங்கிக்கிடக்கிறது என்பது கண்கூடு. ஆக! ஒரு மனிதன் தன்னையறிய விரும்பினால் தனது உணர்வுகளை அறிதல் வேண்டும். உடம்பு எனும் ஸ்தூல செயல்பாட்டினை நிறுத்தி, ஐம்புலன்களின் செயல்பாடுகளை நிறுத்தி, மனதின் காட்சி பிம்பங்கள், மனதின் மொழி பிம்பங்களையும் , { மனதையே ) நிறுத்தி- படர்ந்து விரிந்து முரண்பட்டு அலையும் உணர்வையும் ஒரு பூஜ்யத்துக்கு கொண்டுவந்து, உணர்வை ஒரு புள்ளியில் நிறுத்த ( எல்லா விருத்திகளும் அடங்கி ) உணர்வு ஒரே ஏக உணர்வாக மலரும். அந்த ஏக உணர்வு பூரணமானதாக இருக்கும். எங்கும் நீக்கமற நிறைந்த பூர்ணம் அது.- 'தான்' -என்பதுவும் அதுவே! தன்னையரிதலும் இப்படியே!

Zen India said...

@SUNDARAN
ooommmmm.............

Post a comment