மனிதன் பிறப்பில் இருந்து தன் வாழ் நாளில் செய்திடும் பாவபுண்ணியங்களின் பலன்களைப் பொறுத்து, இறப்புக்குப் பின்னர் மீண்டும் இவ்வுலகில் பிறந்து அவற்றை அனுபவிப்பதாக நமது சித்தாந்தங்கள் நம்புகின்றன. மனிதனின் பாவக் கணக்குகள் தீரும் வரையில் இந்த சுழற்சி தொடர்வதாகவும் கருதப் படுகிறது.இந்த சுழற்சியில் இருந்து விடுபட்டு குறைவில்லா இன்பத்துடன் இருந்திடும் ஒரு நிலைதான் முக்தி எனப் படுகிறது.
முக்தி நிலை என்பது மிக உயரிய குறிக்கோளாய் கூறபபடுகிறது.கடுமையான முயற்சி மற்றும் பயிற்சியினால் மட்டுமே ஒருவர் இந்த மேலான நிலையினை அடைந்திட முடியும்.யோகம் என்கிற எட்டு நிலைகளில் தேர்ந்து தெளிந்தால் மட்டுமே முக்தி நிலை சாத்தியமாகும்.இது பற்றி விரிவாக முந்தைய பதிவுகளில் அலசியிருக்கிறோம்.
இத்தகைய கடினமான முக்தி நிலையினை எட்டிடும் புதிய வழி ஒன்றினை பாம்பாட்டிச் சித்தர் தனது பாடலில் பின்வருமாறு விளக்குகிறார்.
திரளான போரில்ஊசி தேடல் போல்முத்தி
சிக்காது தேசாசார தேசிகர் தம்மால்
அருளான மூலகுரு அவர் செயலால்
ஆனந்தம் கண்டோம் என்று ஆடாய் பாம்பே!
- பாம்பாட்டிச் சித்தர் -
பரந்து விரிந்த போர்களத்தில் படைகள் ஆவேசத்துடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கும். அந்த இடத்தில் ஊசியப் போட்டுவிட்டு மீண்டும் தேடி எடுக்க முடியாது அது போல முக்தியும் இலகுவில் கிடைக்காது. எத்தனை முயற்சிகள் கஷ்டங்கள் பட்டாலும் முக்தி என்பது அத்தனை இலகுவாகக் கிடைத்துவிடாது.
அதே நேரத்தில் இந்த உலகம் முழுவதும் எங்கும் சஞ்சரிக்கும் சித்தர்களின் அருளையும், மூலகுருவின் அருளையும்,கருணையையும் வேண்டிப் பெறுவதன் மூலமே கிடைப்பதற்க்கு அறிய முக்தியைப் பெறமுடியும். இவர்களின் மேலான அருளால் முக்தியை உணர்ந்து, ஆனந்தம் கொண்டோம் என்று ஆடு குண்டலினிப் பாம்பே என்கிறார் பாம்பாட்டிச் சித்தர்.
மேன்மையான குருவருளை பெறுவதன் மூலமே ஒருவர் முக்தி நிலையினை அடைந்திட முடியும் என்பது பலருக்கும் புதிய செய்திதானே..
பின்குறிப்பு:
பாம்பாட்டிச் சித்தரின் பாடல்கள் எளிமையான மொழி நடையில் எவரும் புரிந்து கொள்ளும் வகையில் இருப்பது சிற்ப்பு. ஆனால் பாம்பாட்டி சித்தரின் 129 பாடல்கள் மட்டுமே நமக்கு கிடைத்திருக்கிறது என்பது கொஞ்சம் வருத்தமான செய்தியே..

Post a Comment

11 comments:
நன்றி தோழி
போரில் என்ற சொல் வைக்கோல் போரைக்
குறிப்பதாகவே நினைத்து இருந்தேன்.
நன்றி
நன்றாயிருக்கிறது... நல்லதொரு பணி...
இச் சித்தருடயதைப் போல் பல்லரும் பாடல்கள் காணக்கிடைக்காமல் போனது சங்கடமே...
தவறாக நினைக்கவேண்டாம், உங்களுக்கு உண்மையிலேயே சித்தர் பாடல்களுக்கு விளக்கம் தெரியுமா?
எனக்கு ஒரு சந்தேகம்.சித்தர்கள் என்றால் யார்?
உங்கள் விளக்கம் சிறுபிள்ளைத்தனமானது.
சித்தர்களைப் பற்றி எதுவும் தெரியாமல் மேம்போக்காக எதைவேண்டுமானாலும் எழுதலாமா?
குரு என்றால் என்ன? இது தெரியுமா?
@ராவணன்
தங்களின் அவதானிப்பினை கவனத்தில் கொள்கிறேன்.
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
அருமையான விள்க்கம்
மோகன்
ஜெ மாணிகா சொல்வதே சரி,வைக்கோற்போரில் ஊசிதேடுவது போல என்பது நமது பழந்தமிழர் சொலவடைகளில்(பழமொழியைப் போல எழுத்துப் பூர்வமாக இல்லாமல்)பேச்சு வழி வழக்கில் இருப்பது சொலவடை.எனது தந்தையார் முனைவர் திரு.வீ.சேதுராமலிங்கம்,அவர்கள் ராமநாதபுர மாவட்டத்தில் நாட்டுப் புறப்பாடல்கள் (முதன்முதலில் நாட்டுப் புறப் பாடல்களில் முதல் முனைவர் பட்டம் பெற்றவர்)கள ஆய்வின்போது நான் உடன் இருந்திருக்கிறேன.அப்போது இந்த சொலவடையை கேட்டிருக்கிறேன்.ஒலி நாடாவில் பதிந்தும் இருக்கிறோம்.தவறை சுட்டிக் காட்டியதை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் தோழி
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
அன்பன்
சாமீ அழகப்பன்
திரு ராவணன் ஐயா அவ்ர்களே,
சிததர் பாடல்களுக்கு தோழி அவ்ர்களுக்கு விளக்கம் கொஞசமேனும் வாசனை தெரியாவிட்டால் இந்த மாதிரியான விஷயங்களை தெரிந்தெடுக்க மாட்டார்.கொத்து புரோட்டா,சைவ கொத்து புரோட்டா,உருப்படாத கொத்து புரோட்டா,இப்படி பல விதங்களில் பெயர் இட்டு தன் வலைப் பூவை உருப்படா விதத்தில் வளர்த்து வருகின்றார்.மைதா என்பதே உருப்படாத விஷயம் என்பதால் அது சார்ந்த அத்தனை விஷயங்களுமே உருப்படாத்துதான்.என்பதால் இந்த வலைப்பூ பெயர் உடைய அன்பர்கள் தயவு செய்து பெயர் மாற்றவும். இவர் சித்தர் கருத்துக்களை தான் உணராவிட்டாலும்,தன் கருத்தில் உணர்ந்தவற்றை உணர்ந்திருக்கிறார்.அவற்றை உணர்ந்திருக்கும் தன்மையால்சிததர் பாடல்கள் தோழி
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
அன்பன்
சாமீ அழகப்பன்
நன்றி தோழி
@ராவணன்அருமையான , அவசியமான முயற்சி. காலத்தால் அழிந்து விடாமல் பல விஷயங்களை நாம் பாதுகாக்க வேண்டும்.
ஒருவர் சொன்னதை மற்றவர் சொல்லலாம்...ஒரு நன்றி அறிவிப்புடன். நாம் யாருமே சுயம்பு அல்ல- ஆகாயத்தில் இருந்து
ஞானம் பெற்றவர்களும் அல்ல. எல்லாம் கற்றுக் கொள்வதுதான். வலைதளமே இதன் பால் உருவாக்கப் பட்டதுதான்.
சித்தர்கள் சொல்லி சென்ற எல்லாவற்றையும் நாம் கடைப் பிடிக்க முடியாது.
ஆனால் சித்தர்கள் பெயரை சொல்லி வியாபாரம் செய்யலாம்.இங்கே பதிவு செய்யப்பட்ட இரசமணி போன்ற "விஷங்கள்"
மானுடம் உய்ய உதவாது என்பது அடியேனின் தாழ்மையான கருத்து.சராசரியாக 70 வயது வாழும் வாழ்க்கைக்கு ஆரோக்கியமும்,
மனமகிழ்ச்சியும் முக்கியமானவை.இந்த அடிப்படையில் உங்கள் போற்றத் தக்க சேவை தொடரும் என்று நினைக்கின்றேன்.
மந்திரம் - மனம் ஆற சொல்லும் சொல் மந்திரம் ஆகும்.
வசியம் - அன்பான உள்ளம் இருந்தால் அதுவே வசியமாகும்.
சித்துக்கள்: எண்ணிய எண்ணியாங்கு எய்துவர்...திண்ணியராகப் பெறின்(focus)
Alpha mind power, quantum jumping என்று வெற்றிகரமான பல பயிற்சிகள் உள்ளது போல் நீங்களும் உருவாக்கலாம்.
மந்திர தந்திர எந்திரங்களை தவிர்த்திட வேண்டுகின்றேன்.
அது சாபம்.
http://feminabeautycare.yolasite.com
Thozhi,
Mukthiku pala vazhi,
Yoga margam oru vazhi mattum alla,
"Sakthium sivanumayi nindra thanmai orkileer"
Guruve sutchamam
Post a Comment