மறைந்திருக்கும் மர்மம்...களைவதெப்படி?

Author: தோழி / Labels: ,

சித்தர்களின் பாடல்கள் என்றாலே அவை புதிரானவை, ஆழமான மறைபொருளைக் கொண்டவை என்பதாகவே அறிந்திருக்கிறோம். படிப்பவர் மொழி ஆளுமையைப் பொறுத்து அவற்றை எபப்டி வேண்டுமானாலும் பொருள் கொள்ள முடியும். ஆனால் அது இன்னதுதான் என்று வரையறுத்துச் சொல்வதில் மொழியியலாரிடம் கருத்தொற்றுமை ஒருபோதும் இருந்ததில்லை.

இன்னமும் பல நூற்றுக் கணக்கான பாடல்களில் புதைந்திருக்கும் அர்த்தங்களை வரையறுக்க முடியவில்லை என்பதே நிதர்சனம். நூல்களுக்கு விளக்கம் எழுதிய தேர்ந்த மொழியியல் வல்லுனர்கள் கூட சில இடங்களின் பொருள் கூற இயலாமல் மழுப்பலாய் நகர்ந்து சென்றிருப்பதை காண இயலும்.

ஏன் இப்படிஒரு நிலமை?,

சித்தர் பாடல் களுக்கு உண்மையான விளக்கம் யாராலும் சொல்ல முடியாதா?,

இந்த பாடல்களின் பொருள் அறிய இயலாமல் தடுப்பது எது?

இதற்க்கும் சித்தர்களே பதில் சொல்கிறார்கள்...

"கோர்வையாம் நூற்களெல்லா மறைப்பு மெத்த
கொற்றவனே பாடிவைத்தார் லக்கேயில்லை
நேர்மையாம் பெருநூலுஞ் சிறுநூலுமாக
நேர்மையுடன் பாடிவைத்தா ரனந்தங்கோடி
நேர்வையாய் நூலெல்லாம் சாபங்கொடுத்து
நெடிதாகப் பாடிவைத்தார் சித்தரெல்லாம்"

- அகத்தியர் -

"இட்டாரே நூலாதி நூல்களெல்லா
மெழிலுடனே சாபமது மிகவேகொண்டு
திட்டமுட னு ண்மைக்கு வுத்தாரந்தான்
தீர்க்கமுடன் தான் கொடுத்து திறமைபூண்டார்
அட்டநவ லோகமதை நீற்றவேண்டி
பாடிவைத்தார் பல கோடி பாடல்களே"

- அகத்தியர் -

"அட்டமாசித்தியெல்லா முலகத்தோர்க்கு
அடுக்கடுக்காயுளவினுட விவரமெல்லா
மிட்டமாய்ச்சொன்னதற்க்கு சித்தர்கூடி
என்மேலேசினங்கொண்டு நூலுக்கப்பா
கட்டளையாயிட்டனரே சாபந்தன்னை"

- கருவூரார் -


அதாவது, சித்தர்களின் நூல்களுக்கு சாபங்கள் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவற்றை நிவர்த்தி செய்பவர்களுக்கு மட்டுமே தெளிவான மற்றும் உண்மையான பொருள் புரியும் என்கிறார்கள். ஆக சித்தர் பாடல்களின் உண்மையான பொருள் அறிய விரும்புபவர்கள் குருவருள் துணைகொண்டு, சாபநிவர்த்தியை கற்றறிந்து, செய்து படித்தால் பாடல்களின் உண்மை பொருள அறியலாம்.

ஆச்சர்யமான தகவல்தானே!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

10 comments:

jagadeesh said...

மிக ஆச்சர்யமான தகவல் தான். கருவூரருக்கே மற்ற சித்தர்கள் டோஸ் கொடுதிருக்கரார்களே!. சாப நிவர்த்தி செய்ய முடியுமா?யாருக்கெல்லாம் அது பலிக்கும்?

Narasimmarin Naalaayiram said...

நன்றி!

misan said...

naan puthiyavan rasavadam seyya mudiyathu enru kooruvathu unmaya

misan said...

saba nivarthi manthiram velieduveegala

misan said...

@Narasimmarin Naalaayiram

jagadeesh said...

@misan நமக்கு குருவருள் கிடைத்தால், சாப நிவர்த்தி தெரிந்து விடும். அதற்க்கு முன், குருவருளை பெற நம்மை நாம் தகுதி படுத்திக் கொள்ள வேண்டும். உள்ளத் தூய்மை மிக அவசியம்.

agamudali said...

நன்றி தோழி.சிவன் அருளால் சித்தியாகும்.

S.RAJENDRAN said...

THOZI THANGALUKKU GURVARUL UNDAA. THANGALUKKU SAABHANIVARTHI THERIUMA.
GURUVARUL VENDI THEDI THIRIKINDREN.VAZIKATTUNGAL.

NANDRI THOZI,
S.RAJENDRAN
BANGALORE.

கீரா சமரசமற்றவன் said...

வணக்கம் ..வர்மங்கள் அழிந்து வரும் நிலையில் அதை அறியவும் கற்று கொள்ளவும் அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்து செல்லவும் நாம் யாரிடம் அணுகலாம் உங்களுக்கு தெரிந்த யாராவது இருக்கிறார்களா ,,இருந்தால் சிரமம் பார்க்காமல் எனது என்னை தொடர்பு கொள்ளவும் ,,நன்றி ..இயக்குனர் கீரா -9500744667

Sankar Narayanan said...

PAAMBATTI SIDDHAR SAMAIDHI IN SANKARAN KOVIL

NELLAI DIST THE FAMOUS GOMATHIAMMAN KOVIL

Post a Comment