சித்தர்களின் மலைகள் - அகத்தியர் மலை

Author: தோழி / Labels:

நமக்குக் கிடைத்திருக்கும் தகவல்களின் படி சித்தர்கள் பெரும்பாலும் வெகுசன வாழ்விடங்களில் இருந்து ஒதுங்கியே வசித்தனர். தங்களின் மெய்ஞான மற்றும் விஞ்ஞான தேடலுக்கு தேவையான தனிமையும், இயற்கை வளமும் அவர்களுக்கு மலைகளும், அவைசார்ந்த இடங்களில் கிடைத்திருக்க வேண்டும்.

அந்த வகையில் தமிழகத்தின் பல்வேறு மலைகள் சித்தர்களின் வாழ்விடங்களாக விளங்கியிருந்தன. இன்றைக்கும் அவர்கள் அங்கே வாசம் செய்வதாகவும் நம்பப் படுகிறது. தாங்கள் வாழ்ந்த மலைகளின் அமைப்பு மற்றும் சிறப்பினை பற்றி தங்களின் பாடல்களில் சித்தர்கள் பலரும் விளக்கியுள்ளனர்.

இந்த வாரம் அத்தகைய சில மலைகளைப் பற்றிய குறிப்புகளை பார்ப்போம். முதலில் அகத்தியர் வசித்து வருவதாய் நம்பப் படும் ”அகத்திய மலை” பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

அகத்திய மலை எனப்படுவது மேற்கு தொடர்ச்சி மலைகளில் ஒன்றாகும். தற்போது இது கேரளத்தின் மலபார் பகுதியில் அமைந்திருக்கிறது. இதற்கு பொதிகை மலை, தமிழ் மலை, தென்மலை, மலையமா மலை, மலையம் என்ற வேறு பெயர்களும் உண்டு. தாமிரபரணி நதி இந்த மலையில்தான் உற்பத்தியாகிறது.

இந்த மலையினைப் பற்றி அகத்தியர் தனது பாடலில் பின்வருமாறு கூறுகிறார்.

வித்தனாம் புலத்தியனே இன்னஞ்சொல்வேன்
சிறப்படனே இருளகற்றுஞ் சூரியன்போல்
வெத்தியுடனெந்தனது மலைவளத்தை
விருப்பமுடன் சொல்லுகிறென் வினவிக்கேளு
முத்திபெற சித்தர்களை காணவென்று
மூதுலகில் வெகுகோடி மாண்பரப்பா
நித்தியமும் எந்தனது கிரியைநாடி
நிஷ்டையடன் தவமிருக்க வருவார்பாரெ.
பாரெதான் எந்தனது மலைவாரத்தில்
பான்மையுடன் வெருகோடி சித்தருண்டு
நெரேதான் னெழுகடலா மார்கத்தோர்கள்
நெர்மையுடன் கதிர்போல நாடிவந்து
சீரேதான் சிவமலையைக் கண்டுமல்லோ
சித்தருட பதாம்புயத்தை நண்ணவெண்ணி
செரெதா னவர்களிடங் கிட்டிநின்று
சேர்வைக்கும் முன்பணிக்கம் நிற்பார்தானே.
நிற்கையிலே சித்தர்களு மனங்குளிர்ந்த
நெர்மையுடனவர்மீதிற்கிருபைகூர்ந்து
விற்பனமாய் வந்ததொரு மாண்பருக்கு
விருப்பமுடன் ஞானோப தேசஞ்செய்ய

-அகத்தியர் 12000 -

என் மாணவனே!, புலத்தியனே, இருளை இல்லாது அகற்றும் சூரியன் போல என் மலையின் வளம் பற்றி விருப்பமுடன் சொல்கிறேன். வினவிக் கேளு என்று துவங்குகிறார்... முக்தி பெற, சித்தர்களைக் கான என்று உலகில் வெகு கோடி மனிதர்கள் எனது மலையைத் தேடி தினமும் நிஷ்டையுடன் தவமிருக்க வருவார்கள் பார். அத்துடன் எனது மலை அடிவாரத்தில் பல கோடி சித்தர்கள் வாழ்வார்கள். இவர்களை மக்கள் நாடிவந்து அவர்கள் பாதம் பணிந்து சேவை செய்வார்கள். அந்த சேவையில் மகிழ்ந்து அவர்கள் விருப்பமுடன் மக்களுக்கு ஞான உபதேசம் செய்வார்கள். என்கிறார். இவ்வளவு சிறப்புக்கள் பொருந்தியது இந்த மலை என்று குறிப்பிடுகிறார்.

தற்போது இந்த மலையில் அகத்தியருக்கு சிலை ஒன்று பிரதிட்டை செய்யப் பட்டு ஆண்டு தோறும் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றது.

நாளைய பதிவில் ”விராலிமலை பற்றி” பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

10 comments:

சுந்தரா said...

அகத்தியரின் பொதிகைமலையில் அத்தனையும் மூலிகைகள்தான்...அதுதான் குற்றால மலையும்கூட.

பகிர்வுக்கு நன்றிகள் தோழி!

அகோரி said...

அருமை

Praveenkumar said...

சுவாரஸ்யமான தகவல்கள்..!! இன்னும் நிறைய எதிர்பார்க்கிறேன்..! தங்கள் சேவைக்கு மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்..!

Anonymous said...

நல்ல தகவல் தோழி , அப்படியே தமிழ்நாட்டில் இருக்கும் சதுரகிரி மலை பற்றி ஏதாவது இருந்தால் கூறவும் .

B.JSMALI said...

இனிய தோழிக்கு இதயமார்ந்த நன்றிகள்..நான் வாழ்ந்து வரும் பச்சை மலையைப்பற்றி தாங்களுக்கு தெரிந்த செய்திகளை வெளியிட்டால் மிகவும் உபயோகமாக இருக்கும் . இங்கு கரடி சித்தர் முதலியவர்கள் இன்றும் வாழ்வதாக பலர் கூறுகிறார்கள்.

தங்களின் பதிலை ஆவலுடன் எதிர்ப்பாக்கும் நண்பன்.

h e m a n t h said...

சதுரகிரி பற்றியும் எழுதுங்கள், தோழி! இன்னும் பல சித்தர்கள் வாழ்வதாகச் சொல்லப்படும் மாமலை அது!
நான்கு மலைகளும், நான்கு சிவத்தலங்களும், தீர்த்தங்களும், பல மூலிகைகளும் கொண்டது சதுரகிரி. நான்
அங்கு சில முறை சென்றிருந்தாலும், தாங்கள் சித்தர்கள் சதுரகிரி பற்றி எழுதிய குறிப்புக்களோடு எங்களுக்கு
வழங்குமாறு வேண்டுகிறேன்.

அன்பன்,
hemanth
http://hemanththiru.blogspot.com

subamnaga said...

மிக்க பயனுள்ள தகவல்
சி .மணிகண்டன்

kolandhail said...

rombavum arumai

premnath said...

super

ramesh said...

well

Post a comment