சித்தர்களை நேரில் தரிசிக்க ஒரு வழிமுறை!

Author: தோழி / Labels:

நம்புவதற்கு சற்று சிரமமான ஒரு தகவல்தான் இது. நிஜத்தில் நம்முடன் இல்லாத சித்தர் பெருமக்களை நேரில் தரிசிக்கும் முறை பற்றி பல பாடல்கள் நமக்கு கிடைத்திருக்கின்றன. ஒரு வேளை இந்த பாடல்களின் பின்னால் ஏதேனும் சூட்சுமமோ அல்லது மறைபொருளோ இருக்கலாம், என்னுடைய சிற்றறிவுக்கு எட்டியதை இங்கே தருகிறேன்.

அந்த வகையில் அகத்தியர் அருளிய பாடலொன்றினை இன்றைய பதிவில் ப்கிர்ந்து கொள்கிறேன். இந்த பாடல் ”அகத்திய பூரண சூத்திரம்” என்ற நூலில் இருக்கிற்து.


"அதிகமாய் சித்தர்களைநீ தெரிசிக்க தானே
தியானம் ஒன்று சொல்வேன் கேளு கேளு
சிவாய நம ஓம் கிலீம் என்று செபி
வரிசிக்கும் சித்ததெல்லாம் வெளியில் காணும்
மகத்தான சித்தரப்பா வணங்கி நில்லு
பரிசிக்கும் படி அவரைக் காண்பாயப்பா
பணிந்திடுவாய் பாதத்தில் சிரசு தட்ட
கிரிசிக்கும் யார் நூலில் சார்ந்தே என்று
கேட்கில் அகத்தீசுரர் கிருபை என்னு"

- அகத்தியர் -

சித்தர்களை தரிசிப்பதற்கு தியானம் ஒன்று சொல்கிறேன் கேள் எனத் துவங்குகிறார் அகத்தியர்....

"ஓம் கிலீம் சிவாய நம" என்று நிதமும் செபித்து தியானம் செய்து வந்தால் சித்தர்களைக் காணலாம் என்றும் அப்படி அவர்கள் தோன்றும் பொது பரிகசிக்கத்தக்க உருவத்தில் தோன்றுவார்கள் என்றும் அப்படி அவர்களை கண்டதும் தலையை அவர்கள் பாதத்தில் படும்படி வைத்து வணங்க வேண்டும் என்று கூறுகிறார். மேலும் அவர்கள் இந்த வழிமுறையை எப்படி அறிந்தாய் எனக் கேட்டால் அகத்தீசர் அருளால் அவர் நூலிலிருந்து அறிந்து கொண்டேன் என்று சொல் என்கிறார்.

நம்புவதற்கு சிரமமான ஒரு தகவல்தானே...!

ஆர்வமும்,விடாமுயற்சியும், குருவருளும் கூடியவர்கள் இதை முயற்சித்துப் பார்க்கலாமே!

”நந்தீசர்” மனிதன் பிறந்த மாதத்தினை வைத்து அவர்தம் இயல்புகளை வரையறுத்திருக்கிறார், அந்த தகவல்களுடன் நாளை சந்திக்கிறேன்.

Post a Comment

27 comments:

Guruvadi Saranam said...

தோழி
வெகு நாட்களாக சித்தர்களை காண யாரேனும் உபதேசிப்பர்ககளா என்று காத்திருந்தேன். இந்த பதிவுக்கு மிக்க நன்றி.மேலும் நான் ஒரு தலத்தில் படித்தேன் சரியா? தவறா? என்று தெரியாது.
கருவூரர் பாடலில் இருந்து எடுத்து இருப்பதாக கூறியுள்ளது.சிவனின் பஞ்ச முகத்தை ஒரு ஒரு திசைக்கு ஓப்பிட்டு (வடக்கு , தெற்கு, கிழக்கு, மேற்கு, ஆகாயம் ) முறையே
1 . சத்துவ மந்திரம் .
2 . அகோர மந்திரம்
3 . சத்யோ சாத மந்திரம்
4 . இசான்ய மந்திரம்
5 . வாமதேவம் மந்திரம் உள்ளதாம்.
ஒரு முகத்திற்கு 25 மந்திரம் வீதம் மொத்தம் 125 உள்ளதாக இருக்கிறது. இது சரிதானா என்று பார்த்து சொல்லுங்கள்.
மேலும் பாடலில் "சிவாய நம ஓம் கிலீம் "என்று உள்ளது. தங்கள் மாற்றி கூறியுள்ளீர்கள். எது சரி ?
இசான்ய மந்திரத்தில் ஒன்று
1 . "மய நசிவ ஸ்வஹா" - இம்மந்திரம் கூறினால் ஆகாயத்தில் ஒளிர் சித்தர்கள் ஆசி கிட்டும். கருவூரர் சித்தர் பாடலில் உள்ளதாக கூறியுள்ளார். சரியா சொல்லுங்கள்.
தங்கள் பதிலை எதிர்பார்த்து !

நன்றி
ராஜேந்திரன்
பெங்களூர்.

பிரவின்குமார் said...

வழக்கம்போல் சித்தர்கள் பற்றி அரிய புதுமையான தகவல்கள். பகிர்வுக்கு நன்றி தோழி..!!

தோழி said...

@Guruvadi Saranam

"தருவார்கள் ஓமென்ற அட்சரத்துள்
சகலஜீவ தயாபரனும் இதற்குள்ளாச்சு
குபரனாம் வினாயகன்றன் சுழிதானப்பா
குவலையங் களுக்குமுன்னே பிறந்தமூலம்
திருவான வினாயகரின் சுழியை முந்திச்
செபிப்பாய் நீயென் மந்திரங்கள் முற்றே"

- அகத்தியர் -

என்ற பாடலில் அகத்தியர் தனது மந்திரங்களின் ஆரம்பத்திலேயே ஓம் என்ற அட்சராத்தை பயன் படுத்த வேண்டும் என்கிறார்.. இது போன்ற அவர் பாடல் குறிப்புகளைக் கொண்டே அவர் பரிபாஷையான முறையில் சொன்ன இந்த மந்திரத்தின் ஒழுங்கான வடிவம் அமைக்கப்பட்டுள்ளது..

நீங்கள் குறிப்பிட்ட தகவலில் உள்ள கருவூராரின் பாடல் வரிகளும், அது குறிக்கப்பட்டுள்ள நூலின் பெயரும் இல்லாது என்னால் உறுதிபடுத்திச் சொல்லமுடியாது. நன்றி.

Suddi said...

Hi,

Your blogs are very different - not on politics, cinema, TV programs.. You are little different or may be, totally different from rest of the crowd.

I read your blogs fully. Else, I cannot
decode the words of the poems or songs of the
Chithars.

Good job, keep it up.

Have you made a blog, with the timelines of Chithargal?. Like when they were born, when
they attained Jeevasamathi?. Please provide
more information if possible. Thanks.

Sudharsan

JILLU-nu ORU YUVA said...

ஒரு சின்ன திருத்தம் சிவா என்பதை விட ஷிவா என்ற உச்சரிப்பு மிகவும் சரியானது ஆகும் ,

JILLU-nu ORU YUVA said...

இதை நான் பயன்படுத்தி பார்த்து இருக்கிறேன் தோழி பதில் தரவும் ,நன்றி

JILLU-nu ORU YUVA said...

இடையுறுக்கு மன்னிக்கவும் தோழி , சித்தர்களை பார்க்க உதவும் மந்திரம் என்பதை விட பெண்தன்மையை பார்க்க உதவும் மந்திரம் என்று சொல்லலாம் ,

praveen said...

நன்றி தோழி , இப்போதே இந்த மந்திரத்தை கூறி , என் நீண்ட நாள் ஆவலான அகத்தியரை நேரில் காண முயற்சி செய்கிறேன் .

pulipani said...

மந்திரங்கள் உண்டுநீர் மயங்குகின்ற மானிடர்
மந்திரங்கள் ஆவது மறத்தில் ஊறல் அன்றுகாண்
மந்திரங்கள் ஆவது மதித்தெழுந்த வாயுவை
மந்திரத்தை உண்டவர்க்கு மரணம் ஏதும் இல்லையே!!!
--- சிவவாக்கியர்
விளக்கம் :
மந்திரங்கள் யாவையும் படித்து ஓதி மயங்குகின்ற மனிதர்களே !! மந்திரம் என்பது மனிதன் திறமே . மந்திரங்கள் தர்ம வழியையே பின்பற்றும் மந்திரங்களை உணர்ந்து உச்சரிக்கும் போது அதில் ஏழும் சப்தங்களின் அதிர்வலைகள் மூலதாரத்தில் மோதி அங்கிருக்கும் கனலான வாயுவை எழுப்புதற்கே அன்றே அமைக்கபட்டது .அதனால் வாசி மலாய் ஏறி பிராணசக்தி கோடி மரணமில்ல பெரு வாழ்வு அடைவார்கள் . மந்திரங்களை முறையாக அறிந்து ஓதி ஆறு ஆதாரங்களிலும் நிறுத்தி தியானிப்பவர்களுக்கு மரணம் ஏதும் இல்லையே..

ஆக அன்பர்கள்ளே, சித்தர்கள் உரைத்த அனைத்து மந்திரகளும் சத்கி வாய்ந்தவையே ., மனத்தை நேர்கோட்டில் வைத்து .,மந்திரங்களை தியானித்தால் சித்தர்களின் அதிர்வலைகள் கிடகபெரும் ., அவர்கள் தரிசனமும் கிடைக்கும். நீங்கள் கேட்டதெல்லாம் தருவார்கள் ....!!!இது என்னுடைய அனுபவ உண்மை .

இப்படிக்கு .,
புலிப்பானி சித்தர் அடிமை .,
சித்தர் பைத்தியம் .,

Guruvadi Saranam said...

@JILLU-nu ORU YUVA
நண்பரே !

சித்தரை பார்க்க அல்ல பெண்தன்மையை அறிய என்று சொல்லியுள்ளீர். புரியவில்லை
சற்று விளக்கும்.

நன்றி
ராஜேந்திரன்

Guruvadi Saranam said...
This comment has been removed by the author.
Guruvadi Saranam said...

யுவராஜா நண்பரே !

சித்தரை பார்க்க அல்ல பெண்தன்மையை அறிய என்று சொல்லியுள்ளீர். புரியவில்லை
சற்று விளக்கும்.

நன்றி
ராஜேந்திரன்

Guruvadi Saranam said...

புலிபாணி நண்பரே !
தங்கள் அனுபவத்தை சற்று கூறுங்கள். நான் குரு தரிசனம் நாடி முயன்றுகொண்டிருபவன்.
கொண்ஜெம் சொல்லுங்களேன் ப்ளீஸ் !

நன்றி
ராஜேந்திரன்

Guruvadi Saranam said...

புலிபாணி நண்பரே !
தங்கள் அனுபவத்தை சற்று கூறுங்கள். நான் குரு தரிசனம் நாடி முயன்றுகொண்டிருபவன்.
கொண்ஜெம் சொல்லுங்களேன் ப்ளீஸ் !

நன்றி
ராஜேந்திரன்

kalyanampoondy said...

ஐயா நான் சித்தர்கள் பட்றீ தெரிந்து கொள்ள விரும்புகிறேன்

மு.வேலன் said...

நீங்கள் முயற்ச்சித்ததுண்டா?

pon said...

எல்லாம் நல்ல வார்த்தைகன்....

நன்றிகள்

suban said...

Really super work siththarkal karunaiyaal intha seyalkal innum valarum enrum nanriudan

Uruth thariththa naadiyil odunkuhinra vaayuvai karuththinaal iruththiyeh kapaalam eaetta vallirael

Moola naadi thannileh mulaith theluntha yothiyai naalu naali ummuleh naadiyeh iruntha pin paalanaahi vaalalaam parap pirammam aahalaam




Vaalka sides sakthi

Joseph said...

அன்புள்ள தோழிக்கு,

வணக்கம்,

நான் இந்த இணையதளத்தை கண்டதே என் சித்திக்கு வலிவகுததாகதான் நினைக்கிறன். உங்களுடைய அணைத்து பதிவுகளும் படிப்பதற்கு எதுவாக உள்ளது, ஆனால் படிப்பதற்கு நான் வேலை பார்க்கும் இடம் எதுவாக இல்லை, அதனால் உங்கள் பதிவுகளை நான் இறக்கிக்கொள்ள வசதியாக அமைத்தீர்கள் என்றால். நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

Joseph said...

அன்புள்ள தோழிக்கு,
வணக்கம், நான் இந்த இணையதளத்தை கண்டதே என் சித்திக்கு வலிவகுததாகதான் நினைக்கிறன். உங்களுடைய அணைத்து பதிவுகளும் படிப்பதற்கு எதுவாக உள்ளது, ஆனால் படிப்பதற்கு நான் வேலை பார்க்கும் இடம் எதுவாக இல்லை, அதனால் உங்கள் பதிவுகளை நான் இறக்கிக்கொள்ள வசதியாக அமைத்தீர்கள் என்றால். நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்.

kannaih said...

@Joseph


are u really interested to daharsan
cthirgal go to Kanakanpatti 8 Kms before Palani.

Kutti said...

how to download or print this orticle thozhi..?

சித்தர்கள் said...

ஓம் சிவ சிவ ஓம் பகிர்வுக்கு
நன்றி

ShivaVinod said...

mikka nandrigal idai pondra or thagavalukaga daan pala naal thedi kondu irunden.

TR said...

thank you

kavin said...

how to print is page sir.kindly tell me sir.

yuvaraj said...

dear, i am yuvaraj from kuvathur enakku siththarkali neril kaana vendum muyarchithu varugiren vazhi sollungalen please 09677624574

Post a Comment