நண்பர்களே,
எனது நான்காவது முயற்சியாக அகத்தியர் அருளிய “அகத்தியர் கலைஞானம் 1200” என்ற நூலில் கூறப் பட்டுள்ள அறுபத்தி நாலு சித்துக்களை மட்டும் தனியே மின்னூலாக தொகுத்திருக்கிறேன். முதல் முறையாக பாடல்களுக்கான விளக்கங்களையும் இந்த மின் நூலில் சேர்த்திருக்கிறேன்
’சித்தர்களின் அறிவியல்’ என்பது தொடர்பான ஆய்வுகளுக்கான படியாக இந்த மின் நூலினை கருதிட வேண்டுகிறேன். இந்த நூலில் விளக்கப் பட்டுள்ள சித்துகளின் சாத்தியங்களின் மீதான தொடர் ஆய்வுகள், விவாதங்கள் போன்றவையே மறைந்திருக்கும் பல தகவல்களை கட்டவிழ்க்க உதவும். ஆர்வம் உள்ள எவரும் இதனை பயன் படுத்திக் கொள்ளலாம்.
எனது மின்னஞ்சலை தொடர்பு கொள்வதன் மூலம் எவரும் இந்த மின் நூலினை பெற்றுக் கொள்ள இயலும்.
சித்தர் பெருமக்களால் அருளப் பட்ட சோதிட நுட்பங்களை தனியே ஒரு பதிவில் தொகுக்கும் நோக்கத்துடன் புதிய பதிவொன்றினை உருவாக்கி இருக்கிறேன். சித்த ஜோதிடம் என பெயரிடப் பட்டுள்ள இந்த வலைப் பதிவில், காலத்தால் அழிந்து போய்விடக் கூடிய நிலையில் இருக்கும் பல அரிய தகவல்களை தொகுத்திட எண்ணியிருக்கிறேன்.
தமிழகத்தில் இருந்து வெளியாகும் “ஞான ஆலயம்” என்கிற சஞ்சிகையின், இந்த இதழில் இருந்து எனது கட்டுரைகளை தொடராக பிரசுரிக்க இருக்கின்றனர். இந்த வாய்ப்பினை அளித்த பத்திரிக்கையின் ஆசிரியர் அவர்களுக்கு இந்த பதிவின் மூலம் எனது நன்றியறிதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வலைத் தளத்தின் முன்னூறாவது பதிவு இது. சிறு துளியாய் துவங்கப் பட்ட இந்த வலைத்தளம் கடந்த ஒன்பது மாதங்களில் சீரான வளர்ச்சியை கண்டிருக்கிறது.சித்தர்கள் பற்றிய விவரங்களை மட்டுமே பகிர்ந்து கொள்ளும் இந்த தளத்தினை இது வரையில் நாநூற்றி அறுபது நண்பர்கள் பின் தொடர்கின்றனர். தினசரி குறைந்தது ஐநூறுபேரால், இரண்டாயிரத்தி ஐநூறு பக்கங்கள் வரையில் வாசிக்கப் படுகிறது.
என்னை தொடர்ந்து எழுதச் செய்வது இத்தகைய நண்பர்களின் அன்பும், ஆதரவும்தான்...அத்தனைக்கும் நன்றி என்பது மிகச் சிறிய வார்த்தையாகவே இருக்கும். இந்த ஒத்துழைப்பு எதிர்காலத்திலும் தொடர வேண்டுமென பணிவுடன் வேண்டி, அனைவரும் வாழ்வில் நளமும், வளமும் பெற எல்லாம் வல்ல குருவருளை வேண்டி நிற்கிறேன்.
என்றும் நட்புடன்
தோழி

Post a Comment

24 comments:
உங்கள் தளத்தின் இந்த வளர்ச்சி முழுக்க முழுக்க
உங்கள் உழைப்பினால் மட்டுமே கிடைத்தது ..!
மேலும் பல உயரங்களை எட்ட இருக்கின்றீர்கள்
அதற்க்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...!
சித்த ஜோதிட தளத்திற்க்கும், ஞான ஆலயம் இதழில் தங்கள் கட்டுரை வர இருப்பதும் குறித்து மிக்க மகிழ்ச்சி...!
300 வது பதிவிற்க்கும் வாழ்த்துக்கள்..!
300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்! தொடரட்டும் உங்கள் பயணம்!!
வாழ்க வளமுடன்!!!
எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு தொடரட்டும் தங்கள் சேவை தோழி..!!
தங்களது முன்னூறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
முயற்சி தளராத
முன்னூறு பதிவுகள்
அள்ள அள்ள அதிசயமாய்
அத்தனையும் முத்துக்கள்
இன்னல்களை தாண்டிய
இடைவிடாத முயற்சி
இத்தனையும் பெற்றது
இறைவழிச் சித்தர்களால்
சித்தர்கள் ஆசி பெற்ற
சித்தாகர்ஷணியே
சித்தர்களை தரிசித்த
சித்தலக்ஷ்மியே
வாழ்க
வளர்க
உம்
தொண்டு.
அமானுஷ்யர்களாகவும், அணுக முடியாதவர்களாகவும் மட்டுமே கற்பிதம் செய்து வைக்கப் பட்டிருந்தவர்களை, அணுகக் கூடியவர்கள்தான் என்றும், அவர்களின் அறிவின் முதிர்ச்சியையும் உணர வைத்தது உங்கள் பதிவுகள்தான்.
நான் தமிழச்சி என்பதில் நீங்கள் காட்டும் பெருமிதமாகட்டும், எனனுடைய இனம் எதிலும் குறைந்ததில்லை என்கிற தன்னம்பிக்கையாகட்டும், பாருங்கள் எங்கள் முன்னோர்களின் அறிவையும் திறத்தையும் என்கிற எழுச்சியான மனவோட்டத்தையும் இந்த பதிவுகளின் நெடுகில் நான் கவனித்திருக்கிறேன்.
சினிமா, அரசியல்,ஊர்வம்பு என்ற வட்டத்திற்குள் சிக்கியிருக்கும் தமிழ் பதிவுலகில் நீங்கள் நிச்சயமாக கவனிக்கப் பட வேண்டியவர். ஐநூறு பார்வையாளர்கள் என்பது சந்தோஷமான தகவல். ஆனால் மேலு பலருக்கு இந்த பதிவுகள் போய்ச் சேர வேண்டும்.
அறிந்தவர் தெரிந்தவர்களிடன் நிச்சயம் உங்கள் பதிவுகளை பரிந்துரைக்கிறேன்.தொடரும் உங்கள் பயணத்திற்கு வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் தர்ஷினி
தோழி
தங்களின் 300 வது பதிப்புக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !
தங்கள் பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் !
தங்கள் எல்லா நலன்களையும் பெற்றும் உங்கள் வலையில் உள்ள அனைத்து செய்திகளும் நல்லோர்களுக்கு சென்று சேர ஆண்டவனை
ப்ரார்த்திக்கிறேன்.
குருவடி சரணம் !
நன்றி
ராஜேந்திரன்
பெங்களூர்
300வது பதிவை நிறைவு செய்த தோழிக்கு வாழ்த்துக்கள்.3000 பதிவிட ஆண்டவன் அருள்புரிய வேண்டுகிறேன்.
அரவரசன்.
வாழ்த்துகள் சகோதரி..
300 வது பதிவுக்கும், ஞான ஆலயம் இதழில் உங்கள் எழுத்துகள் வருவதற்கும்..
மேலும் மேலும் வளர வாழ்த்துகிறேன்.
வாழ்த்துகள் தோழி, உங்கள் அரும்பணிக்கு வேறு வார்த்தைகள் தெரியவில்லை, உங்கள் மூலம், தமிழ் கூறும் நல்லுலகம் மிகுந்த பயனடையும் என்பது திண்ணம்.
http://usetamil.forumotion.com
good work keep it up
வாழ்த்துகள்...
எனக்கும் அந்த நூலினை தருமாறு , கேட்டுகொள்கிறேன் .
தோழி,
சித்தர்களை மக்கள் உணர்ந்திட எளிய, அழகிய தமிழில் இத்துணை நாள் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்..
அருமையான சேவை! வாழ்த்துக்கள்! இன்னும் நிறைய எழுதுங்கள்..
அப்படியே என்னுடைய தளத்திற்கு வருகை தந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்திடவும் வேண்டுகிறேன்.
http://hemanththiru.blogspot.com/2010/10/my-naadi-astrology-experience-truly.html
அன்பன்,
hemanth.
http://hemanththiru.blogspot.com
உங்கள் சேவை , எங்களுக்கு தேவை , உங்கள் பணி தொடர என் வாழ்த்துகள் .
கடமையை நன்கு தொடர நண்பனின் வாழ்த்துக்கள்.
என் ஆதரவு எப்பொலுதும் உங்கலுக்கு உண்டு
வழ்துகள்
இறையருள் நம் வசம் நிற்க
அன்புள்ள தோழிக்கு ரஹ்மானினின் வணக்கங்கள் தங்களுடைய சேவை மிகவும் புனிதமானது சித்தர்களை தேடி அலையும் எனக்கு பெரும் குருவாகவே இருக்கிறிர்கள் நன்றிகள் பல
சித்தர்களின் ஆசியால் நீடூழி காலம் வாழ்ந்து மக்களுக்கு சேவை செய்ய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
தங்களது அரும்பணிக்கு வாழ்த்துக்கள்.
சித்தர்களின் ஜோதிடக்கலை பற்றி தாங்கள் துவக்கியுள்ள சித்த ஜோதிடம் வலைப்பதிவு சித்தர்களின் அருளாசியால் பொலிவுறும்.
தொடரட்டும் தங்கள் பணி.
எனக்கு அதிகமாக சொல்லதெரியாது என்றும் நீவீர்
வாழ்க! வளமுடன்!!
மின்னூல் அனுப்பிட வேண்டுகிறேன்
நன்றி.
---- அழகிரி ----
சகோதரி எனக்கும் தந்து உதவுங்கள் ..ஒரு வாரம் உங்கள் பதிவை படிக்க முடியாதுமல் போனது வருத்தம் அளிக்கிறது ..தொடர்ந்து படிக்கிறேன் ..
வாழ்க வளர்க ..முன்னூறும் முத்துக்கள் ..எண்ணிக்கை முக்கியமில்லை ..ஒவ்வொன்றும் புதையல்கள் ..தேடிதந்த நீங்கள் சித்தி (சித்தர் என்பதின் பெண்பால் )..
முடிந்தால் www.ayuvedamaruthuvam.forumta.net -forum இல் lஉங்கள் பக்கத்தில் எழுதுங்கள்
ரொம்ப பெரிய விஷ்யம்...உங்கள் உழைபுக்கும்,, ஆர்வத்துக்கும் கிடைத்த அங்கீகாரம்... நீங்கள் இதற்கு முற்றிலும் தகுதி உடையவர்...மேலும் உங்கள் புகழ் பரவ எல்லாம் வல்ல சக்தியை வணங்குகிறேன்...வாழ்த்துக்கள்... உங்கள் பணி தொடரட்டும்
so happy for you! Congratulations!!
Ungal payanam indidhai thodara en manamaarndha vaazhuthugal!!
Really happy to read.Well done.
Post a Comment